Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

17 மே 2009

Windows Genuine Advantage Notifications ரிமூவ் செய்வது எப்படி

நமது கம்ப்யூட்டர் சில சமயங்களில் windows update ஆகி விடும்.update ஆனபிறகு நமது விண்டோஸ் ஒரிஜினல் இல்லை ப்ளீஸ் இன்ஸ்டால் ஒரிஜினல் என்ற மெசேஜ் வந்துவிடும். கிழ்கண்ட படங்களை காண்க . ஒவ்வருமுறை ரீ ஸ்டார்ட் ஆனபிறகும் இந்த மெசேஜ் வந்து தொல்லை கொடுக்கும். இதை சரி செய்ய கிழ்கண்ட டூல்ச்யை டவுன்லோட் செய்து ஒருமுறை ரன் செய்யவும். DOWNLOAD HERE

நடிகை கார்த்திகாவுக்கு காதல் திருமணம்

தமிழில் 'நம்நாடு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை கார்த்திகா. தற்போது ‘பாலை வனச்சோலை’ படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் அமெரிக்காவில் மருந்து கம்பெனி அதிகாரியாக இருக்கும் மெரின் மேத்யூ என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

மெரினுக்கு கொல்லம் அருகே உள்ள மைனாகப் பள்ளி சொந்த ஊர். தற்போது இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.

அடுத்த மாதம் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. 18ம்தேதி தேவலங்கரை செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.

மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கையில் உள்ள படங்களை முடித்து விட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற கார்த்திகா திட்டமிட்டுள்ளார்.

14 மே 2009

மகளுடன் வந்து ஓட்டுப் போட்டார் ரஜினி - அரசியலுக்கு வருவது குறித்து மெளன பதில்

சென்னை: மகள் செளந்தர்யா ரஜினிகாந்துடன் வந்து வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . நாளை மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடும் நிலை வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மெளனமாக வானத்தை நோக்கி கையைக் காட்டியபடி சென்றார் ரஜினி.சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மகள் செளந்தர்யாவுடன் இன்று காலை 8.45 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு வந்தார்.அங்குள்ள வாக்குச் சாவடியில் ரஜினியும், செளந்தர்யாவும் வாக்களித்தனர்.பின்னர் வெளியில் வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். வழக்கம் போல யாருக்கு ஓட்டுப் போட்டீங்க என்று செய்தியாளர்கள் கேட்டபோது, யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதை வெளியில் சொல்ல மாட்டேன். ஆனால் ஓட்டுப் போட வேண்டியது நமது கடமை.ஓட்டுப்போடுவதை யாரும் தவிர்க்கக் கூடாது. எல்லாரும் கண்டிப்பாக தங்கள் ஓட்டை போட வேண்டும் என்றார் ரஜினி.பின்னர் வழக்கம் போல அரசியல் பிரவேசம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக, எதிர்காலத்தில் மக்கள் இது போன்று உங்களுக்கு ஓட்டு போடும் நிலை வருமா என்று கேட்டனர். செய்தியாளர்கள் கில்லாடி என்றால் ரஜினி கில்லாடிக்கு கில்லாடி ஆச்சே. ஹா.. ஹா.. ஹா.. சிரித்துக் கொண்டே, பதில் ஏதும் சொல்லாமல், எல்லாம் அவன் செயல் என்பதை உணர்த்தும் விதமாக, வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்திக் காட்டி விட்டுச் சென்று விட்டார்.

USB Drive ஐ NTFS File சிஸ்டத்தில் ஃபார்மேட் செய்வது எப்படி?

NTFS File சிஸ்டம் என்பது அதிக பாதுகாப்பும், வேகமும் கொண்டதாகும்.ஆரம்ப காலங்களில் விற்பனைக்கு வந்த USB டிரைவ்கள் குறைந்த கொள்ளளவு கொண்டதாக இருந்தது. எனவே அதற்கு NTFS File சிஸ்டம் தேவைப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது சந்தையில் விற்பனைக்கு வருகின்ற USB Drive கள் அதிக கொள்ளளவு கொண்டதாக உள்ளதால் இதனை NTFS File system மூலம் ஃபார்மேட் செய்வது பாதுகாப்பானதாகும்.வழக்கமாக USB Drive -ஐ ஃபார்மேட் செய்ய முற்படுகையில் அதில் FAT - option மட்டுமே இருக்கும். NTFS -option - ஐ கொண்டுவர என்ன செய்ய..,USB drive ஐ கணினியில் பொருத்துங்கள்.My Computer - ஐ ரைட் கிளிக் செய்து Device Manager க்கு செல்லுங்கள்.Select Disk Drives and expandRight Click on USB drive and select PropertiesGoto policies tab and select Optimize for performance and press OKOpen My Computer, Click on USB Drive and select Format OptionNow you can have NTFS option there.NTFS enabled USB Drives are write-able only on one PC and becomes read only on all other PCs. Hence, we can read and write on our own PC and transfer files to elsewhere without any fear of virus.

மினி மோடில் மீடியா பிளேயர்

விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குகிறீர்கள் .அதன் மூலமாக ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைலை பாட அல்லது ஆட வைக்கிறீர்கள்.என்ன நடக்கிறது?. திரை முழுவதும் தெரிகிறது.இந்த புரோகிராமின் ஷார்ட் கட் ஐகான் அல்லது ஆல் புரோகிராம்ஸ் சென்று அக்சசரீஸ், என்டர்டெய்ன்மெண்ட் என்று சென்று அதில் விண்டோஸ் மீடியா பிளேயரைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து இயக்குகிறீர்கள்.கம்ப்யூட்டரில் மற்ற பணிகளை மேற்கொண்டிருக்கையிலே ஒரு ஓரமாக சிறிய வடிவத்தில் மீடியா பிளேயர் இயங்க வேண்டுமா?விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கத்திற்கு கொண்டு வாருங்கள்.பின் டாஸ்க் பாரில் ஒன்றும் இல்லாத இடத்தில ரைட் கிளிக் செய்திடுங்கள்.
எழுந்து வரும் சிறிய மெனுவில் டூல் பார்ஸ் என்னும் பிரிவில் கிளிக் செய்தால் இன்னொரு துணை மெனு கிடைக்கும்.இதில் விண்டோஸ் மீடியா பிளேயர் என்று இருப்பதில் சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்துங்கள்.டாஸ்க் பாரின் வலது மூலையில் சிறிய அளவில் விண்டோஸ் மீடியா பிளேயரின் மெனு பார் காட்டப்படும்.இதில் நீங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். வீடியோ பைலைக் கிளிக் செய்தால் சிறிய கட்டத்தில் வீடியோ காட்சிகள் காட்டப்படும்.அதைப் பார்த்துக் கொண்டே மற்ற வேலைகளிலும் ஈடுபடலாம்.இது விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 9 வைத்திருப்பவர்களுக்கு.உங்களிடம் 10 பதிப்பு அல்லது 11 உள்ளதா? விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கும்போதே சிறியதாகத் தேவையான கண்ட்ரோல்களை மட்டும் வைத்து இயக்க முடியும்.முழுமையாகத் திரை முழுவதும் இன்றி சிறியதாக இது திரையில் காட்சி அளிக்கும்.இதனை Mini Player Mode என்று கூறுகிறார்கள்.இதன் மூலம் இன்னும் கூடுதல் வசதிகளையும் மேற்கொள்ளலாம்.குறிப்பாக மியூசிக் பைல்களைத் திறந்து இசையை மட்டும் ரசிக்க விரும்புபவர்களுக்கு முழுமையான மீடியா பிளேயரின் காட்சி வேண்டாமே!
மினி பிளேயர் மோடில் இதனைத் திறக்கும்படி செட் செய்திட விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோவில் Tools தேர்ந்தெடுக்கவும்.பின் அதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும்.இந்த விண்டோவில் "Start the Mini Player for file names that contain this text"என்ற வரியுடன் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் தென்படும்.இதில் ஏற்கனவே voiceatt.wav என்ற பைல் டைப் பெயர் தென்படும்.நீங்கள் உங்களின் அனைத்து எம்பி3 பைல்களும் இந்த மினி மோடில் திறக்கப்பட வேண்டும் என்றால் இந்த இடத்தில .mp3 என்று டைப் செய்திடவும்.அல்லது குறிப்பிட்ட டிரைவ் அல்லது போல்டரில் உள்ள பைல்களை இயக்குகையில் மினி மோடில் திறக்க வேண்டும் என எண்ணினாலும் அந்த டிரைவின் எழுத்து (D:/E:) என எதனையேனும் அமைக்கலாம்.அல்லது போலடரின் பாத் கொடுக்கலாம்.எந்த ஆடியோ மற்றும் வீடியோ பைலாக இருந்தாலும் மினி மோடில் தான் இயக்கப் பட வேண்டும் என முடிவு செய்தால் ஜஸ்ட் ஒரு கோலன் (:) டைப் செய்தால் போதும்.ஒற்றை நினைவில் கொள்ள வேண்டும்.முதலில் கூறியபடி இந்த வகை மோடில் வீடியோ காட்சிகளை இயக்க முடியாது.

