01 ஏப்ரல் 2009
கூகிள் மெயில் இனி தமிழ் மெயில்?
31 மார்ச் 2009
புது மண தம்பதியர்களுக்கு மட்டும்
- கல்யாணம் அனா முதல் இருபது நாட்கள் அல்லது முதல் மாசத்துக்குள் தேன் நிலவு செல்லுங்கள். ( வேலை வேலை என்று தள்ளி போட வேண்டாம் அது ஒரு கல்லூரி பருவ நினைவுகளை போல நல்ல நினைவுகளை தரும் உங்கள் அன்பை மேலும் பலப்படும் நல்லா புரிதல் கொடுக்கும் )
- சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..
- உங்க நண்பர்களை ஒரு தேன் நிலவு டூர் பாக்கேஜ கிபிட்ட கொடுக்க சொல்லுங்க ( எங்க பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கொடுத்தோம் )
- இருவரும் ஒரு குழந்தையை போல் இருங்க ..
- அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க
- இது உங்க குடும்பம் உங்க மனைவி ... சோ உங்க அன்பை எப்படி வேணும் நாளும் நாலு செவுதுக்குள்ள அதுவும் உங்க வீட்டு குள்ள காட்டுங்க ..
- தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க.... (ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவிக்கிட்ட மட்டும் சொல்லுங்க)
- தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )
- உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்
- அடிக்கடி ஒரு குழந்தையை போல் கொஞ்சுங்க ...
- கல்யாணத்துக்கு முன்னாடி நிறய பேசுவோம் அப்புறம் கண்டுக்க மாட்டோம் என்று ஒரு புகார் வரும் முன்னாடியே .. உனக்கு நம்ம எதிர்காலத்துக்கு நிறைய உழைக்கிறேன் என்று பிட் போடுங்க ...
- முன்னாடி மட்டும் போன்ல பேச டைம் கெடச்சுது எப்போ அதே ஆபீஸ் அதே வேலை ஆனா டைம் கெடைக்காது என்று சொல்வது எப்படி நினையம் என்று கேள்வி வரும் ... அதுக்கு முன்னாடி நீ எங்கோ இருந்தாய் உன்னிடம் பேசாமல் இருக்கா முடியாது ... ஆனா எப்போ நீ என்னுள் இருக்காய் .. என்னோடு இருக்காய் ... வேணும் நான் எனோட கண்ணா உத்து பாரு என்று கண்ணா கட்டுங்க .. நீங்க சொல்றது பொய் என்று அவர்களுக்கே தெரிஞ்சாலும் அதை ரசிப்பார்கள்
- நிறையா அவங்க பேசுறத கேளுங்க ... அப்பரும் நீங்க பேசுங்க ...
- ரொம்ப சுதந்திரம் கொடுங்க .. எத பத்தி வேண்டுமானாலும் அவங்க உங்க கிட்ட சொல்லும்படி வைத்துக் கொள்ளுங்கள்
- சந்தேகம் வேண்டாம் ... நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து நீங்களே உங்க மனைவி புருசன நம்பாமல் யாரு தான் நம்புவாங்க
- அந்த நம்பிக்கைக்கு உரியவர நடந்துக்கோங்க
- நிறையா விட்டுகொடுங்க ..
- உங்க அம்மா அப்பா உங்க பார்ட்நர் கவனிக்கணும் என்றால் உங்க மாமனார் மாமியார் அப்பா அம்மா மாதிரி பாத்துக்கோங்க ... அப்போ அப்போ ஒரு டிரஸ் எடுத்து கொடுப்பது ஒரு நலம் விசாரிப்பது என்று இருந்தால் .. சூப்பர்
- எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )
- நீ தான் இந்த உலகத்திலயே அழகு :-) என்று சொலுங்க ( அது மிக பெரிய பொய் என்றாலும் ரசிப்பார்கள் )
- மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை வீட்டு கொடுக்கதிங்க ..
- அப்போ அப்போ ஹெல்ப் பன்னுங்க
- அப்போ அப்போ ஒரு அச்சிரயம் கொடுங்க ... ( கிபிட் பிலோவேர்ஸ் ...)
