16 ஆகஸ்ட் 2009
சோனியா விவாகரத்து-காரணம் ஆண்ட்ரியா?
12 ஆகஸ்ட் 2009
நானோ கார் வேண்டாம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி
டாடா நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்போகும் நானோ காருக்கு இப்போதே இஎம்ஐ செலுத்தச் சொல்வதால், பல வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா நிறுவனத்திடம் நானோ கார் கேட்டு சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் முதல் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒதுக்கீடு பெறாதவர்களில் சுமார் 55 ஆயிரம் பேர், அடுத்த ஒதுக்கீடு வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் செலுத்தியுள்ள முன்பணத்துக்கு 8.75 சதவீத வட்டி தருவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒதுக்கீடு பெற்றுள்ளவர்களுக்கு 2011ல் தான் டெலிவரி கிடைக்கும். எனினும், வங்கிகள் மூலம் ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் மாதாந்திர தவணை (இஎம்ஐ) கடந்த மாதத்திலிருந்தே தொடங்குவதாக டாடா கூறி உள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் தங்களது ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர். ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.
இதுவரை 2,475 கார்கள் வழங்கப்பட்டுள்ளது. ரத்து செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கார் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்து என டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட்டின் Xbox வித்தை
வீடியோ விளையாட்டுகள் என்பது ஒன்றும் சின்ன பசங்க விஷயம் என்று ஒதுக்கி விடும் விஷயமில்லை. உலக அளவில் சென்ற 2008ஆம் ஆண்டு மொத்த வீடியோ விளையாட்டு பொருட்கள்,மென்பொருட்கள் விற்பனை மட்டும் 32 பில்லியன் டாலர்கள்.கணினியில் விளையாடப்படும் விளையாட்டுகளின்றி,வீடியோ விளையாட்டுகளுக்கேன்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேமிங் கன்சோல்(Gaming Console)எனப்படும் விளையாட்டு இயக்கு பெட்டிகள் இப்போது உலகமெங்கும் சக்கை போடு போட்டுவருகின்றன.முதல் மூன்று இடத்தில் கடும் போட்டியுடன் இருப்பவை நின்டெண்டோவின்(Nintendo) விய்(Wii)மற்றும் DS,மைக்ரோசாப்ட்டின் Xbox மற்றும் சோனியின் ப்ளே ஸ்டேஷன் 3.
ஒருவருக்கொருவர் சளைக்காமல் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு இயக்கு பெட்டிகளையும் மென்பொருட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ பெட்டிகளை இயக்க ஒரு கட்டுப்பாட்டு பெட்டியும்(Gaming Controller)உண்டு.நின்டெண்டோவின் விய் ஒரு அருமையான விளையாட்டு சாதனம்.இதனுடன் இணைந்த சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை கையில் வைத்து கொண்டு எந்த திசையில் அசைத்தாலும் வீய் அதை உணர்ந்து கொள்ளும்.உதாரணத்திற்கு இந்த வீடியோ சாதனத்துடன் டென்னிஸ் விளையாடும் போது சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை உபயோகித்து பந்தை அடிப்பது போல் காற்றில் பாவனை செய்தாலே போதும்.இதே போல அதி துல்லிய வீடியோ விளையாட்டுகளை கையாள வல்லது சோனி ப்ளே ஸ்டேஷன்.
கடும் போட்டி கொடுத்த மைக்ரோசாப்ட் Xbox இப்போது தனது புதிய கண்டுபிடிப்பான Project Natal ஐ அடுத்த வருடம் வெளியிட இருக்கிறது.அசைவுகளை உணர்தலில் ஒரு படி மேலே சென்று,நமது கை,கால்கள் மற்றும்,உடலின் அசைவுகள்,மற்றும் குரலை கொண்டே Xbox சாதனத்துடன் விளையாட முடியும்.இதற்கென ஒரு விசேஷ சென்சார் கருவியை Xbox சாதனத்துடன் இணைத்தால் போதும்.இதுவே project Natal சென்சார் கருவி எனப்படுகிறது. திரைப்படங்களை,கையை காற்றில் அசைத்து,தேர்வு செய்து பார்க்கலாம்.மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.