சீமானை விரட்டியடித்த திமுக-காங் தொண்டர்கள்

காரைக்குடி: காரைக்குடியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர் களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரசாரும் விரட்டியடித்தனர். ஓட்டுச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடாதீர்கள், அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூரமாக ஒரு இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர்.இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூரில் வாக்களித்தார் சீமான்.அமீருக்கு வாக்கு இல்லை.

அதே போல இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர்.ஆனால் இந்த முறை வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதனால் ஓட்டு போட வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.அமீரின் உதவியாளர் போல இருக்கும் நடிகர் 'கஞ்சா' கருப்பின் பெயரும் சென்னையில் இல்லை. இதனால் சாலி கிராமத்தில் வசிக்கும் அவர் ஓட்டு போட முடியவில்லை.

13 மே 2009

தடை நீக்கப்பட்ட சிடி ,மக்கள் தொலைக்காட்சியுடன் கலைஞர், சன் மோதல்!

மனதைப் பிசையும் தமிழ் இனப்படுகொலை காட்சிகளுடன் ஆளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று முழங்கும் சிடிக்களை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மக்களை பார்க்கவிடாமல் கேபிள் கட், சில இடங்களில் பவர் கட் என்று மக்கள் தொலைக்காட்சி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் நற்பெயரை(?)க் கெடுக்க சமூகவிரோதிகள் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு, 4 பேர் கைது என்று சன்னும், கலைஞர் டிவியும் பதிலுக்கு பதில் ஏசிக் கொண்டிருக்கின்றன. ஜெயா டிவி கப்சிப் என்றிருக்கிறது. அந்த சிடியையும் கண்டுகொள்ளவில்லை, மின்வெட்டையும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் நான் அந்த சிடிக்களை முழுக்கப் பார்த்துவிட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் உடனே மக்கள் டிவியை பார்க்கவும். போகிற போக்கைப்பார்த்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு (பிரச்சார நேரம் ஓய்ந்த பின்னும்) எதிர்பிரச்சாரமாக விடிய விடிய ஒளிபரப்பாகும் என எண்ணுகிறேன். அதே சமயம் ஆளும் தி.மு.க எப்படியாவது நீதி மன்றத் தடையை பெற்றுவிடும் என்று தோன்றுகிறது. இந்த சிடிக்கள் எப்படியும் யுடியுபில் வந்துவிடும். ஆனால் தேர்தல் பரபரப்புடன் பார்க்வேண்டுமானால் இப்போதே மக்கள் டிவி பாருங்கள். நீதி - வழக்கறிஞர்களுடன் மோதக் கூடாது. மோதினால் . . . ? பிரச்சாரம் ஓய்ந்தபின்னும், எதிர்கட்சிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி கிடைக்கும்.

நட்பை காதலாக மாற்றுவது எப்படி?

என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள்.

இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான்.

இப்படி இருக்க, ஒரு நாள் ஞாயிறன்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க, எனக்கு மட்டும் செம போர் அடித்தது. சரி ஏதோ நம்மாலான ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று அவனது மொபைல்ஃபோனை எடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

“சில விஷயங்களை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. மனதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வெளிப்படுத்த என் மனது தயார்….. இனிய காலை வணக்கம்”

சில நொடிகளில் அந்த பெண்ணிடம் இருந்து வந்த பதில்,

“என் மனதும் தயார்.”

இது போதுமே, அன்றைக்கு ஃபோனை காதில் வைத்தவன், இன்று வரை கீழே வைக்கவில்லை.

இதேபோல் நீங்களும் உங்கள் உயிர்த்தோழியை காதலியாக்க என்னாலான சில யோசனைகள்…


முதலில் உங்கள் தோழிக்கு உங்கள் மீது காதல் இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும்.
  • உங்களை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பில் ஒரு சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்கும்.
  • உங்களைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பிற்கும், மற்றவர்களை பார்த்து சிரிக்கும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்கும்
  • நீங்கள் அடுத்த பெண்ணிடம் பேசினாலோ, பசங்களுடன் பேசினாலோ ஒரு பொசசிவ்னெஸ் காண்பிப்பாள்
  • ஒரு நாள் கூட உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டாள்
  • விடுமுறை நாட்களில் கூட உங்களைப்பார்க்க விரும்புவாள்
  • மற்றவர்களைப்பற்றி உங்களிடம் புகார் செய்வாள் (பெண்/ஆண் நண்பர்கள்)
  • காசு விஷயத்தில் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள், ரெஸ்டாரண்டில் அவள் பணம் கொடுப்பாள்.
  • உங்கள் உடை விஷயத்தில் அக்கறை காட்டுவாள்
  • ஃபோனில் பேசும்போது கூட என்ன உடை அணிந்துவருகிறாய் என்று கேட்பாள்
  • ஒருமுறையாவது உங்களுக்காக அழுவாள்(அது சின்ன விஷயமாக இருந்தாலும்)
  • உங்களிடம் இருக்கும்போது, தான் பெண் என்பதை மறந்து இருப்பாள் (பாட்டு பாடலாம், உடை கலைந்து இருக்கலாம் etc)
  • சண்டை போட்டு நீங்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும், அவள் தானாக இறங்கி வருவாள்.
  • நீங்கள் அவளுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் கொடுப்பாள்

காதல் இருப்பது உறுதியாயின், கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தி காதலாக்குங்கள்
  • தயவு செய்து முறுக்கிக்கொண்டு நிற்காமல், உடனடியாக காதலை சொல்லுங்கள்.
  • அவளுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்கள், அவளுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை குறைத்துக்கொண்டே செல்லுங்கள்.
  • அவளை அடுத்த ஆண்களுடன் பழகவிடாதீர்கள், உங்களுக்கு பக்கத்து சீட்டை எப்போதும் அவளுக்காக துண்டு போட்டு வையுங்கள் and vice versa ;).
  • மேலே சொன்ன கதைபோல் மெசேஜ் அல்லது ஈமெயில் அனுப்புங்கள்
  • இரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு(கடலை) இருக்கும்போது, அப்படியே லேசாக காதலை தலையைச்சுற்றி மூக்கைத்தொடுங்கள்
  • உங்கள் வீட்டில் அவளை அறிமுகப்படுத்துங்கள், உங்கள் குடும்பம் எவ்வளவு அழகு என்று காட்டுங்கள். முக்கியமாக உங்கள் அம்மாவிற்கும் அவளிற்கும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொடுங்கள்.
  • அவள் எங்கு கூப்பிட்டாலும் கூடவே செல்க. நெருக்கத்தில் உங்களை மறந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொல்லி விடுங்கள்.
  • காதலைச்சொல்வதற்கு முன் ஒரு நிமிடம்(நிஜமாகவே 60 நொடிகள்) அவள் கண்ணையே பார்த்துக்கொண்டிருங்கள். அவள் கண்கள் நாணி, கண்களாலேயே என்ன வேண்டும் என்று கேட்கும்போது காதலைச்சொல்லுங்கள். கண்டிப்பாக சக்ஸஸ் தான்.

