Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

25 ஜூலை 2011

Facebookஐ முந்துகிறதா Google+ ?

கடந்த சில வாரங்களாக அடிக்கடி பார்க்கும் செய்தி என்னவென்றால் கூகிள் ப்ளஸ் பற்றியது தான். நேற்று கூட செய்தியில் கூகிள் ப்ளஸ் இருபதே தினங்களில் இருபது மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது என்று வெளிவந்துள்ளது. இத்தகைய செய்திகள் சற்று மிகைப்படுத்தப்படுபவை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படித் தான் அமெரிக்காவில் எந்திரன் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டார்கள் ஆனால் படம் ரிலீஸ் ஆன அன்று வரை கூட டிக்கெட் கிடைத்ததாக டிவிட்டர் நண்பர்கள் தெரிவித்து இருந்தார்கள். செய்தி நிறுவனங்களையும் குறை சொல்ல முடியாது அவர்களுக்கு பரபரப்பாக வெளியிடுவதற்கு ஏதாவது செய்தி வேண்டும் சரி செய்தி உண்மையோ பொய்யோ போய் இந்த கூகிள் ப்ளஸில் என்ன தான் இருக்கு என்று ஆர்வம் தோன்றாமல் இருக்கவில்லை. அதனால் www.google.com/plus என்று டைப்பினேன். கூகிள் ப்ளஸின் முதல் பக்கம் தோன்றியது. ஏற்கனவே ஜிமெயில் அக்கவுண்ட் இருந்ததால் அதே பயனர் தகவல்களை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் என்று சொல்லப்பட்டு இருந்தது. பயனர் தகவலை உள்ளீடு செய்து கூகிள் ப்ளஸின் உள்ளே நுழைய முற்பட்ட போது நாம் ஏற்கனவே கொடுத்து இருக்கும் பெயர் முதலான தகவலகள் சரிதானா என்று கேட்கப்பட்டது. பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் அதை தமிழில் மாற்றி மீண்டும் உள்ளே நுழைய முற்பட்டபோது பெயர் விவரம் விதிமுறைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படவில்லை என்று செய்தி வந்தது. இவ்ளோ பெரிய கூகிள் ப்ளஸில் தமிழில் பெயர் கொடுக்க முடியாதா? அப்படி எல்லாம் இருக்காதே என்று மீண்டும் ஒரு முறை முயற்சி செய்த போது கீழ்கண்ட எச்சரிக்கை வந்தது. அதாவது அதே பெயருடன் தான் உள்ளே நுழைவேன் என்று அடம் செய்தால் கூகிள் ப்ளஸ் பயன்படுத்த முடியாமல் போகலாம் என்றும் ஆனால் தொடர்ந்து ஜிமெயில் மற்றும் கூகிள் பஸ் போன்றவகளை பயன்படுத்தலாம் என்றும் மெஸ்ஸேஜ் வந்தது நமக்கு ஏதாவது தடங்கல் வந்தால் தானே ஆர்வமும் அதிகரிக்கும் அதனால் எப்படியும் இந்த கூகிள் ப்ளஸை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக பெயரை ஆங்கிலத்தில் மாற்றி உள்ளே மீண்டும் நுழைய முற்பட்ட போது மறுபடியும் கீழே உள்ள எச்சரிக்கை செய்தி வந்தது. பேஸ்புக் மீதும் இப்படி ஒரு குற்றச்சாடு எழுந்தது அதாவது பயனாளர்கள் தகவல்களை பேஸ்புக் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு. அதனால் இந்த கண்டிஷனையும் ஒப்புக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தால் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. ஏற்கனவே புஸ்ஸான கூகிள் பஸ்ஸில் சில ஜிகினா வேலைகளை செய்து இருக்கிறார்கள். பேஸ்புக் கொஞ்சம், டிவிட்டர் கொஞ்சம் என்று கலந்து கட்டி மேலும் பேஸ்புக்கில் சேர்க்கப்படலாம் என்று யூகிக்கப்பட்ட சில அம்சங்களையும் சேர்த்து இருக்கிறார்கள் பேஸ்புக் வளர்ந்து வந்த கதை வேறு விதமானது. அது புதிதாக தோன்றிய ஒரு சேவை. அதற்கு முன் அது எந்த வடிவத்திலும் இணையத்தில் இருக்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் அது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் அப்படி இல்லை கூகிளுக்கு என்று ஏற்கனவே ஒரு மிகப் பெரிய பயனர் வட்டம் ஜிமெயில் மூலமாக உருவாக்கி வைத்துள்ளது. கூகிள் ப்ளஸில் புதிதாக இணைந்துள்ள 20 மில்லியன் பேரும் புதியவர்கள் என்றால் அது உண்மையிலேயே ஒரு சாதனை தான். ஆனால் அவர்கள் ஏற்கனவே ஜிமெயில் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இது அதற்கு மேலும் ஒரு சறுக்கல் தான் ஏனென்றால் ஜிமெயில் பயன்படுத்துப்வரகளே அதை இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் பேஸ்புக்கும் கூகிளும் இது எங்க ஏரிய உள்ளே வராதே என்று ஆளாளுக்கு தங்கள் கோட்டையில் கோலோச்சிக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் இமெயில் சேவையை ஆரம்பிக்க கூடும் என்று வெளியான செய்தி கூகிளின் கோட்டையை சற்று அதிரச் செய்து இருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ பேஸ்புக்கிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட இமெயில் சேவை இன்னும் வெளிவரவில்லை. அதற்குள்ளாக கூகிள் விழித்துக் கொண்டு இந்த கூகிள் ப்ளஸை அறிவித்து இருக்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பேஸ்புக் இமெயில் சேவையை தொடங்கினால் அதன் தாக்கம் இதை விட பல மடங்காக இருக்கும்

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com