- முக்கியமான தினங்களை மறந்து காமெடி பண்ணிடாதிங்க ..
- கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனவியோ புருஷன எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை எத்துனை பாய் பிரிஎண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்து இருந்தாலும் ஓகே ஆனா அதுக்கு அப்புறம் ஏமாத்தக்கூடாது உனக்கு நான் .. எனக்கு நீ என்று தெளிவா இருங்க ( எப்படி இருந்தா பயம் இல்லை யாரும் ஒன்னு பண்ண முடியாது டிரன்ப்பறேன்சி வேணும் )..
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா பேட்டி
இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா 34 அனாதை குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரிஷிகேஷிப் உள்ள மிராக்கிள் அனாதை ஆசிரமத்தில் இருந்து இக்குழந்தைகளை அவர் தத்து எடுத்துள்ளார். இது பற்றி பிரீத்தி ஜிந்தா, ’’நான் தத்தெடுத்துள்ள 34 குழந்தைகளும் அனாதைகள் அல்ல. என் குழந்தைகள். அவர்களை என் சொந்தங்களாக்கி கொண்டதில் சந்தோஷமடைகிறேன்.
அவர்களுக்காக நான் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியையும் ஒவ்வொருவர் முகத்திலும் பார்த்தேன்.
தினமும் அவர்களோடு டெலிபோனில் பேசி நலம் விசாரிக்கிறேன். ஆண்டுக்கு இரண்டு தடவை நேரில் போய் பார்த்து பேசுகிறேன்.
அந்த ஆசிரமத்துக்கு சென்றபோது சில அதிர்ச்சி தகவல்களை கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது, அரசு தொட்டிலில் போடுவது போன்ற தகவல்களை என்னிடம் சொன்னார்கள். பெண் சிசுக்களை கருவில் அழிப்பது கொடூரம். அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடுவதும் கொடூரமானது. இது போன்ற சமூக அவலங்கள் மாறவேண்டும். நான் தத்தெடுத்த 34 குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்பேன்’’ என்று தெரிவித்தார்.
தமிழ் வலை தளங்களில் கூகுளின் பொது விளம்பரங்களை நிறுத்துவது எப்படி
பதிவுலகத்தில் உள்ளவர்களுக்கு கூகிள் ஆட்சென்ஸ் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.பலரும் தங்கள் வலைத்தளங்களில் ஆட்சென்ஸை இணைத்துள்ளனர். ஆனால் தமிழ் வலைத்தளங்களில் உள்ள பெரும் பிரச்சனை என்னவென்றால் 99% தமிழ்தளங்களில் பொது விளம்பரங்களே தோன்றுகிறது. இதன் மூலம் நமக்கு ஒரு ரூபாய் கூட உபயோகமில்லை இதனைத்தவிர்ப்பது எப்படி?google psa adds in tamil blogs
1- முதலில் நீங்கள் அட்சென்சை எவ்வாறு இன்னைத்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.how to remove psa adds in tamil websites
2- நீங்கள் அட்சென்சை நேரடியாக உங்கள் bloger மூலம் ( blogspot->layout->add widget->adsense) பதிந்திருந்தீர்கள் என்றால் அது தவறான முறை அதனை நீக்கி விடவும்.Google adsensehas become a very popular tool for making money from your site by showing advertisements. But sometimes you see psa adds
3- இப்போது adsense தளத்திற்கு நேரடியாக நுளையுங்கள் .(நீங்கள் இதுவரை அட்சென்சில் சேரவில்லை என்றால் உங்கள் வலைத்தளத்தின் username மற்றும் password உடன் இணைந்துகொள்ளுங்கள்.)
