[Gallery: Can you spot the invisible man?]
11 ஆகஸ்ட் 2011
‘Invisible man’ artist hides in supermarket
ஆபாசமான உடை சேலைதான் - ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. கதையும், கேரக்டரும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் நடிகைகள் அணியைச் சேர்ந்தவர். இதன் காரணமாக எப்போதாவதுதான் அவரை திரையில் பார்க்க முடிகிறது. அதேநேரம் அவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். ஆண்ட்ரியாவின் முதல் விருப்பம் இசை... பாடுவது.
காக்க காக்க படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் என்னை பாட வைத்தார். சினிமாவுக்காக நான் பாடியது அதுதான் முதல்முறை. அந்தப் படத்தின் இயக்குனர் கௌதம், பச்சைக்கிளி முத்துச்சரத்தில் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
ஆண்ட்ரியா தமிழில் தொடர்ந்து பாடுகிறார். தெலுங்கிலும் அவர் பாடிய பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.
தெலுங்கில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஜாரா... ஜாரா... பாடல்தான் முதலில் பாடினேன். பாடல் ஹிட். ஆனால் தமிழைப் போல் தெலுங்கில் தொடர்ச்சியாக பாட வாய்ப்புகள் ஏனோ வரவில்லை.
ஆண்ட்ரியா என்ற பெயர் இவர் மும்பையைச் சேர்ந்தவரா என்ற எண்ணத்தை தரும். பலரும் அப்படிதான் நினைக்கிறார்கள். ஆனால் ஆண்ட்ரியா படித்தது சென்னை என்பது ஆச்சரியமான விஷயம்.
நான் சென்னை கிறிஸ்டியன் காலேஜில்தான் என்னுடைய கிராஜுவேட்டை கம்ப்ளீட் செய்தேன். பிறகு மாடலிங்... விளம்பரங்கள். தென்னிந்தியாவின் முதல் பெண் மிரண்டா மாடல் நான்தான்.
ஆண்ட்ரியாவும், சர்ச்சையும் அக்கா, தங்கை. செல்வராகவன் படத்திலிருந்து திடீரென விலகியது, தன்னை படம் எடுத்த புகைப்படக்காரரை படம் எடுக்காதே என்று முறைத்தது என எப்போதும் சென்சேஷன்தான். அதனாலா தெரியவில்லை, சென்னையில் இருப்பதைவிட ஹைதராபாத்தில் தங்குவதையே அதிகம் விரும்புகிறார்.
ஹைதராபாத் எனக்குப் பிடித்த சிட்டி. அங்கு இருப்பதை விரும்புகிறேன். தெலுங்கு சினிமாவில்தான் அருந்ததி மாதிரியான ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகின்றன. அதனால் தெலுங்குப் படங்கள் எனக்குப் பிடிக்கும். என்றாலும் எனக்கு எப்போதும் விருப்பமான இடம் என்றால் அது சென்னைதான்.
தேர்ந்தெடுத்து நடிப்பதால் ஆண்ட்ரியாவை அவ்வப்போதுதான் தமிழில் பார்க்க முடிகிறது. இனி எப்போது ஆண்ட்ரியாவை தமிழில் பார்க்கலாம்?
மங்காத்தாவில் அஜீத்துடன் நடித்திருக்கிறேன். அதுவொரு நல்ல அனுபவம். ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடந்தது. வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கேன்.
நடிகை என்றதும் அடுத்து வரும் கேள்வி, கிளாமர். ஹோம்லியாக அறிமுகமாகி ஹோம்லியாகவே - ஆயிரத்தில் ஒருவன் தவிர்த்து - வளைய வருகிறார் ஆண்ட்ரியா. கிளாமர் ரோலில் அவரை பார்க்க முடியுமா?
ஒய் நாட்? கிளாமராக நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது? முழுதாக சேலை கட்டியிருந்தாலும் கூட ஆபாசமாக காட்ட முடியும். குறைவான ஆடையிலும் நாகரிகமாக காண்பிக்க இயலும். கிளாமர் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.
நடிப்பு, பாட்டு என்று இரு ட்ராக்கில் பயணிக்கிறார் ஆண்ட்ரியா. மேடைகளில் பாடும் போது அவர் காட்டும் ஈடுபாடு அசர வைக்கிறது. நடிப்பு, இசை... அவரது முதல் சாய்ஸ்...?
