Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

30 ஜூலை 2011

ஊடகங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை - கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்

பொறுப்பற்ற காணொளியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியமை தொடர்பாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் என்பது சுயாதீனமான ஒரு ஊடக நிறுவனமாகும். ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் சுதந்திர ஊடகம் என்பது முக்கியமானது என பிரித்தானியா நம்புகிறது. ஊடக நிறுவனங்கள் பொருத்தமான, ஒழுக்க மற்றும் சட்டரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையை பிரிட்டன் கொண்டுள்ளது.

ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

சுயாதீன ஒழுங்குபடுத்துனரான டெலிகொமியுனிகேசன் சுயாதீன பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் வழக்கமான அவதூறு தொடர்பான சட்டங்கள் என்பன ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் பிரித்தானிய பொறிமுறையில் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com