4- இங்கு சென்று adsense setup இற்கு சென்று adsense for content என்ற மெனுவை சொடுக்குங்கள். உங்களுக்கு தேவையான விளம்பரத்தின் அளவு மற்றும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். channel என்ற பகுதியில் உங்கள் வலைத்தளத்தின் முகவரியை இடுங்கள். Although most of the times the ads show immediately, at times it takes upto 48-72 hours for google to assess the content of newly created webpage
5- ஏறக்குறைய முடிந்துவிட்டது இப்போது இருக்கும் பகுதியில் (படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்) அதில் Show public service ads எனும் option ஐ நீக்கி Show non-Google ads from another URL எனும் option ஐ தேர்வு செய்து அங்கே உங்கள் மற்ற வலைத்தளத்தின் முகவரியை இட்டு விடுங்கள். இல்லையெனில் ஏதாவது ஒரு படத்தை html code ஆக இணைத்து விடுங்கள். அவ்வளவு தான் இப்போது continue option ஐ தேர்வு செய்து அது தரும் ஆட்சென்ஸ் code ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைத்துவிடுங்கள் ஆரம்பத்தில் நீங்கள் இணைத்த படங்களே விளம்பரமாகத் தோன்றும். அனால் சில நாட்களிலேயே (உங்கள் ஹிட்சை பொறுத்து ) உங்கள் தளத்தில் google adsense விளம்பரம் தோன்ற ஆரம்பித்துவிடும். அட்சென்ஸ் தெரியாத ரகசியங்கள் எனும் நூலை எழிதி வருகிறேன் tamil.com தளம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்நூலை வெளியிடுகிறேன். இது பற்றி மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேட்கவும்.
29 மார்ச் 2009
Sidney Slayden’s Fashion Show. (சிட்னி ஸ்லேடன் பேஷன் ஷோ)
பார்வையிட இங்கே சொடுக்கவும் .இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் காதலில் சார்மி?
கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்காவில் லஷ்மி ராய்!
27 மார்ச் 2009
கீறல்கள் விழுந்த CDயினை பயனுள்ளதாக மாற்றுங்கள்॥
நப்கின் ஹோல்டர்
கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது
எல்லோரும் ஏதேனும் ஒரு படத்தை தேட வேண்டும் என்றால் பெரும்பாலும் கூகிள் பட தேடலில் தேடுவோம். கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நீங்கள் ஒரு அழகிய சிவப்பு நிற (NOKIA) கைபேசியை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளீர்கள் ஆனால் அந்த (Model)லில் சிவப்பு நிற கைபேசி இருக்குமா என்று உங்களுக்கு தெரியவில்லை.
இப்போது கூகிள் பட தேடலில் சிவப்பு நிற (NOKIA) கைபேசியைன் (Model) பற்றி எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
கூகிள் பட தேடலின் (URL)லில் கடைசியில் &imgcolor=red என்று சேர்த்தால் போதும்.
(எடு. கா)
http://images.google.com/images?q=Nokia&imgcolor=red

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு
இந்தியாவில் நடப்பதாக இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. அங்கு அடுத்த மாதம் 18 ந் தேதி தொடங்கி மே மாதம் 24 ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 8 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 59 போட்டிகள் நடைபெறுகின்றன. மே 22 மற்றும் 23 ந் தேதிகளில் அரை இறுதி போட்டிகளும் 24 ந்தேதி ஜோகன்ஸ் பர்க் நகரில் இறுதி போட்டியும் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 தடவை மோத வேண்டும். 14 போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஆடும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு வரும். கேப்டவுன், ஜோகன்ஸ்பர்க், டர்பன், பிரிடோரியா, கிழக்கு லண்டன், கிம்பெர்லி, பிளோம்பான்டின், போர்ட் எலிசபெத் ஆகிய 8 நகரங்களில் போட்டி நடக்கும். இதில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டர்பன் நகரில் 16 போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரிட்டோரியாவில் 12 போட்டிகளும், ஜோகன்ஸ்பர்க், கேப்டவுன் ஆகிய இடங்களில் தலா 8 போட்டிகளும் போர்ட் எலிசபெத், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் 4 போட்டிகளும், பிளோம்பான்டின், கிம்பெர்லி ஆகிய இடங்களில் தலா 2 போட்டிகளும் நடக்கின்றன. பெரும்பாலான நாட்களில் தினமும் 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு முதல் போட்டியும், இரவு 8 மணிக்கு 2 வது போட்டியும் நடக்கிறது. 18 ந்தேதி கேப்டவுன் நகரில் முதல் நாள் போட்டிகள் நடக்கிறது. இதில் 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்து 8 மணிக்கு நடக்கும் போடடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணிகள் மோதுகின்றன.