அட.. அப்படியா..?ஆச்சர்யமா இருக்கே..! என்னோட COMPUTER - ல என் அனுமதி இல்லாம...

INSTALL BLOCK - A VERY POWERFUL TOOL FOR COMPUTER USERS

INSTALL, UNINSTALL மட்டுமில்ல, ஒரு சின்ன FILE அ கூட DELETE பண்ண முடியாது. உங்க பையனாலயோ, பொண்ணாலயோ GAMES INSTALL பண்ணி விளையாட முடியாது. நண்பர்கள் தேவை இல்லாதத DOWNLOAD பண்ணிINSTALL பண்ணமுடியாது. இவ்வளவு ஏன் SEARCH ல போயி ஒரு சின்ன FILE ல கூட தேட முடியாது. இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் உங்களோட அனுமதி வேணும்.

இதுக்கு INSTALL BLOCK ன்னு ஒரு சின்ன மென்பொருள் இருக்குங்க, அத உங்க கணினில நிறுவிகிட்டீங்கன்னா, உங்க அனுமதி இல்லாம யாரும் மேலே சொன்ன‌ எதையும் பண்ணவே முடியாது.

இன்னும் நிறைய தெரிஞ்சுகனும்னா இத படிங்க :

Uses:

Install-Block customers are many schools and colleges, internet cafes, banks, hospitals, manufacturing plants, design firms, call centers, and small businesses. Of course parents also find the software very useful as well. Install-Block password-protects all software installs, prompting the user for a password before allowing the installation to continue. Install-Block can prevent people from using specific programs, websites, or Windows features, in addition to the ability to disable installing of new software. Install-Block can be used to secure your systems, put a stop to time-wasting activities, limit an employee or child's access to programs, and much more. Install-Block has been found useful for combatting gambling addiction -- stopping a spouse or loved one from downloading casino software or visiting online gambling websites.

கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ள‌வும். அத‌னுள் இருக்கும் CRACK FOLDER - ஐ OPEN செய்து BSIB PATCH FILE - ஐ COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> BASH SOFTWARE -> INSTALL-BLOCK FOLDER ரினுள் சென்று PASTE செய்ய‌வும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE ப‌ண்ண‌ வேண்டுமா என்று கேட்கும் அத‌ற்கு YES என்று கொடுக்க‌வும்.அவ்வ‌ள‌வுதான் இப்பொழுது உங்க‌ள் INSTALL-BLOCK SOFTWARE ரெடி... அதுல‌ TUTORIAL & HELP இருக்கும் அத‌ ப‌டிச்சிங்க‌ன்னாவே எப்படி பயன்படுத்தனும்னு தெளிவா புரியும். க‌ண்டிப்பா ப‌டிங்க‌.

INSTALL-BLOCK : download link

சிகர்களின் கடனாளி நான் நெகிழும் ஏ.ஆர்.ரஹ்மான்

முதல் காதல், முதல் முத்தம்போலவே முதல் உதவியையும் மறக்காதவர்களே சிறந்த மனிதர்களாக இருப்பார்கள். இதில் ரஹ்மானும் ஒருவர்.
எப்போதோ தனக்கு உதவிய தெலுங்கு திரையுலகை நன்றியோடு நினைத்துப்பார்த்து பாராட்டியுள்ளார். தெலுங்கு திரையுலகம் சார்பில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ரஹ்மானை பாராட்டி அவருக்கு தங்க கிரீட்ம் அணிவித்தார் பின்னணி பாடகி பி.சுசிலா. கிரீடம் அணிவித்ததும் கூச்சம் ஒளிவீசியபடி ரஹ்மான் பேச ஆரம்பித்தார். "இங்கு எனக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதற்காக இங்கு வரவில்லை. நான் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தபோது எனது குடும்பம் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டது. அப்போது தெலுங்கு இசை அமைப்பாளர் ரமேஷ் நாயுடு என்னை அவரது குழுவில் இணைத்துக்கொண்டார். அதிலிருந்து என்னை வளர்த்துக்கொண்டேன். பிறகுதான் இளையராஜாவிடம் இரண்டு வருடம் பணிபுரிந்தேன். பிறகு ஆறு வருடங்கள் தெலுங்கு இசை அமைப்பாளர்கள்தான் எனக்கு உதவி புரிந்தார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு இன்னும் நான் கடனாளியாகத்தான் இருக்கிறேன். நான் ஐதராபாத்தில் குடியேறினால் எனக்கு பஞ்சரா ஹில்ஸில் வீடு வாங்கி தருவதாக 10 வருடத்துக்கு முன் தயாரிப்பாளர் சுப்புராமி ரெட்டி சொன்னார்" என ப்ளாஸ்பேக்கில் மூழ்கிய ரஹ்மான், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'ஜெய்ஹோ...' பாடலை பாடிக்காட்டினார்.

இணையத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்

ரஹ்மானின் பாடல்கள் இணையத்தில் டவுன்லோட் ஆவது மிகச் சாதாரண விஷயம். அவர் இசையமைப்பில் ஆடியோவே வெளியிடப்படாத படத்தின் பாடல்கள் டவுன்லோட் ஆவதுதான் ஆச்சரியம். சமீபத்தில் வேட்டைக்காரன் படப்பாடல் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதேபோல், கெளதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரு பாடல்கள் இணையத்தில் கேட்க கிடைக்கின்றன. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை நான்கு பாடல்களுக்கான ஒலிப்பதிவு நடந்துள்ளதுது. இதில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், அன்பே என் காதலனே... எனத் தொடங்கும் பாடலும், எந்தன் நெஞ்சில் அற்புதம்... என்ற பாடலும் இணையத்தில் வெளியானது. Updated அஜித்தினுடைய அசல் படத்தின் தீம் மியூசிக்கும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

10 மே 2009

நகுலுடன் காதலா? மழுப்பும் சுனேனா

காதலில் விழுந்தேன் படத்தில் ஜோடியாக நடித்த நகுலும் சுனேனாவும் லவ்வுவதாக கோடம்பாக்கம் முழுக்க பேச்சாக இருக்க, அந்த ஜோடியே பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் காதல் கசமுச பற்றி பேட்டி வேறு கொடுத்துள்ளது.காதலில் விழுந்தேனுக்கு பிறகு நகுலும் சுனேனாவும் மீண்டும் மாசிலாமணி என்ற படத்தில் நடிக்கிறார்கள்.
இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டபோது, "எனக்கு சுனேனாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது காதல் இல்லை. பிரண்ட்ஷிப் மட்டும்தான். ஆனால் எல்லா விஷயங்களையும் வெளிப்படையா இருவரும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்காமானவங்க" என்று குழப்பினார்.இதுபற்றி சுனேனாவிடம் கேட்டபோது, "எங்களுக்கிடையே மிகவும் இணக்கமான ஒரு உறவு உள்ளது. நகுல் இருக்கிறார் என்றால் மனதுக்கு சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அவர் எனது முதல் ஹீரோ. மிகவும் பிடித்தமானவர். அவர் நட்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதுக்குமேல சொல்லத் தெரியல," என்று மழுப்பினார்.அப்ப இது 'அதானே...''அதேதான்!'

