02 அக்டோபர் 2009
ஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்!
இறுதிப்பந்தில் அவுஸ். வெற்றி - சாம்பியன் திரோபியில் இருந்து வெளியேறுகிறது இந்தியா!
| | |
|
பரம எதிரியாக இருந்தாலும், இந்த போட்டியில் பாகிஸ்த்தான் தான் வெற்ற வேண்டும் என பிரார்த்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இந்திய ரசிகர்களுக்கு. ஆனால் நான் தோற்றாலும் பரவாயில்லை. இந்தியா.... என நினைத்து விளையாடியதோ? பாகிஸ்த்தான்...!
முதலில் துடுப்பெடுத்தாடியது பாகிஸ்த்தான். ஆரம்ப துடுப்பாட்டவீரர் கம்ரான் அக்மல் (44) விளாசினார். அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் விறுவிறுவென ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்காக யூசப் (45), மிஸ்பா உல் ஹுக் ஜோடி (41) இணைய மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியது.
இறுதியில் ஐம்பது ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களை குவித்தது பாகிஸ்த்தான்.பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்த்திரேலியாவினது ஆட்டமும் பிரகாசிக்க தவறியது. மைக் ஹஸ்ஸி மட்டும் 64 ஓட்டங்களை குவித்தார். 4 வது விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கியவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும், 45 வது ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது அவுஸ்த்திரேலியா!
லீ, நதன் ஹௌவ்ரிட்ஸ் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் நிதானமாக ரன்களை குவிக்கத்தொடங்கினர். இறுதிப்பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வேகமான எடுக்கப்பட்ட ரன் அவுஸ்த்திரேலிய வெற்றியை உறுதி செய்தது.ஆட்டநாயகனாக மைக் ஹஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே பாகிஸ்த்தான் அரையிறுதிக்குள் நுழைந்திருந்த நிலையில், அவுஸ்த்திரேலியாவும் செல்கிறது தற்போது. மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 129 ஓட்டங்களையே குவித்திருக்க, இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இலகு வெற்றி பெற்றது.
ஆனால் பயனில்லாமல் போனது.
முதலாவது அரையிறுதிப்போட்டி, நாளை அவுஸ்த்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி, நாளை மறுதினம் நியூசிலாந்து பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையிலும் நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்கின்றன.
|
சினிமாவுக்கு நிலா குட்பை!
திருட்டுப் பட்டத்தால் அழகிப் பட்டத்தைத் துறந்த சிங்கப்பூர் அழகி!
திருட்டுப்பட்டம் கட்டிக்கொண்ட சிங்கப்பூர் அழகி தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.
2009 ஆண்டுக்கான சிங்கப்பூர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஸ் லோ. ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக கிரெடிட் கார்டுகளை திருடினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இவருக்கு பொதுமக்களிடையே உண்டான எதிர்ப்பு காரணமாக, தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.
சிங்கப்பூர் அழகி ரிஸ் லோ கடந்த வருடம் ஒரு மருத்துவமனையில் பணியாற்றியபோது மற்றவர்களின் கிரெடிட் கார்டுகளைத் திருடி தனக்குத் தேவையான ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வாங்கினார் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்திக்கட்டுரை வெளியிட்டது. கிரெடிட் கார்டுகளைத் திருடி அவர் வாங்கிய பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அழகிப் பட்டத்தைத் துறந்தார் ரிஸ் லோ.
சிங்கப்பூர் அழகிப் போட்டியை நடத்திய ERM World Marketing நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரிஸ்லோ தனது அழகிப் பட்டத்தை துறந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது. அத்துடன் டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் ரிஸ் லோ இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
ரிஸ் லோ மீது திருட்டுப் பட்டம் மட்டுமல்லாது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆங்கிலம் சகிக்கவில்லை என்றும், பிகினி என்ற சொல்லைக்கூட அவரால் சரியாக உச்சரிக்க இயலவில்லை என்றும், சிங்கப்பூரின் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த அம்சமும் அவரிடம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத் தான் அவர் தனது அழகிப் பட்டத்தை துறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குஷ்பு குடும்பம் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது!
படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஓட்டலுக்கு திரும்பிய பிறகுதான், கடலில் 'கொந்தளிப்பு' ஏற்பட்ட தகவல் தெரிந்ததாம். எல்லோரும் உயிர் தப்பியதை எண்ணி, ஒருவரையொருவர் கட்டித்தழுவிக் கொண்டார்களாம்.
இதனால் அன்றைய படப்பிடிப்பு வர இருக்கும் மொபைல்கள்



திருவிழா காலம் தொடங்கிவிட்டது. புதிய ஆடைகளுடன் வீட்டு சாதனங்களையும் புதியதாய் மாற்றும் வழக்கம் நம்மிடையே எப்போதும் உண்டு. மொபைல் போன்களைப் பொறுத்தவரை புதியதாய் என்ன வர இருக்கின்றன என்று அனைவரும் அறியும் வண்ணம், மொபைல் போன் நிறுவனங்கள் அறிவிப்பதில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அண்மையில் அறிமுகமான போன்கள், உலக அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட போன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில போன்களை நாம் நிச்சயமாக இங்கு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இவற்றின் சரியான விலை விற்பனைக்கு வருகையில் தெரியவரும்.
26 செப்டம்பர் 2009
சினேகாவால் அடிவாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்!
குழுமியிருந்தனர். அப்போது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் முண்டியடித்தது.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை சினேகா கடையின் நிறுவன அதிபரிடம் புகார் செய்தார். நீல நிற சட்டை போட்டிருந்த ஒருவர் தனது இடுப்பைக் கிள்ளியதாக கூறியுள்ளார் சினேகா.
இதனையடுத்து, கடை காவலாளிகள் கும்பலில் உள்ள நீல நிற சட்டை அணிந்த நபரை தேடி அடித்து உதைத்தனர்.
அப்போது அங்கு, பாதுகாப்புக்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், மற்றும் போலீசார் அந்த வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த நபருக்கு அடி உதை விழுந்தது. இதனையடுத்து, சினேகா அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கடைக் காவலாளிகள் மூன்று பேரையும், அடிபட்டவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடத்திய விசாரணையில் அடிபட்ட நபர் பெயர் சுரேஷ் குமார் என்பதும், திருச்சி காவேரி நகரைச் சேர்ந்தவர் என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாருடன் வந்திருந்த அவரது மனைவி சர்மிளா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.
நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்ஸ என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சர்மிளா குமுறலுடன் கூறுகையில்,
இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்றார் ஆவேசமாக.
நடிகையை வேடிக்கைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய சுரேஷ்குமாரால் திருச்சி
யில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெழுகுச் சிலை
சுனில்.
அதேபோல ஆஸ்கர் விருது
பெற்ற கேரள சவுண்ட் என்ஜீனியர் ரெசூல் பூக்குட்டியின் மெழுகுச் சிலையையும் வடித்துள்ளார் சுனில்.
இதேபோல புகழ் பெற்ற 35 பேரின் சிலைகளை உருவாக்கி வரும் அவர், இவற்றை மும்பையில் ஒரு இடத்தில் மியூசியத்தை உருவாக்கி அங்கே வைக்கப் போகிறாராம்.
இந்த சிலைகளை வடித்து வருபவரான சுனில் கூறுகையில், மு்ம்பையில் நான் வருகிற டிசம்பர் மாதம் சர்வதேச பிரபலங்களின் மெழுகுச் சிலை மியூசியத்தைத் தொடங்கப் போகிறேன். அங்கு இந்த சிலைகள் வைக்கப்படும். முதலில் ரெசூல் பூக்குட்டியின் சிலை வைக்கப்படும்.
கன்னியாகுமரியில் உள்ள பே வாட்ச் மெழுகுச் சிலை மி்யூசியத்துடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என்றார் அவர்.