25 மார்ச் 2009
கம்ப்யூட்டர்கள் பழசு கண்ணா பழசு...!
சம்பளத்தை ஏற்றினார் சரண்யா!
23 மார்ச் 2009
ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த சச்சின் எதிர்ப்பு!

ஜேட்கூடியின் மரணம் சொல்லும் செய்தி..!
23-03-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
27 வயதான ஜேட் கூடி என்ற பெண் தனது இறப்பை எதிர்பார்த்து சில மாதங்களாகக் காத்திருந்து, இப்போது கர்த்தரின் காலடியை அடைந்துவிட்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் 'பிக் பிரதர்' என்கிற ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ளாத வரையில் அவர் யாரென்று இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்திய திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியுடன் அந்த ரியலிட்டி ஷோவில் பங்கேற்ற ஜேட்கூடி, ஷில்பாவை இனவெறியோடு திட்டியதால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுக.. அந்த அழுகையால் தாங்களும் அழுத லண்டன் மாநகர மக்கள் மொத்த ஓட்டையும் ஷில்பாவுக்கே குத்தி அவரை பரிசு மழையில் நனைய வைத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அப்போது நம்மால் கோபமாகப் பார்க்கப்பட்ட அதே ஜேட்கூடிதான் இப்போது நம்மால் பரிதாபகமாப் பார்க்கப்படுகிறார். 27 வயதுதான்.. 5 வயது மற்றும் 4 வயதான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா.. பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சம்பாதிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் புற்று நோய் அவரைத் தாக்கியிருக்கிறது.
இந்தியாவில் கலர்ஸ் என்கிற சேனல் நடத்திய பிக் பாஸ் ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வந்தவருக்கு மும்பையில் நல்ல முறையில் வரவேற்பு கிடைத்தது. நிச்சயம் இந்திய விஜயம் எனக்கொரு திருப்பத்தைத் தரும் என்று அப்போது சொன்னார். அந்தத் திருப்பம் அவருடைய வாழ்க்கையை முடிக்கிற திருப்பம் என்பதை அவரும், மீடியாக்களும் அறிந்திருக்கவில்லை.
ரியலிட்டி ஷோவுக்காக இந்தியா வருவதற்கு முன்பாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் லண்டனிலேயே தகுந்த சிகிச்சையும், உடற்பரிசோதனையும் செய்துவிட்டுத்தான் விமானம் ஏறியிருக்கிறார்.
ரியலிட்டி ஷோவில் ஒரு நாள் ஷில்பாவுக்கு வந்த போன் கால் அவருடைய வாழ்க்கையின் முடிவுரையைச் சொன்னது..
அந்தக் காட்சியை நான் அப்போதே தொலைக்காட்சியில் பார்த்து பேச்சு மூச்சில்லாமல் போனேன். லண்டனில் அவர் செய்துவிட்டு வந்த உடற்பரிசோதனையின் முடிவுகளை அந்த மருத்துவர் தொலைபேசியில் ஜேட்கூடியிடம் சொல்கிறார், "உன்னைத் தாக்கியிருப்பது புற்று நோய். நீ இன்னும் கொஞ்ச நாள்தான் உசிரோட இருக்கப் போற.." - இந்த உண்மையை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்..? அதுவும் அம்மா என்கிற கடமையிருக்கிற ஒரு தாய்க்கு..
ஜேட்கூடி மருத்துவர் சொன்னதைக் கேட்டு கதறி அழுததையும், பின்பு வெளியே வந்து தனது சக போட்டியாளர்களிடம் இதைச் சொல்லி அழுவதையும் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது.