உங்கள் பிறந்த நாளின் மதி்ப்பை அறிய

உங்கள் பிறந்த நாளின் மதி்ப்பை அறிய(Find value of your Birthday) உங்கள் பிறந்த நாளின் மதிப்பை அறிய நான் ஏற்கனவே நமது பிறந்த நாள் முதல் இன்று வரையிலான தேதியை கணக்கிடுவதை பார்த்தோம். அந்த வலைப்பதிவை பார்க்காத வர்கள் இங்கு சென்று பார்க்கவும்.
அதுபோல் நமது பிறந்த தேதியில் உள்ள மதிப்பை அறிய இந்த தளம் நமக்கு உதவுகிறது.இதை கிளிக் செய்ததும் உங்களுங்கு இந்த மாதிரியான சரளம் ஓப்பன் ஆகும். அதில் உங்களுடைய பிறந்த தேதி-மாதம்-வருடம் கொடுத்து அதில் உள்ள submit கிளிக் செய்யவும். ஒரு சில வினாடிகளில் உங்க டைய பிறந்த நாளின் சிறப்புகளை இந்த தளம் வெளியிடும். இதில் நீங்கள் பிறந்த நாளின் கிழமை-உங்கள் அதிர்ஷ்ட எண்- ராசி -என அனைத்தும் தெரிவிக்கும். இன்றைய தேதிவரை உங்களுடைய வயது - மாதங்கள் - வாரங்கள் - நாட்கள்- மணி நேரங்கள் - நிமிடங்கள் - வினாடிகள் என அனைத்தும் வெளியிடும். தவிர உங்கள் பிறந்த நாளின் அன்று பிறந்த (உங்களுடன் சேர்த்து) மற்ற பிரபலங்களை யும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங கள் பிறந்த வருடத்தில் பிரபலமான டாப் 10 பாடல்களையும் அறிந்து கொள்ள லாம். உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் தேவைப்படும் என்பதையும் அது உண்டாகும் வெப்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.உங்கள் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது எனவும் இதில் அறிந்து கொள்ளலாம். உங்கள் அதிர்ஷ்ட மலர் -மரம்- கற்கள் -எண்கள் இதில் உள்ளது். இதற்கான இணைய சுட்டி தளம் சும்மா டைம் - பாஸ்க்கு கிளி்க் செய்து பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள். வாழ்க வளமுடன், வேலன். பிறந்த நாளின் மதிப்பை இதுவரை அறிந்தவர்கள்வலைப்பூவில் உதிரிப்பூக்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் பிறப்போ - இறப்போ - எதுவாக இருந்தாலும் அன்றைய தினசரி காலண்டரின் தேதியை கிழித்து உங்கள் டைரியில் ஒட்டி விடுங்கள்.. சில நாட்கள் கழித்து குறிப்பி்ட்ட நாளின் நட்சத்திரம்-திதி நமக்கு மறக்காமல் இருக்க அது உதவும்.

'ஜெய் ஹோ': ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி!

கேரளாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்காக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளமாகத் தரப்பட்டது. ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை யமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்.
ஜெய் ஹோ எனும் பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூ.7 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விளம்பரதாரர்கள் செலுத்திய கட்டணத்தைச் சேர்த்தால் ரூ.10 கேடியைத் தாண்டும் என்கிறார்கள். சர்வதேச கேரள அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சியி, பங்கேற்ற ரஹ்மானுக்கு கட்டணமாக ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் வருவாயில் ஒரு பகுதி எச்ஐவி பாதித்த குழந்தைகளின் நலனுக்காகவும், இன்னொரு பகுதி இந்தக் குழந்தைகளின் நலனுக்காக பெரிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவதற்கும் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தப் பள்ளி கட்டி முடிக்கப்படும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் வஹாப் கூறினார்.

நேற்று, இன்று, நாளை - ஒரு அப்பாவி கணவனின் கதை

08 மே 2009

கவுண்டமணி காக்டெய்ல்...

வருஷமெல்லாம் சிரிப்பா சிரிக்கற நம்ம மாதிரி ‘சிரி’யோர்கள்உலகம் பூராவும் ஜோரா கொண்டாடற நாள் மே 7ந்தேதி. அன்னிக்குதான் ‘உலக சிரிப்பு தினம்‘னு எனக்கு நற்செய்தி சொன்ன வண்ணத்துப்பூச்சியாரே..வந்தனம்! ‘32 பல்லும் தெரியறமாதிரி சிரிடா‘னு சொல்வாங்க. கூடவே ஒரு சிங்கப்பல்லும் சேர்ந்து சிரிச்சா சிறப்பா இருக்கும்ல. அதுமாதிரி..நம்ம ‘நகைச்சுவை வகையறா’வில ஸ்ரீதர் சார், அந்தணன், மகேஸ்வர், அன்புச்செல்வன், வண்ணத்துபூச்சியார், உண்மைத்தமிழன், ‘ஏ’, சதீஸ்கண்ணன், அருள், ராஜ், பரத்குமார், பாட்டாளி, ப்ரசன்னராஜன், பாலா, உலவு.காம், ரொம்ப நல்லவன்..ஸ்..சொல்லிமுடிப்பா... ..தலைவர், பிஸ்கோத்துபயல், கிளியனூர் இஸ்மத், அருள்பிரகாஷ், வெங்கிராஜா, ஜோ, ஹாலிவுட் பாலா, கார்த்திகேயன் ஜி, ரங்கராஜன் எஸ், பிரபாகர், வினோத் கௌதம், நவீனன், சுகுமார் ஸ்வாமிநாதன், கேபிள் சங்கர், வந்தியத்தேவன், அப்பாவித்தமிழன், காளி...இப்படியாக இன்னும் தேடிவந்து கூடிச்சிரிக்கற அத்தனை வலைஞர்களுக்கும் இந்த சிரிப்பு பதிவு உரித்தாகுக!
சிலபேரை பாத்தா சிரிப்பு வரும். சிலரோட பேச்சை கேட்டா சிரிப்பு வரும். ஆனா ஒருத்தரை நெனச்சாலே ‘லகலக’ன்னு சிரிப்பு வருதுன்னா.. அவர் சத்தியமா ‘கலகல’ கவுண்டமணிதான்! சிரிப்பு பக்தர்களோட ‘குலதெய்வம்’ நம்ம கவுண்டர்தான்னு சவுண்டாவே சொல்லலாம்.
அதுவும் கவுண்டமணியும் சத்யராஜும் சேர்ந்துட்டா..சிரிக்கற சிரிப்புல உதடுகளே கிழிஞ்சுபோகும்..உலகமே அழிஞ்சுபோகும். அப்படி ஒரு காமெடி இது. ‘அடிதடி’ படத்துக்கு முன்னால இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு படம் கிடையாதுல்ல. இதனால ‘காஞ்சு கருவாடாகி..தேஞ்சு திருவோடாகி’ போயிருவமோனு இவங்க பயந்த நேரத்துல..‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ படம் புக் ஆனது.
ஒருநாள்..அந்த ஷூட்டிங்ல கவுண்டமணியும்,சத்யராஜும் ரிலாக்ஸா உக்காந்துருக்காங்க. அப்போ அசிஸ்டண்ட் டைரக்டர் வந்து ‘‘ஷாட் ரெடி சார்’ன்னாரு, ‘சட்’னு சத்யராஜ் எந்திரிச்சதும்..‘சடக்’னு சத்யராஜோட கையை பிடிச்ச கவுண்டர் ‘‘ஏங்க சத்யராஜ்! உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு. அடுத்த மாச ஷூட்டிங்குக்கு வழியில்ல! கைவசம் புதுசா ஒரு படமும் இல்ல. இந்த லட்சணத்துல..இருக்கற இந்த படத்தையும் ‘விறுவிறு’னு நடிச்சு முடிச்சுட்டா..என்னாகறது நம்ம ஸ்டேட்டஸ்?’’னு காரசாரமா கேட்டுட்டு..
கமுக்கமான வாய்ஸ்ல ‘‘சொல்றத கேளுங்க. ஒவ்வொரு சீனுக்கும் பத்து டேக் வாங்குங்க! சாவகாசமா நடிங்க. அடுத்த படம் புக் ஆகறவரைக்கும் இந்தப் படத்துல நாம பிஸியா இருக்கறமாதிரி ஆக்ட் குடுங்க!’’னுஅட்டகாசமா ஆர்டர் போட..பொறிதெறிக்க சிரிச்சபடி பொட்டிப்பாம்பா அடங்கி டபுள் ஓகே சொல்லியிருக்காரு சத்யராஜ்.
அப்புறம் ஒருநாள்..இதே படத்தோட ஷூட்டிங் ப்ரேக்ல கவுண்டர்கிட்ட மாட்டி மிரட்சியா சிரிச்சிருக்காரு புரட்சித்தமிழன்! எப்படி தெரியுமா? அன்னிக்கு சத்யராஜை ஒரு டைரக்டர் சந்திக்க வரப்போறாரு. அதனால சத்யராஜ்..கவுண்டர்கிட்ட ‘‘அண்ணே..இன்னிக்கு ஏழுமணிக்கு கதை சொல்ல வர்றாங்க. சீக்கிரம் நான் வீட்டுக்கு போகணும்னே!’’னு ஏதோ ஒரு குஷியில ஏழெட்டு தடவை சொல்லிட்டாரு. அம்புட்டுதான்! வீச்சருவா தூக்காத வீராச்சாமி மாதிரி சத்யராஜை பேச்சாலயே தாக்கி தகர்த்துட்டாரு கவுண்டரு..‘‘சத்யராஜ்! எப்படியும் இந்த கதையை நீங்க கேக்கத்தான் போறீங்க. வேற படமே இல்லாத இந்த சிச்சுவேஷன்ல..அவன் குப்பைக்கதையை சொன்னாலும்..‘ஆஹா! சூப்பர் ஸ்டோரி‘னு புளுகத்தான் போறீங்க. மூணாம்பேருக்கு தெரியாம கதவை சாத்திகிட்டு கதை கேக்கப்போறதுக்கு..எதுக்கு இம்புட்டு பந்தா காட்டறீங்க? ஓவர் பில்டப்ரா சாமீ!’’னு குதறிப்போட சும்மா கதறி சிரிச்சிருக்காரு சத்யராஜ்.
அதேமாதிரி கவுண்டருக்கு இன்னொரு கோவமும் அடிக்கடி வரும். சக ஹீரோக்கள் எல்லாம்,ஹீரோயினை கட்டிப்பிடிச்சதுமே..அடுத்த நொடியில ஃபாரின் போய் குத்துடான்ஸ் ஆடிட்டு வருவாங்க, அவங்க பட்ஜெட் அப்படி! ஆனா கவுண்டர் நடிக்கற கதைப்படி இவருக்கு வாய்க்கிற லொக்கேஷன் எல்லாம் லோக்கல்தானே. நேரா சென்னை டூ பொள்ளாச்சி..இல்லாட்டி கோபிசெட்டிபாளையம்.
இந்த கொலைவெறியோட ஒருதடவை கோபிக்கு கவுண்டர் கோவிச்சுகிட்டே..சத்யராஜோட கிளம்பியிருக்காரு. ஈரோடு ரயில்வே ஜங்ஷன் வந்து இறங்கியதுமே கவுண்டர்..சத்யராஜை பாத்து ‘‘ஆஹா..வந்துட்டோம்ப்பா நம்மளோட சுவிட்சர்லாந்துக்கு! இன்னிக்கு சாயந்திரம் ஆல்ப்ஸ் மலையில ஷூட்டிங்! நாளைக்கு தேம்ஸ் நதிக்கரையில! அடேங்கப்பங்கப்பா!’’னு ‘லவுடு ஸ்பீக்கர் வாய்ஸ்ல‘ சவுண்டுவிட..சுத்தி இருந்தவங்க சிரிச்ச சிரிப்புல காது செவுடு ஆகாத குறைதான்! ஏழாந்தேதியை கொண்டாடுன ஜாலியோட அடுத்த மேட்டருக்கு போலாமா?