எளிதாய் சம்பாதிக்க 7 வழிகள்
இன்றைய சூழ்நிலையில் எளிய முறையில் சம்பாதிக்க பைனான்ஸ் கம்பெனி தான் சிறந்த வழி. ஒரு பைனான்ஸ் கம்பெனி தொடங்குவது முதல் மொத்த காசையும் ஆட்டயப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆவது வரை ஏதோ என்னால் முடிந்த யோசனைகள்
தேவையான பொருட்கள்: நல்ல கட்டிடம் : 1 இணையதளம்: 1 மேனேஜர்: 2 அல்ல்து 3 ரிசப்சனிஸ்ட் :2 (அழகாக இருப்பது அவசியம்) தொலைபேசி இணைப்புகள் : 3 அல்லது 4 செக்யூரிட்டிகள் : 2 மேசை நாற்காலிகள்: தேவையான அளவு கலர்விளக்குகள் : தேவையான அளவு
செய்முறை :
1) முதலில் நகர்புறத்தின் அல்லது ஒதுக்குப் புறமாக எவ்வளவு கேட்டாலும் அட்வான்ஸ் கொடுத்து ஒரு பிரம்மாண்டக் கட்டிடத்தை வாடகைகுப் பிடித்துக் கொள்ளவும்.அதன்பிறகு கொஞ்சம் செலவுசெய்து கட்டிடத்தின் வெளியே ஸ்டீல் மோல்டிங் செய்து கொள்ளவும்
2) மேஜை நாற்காலிகள் நாள் வாடகைக்குப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அதற்கும் வாடகை கொடுக்கத் தேவையிருக்காது. எஸ்கேப் ஆகி போகும் போது அதை வைத்துவிட்டுப் போவதால் ஏமாந்தவர்கள் அதைத்தூக்கி அடித்து விளையாட வசதிப்படும்.
3)சாப்ட்வேர் படித்தவர்கள் புதிய நபர்கள் தேவை என பேப்பரில் விளம்பரம் செய்து அவர்களில்நல்லதாகப் 10 பேரை செகச்ட் செய்து பின்னர் அவர்களிடம் நமது ஜில்பான்சி கம்பெனிக்கு ஒரு நல்ல இணையத் தளம் வடிவமைத்துத் தருமாறும் அதை வைத்துத் தான் அவர்களின் திறனை கண்டு பின்னர் அப்பாயின்மென்ட் லட்டர் தருவதாகவும் சொல்லி நல்ல கலர்கலராக வெப்சைட் ஓப்பன்செய்துகொள்ளவும்.அவர்களுக்கும் அல்வா தான். அதேபோல நல்ல அடிவாங்கும் திறன் கொண்ட அப்பாவிகள் சிலரை ஆபீஸ் பணியாளர்களாக அமர்த்த வேண்டும்.கடைசியில் அவர்கள் தான் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.
4) நமீதா, நயன்தாரா போன்ற நல்ல கலர் பிகர்களைத் தேர்வு செய்து அவர்களை ரிசப்சனிஸ்ட் வேலைக்கு அமர்த்த வேண்டும்.அவர்களுக்கு எதிராக ரிசப்சனில் சோபா செட்டுகளைப் போட்டுவிட்டால் போதும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரிக்கும்.
5)பிரைவேட் செக்யூரிட்டி சென்டரில் நல்ல ஆஜானுபாகுவான 2 பேரை கேட்டு வாங்கி அருகிலேயே வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் பணத்தை திருப்பிக்கேட்டு சண்டை போட நினைத்துக் கொண்டு வருபவர்கள் ஜம்ப் ஆகிவிடுவார்கள்.
6)முதலில் வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதாமாதம் ரூபாய் 25 ஆயிரம், வாரம் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ஹோண்டா சிட்டி கார் என 10 மாதங்களுக்குத் தரப்படும் என டிவி,பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யலாம். இலவசம் என்றாலே போதும் நம் மக்கள் எதைப் பத்தியும் கண்டுகொள்ளாமல் தங்கள் காசுகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டி விடுவார்கள்.
7) செலவைக் கணக்கில் கொள்ளாமல் விளம்பரங்களையும் ஸ்பான்சர்களை அள்ளி இறைக்கவும்.அது மட்டுமின்றி ஒரு நபர் மற்றொரு நபரை சேர்த்துவிட்டால் ஒரு தங்க நாணயம் எனஅள்ளிவிட வேண்டும் . நமது ஆட்களில் ஒரு 10 பேருக்கு தங்க நாணயக் கொடுப்பது போல போட்டோ எடுத்து அதை ரிசப்சனில் மாட்டி வைத்தால் போதும். இதனால் நமது ஜில்பான்சிகம்பெனியின் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குபுகுபுவென உயர்ந்துவிடும்.
