கௌதம் - அஜித் இணைவதாக பேசப்பட்டபோது அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது...இப்போது அதே கதையில் விஜய் நடிப்பதாகவும், அவருக்காக திரைக்கதையில் கௌதம் சில மாற்றங்களைச் செய்ய முன்வந்தபோதும் விஜய் மறுத்து, அஜித்துக்கு எழுதப்பட்டதை மாற்றாமல் அப்படியே நடிக்க முன்வந்ததாகவும் செய்திகள்!
நிச்சயம் இது ஒரு அசத்தல் படமாக இருக்கும் என நம்புகிறேன்! விஜய் தொடர்ந்தும் இதே வழியில் சென்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியே! ரஜினிக்குப் பிறகு குழந்தைகளை அதிகம் கவர்ந்தது விஜய்தான்! -இதை யாரும் மறுக்கமுடியாது.
எல்லாவிதமான திறமைகளும் இருந்தாலும் என்போன்றவர்களை விஜய் படங்களிலிருந்து விலகி ஓடவைப்பவை அவரின் பாழாய்ப்போன 'பஞ்ச்' டயலாக்குகளும், கொடூரமான வெட்டி சவடால் பேச்சுக்களும்தான்! அதுவும் வில்லனின் கோட்டைக்கே சென்று வெட்டி சவடால் பேச்சுப் பேச, அதை வில்லனின் அடியாளுங்க கைகட்டி சுவாரஸ்யமா கேட்டுக் கொண்டிருப்பதும், திருமலை தொடங்கி தொடரும் கொடுமை!
இவையில்லாமல் ஒரு விஜய்படம் என்பதே ஒரு நல்ல தொடக்கம்! இனி விஜய் இந்த பேரரசு, தரணி பிரபுதேவா வகையறாக்களை கிட்ட அண்டவிடாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றுகிறது!
அதைவிட முக்கியம்! விஜய்க்கு எதிரியே அவர் அப்பா எஸ்.ஏ.சி தான்! அவர்தான் பதிவர்களை விடவும் அதிகமாக விஜய்யை வைத்துக் கலாய்ப்பவர், காமெடி பண்ணுபவர்! முதல்ல அந்தாளை தூர வச்சாலே விஜய்க்கு வெற்றி தான்!விஜய்யை அரசியலுக்கு இழுத்து ஒரு வழி பண்ணுவதாக இருக்கிறார் அது மக்களையா விஜயையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
கௌதம்மேனனின் படங்கள் (நடுநிசி நாய்கள் பார்க்கவில்லை!) என்னதான் அவர்மீது விமர்சனங்கள் இருந்தாலும் - அதுவும் நடுநிசி நாய்கள் படத்தினால்தான் ஏற்பட்டது - அவற்றின் ஸ்டைலிஷான மேக்கிங்கால் எனக்குப் பிடித்திருந்தன! அதிலும் எனக்கு 'காக்க காக்க' தான் மிகப்பிடித்தது! 'மாஸ்டர் பீஸ்' என்று தோன்றுகிறது!