என்னிடமே இப்போது இந்த வார்த்தையை மருத்துவர் சொன்னால் நான் என்ன ரியாக்ட் செய்வேன் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
மும்பை வந்தபோது புன்சிரிப்போடும், உவகையோடும் வந்த ஜேட்கூடி நாடு திரும்பும்போது இருந்த வேதனையை மறைத்துக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்துவிட்டுத்தான் போனார்.
லண்டனில் இதன் பின்புதான் ஒரு பெரிய அலையே அடித்திருக்கிறது. அங்கிருந்த மீடியாக்கள் ஜேட்கூடியின் அன்றைய மெடிக்கல் ரிப்போர்ட் என்று தலைப்பிட்டே செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போயிருக்கிறது.
இதன் விளைவு என்ன தெரியுமா? லண்டனில் இருக்கின்ற இளம் வயதுப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜேட்கூடிக்கு வந்திருந்த கர்ப்ப் பை புற்றுநோய்க்கான ஆரம்பக் கட்ட சோதனைகளை தங்களுக்குச் செய்து கொண்டார்களாம்.. இவர்களுடைய இந்த விழிப்புணர்வுக்குக் காரணம் ஜேட்கூடிதான்.. அந்த வகையில் அவர்கள் ஜேட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நோயோடு போராடிக் கொண்டே சிரித்த முகத்தோடு தினந்தோறும் ஏதாவது ஒரு டிவியிலோ, பத்திரிகையிலோ பேட்டியளித்தவண்ணமே இருந்துள்ளார் ஜேட். அவர் இதன் மூலம் பணம் சம்பாதித்தார் என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். பத்திரிகைகளும் அவரை வைத்து சம்பாதிக்கத்தானே செய்தன. அவரைப் பற்றியப் பரபரப்புச் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்களே.. சர்க்குலேஷனும், டிவி ரேட்டிங்கும் ஏறாமலா இருந்திருக்கும்..
மேலே சொன்னபடி குடும்பத்தார் சொல்லியும் கேட்காத இளசுகள் நேரில் பார்த்த ஒரு அனுபவம் தந்த பயத்துடன் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்களே.. இது நல்ல விஷயம்தானே.. ஒன்றும் தவறில்லை.
இந்த நேரத்திலும் அவர் தனக்குள் இருந்த காதலை மறைக்கவில்லை. வெளிப்படையாகச் சொன்னார். அவரைவிட ஆறு வயது குறைந்த Tweed என்கிற இளைஞருடனான அவரது காதல் கல்யாணம் வரைக்கும் சென்றது.. இருக்கப் போவது எத்தனை நாட்கள் என்பது தெரியாத நிலையிலும் தனது குழந்தைகளுக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், தனது காதலை நிரூபிப்பிதற்காகவும் அவர் எடுத்த கல்யாண முடிவை வாழ்த்தியே ஆக வேண்டும்.
பிப்ரவரி 22-ம் தேதி தனது காதலரைக் கைப்பிடித்தார். நோயின் தாக்கத்தால் தலைமுடியினை இழந்து உடல் தளர்ந்து இருந்த நிலையிலும் அவருடைய உற்சாகம் மாறாத திருமண நடவடிக்கைகளையும், ஓய்வு இல்லாத பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் பார்த்தபோது ஆச்சரியம்தான் விளைகிறது.