இசைதான் பர்ஸ்ட், நடிப்பு அதற்குப் பிறகுதான்.
ஆண்ட்ரியாவின் சினிமா ரோல் மாடல்கள்...?
எனக்கு ஆண்ட்ரி ஹெப்பர்ன், கேட் வின்ஸ்லெட் இருவரையும் ரொம்பப் பிடிக்கும். இவர்களை என்னுடைய ரோல் மாடல்கள் என்று சொல்லலாம்.
குளிக்கும்போது படையினர் மொபைல் போனில் படம் எடுத்தனர்: அதிர்ச்சி சாட்சியம் !
போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார். இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது. இதனை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் தற்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஒருவர் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கூறியுள்ளது. முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு - ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை� என்று பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். உணவுக்காகவும், (மாதவிடாய்) சுகாதாரத் துண்டுகளுக்காகவும், உடைகளுக்காகவும் தான் ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வேறொரு பெண்ணும் சாட்சியம் அளித்துள்ளார்.
குளிக்கும்போது ஆண் படையினர் தம்மை கையடக்கத் தொலைபேசிகளில் படம் எடுத்ததாகவும், அதற்காகவே தம்மை திறந்தவெளியில் குளிக்க நிர்ப்பந்தித்ததாகவும் ஹெட்லைன்ஸ் ருடேயிடம் மற்றொரு பெண் கூறியுள்ளார். அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். �அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.� என்கிறார் சுந்தரி என்னும் ஒரு பெண். அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.� என்று தெரிவித்துள்ளார் சுந்தரி.
அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள், பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2011 இலவசமாக
நம்முடைய கணினியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளரகடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும். சில நேரங்களில் நமக்கே விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும். விண்டோஸ் பேக்அப், வன்தட்டு சீரமைப்பு, கடவுச்சொல் மீட்டெடுப்பு மற்றும் தகவல் மீட்டெடுப்பு போன்ற பயன்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியினை நாடி செல்ல வேண்டும். இந்த அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. அதுதான் Wondershare Live Boot 2012. இந்த மென்பொருள் மூலமாக 40+ மேற்பட்ட விண்டோஸ் பயன்பாடுகளை மிக எளிமையாக செய்ய முடியும்.
பேஸ்புக்-ல் கடந்த ஆண்டு பேசியதை ஞாபகப்படுத்தும் துல்லியமான பயனுள்ள தளம்.

சென்ற ஆண்டு இதே நாள் நான் பேஸ்புக்-ல் யாருக்கெல்லாம் செய்தி அனுப்பினேன் அல்லது எனக்கு யார் எல்லாம் செய்தி அனுப்பினார்கள் என்ற விபரங்களை நமக்கு இமெயில் மூலம் தெரிவிக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://pastposts.com

படம் 2
இத்தளத்திற்கு சென்று Connect with Facebook என்ற பொத்தனை சொடுக்கி நம் பேஸ்புக் கணக்கை கொடுத்து உள் நுழையலாம். அடுத்து வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது இதில் Allow என்பதை சொடுக்கு உள்நுழையலாம். இனி நாம் கடந்த ஆண்டு என்னவெல்லாம் பேசினோம் என்பதை தினமும் நமக்கு இமெயில் மூலம் தெரிவித்து கொண்டே இருக்கும் இந்ததளம். சில நேரங்களில் நம் பழைய நிகழ்வுகளை அசைபோட ஒரு சந்தர்ப்பமாகவும் இது இருக்கும். புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
10 ஆகஸ்ட் 2011
மங்காத்தா - "ஆட்டம் சூடு பிடிக்கிதுங்கோ"
கார் மோதுண்டதில் ஆசிய நாட்டைச் சேர்ந்த மூவர் பலி!