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1

அன்பு வலை நண்பர்களே!!

காதல் வீதியில் கனவு நாயகனாக அலைந்து கடைசியில் கல்யாணம் என்ற கடுமையான கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட சங்கத்தின் சிங்கங்களே!!

தினமும் குடும்ப பாரத்தைச்சுமந்து மாத பட்ஜெட்டுகளைக்கண்டு மலைத்துப்போய், டேமேஜர்களின் குடைச்சல்களையும் தாங்கி களைத்துப்போய் வீடு திரும்புகையில் மனைவி காதல் பொங்கப்பார்க்கையில்!!!....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள்? என்று காதலையே மறந்துபோன கணவர்களே(நானும்தான்)!!

நம் பிரச்சினை அன்றாடம் உள்ளதுதான்!! அன்றாட அலுவல்களில் மறந்துபோன காதலை எப்படி உயிர்கொடுத்து மீட்பது என்பதுதான் இந்த பதிவின் ( பதிவுகளின் -- தொடர்ந்து எழுதுவோம்ல) நோக்கமே!!

ஆஹா! நமக்கு உதவுமேன்னு நினைக்கிற மக்கள் தொடர்ந்து படிங்க!!

நமக்குக் கல்யாணமே ஆகலையேன்னு சொல்றவங்க மனைவிங்கிற இடத்தில் காதலின்னு போட்டுக்குங்க!!

இதிலெல்லாம் நாங்க கிங்காக்கும்!! நமக்குப்போய் அட்வைஸான்னு சீறும் சிறுத்தைகள் படித்துவிட்டு பின்னூட்டத்தில் உங்கள் யுக்திகளையும் சொல்லுங்க!! சரியா!!...

1.பிறர் முன்னிலையில், சொந்தக்காரர்களுடன் இருக்கும்போது மனைவி புகழ் பாடுங்கள்! யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும்!)புகழ்ந்துபேசுங்க!! எல்லோர் முன்னிலையிலும் ஏன் என்னைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று கோபப்படுவார்கள்!!............கண்டுக்காதீங்க!....அவர் உள்ளம் கேட்குமே மோர்!!! புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும்!! நக்கல் கலப்பு உடம்புக்கு ஆகாது!!!

2.நீங்கள் நாத்திகராக இல்லாதபட்சத்தில் உங்கள் மனைவியின் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளுங்கள்! ”சாமியைக்கும்பிடுங்கப்பா! நான் முக்கியமான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்”ங்கிற பதில் நல்லதல்ல! சேர்ந்து கோவிலுக்குப்போங்க!! உடல்,மன,ஸ்பிரிசுவல் என்ற் மூன்றும் கலந்ததே நம் வாழ்க்கை!! மூன்றிலும் நீங்கள் ஒன்றிப் பிணைவதே இல்வாழ்க்கை!!

3.உன்னால இந்த வேலையைக்கூட செய்யமுடியாதா? 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில்? போன்ற குறைசொல்லும் செயல் கூடாது!! செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும்! “பரவாயில்லை விடு!! நாளைக்கு நானும் நீயும் சேர்ந்தே இந்த வேலையை முடிப்போம்” என்று விசய்த்தை சிம்பிளா முடிங்க!!

4.அலுவலக அலுப்பையும்,பிரச்சினைகளையும் அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள்!! அதை மனைவிமீதுகாட்டி கோபப்படவேண்டாம்!! “கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!! ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா? உங்கள் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! மனசும் லேசாகும்!! மனைவிக்கும் தான் மதிக்கப்படுகிறோம் என்று பெருமை ஏற்படும்!! உங்களுக்கும் பலன் உண்டுங்கோ!!!

5. 10 செகண்ட் முத்தம் என்று சுஜாதா கதை ஒன்னு எழுதினார். நமக்கும் அதுபோல் இலக்கு உண்டு! ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க!! காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம்!! கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை!! அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம்!! எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க!! அப்புறம் பாருங்க! அதன் விளைவுகளை!!

5 பாயிண்ட் எழுதுறதுக்கே தாவு தீந்துபோச்சு!! மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ? ஆச்சரியந்தான்!!

மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!! சரியா!!