மரணத்தை இவ்வளவு இலகுவாக வரவேற்கிறாரே.. எளிதாகக் கையாளுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய முன்னாள் காதலரான Jeff Brazier மூலம் பிறந்த தனது 2 பையன்களுக்கும் இந்த மாதம் 7-ம் தேதிதான் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாப்டிஸம் செய்துவைத்துள்ளார். தாய்க்குரிய தனது கடமைகளை செவ்வனே செய்தே தீர வேண்டும் என்கிற அவரது கடமையுணர்ச்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
நோய் முற்றி படுத்த படுக்கையான பின்பு தான் மருத்துவமனையில் இறக்க விரும்பவில்லை என்று சொல்லி தனது இல்லத்திற்கு வந்து ஒரு அறையில் ஜன்னலோரமாக வானத்தைப் பார்த்தபடியே படுத்திருந்திருக்கிறார். இனிமேல் தன்னை தனது குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது அத்தனை பேரும் நினைப்பதுதான். தான் நன்றாக இருக்கும்போது பார்த்து ரசித்தவர்கள், தான் துன்பப்படுவதைப் பார்த்து வருத்தப்பட்டுவிடக்கூடாது.. அந்தக் கோலம் அவர்கள் மனதில் நிற்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். அதனைத்தான் இவரும் செய்திருக்கிறார். இதனால் ஜேட் கூடியைப் பார்ப்பதற்காகவே லண்டன் சென்ற ஷில்பா ஷெட்டியால்கூட அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.
லண்டன் மீடியாக்கள் தினந்தோறும் அவரது உடல் நிலை பற்றிய செய்திகளை அப்டேட் செய்தபடியே இருந்துள்ளன. வீட்டு வாசலில் எந்நேரமும் மீடியாக்கள் நிறுத்தப்பட்டு அவரது மரணச் செய்தி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரிப்பு வந்தாலும், அதிகமான கோபம் வந்தாலும் இது போன்றவற்றை பிரபலப்படுத்தியே ஆக வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன்.
அவர் சும்மா வெறுமனே வயோதிகத்தால் இறக்கவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக அவரைத் தாக்கிய நோய் அவரைக் கொன்று கொண்டிருக்கிறது. அந்த நோய் பற்றிய அறிவு இந்நேரம் அதைப் பற்றியே கவலைப்படாதவர்களைக்கூடச் சென்றடைந்திருக்கும்..
தனது குழந்தைகளைக்கூட தனது சாவைப் பார்த்துவிடக்கூடாது என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடச் சொல்லியிருக்கிறார். சாவரசனுடன் ஒரு நீண்ட போராட்டம் நடத்தி ஓய்ந்து போன ஜேட்கூடி, நேற்று நள்ளிரவு 3 மணி 14-வது நிமிடத்தில் தூக்கத்திலேயே இறந்து போயிருக்கிறார்.
இந்த நாளில் வேறொரு விசேஷமும் உண்டு. 'அம்மாக்கள் நாள்' என்று வரலாற்றில் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்குலங்களை நினைத்துப் பார்க்கும் ஒரு நாள்.. இன்றைக்கே இந்தத் தாயின் உயிர் போயிருக்கிறது.. பொருத்தமாகத்தான் உள்ளது..
இவருடைய வாழ்க்கைப் பாதையில் நிறைய கெட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்.. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்திருக்கலாம்.. அதெல்லாம் இனிமேல் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை..
எந்தவொரு நோயும் நாடு, இனம், மொழி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை.. வந்த பின்பு அது கொடுக்கும் துன்பத்தை அனுபவிப்பவர்களை பாவப்பட்ட மனிதர்கள் என்கிற ஒரேயொரு அமைப்பில்தான் சேர்க்க முடியுமே தவிர.. அவர்களுக்கு வேறு ஒரு அடையாளத்தை நம்மால் உருவாக்க முடியாது..
வலைப்பதிவர்களுக்கு நன்கு தெரியும்.. நமது சக வலைப்பதிவரான அனுராதா அம்மா எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, தான் பட்டத் துன்பங்களை பிறரும்படக்கூடாது என்பதற்காக, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது துன்பங்களை பதிவு செய்து வைத்தாரே.. மறக்க முடியுமா..?
நான் என்னுடைய குடும்பத்தினரிடமும் அந்த நோயைப் பற்றிச் சொல்லி உடல் பரிசோதனை செய்யச் சொன்னேன்.. சிலர் செய்திருக்கிறார்கள். பலர் படித்துவிட்டு அழுதிருக்கிறார்கள். “பாதிதான் சரவணா படிச்சேன்.. படிக்க முடியல சரவணா..” என்று சில அக்காமார்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்..