பேர்மிங்ஹாமில் கார் மோதியதில் மூன்று ஆண்கள் இன்று காலை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரில் இருவர் 25, 21 வயதுடைய சகோதரகள். மற்றையவர் இவர்களின் நண்பர். அதிவேகமாக வந்த இரு கார்கள் மூவரையும் மோதிச் சென்றதாக இறந்த சகோதரர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். “இவர்கள் வீதியில் இருக்கவில்லை அல்லது வீதியை மறித்துக் கொண்டிருக்கவில்லை. இவர்களை நோக்கி வந்து கார் மோதியது. கார் மோதியதில் மேலே தூக்கி எறிப்பட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். கடந்த இரவு இடம்பெற்ற கலவரத்தில் இருந்து தமது கார் கழுவும் தொழிலை பாதுகாக்க தெருக்களில் இருந்துள்ளனர் எனவும் அதன்பின்னரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் என உறவினர் கூறியுள்ளார். பொலிஸார் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், விசாரணைகளில் இருந்து தெரியவருவது என்னவென்றால் காலை நேரத்தில் இந்த தெருவில் சண்டை நடந்துள்ளது. மற்றும் மூவரையும் காரை ஓட்டி வந்த ஒருவரே மோதியுள்ளார்” என்றனர். இச்சம்பவம் முந்தைய கலவரத்துடன் தொடர்புடையதா எனக்கூறுவது கடினமாக உள்ளது. ஆனால் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கலகக்காரர்களிடம் இருந்து தமது உடைமையை பாதுகாக்க இவர்கள் சண்டையிட்டுள்ளதாகவும், அதன்பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை விசாரணையை வெஸ்ட் மிட்லண்ட்ஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரையும் குறித்த காரையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தை ஆராய்ந்து வருவதாகவும் கூறினர். விபத்துக்குள்ளாகி மூவரும் அடிபட்டுக் கிடந்த போது அங்கு சுமார் 80 பேர் கூடியிருந்ததாக அம்புலன்ஸ் சேவை பேச்சாளர் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் முன்வந்து தகவல்களை வழங்கும்படி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.




சச்சின் டெண்டுல்கரின் டெபிட் கார்டுடன் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த வாலிபர் கைது

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மும்பையில் உள்ள பாரத்மாதா சினிமா தியேட்டருக்கு அருகே உள்ள எச்எஸ்பிசி வங்கியின் ஏடிஎம்முக்கு 21 வயதான வாலிபர் பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கு வாலிபரின் கையில் இருந்த கார்டு மீது சந்தேகம் வந்தது.
இதையடுத்து அதை வாங்கிப் பார்த்தபோது சச்சின் டெண்டுல்கருக்குச் சொந்தமானது அது என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் சோயப் தூத்வாலா என்றும், மாஹிம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து கார்டைக் கைப்பற்றினர். அந்தக் கார்டு உண்மையிலேயே சச்சின் டெண்டுல்கருடையா கார்டுதானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது எப்படி இந்த இளைஞரின் கையில் வந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை சச்சின் டெண்டுல்கரின் கார்டு தகவல்களை வைத்து இது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த கார்டு தவிர நான்கு கிரெடிட் கார்டுகள் மற்றும் நான்கு வங்கிகளின் டெபிட் கார்டுகளும் அந்த இளைஞரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது தான் ஜூனியர் காலேஜில் 2ம் ஆண்டு படித்து வருவதாக கூறியுள்ளார் அந்த நபர். மேலும் தான் வைத்திருந்த சச்சின் டெபிட் கார்டு பஸ் ஸ்டாப் ஒன்றில் கீழே கிடந்ததாகவும், அது செயல்படுகிறதா என்று பார்க்க ஏடிஎம் மையத்துக்கு வந்ததாகவும் தூத்வாலா கூறியுள்ளார்.
ஆனால் போலீஸார் அவரது பேச்சை நம்ப மறுத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சச்சின் டெபிட் கார்டு குறித்து சம்பந்தப்பட்ட வங்கியை போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து வருகின்றனர். அதில் சச்சினுடைய கார்டுதான் என்பது உண்மையானால், சச்சினைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், இதுவரை கார்டு காணாமல் போனதாக சச்சின் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்பதும் போலீஸாரைக் குழப்பியுள்ளது.
09 ஆகஸ்ட் 2011
கணவன் மனைவியாக ஆடிய குழந்தைகளின் அற்புத நடனம்!

மொல்டோவா நாட்டில் கடந்த வாரம் ஒரு திருமணம் இடம்பெற்றது. திருமண வைபவங்களில் பொதுவாக மணமகன்தான் கதாநாயகன், மண்மகள்தான் கதாநாயகி. ஆனால் இத்திருமண வைபவத்தில் ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தைகள்தான் இந்த அந்தஸ்தை பெற்றுக் கொண்டனர். இவர்கள் கணவன் - மனைவியாக அபிநயித்து ஆடிய அற்புத நடனம் திருமண வைபவத்தையே கலகலப்பு ஆக்கியது. இந்நடனக் காட்சிகளை கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபல்யம் அடைந்து உள்ளது. ஆகா... பிரமாதம் என்கிற வார்த்தையைத் தவிர சொல்கின்றமைக்கு வேறு ஒன்றும் இல்லை.