கோலிவுட்டை பன்றிக்காய்ச்சல் படுத்தும் பாடு!
இனி செல்போனிலும் "HD" தொழில்நுட்பம்!
| ||
| |
நமீதாவின் கடின உழைப்பு வெற்றி பெறும் - சரத்குமார்
உலகின் முதல் 2 TB வன்தட்டுகள் : ஹிடாச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியது
Hitachi Global Storage Technologies நிறுவனம் 2 TB கொள்ளளவுடைய வன்தட்டுக்களை(Hard Disc) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வன்தட்டுக்கள் 7200 RPM வேகத்தில் இயங்கக்கூடியவை. இந்த வன்பொருளின் பெயர் Deskstar 7K2000 . இது தான் உலகின் அதிகபட்ச கொள்ளளவுடைய வன்தட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 32 MB cache மெமரியும் உள்ளது. 2007 ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் முதல் 1 TB கொள்ளளவுடைய Deskstar 7K1000 என்ற வன்தட்டை வெளியிட்டதும் இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த பவரை உபயோகித்து அதிக performance சை கொடுப்பது இந்த வன்தட்டின் சிறப்பம்சமாகும் . இதன் விலையை இன்னும் இந்நிறுவனத்தினர் வெளியிடவில்லை.
பொன்னர் சங்கரில் தீபிகா?
Blog-ன் Secret Followers எத்தனை? கண்டுபிடிப்பது எப்படி? Blogger Tips
Blogger-ல் (Blogspot) நமக்கு தேவையான வலைப்பூவை இரண்டு விதமாக Follow செய்யலாம்.
1. வெளிப்படையாக (Publicly)
2. இரகசியமாக ( Privately or Anonymously or Secretly)
எந்த விதமாக Follow செய்தாலும், அந்த வலைப்பூவின் புதிய பதிவுகளை Blogger Dashboard-ல் உள்ள ‘Reading List' வழியாக Follow செய்பவர் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
'களவாணி' ஹெலன்!
இலங்கைப் பதிவர்கள் சந்தோசத்தில்...
09 ஆகஸ்ட் 2009
மீண்டும் பெயர் மாறிய அமோஹா
தமிழில் எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால் இந்திக்கு நிஷா கோத்தாரியாக பெயர் மாறிப் போனார். அங்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்த அமோஹா இப்போது மறுபடியும் தனது பெயரை மாற்றி விட்டார்.
இனிமேல் அவர் பிரியங்கா கோத்தாரியாம். ஏன் இப்படி என்று கேட்டால், எனது பெயரே பிரியங்கா கோத்தாரிதான். சினிமாவுக்காக எனது பெயரை பலரும் பலவாறாக மாற்றஇ விட்டனர்.
ஆனால் அது எனக்கும், எனது வீட்டினருக்கும் பிடிக்கவில்லை. இதனால் எனது பெயரிலேயே நடிக்க ஆரம்பித்துள்ளேன் என்கிறார்.
கிளாமராக நடிப்பதில் பிரியங்காவுக்கு வருத்தம் ஏதும் இல்லையாம். காரணம் அதற்கேற்ற உடல்வாகு இருக்கிறது, நடிக்கிறேன் என்கிறார்.
தமிழில் இப்போது கார்த்திகை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அமோஹா என்ற நிஷா கோத்தாரி என்ற பிரியங்கா கோத்தாரி.செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்
மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்
Microsoft Virtual PC 2007 – Tech Videos
Using Microsoft Virtual P.C. 2007
Virtual PC is currently a free download from Microsoft.
You can use this software to create a host environment for your SBS network on a Windows XP machine.
மேலாடை துறந்த ஷரோன் ஸ்டோன்!
வயது 51. ஆனாலும் இன்னும் கவர்ச்சி குறையவில்லை ஷரோன் ஸ்டோனு்கு. இந்த வயதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இதழுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஸ்டோன்.