இது போன்ற விழிப்புணர்வுகள் நமக்கு மிக மிகத் தேவைகள்.. எவ்வளவுதான் புத்தகங்கள் அறிவைக் கொடுத்தாலும், அனுபவ அறிவைவிட மிகப் பெரிய அறிவு வேறில்லை. அனுபவப்பட்டவர்கள் சொல்லும்போதுதான் அந்த பிரச்சினையின் விஸ்வரூபம் மற்றவர்களுக்குப் புரிகிறது.. ஏற்றுக் கொள்கிறார்கள். தீர்க்க முயல்கிறார்கள்.
முதலில் அனுராதா அம்மா, இப்போது ஜேட்கூடி என்று சிலருக்கு வரக்கூடிய நோய்களைக்கூட தடுக்கும் தெய்வங்களாக மாறியிருக்கிறார்கள்..
நான் ஏன் இதை உருகி, உருகி எழுதுகிறேன் என்றால் இந்தக் கொடுமையை என் கண்ணார நேரில் கண்டவன் நான். எனது தாய் ஜேட்கூடிக்கு வந்த அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நான் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் அவர் பக்கத்திலேயே அமர்ந்து தாதி போல் வேலை செய்து அவருடைய துன்பங்களை பார்த்து, பார்த்து மனம் இறுகிப் போய்விட்டது. "முருகா சீக்கிரமா கூப்பிட்டுக்கக் கூடாதா..?" என்று நானும், எனது தாயும், முருகனை வேண்டாத நாளில்லை. அப்படியும் நேரம் வரவில்லை என்று சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நாய் படாதபாடு படுத்திய பின்புதான் எனது தாயை அழைத்துக் கொண்டான்.
அந்த அனுபவத்தின் வாயிலாகத்தான் ஜேட்கூடியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நோய் வந்ததை மறைத்து வைத்து சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் வெளிப்படையாகச் சொல்லி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் தயார்படுத்திவிட்டு தனது குடும்பத்தினருக்கும் லட்சணக்கணக்கான மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு போய்ச் சேர்ந்திருக்கிறார் அந்த புண்ணியவதி..
அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்..
21 மார்ச் 2009
Part 1: PS3-யும் உங்கள் PC-யும்!
PS3-ஐ பத்தின போன பதிவுகளில், அது ஒரு அருமையான மீடியா ப்ளேயர்ன்னு பார்த்தோமில்லையா? அதை எப்படி மீடியா ப்ளேயரா உபயோகிக்கறதுன்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லுறேன்.
1. PS3-யின் ஹார்ட் ட்ரைவ்:
உங்கள் படங்கள், பாடல்கள், புகைப்படங்களை PS3-யின் உள்ளிணைந்த ஹார்ட் ட்ரைவில் காப்பி செய்வது. இந்த முறையில்.. உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போறது இல்லை. காப்பி செய்வதற்கு, நீங்க ஒரு மெமரி ஸ்டிக்கையோ, மெமரி கார்டையோ, USB எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவ்களையோ... யூஸ் பண்ணி.. காப்பி பண்ணிடலாம். அதுக்கப்புறம்... எந்த தொந்தரவும் இல்லாம பார்க்கவோ, கேட்கவோ முடியும்.
2. எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவ்:
ஒரு 500GB/1TB எக்ஸ்டெர்னல ஹார்ட் ட்ரைவ் வாங்கிடுங்க. தொந்தரவே இல்லை. உங்க அத்தனை மீடியா ஃபைல்களையும் அதுல போட்டுக்கங்க. அதை.. PS3-யின் USB ஸ்லாட்டில் கனெக்ட் பண்ணிட்டீங்கன்னா.. போதும். முதல் முறையில் இருக்கற... காப்பி-பேஸ்ட் தொந்தரவு இல்லை. இரண்டாவது.. ஒருவேளை உங்களுக்கு, PS3-யின் ஹார்ட் ட்ரைவை, ஃபார்மேட் செய்ய வேண்டியிருந்தால்... எந்த ஃபைலையும் இழக்க தேவையில்லை பாருங்க.
