Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 மே 2009

How a Football is Made ? Adidas Football Factory

ஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் ! (18+)

திருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை. தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :) தகவல் இங்கே, Published in : ஆரோக்கியம், உடலே நலமா? மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் படிக்க... பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)

விண்டோஸ் விஸ்டா சிஸ்டம் : சில டிப்ஸ்

விஸ்டாவில் ஏரோ கிளாஸ்

விஸ்டா இயக்கம் வந்த போது ஊடுருவிப் பார்க்கும் வசதியான ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி (Aero Glass Transparency) அதிகப் பாராட்டுதலைப் பெற்றது. ஆனால் பலர் பின் நாளில் இது எதுக்கு என்று எண்ணத் தொடங்கினார் கள். மேலும் கம்ப்யூட்டர் ப்ராசசரின் சக்தியை அதிக அளவில் எடுத்துக் கொண்டதனால் இந்த வசதி இருக்கையில் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் சிறிது குறைந்தது. இதனை நீக்கினால் நல்லது என எண்ணுபவர்களுக்கு இதோ ஒரு வழி காட்டுதல். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் வரும் மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இது சார்ந்த டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ‘Windows Color and Appearance’ என இருக்கும் இடத்தைக் காணவும். இது மேலாக இருக்கும். இந்த லிங்க்கைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் ‘Enable Transparency’ என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்தால் விஸ்டாவில் ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி எபக்ட் இருக்காது. ஹார்ட் டிஸ்க் பிரித்தல் விஸ்டா இயக்கம் ஹார்ட் டிஸ்க்கை இரண்டு அல்லது கூடுதலான பிரிவில் அமைக்க உதவிடுகிறது. இதனால் விஸ்டா ஒவ்வொரு பிரிவினையும் தனித்தனி ஹார்ட் டிஸ்க்காகக் கருதிச் செயல்படும். இதன் மூலம் டாகுமெண்ட்களையும், புரோகிராம்களையும் மற்றும் சில பைல்களையும் நம்மால் பிரித்து வைத்து சேவ் செய்து பயன்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க்கில் புதிய பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும் என்றால் Start கிளிக் செய்து My computer என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக் கும் விண்டோவில் Manage என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் உள்ள பிரிவில் (Left Pane) எந்த டிஸ்க்கில் புதிய பிரிவு ஏற்படுத்த வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shrink Volume என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து சிறிய அளவில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அளவினை உருவாக்கவும். பின் Shrink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டிரைவ் ஸ்பேஸில் Unallocated என்று இருப்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் விஸார்டில் கேட்கும் கேள்விகளுக்கான உங்கள் ஆப்ஷன்களை அமைக்கவும். முடிவில் தேர்ந்தெடுத்த டிரைவில் பயன்படுத்தாத இடத்தைப் பிரித்து நீங்கள் குறிப் பிட்ட அளவில் புதிய டிஸ்க் பிரிவு ஒன்று கிடைக்கும். அழிந்த ரீசைக்கிள் பின்னை மீட்க விஸ்டாவில் ரீ சைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் அதனை அழித்துவிட Delete என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். சிலர் இதனை அறியாமல் கிளிக் செய்து அழித்துவிடுகிறார்கள். எப்படி அழிப் பது எளிதாக உள்ளதோ அதே போல் இதனை மீண்டும் பெறுவது விஸ்டாவில் எளிதான ஒரு செயல்பாடாக உள்ளது. அழித் ததை மீண்டும் பெற டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதில் Recycle Bin என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்தால் மீண்டும் ரீசைக்கிள் பின் ஐகான் திரையில் தோன்றும். விஸ்டாவில் ரன் விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் பட்டனை இயக்கினால் கிடைக்கும் மெனுவில் கீதண என்று ஒரு பிரிவு இருக்கும். இதனை இயக்கினால் புரோகிராம்களின் பெயரை நேரடியாக டைப் செய்து இயக்கலாம். ஆனால் விஸ்டாவில் இந்த செயல்பாட்டிற்கான கீதண கட்டம் இல்லை. இருப்பினும் இதனை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனு செல்லவும். இங்கு ஸ்குரோல் செய்து கீழே சென்றால் Run Command என்று ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் ஓகே கிளிக் செய்தால் ரன் பாக்ஸ் உங்களுக்கு ஸ்டார்ட் பட்டன் மெனுவில் கிடைக்கும். பைல்களை எளிமையாகத் தேர்ந்தெடுக்க பைல் டைரக்டரியில் இருந்து பைல்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. தொடர்ந்து இருக்கும் பைல்களைத் தேர்ந்தெடுக்க முதல் பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின் இறுதி பைலை ஷிப்ட் கீ அழுத்தித் தேர்ந்தெடுத்தால் இரண்டிற்கும் இடையே உள்ள பைல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும். பைல்களை விட்டு விட்டு குறிப்பிட்டவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறு பைல்களைத் தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கும் பைல்கள் வரிசையாக இல்லாதபோதும் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்படும். பின் இவற்றை என்ன செய்திட வேண்டுமோ செய்து கொள்ளலாம்.இது போல ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அழுத்தி பைல்களைத் தேர்ந்தெடுக்காமல் அந்த பைல்களுக்குப் பக்கத்தில் சிறிய கட்டங்களை ஏற்படுத்தி அந்த கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பைல்களை செலக்ட் செய்யக் கூடிய வசதி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா? இதற்கான வசதியை விஸ்டா கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு போல்டரைக் கிளிக் செய்து Organize என்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் Folder and search Options’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு View டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Use check boxes to select item’ என்பதில் டிக் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். பின் போல்டரைத் திறந்தால் பைல்களின் பெயருக்கு எதிரே சிறிய கட்டங் கள் கிடைக்கும். இதில் கிளிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம். சென்ட் டூ மெனுவை நீட்டலாம் Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் – கம்ப்யூட்டர் எனக் கிளிக் செய்து சி டிரைவினைத் திறக்கவும். இதில் யூசர்ஸ் என்னும் போல்டரைத் திறக்கவும். இதில் உங்களுடைய பெயரை யூசர் நேமாக உள்ளதைத் தேர்தெடுக்கவும். அடுத்து App Data, Roaming, Microsoft Windows, Send To என வரிசையாகச் செல்லவும். போல்டரைக் காண முடியாவிட்டால் %AppData%\ Microsoft Windows\Send To என அட்ரஸ் பாரில் டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்த பின் Send To மெனுவில் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை இணைக்கலாம். குயிக் லாஞ்ச் கீ போர்ட் ஷார்ட் கட் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை உடனுக்குடன் விரைவாக இயக்க நமக்கு Quick Launch பார் பயன்படுகிறது. இந்த பாரில் உள்ள புரோகிராம்களை ஷார்ட் கட் கீகளைக் கொண்டும் இயக்கலாம். இதற்கு விண் டோஸ் கீ அழுத்தவும். அதன் பின் குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகான் எத்தனாவதாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்தவும். எடுத்துக் காட்டாக குயிக் லாஞ்ச் பாரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூன்றாவதாக அமைக்கப்பட்டிருந் தால் விண்டோஸ் கீயுடன் 3 என்ற எண்ணை அழுத்தினால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கப்படும். இரண்டு கீகளையும் சேர்த்து இயக்க வேண்டும். நிரந்தரமாக மெனு பார் விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் அடூt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Always show menus’ என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். விண்டோஸ் பார்டர்களைக் குறைக்க: விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும். பின் பெர்சனலைஸ் என் பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண் டோவில் Windows Color and Appearance என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும். இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில் Border Padding என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4 க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.