சின்மயியை தேடி தெலுங்கு சினிமாவின் பெருமைக்குரிய நந்தி விருது
கர்நாடக இசைபாடகி, மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், ஈவண்ட் மேனஜர் என்று சின்மயி பன்முக திறமையாளராக வலம் வருகிறார் கோலிவுட்டில். காலம் சென்ற இயக்குனர் ஜீவா நடிக்க அழைத்தும் நடிகை என்ற முகத்தை விரும்பவில்லை என்று மறுத்தவர்.
தற்போது கோலிவுட்டின் முன்னனி கதாநாயகிகளுக்கு குரல்கொடுபதில் பிஸியாக இருந்து வரும் சின்மயியை, தெலுங்கு சினிமாவின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் நந்தி விருது தேடி வந்திருகிறது. இந்த விருது அவருக்கு சிறந்த டப்பிங் கலைஞருக்காக வழங்கப்பட்டுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு-திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் யா மாயா ஜேசாவே. இந்தப் படத்தில் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் , சிம்பு-த்ரிஷா நடித்த கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இதில் நாயகி சமந்தாவுக்கு சின்மயி பின்னணி தெலுங்குக்குரல் கொடுத்திருந்தார். சின்மயியின் அபாரமான குரல் நடிப்புகாக இந்த விருது. விருது பெற்ற பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் சின்மயி!
பிரபுதேவாக்களுக்கு திருமணம் ஒரு செக்ஸ் லைசென்ஸ்!
இந்த விஷயத்தை கடைசிவரை என்வழியில் எழுதக் கூடாது என்று ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தோம்.
ஆனாலும், ‘திருமணம் என்பது சமூக ஒழுக்கமல்ல, வெறும் சந்தர்ப்ப தேவை மட்டுமே. காதல் என்பது சாஸ்வதமல்ல, உடல் இச்சையின் எல்லை வரை மட்டுமே’ என்ற புதிய இலக்கணத்தை படைத்திருக்கும் பிரபு தேவா என்ற தவறான முன்னுதாரணத்தை இனி வருபவர்கள் பின்பற்றாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையோடு இதைப் பதிவு செய்கிறோம்!
காதலித்து, பெற்றோரை எதிர்த்து, ரஜினி, தாணு போன்றவர்களின் ஆசியோடு லதா என்கிற ரமலத்தை 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பிரபு தேவா, அந்த உறவை அதிகாரப்பூர்வமாக வெட்டிவிட்டார். எதற்காக… ரம்லத் சரியில்லை, வாழ்க்கையில் நிம்மதியில்லை… என்பதற்காக அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பு ரம்லத்திடமிருந்த வனப்பு இப்போதில்லை. அவரை விட இளமையும் கூடுதல் கவர்ச்சியும் கொண்ட நயன்தாரா என்ற நடிகை கிடைத்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக!
பிரபு தேவா – ரம்லத் விவாகரத்தை உயர்நீதிமன்றம் ஜூலை 2-ம் தேதி சனிக்கிழமை மாலை அறிவித்துவிட்டது.
உடனே, நயன்தாரா பிரவு தேவா திருமணம் எப்போது என மீடியாக்களில் செய்தி பரபரக்கிறது. அது வியாபாரம்…. நடக்கட்டும்!
நம் கேள்வி எல்லாம், திருமணம் என்பது அவ்வளவுதானா? காதல் இல்லையேல் சாதல் என்பது செக்ஸ் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பயன்படும் வெறும் டயலாக்தானா?
செட்டில்மெண்ட் கொடுக்க ஒப்புக் கொண்டால், கணவன் செய்த தவறுகள் மன்னிக்கப்படுமா?
அதேநேரம், இந்தக் கேள்விகளுக்கு பதில்களாய் எழும் எதிர்க்கேள்விகளையும் புறம் தள்ள முடியவில்லைதான்.
ஒரு காலத்தில் மனசுக்குப் பிடித்து, மணந்து… பின் மனம் கசந்த பிறகு நொந்துபோன அந்த வாழ்க்கையைத் தொடரத்தான் வேண்டுமா?