ஆனா.. இந்த இரண்டு முறைகளிலும்.. ஒரு பெரிய தொந்தரவு இருக்கு. அதுக்கு பேரு FAT 32. நீங்க ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவை PS3-யோடு கனெக்ட் பண்ணனும்னா அந்த ட்ரைவ், FAT32-க்கு ஃபார்மேட் செய்யப்பட்டிருக்கனும். இது USB மெமரி கார்டுகளுக்கும் பொருந்தும்.
இந்த FAT 32 பத்தி அதிகமா சொல்லுறதுக்கு ஒன்னுமில்லை. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி WINDOWS ME இருக்கற வரைக்கும், இந்த முறையில்தான் நம்ம ஹார்ட் ட்ரைவ், ஃபார்மேட் ஆகியிருக்கும். Win NT/2000, XP வந்த பின்னாடிதான் NTFS-ங்கற ஃபார்மேட்டுக்கு மாறினோம். FAT32-ல என்ன தொந்தரவுன்னா... அதுல 4GB-க்கு மேல ஒரு ஃபைலின் சைசை இருக்க விடாது. அதாவது உங்க கிட்ட.. சிவாஜி படத்தின் 720p ப்ளூரே காப்பி MKV ஃபைலின் சைஸ் ஒரு 7gb (ஒரே ஃபைல்)ன்னு வச்சிப்போம். அப்ப உங்களால.. இந்த ஃபைலை... PS3-யின் ஹார்ட் ட்ரைவிலோ (PS-Operating System) அல்லது எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிலோ காப்பி பண்ண முடியாது.
அப்ப என்னதான் செய்யறது?
3. PC-ஐ PS3-யுடம் இணைப்பது
ஆமாங்க.. இதுதான் இப்போதைக்கு பெட்டர் வழி! இவை ரெண்டையும் இணைப்பது ஒன்னும் பெரிய கம்பச்சித்திரம் இல்ல. ஜஸ்ட் லைக் தட்... பண்ணிடலாம். எப்பொழுதும் போல இரண்டு வழிகள் உண்டு. Wired and Wireless.
a. Wired:
உங்க கிட்ட.. ஏதாவது ஒரு ரவுட்டர் (Router) ஒன்னு இருந்தா போதும். அப்புறம்.. தேவையான நீளத்துக்கு ஒரு நெட்வொர்க் கேபிள். ரெண்டு முனைகளையும் கனெக்ட் பண்ணிட்டா மேட்டர் சால்வ்ட்.
b. Wireless:
இதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு வயர்லெஸ் ரவுட்டர் (Wireless Router) ஒன்னு இருந்தா போதும். எதுவும் பாஸ்வேர்ட் செக்யூரிட்டி கொடுக்காம இருந்தீங்கன்னா... PS3 அதுபாட்டுக்கு கனெக்ட் ஆய்டும். கொடுத்து இருந்தாலும் பிரச்சனையில்லை. PS3-யில் அதை கான்ஃபிகர் பண்ணிக்க முடியும். என்ன.... உங்க கிட்ட ஒரு வயர்லெஸ் கீபோர்டும், மவுஸும் இருந்தால்.. பாஸ்வேர்டை அடிக்கறது ஈஸி. இல்லைன்னா... PS3-யின் கன்ட்ரோலரை வச்சி.. ஒவ்வொன்னா தட்டனும். பாஸ்வேர்ட் சைசுக்கு ஏத்த மாதிரி உங்களுக்கு.. தாவு தீரும். ஆனா எந்த பிரச்சனையும் இல்லாம... ஸ்மூத்தா.. கனெக்ட் ஆய்டும்...!! பயப்படாதீங்க.
ஓகே... கனெக்ட் பண்ணியாச்சி.! இப்ப.. எப்படி இதை ஒரு மீடியா ப்ளேயரா.. யூஸ் பண்ணுறது?
- ஓட்டு போட்டீங்கன்னா.... நாளைக்கு சொல்லுறேன். :-)