அசல் பாட்டும் 'அவுட்'?

விஜய்யின் வேட்டைக்காரனைத் தொடர்ந்து அஜீத்தின் அசல் படப் பாட்டும் லீக்காகி இணையத்தில் விட்டதாக தொடர்ந்து செய்திகள்[^] வந்தவண்ணம் உள்ளன. முன்பு சிவாஜி[^] , சமீபத்தில் எந்திரன் போன்ற படங்களின் காட்சிகளை சிலர் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டனர். அது தவறுதான் என்றாலும், ரஜினி[^] படம் என்பதால் ஏற்படும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் தொடர்ந்து இதுபோன்ற ஆர்வக் கோளாறில் சிலர் இறங்கிவிடுகின்றனர். இதை வைத்து கணிசமாகக் காசு பார்த்தவர்களும் உண்டு. இப்படி ஆடியோ-வீடியோ இணையத்தில் வெளியாவதால் ஏற்படும் பரபரப்பு ப்ளஸ் பப்ளிசிட்டியைப் பார்த்த சிலர், தாங்களே அதுபோன்ற வேலைகளில் இறங்கியதும் உண்டு. சிம்புவின் சிலம்பாட்டம் லீக் ஆகிவிட்டது, விஜய்யின் வில்லு காட்சிகள் கசிந்துவிட்டன, விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு அவுட்... என்றெல்லாம் வந்த செய்திகளின் பின்னணி பற்றி ஆராய்ச்சி செய்தால், நிறைய சுவாரஸ்யமான கதைகள் வெளிவரக்கூடும்! சில தினங்களுக்கு முன் விஜய்யின் வேட்டைக்காரன் அறிமுகப் பாட்டு என்ற பெயரில் ஒரு பாடல் இணையத்தில் வெளியானது. ஆனால் அதுபற்றி, கூறிய தயாரிப்பாளர் பாலசுப்பிரமணியன் 'அது ஒரிஜினல் பாடல் இல்லை' என்று கூறிவிட்டார். இப்போது அஜீத்தின் அசல் பாடலும் இணையத்தில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாடல் வரிகளைக் கூட வெளியிட்டுள்ளனர் இணையதளங்களில். இதுகுறித்து படத்தின் பிஆர்ஓ டைமண்ட் பாபுவிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: "இதெல்லாம் சும்மா. இன்னும் படத்துக்கு பாடல்பதிவே நடக்கவில்லை. படத்துக்கான பாடல்களை எழுதுபவர் கவிப்பேரரசு வைரமுத்து. அனைத்தும் பாடல்களையும் எழுதுபவர் அவர். வெறும் 12 வரிகளை அசல் பாடல் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை நம்ப வேண்டாம். பரபரப்புக்கா சிலர் ஏதாவது செய்திகளைக் கிளப்பிவிடுகின்றனர்" என்றார்.

சிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்

வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன. எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் . சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட ப நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர். இணையத்தில் பல தொகுப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இலவசமாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தருகிறேன் என்று சொல்லி பல தளங்கள் வைரஸ்களையும் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கும் புரோகிராம்களையும் அனுப்பி கெடுதல் விளைவிக்கின்றன. இருப்பினும் சில ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முற்றிலும் இலவசமாகவே பாதுகாப்பினைத் தருகின்றன. அவற்றில் சில பற்றிய குறிப்புகள்... ஆண்டிவைரஸ் 1 1. பெயர்: Avast! 4 Home EditIon 2. நிறுவனம் : ALWIL Software 3. பைல் அளவு: 26309 கேபி 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் 6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஹோம் எடிசன் என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது. ஆண்டிவைரஸ் 2 1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition 2. நிறுவனம் : Grisoft Inc 3. பைல் அளவு: 47924 கே.பி 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் 6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே. ஆண்டிவைரஸ் 3 1. பெயர்: Avira Anti Personal Edition 2. நிறுவனம் : Avira GmbH 3. பைல் அளவு: 24462 kb 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் இந்த தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவாஸ்ட் தொகுப்பு போல பல வகைகளில் இது வைரஸ் தொகுப்பிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கி வருகிறது. பயன் படுத்துவோரை வழி நடத்த இந்த தொகுப்பு தரும் டயலாக் பாக்ஸ்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்கிறது. ஆனால் அடிக்கடி வரும் பாப் அப் விண்டோக்கள் சில சமயம் எரிச்சலைத் தருகின்றன. முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.

"கடவுள் இருக்கின்றது"