பிடிக்காத கணவன் மேல் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு அலைந்து செத்து சுண்ணாம்பாவதை விட, கிடைக்கிற செட்டில்மெண்டை வைத்துக் கொண்டு மிச்ச காலத்தை நிம்மதியாகக் கழிப்பதில் தவறென்ன?
-இந்த இருதரப்பு கேள்விகளிலும் உள்ள நியாயங்கள் மறுக்க முடியாதவையே. ஆனால் இந்த நிலைக்கு முக்கிய காரணம், தனி மனித ஒழுக்கம் தவறிப் போனதுதான்.
பலதார மணத்தை முன்னர் ஆதரித்து, ஆராதித்து, இப்போது சட்டத்துக்குப் பயந்து உள்ளுக்குள் கள்ளக்காதலுடன் திரியும் சமுதாயம்தான் இது. இடையில் கொஞ்சகாலம், ராமனின் ஏக பத்தினிக் கதைகள், பலதார மண தடைச் சட்டம் போன்றவை அலைபாயும் ஆண் / பெண் மனங்களைக் கொஞ்சம் கட்டிப் போட்டிருந்தன.
இப்போது அதெல்லாம் ‘ஹம்பக்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆண் – பெண் இருபாலருமே இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை. அவர்களின் வக்கிரத்தை நியாயப்படுத்தும் அரும்பணியில் இருக்கவே இருக்கின்றன மீடியாக்கள்!
‘நீயும் நானும் இப்போது கல்யாணம் செய்து கொள்ளலாம்… அப்புறம் அவரவருக்குப் பிடித்தவர்களுடன் சுகத்தைப் பரிமாறிக் கொள்ளலாம். அதுவும் சரிப்படாவிட்டால், இருக்கவே இருக்கு விவாகரத்து. ‘சட்டப்படி விபச்சாரம்’ (கற்பு, விபச்சாரம் போன்றவற்றுக்கு இன்றைய சமூகம் தரும் அர்த்தத்தை மனதில் கொண்டு இந்தப் பதத்தைப் படியுங்கள்…!) செய்து கொள்ளலாம்,’ என்பதை ஒரு ஒப்பந்தமாகப் போட்டுக்கொள்ளாதது மட்டும்தான் பாக்கி.
அட நாசமாப் போனவர்களா… இந்த கல்யாணம், கட்டில் சுகம், கள்ளக் காதல், விவாகரத்து போன்றவற்றுக்கு நடுவில் கிடைத்த குழந்தைகள் என்ற விலை மதிப்பில்லா பொக்கிஷங்களை நாசமாக்குகிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு தோன்றுவதில்லையா? நாளைய சமூகம் முழுக்க பிரபுதேவாக்கள், பிரகாஷ்ராஜ்கள், நயன்தாராக்கள் என விஷமாய் நிரம்பி வழியப் போகும் அபாயத்தை உணரவே மாட்டீர்களா… அந்த கற்கால திறந்த வெளி செக்ஸில் இந்த சமூகம் சங்கமிக்கத்தான் இத்தனை பாடு படுகிறீர்களா..!
யோசித்துப் பார்த்தால், எனக்கு நினைவு தெரிந்த பிறகு, பல முறை என் அப்பா அம்மா சண்டை போட்டிருக்கிறார்கள். அடிதடி வரை கூட போயிருக்கிறது. இரண்டு நாள் பேசாமல் இருந்திருக்கிறார்கள். தாத்தாவின் தலையைக் கண்டதும் அந்த சண்டை பிசுபிசுக்கும். பின்னர் மெல்ல நாங்கள் தூதுவர்களாகி, அவர்களை சமாதானப்படுத்தி, அப்புறம் இருவரும் அன்புடன் எங்களுக்கு சோறூட்டிய நாட்கள் இன்னும் மனதுக்குள் நிரம்பித் ததும்புகின்றன. அந்த சண்டைகள் விவாகரத்து வரை போகாததன் காரணம், நயன்தாராக்கள் கிடைக்காததாலா… இல்லை! தன்னை உணர்ந்து, தன்னை நம்பியுள்ளவர்களின் உணர்வுகளை, உறவுகளை மதித்ததால்!