இது போல செய்தால் ஒரு 2 மாதத்தில் எப்படியும் 100 கோடியை எட்டிவிடலாம். அத்தோடு அதை தூக்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடலாம். இதற்குப் பிறகு மட்டுமே சுதாரிக்கும் நம் தமிழக மக்கள் பின்னர் வாயிலும் வயித்திலும் அடித்துக் கொண்டு டிவியில் பேட்டி கொடுப்பார்கள். பிறகு ஏமாந்தோர் அசோசியேசன் அமைத்துப் புகார் கொடுப்பார்கள். பின்னர் காவல்துறை வலைவீசித் தேடும்.எனவே நாம் குளங்களிலும் கடல்களிலும் குளிக்காமல் இருப்பது நலம்.
ஆயிரம் கலைமகள் சபா, ஆயிரம் அனுபவ் குரூப் என கோடி கோடியாய் சுருட்டி பாடம்புகட்டினாலும் நம் தமிழ்மக்களுக்கு அறிவே வராது. நாளைக்கே நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனிஆரம்பித்து டபுள் வட்டி தருவதாய் சொன்னால் கூட அதற்கென ஒரு கூட்டம் இருக்கிறது.ஆலோசனை மட்டும் தான் நான் சொல்ல முடியும், மத்தத நீங்க தான் செய்யனும். அப்படி யாராவதுஇதை பாலோ செய்து ஒரு நல்ல தொகை அடித்தால் தயவுசெய்து எனக்கும் ஒரு ஷேர் தருமாறுபணிவோடு வேண்டுகிறேன். பணம் கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன், வேறு ஏதாவதுகிடைத்தால்?? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.., விடு ஜூட்!!!!!!!!!!



இறுதிப்பந்தில் அவுஸ்த்திரேலியா அடித்த அடி, ஐசிசி அரையிறுதிக்குள் நுழையும் இந்தியக்கனவை தகர்த்தெறிந்து, வீட்டுக்கு திருப்பிவிட்டது.நேற்றை பாகிஸ்த்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா தோற்றால் தான், இந்தியா அரையிறுதிக்குள் செல்ல கொஞ்சமாவது வாய்ப்பிருந்தது.
பரம எதிரியாக இருந்தாலும், இந்த போட்டியில் பாகிஸ்த்தான் தான் வெற்ற வேண்டும் என பிரார்த்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இந்திய ரசிகர்களுக்கு. ஆனால் நான் தோற்றாலும் பரவாயில்லை. இந்தியா.... என நினைத்து விளையாடியதோ? பாகிஸ்த்தான்...!
முதலில் துடுப்பெடுத்தாடியது பாகிஸ்த்தான். ஆரம்ப துடுப்பாட்டவீரர் கம்ரான் அக்மல் (44) விளாசினார். அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் விறுவிறுவென ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்காக யூசப் (45), மிஸ்பா உல் ஹுக் ஜோடி (41) இணைய மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியது.
இறுதியில் ஐம்பது ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களை குவித்தது பாகிஸ்த்தான்.பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்த்திரேலியாவினது ஆட்டமும் பிரகாசிக்க தவறியது. மைக் ஹஸ்ஸி மட்டும் 64 ஓட்டங்களை குவித்தார். 4 வது விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கியவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும், 45 வது ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது அவுஸ்த்திரேலியா!
லீ, நதன் ஹௌவ்ரிட்ஸ் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் நிதானமாக ரன்களை குவிக்கத்தொடங்கினர். இறுதிப்பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வேகமான எடுக்கப்பட்ட ரன் அவுஸ்த்திரேலிய வெற்றியை உறுதி செய்தது.ஆட்டநாயகனாக மைக் ஹஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே பாகிஸ்த்தான் அரையிறுதிக்குள் நுழைந்திருந்த நிலையில், அவுஸ்த்திரேலியாவும் செல்கிறது தற்போது. மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 129 ஓட்டங்களையே குவித்திருக்க, இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இலகு வெற்றி பெற்றது.
ஆனால் பயனில்லாமல் போனது.
முதலாவது அரையிறுதிப்போட்டி, நாளை அவுஸ்த்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி, நாளை மறுதினம் நியூசிலாந்து பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையிலும் நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்கின்றன.


உங்கள் கருத்துக்கள்