பசங்க ஒரு ஒப்பீட்டு பார்வை

அவங்கள மாதிரியிருக்கோமா இல்ல அதவிட அழகா இருக்கோமா நல்ல வேளை சங்கர் சார் ஆங்கிலத்துல பேர் வச்சதுனால தப்பிச்சோம் நாங்களும் சிக்ஸ்பேக் காட்டுவோம்ல நாங்களும் கடவுள் தான் நானும் வேட்டைக்கு கிளம்பிட்டேன் தல எங்க போஸ் எப்பிடி என்ன முறப்பு நாங்க எல்லாருமே அண்ணன் கஞ்சா கருப்பு வழிவந்தவர்கள் நாங்களும் ஜெயிலுக்குப்போறோம் ஜெயிலுக்குப்போறோம்

Low Disk space warning மற்றும் Don't Send error reporting நீக்குவதைப் பற்றி

Low Disk space warning:-
ரிஜிஸ்டரி எடிட்டரில் " HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" சென்று வலது புறமுள்ள வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்து New - Dword value create செய்து அதற்கு 'NoLowDiskSpaceChecks' எனப் பெயரிடவும். பிறகு அதை இரட்டை கிளிக் செய்து அதற்கு '1' value கொடுக்கவும். ரீஸ்டார்ட் செய்தால் போதும்.
Don't Send error reporting:-
ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகும்பொழுது 'If you want an error report to be sent to Microsoft' என்ற பிழை செய்தி வரும் அதில் நாம் வழக்கமாக 'Don't Send' கிளிக்குவோம். இந்த செய்தி வராமல் தடுக்க.., My Computer - ரைட் கிளிக் செய்து properties செல்லவும். அதில் Advanced tab -கிளிக் செய்து அதில் error reporting ல் ' Disable error reporting தேர்வு செய்து OKகொடுக்கவும். அவ்ளோதான். இன்றைய ஸ்பெஷல் டிப்ஸ்:- '\' க்கும் '/' க்கும் என்ன வேறுபாடு. '\' என்பது நமது கணினியில் உள்ளவற்றை குறிக்கிறது. Ex. C:\WINDOWS\SYSTEM32 '/' என்பது நமது கணினிக்கு வெளியே ( நெட்வொர்க் / இன்டர்நெட்) குறிக்கிறது. Ex: http://www.tamilish.com/upcoming/page/2/category/All

வயதுக்கு வந்த காதல்

kiss.jpg

உன் முத்தத்தின் விண்ணகம் வாய்க்காமல் போகையில் உதடுகளில் உணர்கிறேன் நரகத்தின் நகக் கீறல்களை

kiss1.jpg

நீ முத்தமிட்ட கணத்தில் முளைத்த மன நடுக்கத்தில் சூரியன் ஒளிய காற்று உறைய இதயம் மட்டும் புவியீர்ப்பு விசையைப் புறக்கணித்துப் பறந்தது.

இன்னோர் முத்தமிடு நான் இறங்கி வர வேண்டும்.

love12.jpg நிலவொளியின் நதிக்கரையில் குளிர் காற்றின் பொதுக்கூட்டத்தில் உன் விரல் தொட்ட வினாடியில் உயிருக்குள் பறந்த பறவை சொன்னது எனக்குள் காதல் கூடாரமடித்திருப்பதை.

love4.jpg

உன் காதல் நினைவுகளைச் சுமக்கையில் எனக்குள் காமத்தின் சாரலடிக்கும் என்பதை உன் வெட்கத்தின் வாசலுக்குள் சொல்லிச் செல்கையில் நீ சட்டென்று வெளிப்படுத்திய போலிக் கோபத்தில் புதைந்துகிடந்தது நம் காதல்.

bed.jpg

உன் புகைப்படம் பார்த்துத் துயில்வதை விட உன் புகைப்படம் பார்த்து விழிப்பதை விரும்பிய கணத்தில் என் காதல் வயதுக்கு வந்திருந்தது.

இது தாண்டா டூ வீலர் !

twoகொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.

நகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.

எரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.

இந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.

பக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் _mg_6017இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.

உயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.

அளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

oneசெக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் !

05 மே 2009

இளையராஜாவின் அழகர் மலை ஆடியோ- வெளியிட்டார் கமல்

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள கருமாரி கந்தசாமியின் 'அழகர் மலை' படத்தின் இசையை வெளியிட்டார் கலைஞானி கமல்ஹாசன். ஆர்கே, பானு நடிக்க, எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அழகர் மலை', நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமியமும் இசையும் மணக்க மணக்க வரும் படமாகும். இந்தப் படத்தின் இசையை இசைஞானி இளையராஜா அமைத்துள்ளார். அத்துடன் ஒரு பாடலுக்கு அவர் இசைஞானியாகவே தோன்றுகிறார். கமல்ஹாசனின் ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. படத்தின் நாயகன் ஆர்கே, இயக்குநர் எஸ்பி ராஜ்குமார், தயாரிப்பாளர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக இயக்குநர் எஸ்பி ராஜ்குமார் மற்றும் ஆர்கே இருவரும் கமல்ஹாசனிடம் வாழ்த்துப் பெற்றனர்.

டூயட் எனும் பெயரில் குரங்காட்டம்!'-பாலுமகேந்திரா

தமிழ் சினிமாவில் டூயட் எனும் பெயரில் எடுக்கும் காட்சிகளைப் பார்த்தால் குரங்கு குட்டிகள் ஆடுவதைப் போலத்தான் தெரிகிறது என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா. வசந்தபாலன் இயக்கும் அங்காடித் தெரு படத்தின் ஆடியோவை நேற்று வெளியிட்ட பாலு மகேந்திரா, பேசியதாவது: தமிழ் சினிமாவில் இன்றைக்கு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது உண்மைதான். ஆனால் முழு மாற்றம் வரவில்லை. தமிழ் படங்களில் காதல் பாடல் என்ற வழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. அது எரிச்சலூட்டக்கூடிய விஷயம். டி.வியில் இதுபோல் பாடல்கள் வரும்போது ஒலியை குறைத்துவிட்டு பாருங்கள்... போதை ஏறிய இரண்டு குரங்கு குட்டிகள் ஆடுவதுபோலத்தான் தோன்றும். அதை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் முள்ளும் மலரும் படத்தில், பின்னணியில் பாடல் காட்சியை படமாக்க மகேந்திரனிடம் கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். காதல் வயப்பட்டவர்கள் வழக்கமாக என்ன செய்வார்களோ அது இருந்தால் மட்டுமே போதும். என் படங்களில் காதல் இருக்கும். மற்றபடி முடிந்தவரை அபத்தங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். சினிமாவை பொருத்தவரை கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். நாயகி என்றால் பட்டர் கேக் மாதிரி வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அது தவறு. பஸ் ஸ்டாப்பில் பார்க்கும் முகங்கள், அடுத்த வீட்டில் பார்க்கும் முகங்களையும் திரையில் பார்க்க வேண்டும். சினிமா மாறிக்கொண்டிருக்கிறது. ஸ்டார் இமேஜ் உடைந்து கொண்டிருக்கிறது. நல்ல சினிமா வரவேண்டுமென்றால் ஸ்டார் இமேஜ் உடைய வேண்டும், உடைக்கப்படும், என்றார் பாலு மகேந்திரா.