என் மனைவியுடன் எனக்கு மனஸ்தாபம் வரும் சமயங்களில், என் தாய் தந்தையரின் அந்த பழைய ‘சண்டையும் சமாதானமும்’ மனதுக்குள் நிழலாடி, அடுத்த நிமிடமே எங்கள் ஊடலைத் துடைத்துப் போடுவதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. பிரபுதேவாக்களே, உங்களுக்கு இப்படிப்பட்ட தாய் தந்தைகள் அமையவில்லையா…
நியாயமான காரணங்கள், சேரவே முடியாத அளவுக்கு மனப் பிளவுகள் இருந்தால், விவாகரத்து அனுமதிக்கப்படக் கூடியதே. அறுத்துக் கட்டுதல் என்பது தமிழ் சமுதாயம் அறியாததுமல்ல. ஆனால் அதற்கெல்லாம் நியாயமான காரணங்கள் தேவைப்பட்டன அன்று. ஆனால் காரணத்தை தேடி வைத்துக் கொண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது பிரகாஷ்ராஜ், பிரபுதேவாக்கள் ஸ்டைல் ஆகிவிட்டது. இன்னொரு அழகிய பெண் கிடைத்துவிட்டாள் என்பதற்காகவே விவாகரத்து கோரியவர்கள் இவர்கள்.
‘இந்த உலகத்துல ஒண்ணைவிட ஒண்ணு பெட்டராதான் தோணும்…’ அதற்காக…?
ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் பெற்றோர். அதில் விபச்சாரத்தையும் கள்ளத்தனத்தையும் வக்கிரத்தையும் மட்டுமே கற்றுத் தந்தால்… அன்புக்கு அவர்கள் அகராதியில் ‘காண்டம்’தானே குறியீடாகத் தெரியும்!
THANKS-
என்வழி.காம்
முரட்டுப் பிடிவாதத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பாடம்! – கருணாநிதி
சென்னை: சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசின் முரட்டுப் பிடிவாதத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் மிகப்பெரிய பாடத்தைப் புகட்டியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
1.5 கோடி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களும், உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தி.மு.க. ஆட்சி அறிமுகப்படுத்தியது என்ற காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த தமிழக அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.
இதே தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப்போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மக்களுக்கு இனிப்பு வழங்கிய மு க ஸ்டாலின்!
இந்நிலையில் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், “சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.
இப்படி ஒரு தீர்ப்பு திமுக ஆட்சியில் வந்திருந்தால், கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நாங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வோம். மாணவர் நலனே முக்கியம்,” என்றார்.
சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்றபோது, “எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை நாங்கள் போகப்போவதில்லை” என்றார்.
பின்னர் பாளையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாளை பேருந்து நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு இறங்கி சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க, ஏகக் கூட்டம் கூடிவிட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டுச் சென்றார் ஸ்டாலின்.
70 பள்ளி நாட்கள் வீண்-ராமதாஸ்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சமச்சீர்கல்வி தொடர்பான விசயத்தில் தமிழக அரசின் பிடிவாதப்போக்கால் காயமடைந்திருந்த மனங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மாறி மாறி மேல் முறையீடு செய்தது. இதன்மூலம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாடம் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஒருபுறம் வழக்குக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்த தமிழக அரசு, இன்னொருபுறம் பழைய பாடத்திட்டத்தின் படியான புத்தகங்களை அவசர அவசரமாக அச்சடிப்பதற்காக 500 கோடி ரூபாய்க்கு மேல் வீணாக செலவழித்துள்ளது.
இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் நலனின் அக்கறையின்றி செயல்பட்டு, 70 பள்ளி வேலை நாட்களும் ரூ.500 கோடிக்கும் அதிகமான மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதற்கு காரணமான அனைவரும் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.
பொதுப் பள்ளி முறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. பொதுப்பாடத்திட்டத்தை அனைத்துப்பள்ளிகளிலும் இவ்வாண்டே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.
சமச்சீர் கல்வி என்பது பொதுப்பாடத்திட்டம் மட்டு மல்ல. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்கிற வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, அனைத்து பள்ளி வாரியங்களையும் இணைத்து ஒரே பள்ளி வாரியத்தை உருவாக்குவது உள்ளிட்ட முத்துக் குமரன் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி பொதுப் பள்ளியை நோக்கி தமிழக பள்ளி கல்வி முன்னேற ஆவண செய்ய வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.
கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
சமீபகாலமா ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இணைய ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத ஒரு களமாக இருந்துட்டு வருது. எகிப்துல மக்கள் புரட்சி நடக்க மிக முக்கிய பங்காளனா இருந்தது இந்த ரெண்டு சமூக வலைத் தளங்களும்தான்.
இணைய பாவனையாளர்களிடம் இந்த சமூக வலைத்தளங்களுக்கு இருக்குற கிராக்கியை பார்த்துட்டு கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்’.
இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதுல இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக், டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.
ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும். ஆமாம்,நா ம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன்படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.
சரி டெஸ்க்டாப், லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈசியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா? கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள் ப்ளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.
நீங்க ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க ‘கூகுள் பிளஸ்’ ஐ யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.
ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க நம்ம மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plusன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் யூஸ் பண்ண முடியுமாம்.
அதெப்படி அவங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம். கண்டிப்பா முடியும். எப்படி? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும். அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க ‘கூகுள் பிளஸ்’ஐ பயன்படுத்தலாம்.
இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும், ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. ஆப்பிள் ஐ-போனுக்கு அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்க. சிம்பியன் ஓ.எஸ், பிளாக்பெர்ரி ஓ.எஸ்,விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் போன்ற மற்ற மொபைல் ஓ.எஸ்களுக்கு இன்னும் தனி அப்ளிகேஷன் வரல. இதுலேயும் மொபைல்ல இருக்குற ப்ரௌசர்ல போயி m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி மட்டும் தான் ‘கூகுள் ப்ளஸ்’ ஐ யூஸ் பண்ண முடியும். இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் ப்ளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் ப்ளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.
THANKS-சக்திவேல்
07 ஆகஸ்ட் 2011
வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு

வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம்.
இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம்.
அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம்.
அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும்.
பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம்.
பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!
1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
3. கூகுள் (GOOGLE): சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
4.ஹாட் மெயில் (HOTMAIL): இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது. 5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது. 6. மைக்ரோசாப்ட் (MICROSOFT)
பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
7. யாஹூ (YAHOO): தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.
ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!

ஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது.
நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது.
அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!
டெஸ்ட் ஆட்டத்தில் 1000 விக்கெற் வீழ்த்த விரும்பிய முரளி!

டெஸ்ட் ஆட்டத்தில் 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்றமை குறித்து கடந்த வருடம் பரிசீலித்து இருந்தார் என்று தெரிவித்து உள்ளார் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் கடந்த வருடம் ஜூலை மாதம் டெஸ்ட் ஆட்டத்தில் 800 ஆவது விக்கெற்றை வீழ்த்தி இருந்தார். டெஸ்ட் ஆட்டத்தில் அதிக விக்கெற்றுக்களை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை இதன் மூலம் நிலைநாட்டினார். இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் இலங்கையில் காலி மைதானத்தில் இடம்பெற்றபோது பிரக்ஜான் ஓஜாவின் விக்கெற்றை கைப்பற்றி இச்சாதனையை புரிந்தார். இவர் இந்திய அணியுடனான ஆட்டத்தைத் தொடர்ந்து டெஸ்ட் கிறிக்கெற்றில் இருந்து ஓய்வு பெறுவார் என்று இச்சாதனைக்கு முன்கூட்டியே அறிவித்து இருந்தார். ஆனால் 800 விக்கெற்றுக்களை கைப்பற்றுகின்றமைக்கு வெறும் 08 விக்கெற்றுக்கள் மாத்திரம் இருக்கின்றன என்கிற நிலை ஏற்பட்டதில் இருந்து 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்ற வரை தொடர்ந்து டெஸ்ட் ஆட்டத்தை விளையாடினால் என்ன? என்று இவருக்கு மனது தடுமாற தொடங்கி இருக்கின்றது. ஓய்வை பிற்போடுகின்றமை குறித்து பரிசீலித்து இருக்கின்றார். ஆனால் 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்றமைக்கு குறைந்தது 43 வயது வரையேனும் டெஸ்ட் ஆட்டத்தில் ஈடுபட வேண்டி இருக்கும் என்று கணக்குப் பார்த்துக் கொண்டார். உடல் நிலை இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பார்த்தார். பின் 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்ற கனவை ஒரு புறம் வைத்து 800 விக்கெற்றுக்களை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையுடன் டெஸ்ட் கிறிக்கெற்றில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.


