எச்சரிக்கை : கொஞ்சம் நீளமான பதிவு. ரொம்ப இல்லாட்டாலும் கொஞ்சம் டெக்னிகலான விஷயங்கள் உண்டு. ஆற அமரப் படிங்க. தலைப்பே ஒருமாதிரியா இருக்கா? இருக்கட்டும்... இருக்கட்டும்... கடவுள்னு ஒருத்தர் இருக்காரா இல்லையா? கடவுள் அஃறிணையா உயர்திணையா? இல்லை உயர்ந்ததிணையா? ஆத்திகனோ நாத்திகனோ, கல்லுக்குள்ள தேரை மாதிரி மனசோட அடி ஆழத்துல இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும். ஆன்மீக மார்க்கத்துல கடவுளை "விளக்க" அநேக வழிகள் இருக்கு. ஆனா பொதுவா எல்லா வழிகளுமே intangible or subtle or vague. Concrete-ஆ இதுதான் இதுன்னு எளிமையாச் சொல்ல முடியல - அல்லது சொல்வது convincing-ஆ இல்லை. ஆனா விஞ்ஞானத்துக்கு இந்த அசௌகரியமே கிடையாது. எதையாவது செஞ்சு நிரூபிக்க முடிஞ்சா சரி ; இல்லேன்னா ஒத்துக்கவே ஒத்துக்காது. பூமி தட்டையானது, பூமிதான் மத்தியில; மத்த கிரகங்கள் அதைச் சுத்தி வருதுங்கறதுல இருந்து பலப் பல மதம் சார்ந்த, கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை தகர்த்து 'இதுதான் உண்மை'ன்னு அறுதியிட்டுச் சொன்னது விஞ்ஞானம். ஆனா விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒண்ணுக்கொண்ணு எதிர்ப்பு மாதிரி தோணினாலும், உண்மைல ரெண்டுமே complimenting each other. இருக்கட்டுமே... எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இந்த பீடிகை எல்லாம்? சொல்றேன். நேற்று முன் தினம் இன்னொரு ஓய்வுக்கான வாய்ப்பு கிடைச்சதுனால சட்டுனு "செர்ன்" போகணும்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். என்னோட ட்ரீம் லிஸ்ட்ல இருந்த இடம். CERN - European Centre for Nuclear Reasearch. இப்பதான் கொஞ்ச நாளா பார்வையாளர்களுக்கு திறந்துருக்காங்க. இது 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளோட நிதி உதவியோட ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். போன செப்டம்பர்ல பேப்பர்ல படிச்சுருக்கலாம்..."ஏதோ டெஸ்ட் பண்றாங்களாம்... கொஞ்சம் ஏமாந்தாலும் உலகமே அழிஞ்சுரும்னு சொல்றாங்கடா மாப்ள... அடுத்த மாசம் கல்யாணத்த வெச்சுக்கிட்டு இதெல்லாம் நமக்குத் தேவையா?"னு எங்கயாவது டயலாக் கேட்டிருக்கலாம்... அந்த முக்கியமான சோதனையை நடத்தியது CERN. இந்த பரிசோதனைக்காக 5 இடங்கள்ல சோதனைக்கூடங்கள் இருக்கு. அதுல நாலு ஃப்ரான்சுக்குள்ள. ஒண்ணு ஜெனீவாவுக்கு பக்கத்துல ஸ்விஸ்-ஃப்ரான்ஸ் பார்டர்ல இருக்கற "மெய்ரின்"ங்கற கிராமத்துல இருக்கு. அங்கதான் நான் போனேன். ஜெனீவால இருந்து டவுன் பஸ் போகுது. 25 நிமிஷத்துல போயிடலாம்.
அப்பிடி இங்க என்னதான் சோதனை பண்றாங்க? அதுக்கு முன்னால கொஞ்சம் சயன்ஸ் ரிவைஸ் பண்ண வேண்டியிருக்கும். எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனது, அணுவோட ந்யூக்ளியஸ்க்கு உள்ள புரோட்டான்ஸ் இருக்கு, எலக்ட்ரான்ஸ் அதை சுத்தி வருதுங்கறது தெரியும். அப்பறம் புரோட்டான்களுக்கு உள்ள க்வார்க், எலக்ட்ரானுக்குள்ள லெப்டான்.... இதெல்லாம் இருக்குங்கறதும் தெரியும். ஆனா அதுக்கும் நுணுக்கமா ஒரு துகள் இருக்கலாம்... அதுதான் GOD Particle னு Higgs சொல்ற வரைக்கும் தெரியாது. அவர் சொன்னதால அதுக்கு Higgs Boson னு ஒரு பேரும் உண்டு. அதைத் தேடித்தான் இங்க சோதனை. பிரபஞ்சம் தோன்றினபோது அது இருந்துருக்கணும். பிரபஞ்சம் தோன்றிய (Big Bang) 10^-43 செகண்ட்க்கு என்ன நடந்திருக்கலாமோ அதை மறுபடி நிகழ வைத்து அந்த பரம