படித்ததில் பிடித்தது : கணவன் - மனைவி உறவுகள் உணர்வுகள்

பெற்றோர் - குழந்தை, நண்பர்கள், ஆசிரியர் - மாணவர், காதலன் - காதலி என உறவுகள் பல இருந்தாலும் உடலாலும் மனதாலும் இரண்டறக் கலந்து, ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் - மனைவி உறவுதான். மற்றவர்களின் மன ஓட்டங்களை வெறும் பார்வையாளராயிருந்து கவனிக்கு (observe) முடியும். ஆனால் சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு, குழப்பம், பயன் என அனைத்து உணர்வுகளும் அப்படியே தாக்குவது இந்த உணர்வில்தான். ஒரே அலைவரிசையிலிருக்கும் கணவன் - மனைவிக்கு அந்தந்த கணத்தில் எண்ணங்களை பரிமாறப்படுவதால் வார்த்தைகளே வீண்தான்.. எந்த ஒரு செயலுகுமே அடிப்படை எண்ணங்கள்தான். தங்களது மன ஓட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாத கணத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன. இன்றைய தினத்தில் அதிகரித்து வரும் குடும்ப உறவுப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் மனம்தான். கணவன் - மனைவு உறவு முழுக்க, முழுக்க உணர்வுகளால் பின்னிப் பிணைந்த ஒரு கூடு. இதில் ஒரு இழை அறுந்து போனாலும் அந்த முழுமையே (whole) ஆட்டங்கண்டுவிடும். சின்ன சின்ன உணர்ச்சிகள் கூட பெரிய விபரீதகளுக்கு காரணமாகிவிடும். அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையில் தங்கள் உணர்ச்சிகளுக்கே வேலி போட்டுவிடுவர் சிலர். இந்தப் பாதிப்பு இன்னும் அதிகம். தற்காலிகமாக பிரச்சினையை ஒத்தி வைக்கலாமே தவர, முற்றிலும் தலைபோட முடியாது. ஒரே வழி, உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு வெளிப்படுத்துங்கள்! சந்தேகம்! இந்த வார்த்தையைப் படிக்கும் போதே நாற்காலியின் நுனிக்கு வந்துவிடுவார்கள் ஆண்கள். பலகுடும்பங்களை ஆட்டிவைக்கும் ஐந்தெழுத்து மந்திரவார்த்தை. “என்னங்க, நான் உங்க ஆஃபீஸ்க்கு ஃபோன் பண்ணப்ப யாரோ ஒருத்தி எடுத்தாளே, யாரவ? எதுக்கு உங்கள டேபிளுக்கு வரனும்?” “நான் இன்னைக்கு பூவே வைக்கலையே. உங்கள் மேல எப்படி மல்லிப்பூ வாசனை அடிக்குது?.” “உங்க ஆஃபீஸ் என்ன பீச் நடவுலையா இருக்கு? ஷூக்குள்ள ஒரு கிலோ மணல்…!” “கழுதை மிஸ் பண்ணாலும் பண்ணும். நீங்க பண்ணமாட்டீங்க.. ஒரு சினிமா போஸ்டர் விடாம வீட்டுக்கு வாங்க, கண்ணை தோண்டிடறேன்.” “குதிரைக்கு திரைகட்டற மாதிரி உங்க ரெண்டு கண்ணையும் கட்டினும் ரோட்ல வண்டி ஓட்டறப்ப அப்படி என்ன ரெண்டு பக்கமும் திரும்பி திரும்பிப்பார்த்து ஜொள்ளுவிட வேண்டியிருக்கு…?” என்ன? இவையெல்லாம் உங்கள் வீட்டு வசனங்கள்தானே…? எல்லா மனைவிகளும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மேற்படி வசனங்களைப் பேசிவிடுவார்கள். “வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கறேன்” என்று சொல்லிவட்டு அதுவரை கூட காத்திருக்க பொறுமையில்லாமல் ‘ஆன் தி ஸ்பாட் ஆக்ஷன்’ எடுக்கும் மனைவிகளுமுண்டு. “புருஷனையே சந்தேக்படறியே, நீயெல்லாம் ஒரு மனைவியா, சே..!” என்று கணவன் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்கும்போது சட்டென்று குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு, ஐயோ, நான் நல்ல மனைவி இல்லையோ… என்ற குழப்பும், கவலையும் வேதனையில் ஆழ்த்தும் நீங்களும் அபடித்தானா? அப்படியென்றால் ‘சந்தேகம்’ என்ற கடலைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, மூழ்கி முத்தெடுக்க வேண்டிய விஷயகள் ஏராளம்…! 1. பெண்களைப் பொறுத்தவரையில், உங்கள் கணவரைப் புரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் சந்தேகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பசி, தூக்கம், காமம் ஆகிய உணர்வுகளைப் போல் சந்தோஷமும் ஒரு உணர்வுதான். நன்றாக யோசித்துப்பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். எப்போதெலாம் உங்கள் கணவரை சந்தேகப்படுகிறீர்கள் என்று கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நிச்சயமாக மாத்த்தின் எல்லா நாட்களிலும் சந்தேகம் வராது. மாதவிலக்கு நாட்கில் உங்களின் சந்தேக்க்குணம் தலைதூக்கும். காரணம், பொதுவாகவே இந்த நாட்களில் உடல் சோர்வுடன், மனச்சோர்வும் சேர்ந்திருக்கும். அதனால், உங்கள் கணவர் லேசாக ஒரு பாடலை முணுமுணுத்தால் கூட, ஏதோ அவர் அதீத சந்தோஷத்தில் மிதப்பதுபோல் தோன்றும். “நான் இங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருகேன். இவறு இவ்வளவு குசியா இருக்காரே! ஒருவேளை வேற யார்கூடவாத்து சுத்திட்டு வந்திருப்பாரோ?” என்று ஒரு பொறிதட்டும். அந்தப் பொறியை நீங்கள் தட்டிவிட்டீர்கள் என்றால் பிழைத்தீர்கள். (உங்கள் கணவர் பிழைத்தார்) இல்லை, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி அடுத்தசில மணி நேரங்களில் சந்தேகத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பீர்கள். 2. அடுத்தது, அந்த சமயத்தில் சோர்வு மட்டுமில்லாமல், தான் அழகாயில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மயும் ஏற்படும். (உண்மையில், அப்போதுதன் பெண்கள்ரொம்ப அழிகாயிருப்பார்களாம்). ஒரு வேளை உற்சாக்க் குறைவால் கூட இந்த எண்ணம் தோன்றலாம். அதன் விளைவும் சந்தேகம்தான். தன்னைத் தவிர மற்ற பெண்களெல்லாம் தேவதைபோல் தோன்ற, கணவர் பக்கத்து வீட்டு மாமியிடம் பேசினால் கூட, உங்கள் மனதில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். சரி, இப்ப என்னதான் செய்யறது என்று கேட்கிறீர்களா? முதலில் இந்தக் கால சுழற்சியைக் கவனியுங்கள். சந்தேகம் எப்போது வருகிறது எனக் கவனிக்கத் தடங்கினீர்கள் என்றால், காலப்போக்கில் நாளைக்கு ‘கோடீஸ்வரி’ வரும் என்பதப் போல, நாளைக்கு ‘சந்தேகம்’ வரும் எனச் சரியாக ஊக்ககுமளவற்கு எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள். அடுத்து விழிப்பு: சந்தேகம் வரும் சமயங்களில் விழிப்புடன், தன்னுணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். சந்தேகம் இப்போது வருவது இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மூன்றாவது முக்கியமான விஷயம். சந்தேகத்தை சந்தேகமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் - அதாவத, நீங்கள் உங்கள கணவரை சந்தேகப்படுகிறீர்கள். அது உண்மையாக இருக்க வேண்டிய அசியமில்லை. கோபம் தணிந்த பிறகு ஓரிரு நாட்களில் கூட “சே, எவ்வளவு முட்டாள்தனமா நினைச்சுட்டேன்” என்று உங்கள் தலையில் நீங்களே கூட குட்டிக்கொள்ள நேரலாம். எனவே உங்கள் சந்தேகத்தை உண்மையென நம்பாதீர்கள். சந்தேகப்படும் மனைவிகளே, உங்களை சந்தோஷப்படுத்த சில புள்ளி விபரங்கள்: (ஆய்வின் அடிப்படையில்) 1. சந்தேகப்படும் மனைவிதான் உண்மையான மனைவி என்று நூற்றுக்கு தொண்ணூற்றியெட்டு பெண்களும், எண்பத்தேழு ஆண்களும் கருத்தக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “சந்தேகம் எப்போது வருகிறது? கணவன் தன்னை விட்டுப்போய்விடக் கூடாது என்ற உணர்வு உச்சநிலையை அடையும்போதுதானே, இந்த உணர்வு மனைவிக்கு எப்போது வருகிறது? கணவன் மேல் அதீத அன்பாயிருக்கும் போதுதான். எனவே, அதீத அன்புதான் சந்தேகமாகிறது. 2. அடுத்தது, ஒரு மனைவி எப்போது சந்தேகப்பட தொடங்குகிறாள் தெரியுமா? (சந்தேகப்படத் தகுதியா என்று சிரிக்காதீர்கள்) தன் கணவனுக்கு உண்மையானவளாயிருக்கும் போதுதான். கணவனுக்குத் தெரியாமல் மனைவி தப்பு செய்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் மனநிலை எப்படியிருக்கும் தெரியுமா? “இவனும் யார் கூடயாவது போயிட்டால்தான் நிம்மதி. அப்பதான் நாம செய்யறதைக்