ஒரு காலத்தில் ஹாலிவுட்டைக் கலக்கியவர் ஷரோன் ஸ்டோன். இன்னும் கூட அவர் மீதான கிரேஸ் குறையாமல்தான் உள்ளது. தற்போது ஸ்டோனுக்கு 51 வயதாகிறது. இந்த வயதில், பாரிஸ் மேட்ச் என்ற பிரான்ஸ் இதழின் அட்டைப் படத்துக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஸ்டோன். படு ஸ்டைலான உடையுடன் மேலாடை மட்டும் இல்லாமல், அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்டோன். இதுகுறித்து ஸ்டோன் கூறுகையில், ஒரு கேரக்டருக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ, அதற்கேற்ப நடிப்பது எனது ஸ்டைல். அந்த கேரக்டரின் மூட் மற்றும் முக்கியத்துவக்குக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன். அப்படிப் பார்க்கும்போது நிர்வாணம் எல்லாம் பெரிய விஷயமில்லை என்று கூறியுள்ளார். ஸ்டோன் இப்படி கவர்ச்சிகரமாக காட்சி அளிப்பது முதல் முறையல்ல. 1992ல் வந்த பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் படு கலக்கலான வந்துள்ளார். மேலும், ஆஸ்கர் விருது விழாக்களுக்கும், பிற திரைப்பட விழாக்களுக்கும், கவர்ச்சி சொட்டச் சொட்ட வந்து பயமுறுத்தியவர்தான் ஸ்டோன் என்பது நினைவிருக்கலாம்.
கந்தசாமியுடன் மோதும் பொக்கிஷம்!

06 ஆகஸ்ட் 2009
பேஸ்மேக்கர் கருவியை ஐ-பாட் பாதிக்காது
இருதயத்தில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருப்போர் ஐ-பாட் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹோவர்டு பாஸன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.பல்வேறு ஐ-பாட்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டதில், பேஸ்மேக்கர் கருவிகளை பாதிக்கக்கூடிய அளவு மின்காந்த அலைகளை அவை உற்பத்தி செய்யவில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.மனித உடலில் சலைன் நிரப்பப்பட்ட பை மூலம், காயில் மூலமாக மின்காந்த அலைகளை உருவாக்கி ஹோவர்டும், அவரது குழுவினரும் சோதனை நடத்தினர்.4ம் தலைமுறை ஐ-பாட், வீடியோவுடன் கூடிய ஐ-பாட், ஐ-பாட் நானோ உள்ளிட்ட மாடல்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்த ஆய்வுகள் மூலம் ஐ-பாட்களால், இருதய பேஸ்மேக்கர் கருவிகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.ஐ-பாட் தவிர வேறு இசை உபகரணங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆல் ரவுண்ட்' பூனம்!
தெனாவெட்டு படம் மூலம் தமிழில் ஹிட் ஆனவர் பூனம். அதன் பின்னர் மறுபடியும் ஜீவாவுடன் இணைந்து கச்சேரி ஆரம்பம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு விஷ்ணுவுடன் இணைந்து துரோகி படத்திலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
இரு படங்களையும் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். தெலுங்கில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். அதேசமயம், தமிழில் எந்தவித இமேஜுக்குள்ளும் மாட்டாத வகையில் தனது கேரக்டர்களை செலக்ட் செய்கிறாராம்.
கவர்ச்சியும் இருக்கும், சீரியஸ் பாத்திரமும் இருக்கும், காமெடியும் இருக்கும். இப்படி கலந்து நடிப்பதையே தமிழில் விரும்புகிறேன். தமிழில் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று யாரும் எனக்கு முத்திரை குத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
எப்படிப்பட்ட கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறேன். அப்படித்தான் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சியமும் கூட என்கிறார் பூனம்.
மெல்லிய லேப்-டாப்: ஆப்பிள் திட்டம்
சர்வதேச சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மடிக்கணினி விற்பனையில் அதிக ஆர்வமும், தீவிரமும் காட்டி வரும் ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் 1.34 மில்லியன் மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மடிக் கணினிகளின் எண்ணிக்கையை விட 37 சதவீதம் அதிகம் என ஆப்பிள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகாசி பட வசனம் - வருத்தம் தெரிவித்தார் விஜய்
பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டிருந்தது.
இந்த நிலையில் விஜய் சார்பில் வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நான் வழக்கறிஞர்களுக்கு எதிரானவன் அல்ல. சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தால், அது வழக்கறிஞர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.
அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal (இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது)
பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும் வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.





