கண்டுக்க மாட்டான்..” இப்படி நினைப்பவள் தன் குட்டு வெளிப்பட்டுவிடுமே என பயந்து கண்ணைக் கொஞ்சம் கூட சந்தேகப்படவே மாட்டாள். தன் மேல் தவறை வைத்துக்கொண்டு எப்படி கணவனை சந்தேகப்பட முடியும்? 3. மனைவிகளே, உங்களுக்கு இன் அதிர்ச்சியூட்டும் இன்னொரு செய்தி என்ன தெரியுமா? மனைவி தன்னை சந்தேகப்படுவதை ஆண்களே விரும்புகிறார்கள் என்பதுதான். மணமான பத்து ஆண்களில் ஒன்பது பேர் சொன்ன கருத்து இதோ: ‘என் மனைவி என்னை ரொம்ப சந்தேகப்படறப்ப கோபம் வரும். என்னடா நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேன்கறாளேனு தோணும். ஆனா, கொஞ்சம் கோபம் தணிஞ்சப்புறம் நம்ம மேல இவ்வளவு பொஸஸிவ்வா இருக்காளேன்னு சந்தோஷமா இருக்கும்..” ஆம். மனைவி தனமேல் பொஸஸிவாக இருக்க வேண்டுமென ஆண்கள் விரும்புகிறார்கள். அன்பின் எதிரொலிதான் சந்தேகம் என்பதைப் புரிந்துகொண்ட கணவர்களுக்கு பெரிதாய் ஒன்றும் கோபம் வருவதில்லை. இதைப் படித்தவுடன் உங்கள் கணவரும் உங்கள் சந்தேகத்தை மதிக்கமாட்டார். கோபத்திற்குப் பதில் அசட்டுச்சிரிப்பு (பெருமையான சிரிப்பு?) சிரித்தாலும் ஆச்சர்யமேதுமில்லை. 4. அவ்வப்போது சந்தேகப்பட்டுக்கொள்ளும், தம்பதியர் பெரும்பாலும் பிரிவதில்லை. காதல் ஜோடிகளிலேயே “என்வுட்பியை நான் இதுவரைக்கும் சந்தேகப்பட்டதில்லை. நாங்கள் ரொம்ப சோஸியல்…” என்று பந்தாவாக சொல்லும் பலர் திருமணம் என்ற கட்டம் வரைகூட செல்வதில்லை.
“அவர் என்னை சந்தேகப்பட்டதால்தான் பிரிந்தோம்..” என்று சொல்பவரகள் பெரும்பாலும அதை ஒரு காரணமாகத்தான் சொல்கிறாரகளே ஒழிய, உண்மையான காரணம் வேறு ஏதாவாகத்தானிருக்கம். “நல்லா சந்தஷமா எல்லார் கண்ணும் படறமாதிரிவாழ்ந்தாங்க. இப்ப என்னவோ தரியல பிரிஞ்சுட்டாங்க..” - இந்த ரீதியலான ஸ்டேட்மெண்ட்தான் விவாகரத்து வழக்குகளில் அதிகம் என சம்பந்தப்பட்டவர்கள் சத்தியம் செய்கிறார்கள். கட்டாயம் சந்தேகப்பட்டே தான் தீர வேண்டுமா, இல்லையென்றால் பாவச்செயலா…? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டே இரண்டேதான். (1) சந்தேகப்படுகிறேன் இது இழிவில்லையா என்ற குழப்பம். குற்றவுணர்ச்சியும வேண்டவே வேண்டாம். (2) சந்தேகம் ஆரோக்கியமானதுதான். இடமறிந்து அளவறிந்து செயல்படும் வரை. சந்தேக உணர்ச்சியெல்லாம் இந்த பெண் ஜென்மங்களுக்கு வரும் அற்ப உணர்ச்சி. நாங்கள் அதையெல்லாம் கடந்தவர்கள் என்று காலரை தூக்கிக்கொள்ளும் ஆண்களே, கொஞ்சம் கவனியுங்கள். இராமாயண காலத்திலேயே நின்றுவிடுகிறது. (சமூக, குடும்ப சூழல்ளால்..) ஆனால் பலரின் வாழ்க்கையை வேரோடு அழித்த சம்பவங்களுக்கல்லாம் ஆணிவேர் ஆண்களின் சந்தேகம்தான். மனநலப் பிரச்சினைகளுக்கென வரும் கேஸ்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. உண்மையாகவே சந்தேகப்படும் ஆண்களைவிட மனைவி சந்தேகப்படுதுபோல் நடித்து Misuse செய்பவர்களே அதிகம். “என்னங்க, ஏதாவது வேலை தேடுங்களேன் இப்படி சும்மாவே இருக்கிறீர்களே…” “இந்த மாசம் பணம் பத்தாது போலிருக்கே.” இது போன்ற பொருளாதார பிரச்சினைகளை மனைவி எழுப்பும் போதெல்லாம் ஆண்கள் கையில் எடுத்துக்கொள்ளும் ஒரே ஆயுதம் சந்தேகம்தான். எங்கே அடுத்தமுறை நாம் கேள்வி கேட்டால், இதே போல் சந்தேகப்படுவானோ என்று பயந்து தங்கள் உணர்ச்சிகளை மனதில் புதைத்துக்கொள்வார்கள். அது வேறு எப்படியாவது வெளிப்படும்.! இது என்ன? பெண்கள் உண்மையாகே மனதில் தோன்றும் சந்தேகங்களைப் பூட்டிவைக்காமல், அதை ஒரு சந்தேகமாகவே வெளிப்படுத்தி… அதற்கு கிடைக்கும் நியாயமான பதிலை உள்வாங்கி ஏற்றுக்கொள்ளுங்கள்..! ஆகமொத்தத்தில் அளவோடு சந்தேகப்பட்டு, நலமோடு வாழுங்கள்…! சி.ஆர். செலின்

இரட்டை குழந்தைகள் பிடிக்கும்!-த்ரிஷா

த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள். இந்தப் பிறந்த நாளை ஆடம்பரமில்லாமல் எளிமையாகக் கொண்டாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் த்ரிஷா. தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான த்ரிஷா, தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுகிறார். இந்தப் பிறந்தநாளையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், சர்வம் படத்தில் ஆர்யாவுடன் முத்தக் காட்சியில் வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார். இந்த மாதிரி வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என்றும், நெருக்கமாக நடித்துள்ளது உண்மை... ஆனால் முத்தம் கொடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். தனது திருமணம் குறித்துப் பேசிய அவர், இன்னும் அதற்கான நேரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தப் பிறந்தநாளில் தனக்குப் பிடித்த விஷயங்கள் குறித்துக் கூறுகையில், "எனக்கு செக்ஸியாக நடிக்கப் பிடிக்கும். ஆனால் தேவையில்லாமல் திணிக்கப்பட்டதாக அந்தக் காட்சி இருக்கக் கூடாது. நடிகர்களில் செக்ஸியானவர் கமல்தான். எனக்கு அவரை மிகப் பிடிக்கும். இரட்டைக் குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை விருப்பம்" என்றும் கூறுகிறார் த்ரிஷா.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com