ரகசியத்தை தெரிஞ்சுக்க கடந்த 40 வருஷமா இந்த திட்டம் நடக்குது. அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கற வரைக்கும் அறிவியலாளர்களுக்கு தூக்கமே வராது. சரி.... அதை எப்பிடித் தேடறது? அணுவே கண்ணுக்குத் தெரியாத ஒண்ணு. அதையும் விட நுணுக்கமான ஒண்ணை எப்பிடி...? அங்கதான் நம்ம ஐன்ஸ்டீன் சொன்னது உதவிக்கு வரும். E=mc2. ஆற்றல்ங்கறது எந்த நிலைலயும் இருக்கு. ஆற்றலோட condensed form நிறை (mass). நிலையா இருக்கும்போது ஈர்ப்பு விசையைப் பொறுத்து ஒரு நில ஆற்றலும் (potential) இயங்கும்போது இயக்க ஆற்றலும் (kinetic) வெளிப்படுது. அப்ப ஒளியோட வேகத்துல ஒரு துகளோட ஆற்றல் எவ்வளவு இருக்கும்? நம்மால நினைச்சே பாக்க முடியாது. அந்த மாதிரி ரெண்டு எனர்ஜியை மோத விட்டா...? அப்பிடி ஒரு மோதல்ல... ஒரு ஆற்றல் மிக்க மூலத்துல இருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சுங்கற சித்தாந்தத்தின் அடிப்படைல இந்த சோதனை. அப்பிடி ஒரு மோதல் நிகழும்போது இந்த GOD Particle வெளிப்படலாம். எல்லாத்துக்கும்.. எல்ல்ல்ல்ல்லாத்துக்கும்... மூல சக்தியான அந்த சக்தி என்னதுன்னு ஒருவேளை விடை கிடைக்கலாம்ங்கற முயற்சிதான் இது. எப்பிடி இந்த மோதலை நிகழ்த்தறது? ரெண்டு புரோட்டன்களை ஒளியோட வேகத்துல ஒண்ணோட ஒண்ணு மோத வைக்கலாம். ஆனா ஒளி வேகத்துல புரோட்டான் துகளை முடுக்கணும்னா நேர்கோட்டுப் பாதைல முடியாது. அவ்வளவு தொலைவுக்கு பூமில சோதனைக்கூடம் வைக்க முடியாது. மாற்று என்னன்னா, அதை ஒரு வட்டப் பாதைல முடுக்கறது. இதுக்காக பூமிக்கு 100 மீட்டர் கீழ 27 கிமீ நீளத்துக்கு ஒரு வட்டப் பாதை அமைச்சுருக்காங்க. பேரு Large Hadron Collider (LHC). அந்தப் பாதைல 5 இடத்துல சோதனைக் கூடங்கள். ஒரு துகள் முடுக்கி(Particle Accelerator) மூலமா சில பில்லியன் புரொட்டன்களை எதிரெதிர் பாதைகள்ல கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு (99.99%) முடுக்கி இந்த 27 கிமீ பாதைல அங்கங்க அதுக மோதறதுக்கு வசதியா பாதைகளை குறுக்க ஓடவெச்சு..... எங்கயாவது மோதினா அந்த நிகழ்வுகளை துல்லியமா சேகரிச்சு அனுப்ப சூப்பர் கம்ப்யூட்டர்க... எல்லாமே அதிவேக கடத்திகள். Super conductors. ப்ரோட்டான்களை முடுக்கி அதுகளை deflect பண்ணி வட்டப் பாதைல ஓட வைக்க அதிவேகக்கடத்தி இருமுனை மின்காந்தங்கள் (super conducting dipole electromagnets), புரோட்டான்களை நெருக்கமா pack பண்ணி மோதலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கரதுக்கு நால்முனை மின்காந்தங்கள் (quadrupole). (இந்த Dipole / Quadrupole பத்தியே ஒரு நாள் முழுக்க பேசலாம்) இந்த மின்காந்தங்கள் எல்லாமே -271Cலதான் முழுத் திறன்ல வேலை செய்ய முடியும். எல்லாமே superconductingனால ஒரு தனி cooling system. திரவ நைட்ரஜன், திரவ ஹீலியம் - மில்லியன் லிட்டர்களுக்கு மேல - இதெல்லாம் பயன்படுத்தி குளிர்விக்கறாங்க. எல்லாமே extreme technologies. மோதும்போது சிதறல்ல வேறு சில துகள்களும் - GOD particle உள்பட - கிடைக்கலாம். அதைக் கண்டுபுடிச்சு சேகரிக்க Particle Detectors இருக்கு. மேலும் இந்த பரிசோதனையின்போது TB கணக்குல சேகரிக்கற டேடாவை அனுப்ப, சேகரிக்க, ஆய்வு பண்ணன்னு பல நூதனமான தொழில்நுட்பங்கள் (grid computing) கூட இந்த ஆராய்ச்சியோட பக்க விளவுகளாக உருவாகியிருக்கு. இன்னும் சில வருடங்கள்ல அதெல்லாம் day-to-day computing முறைல வந்துடலாம். இப்பவே இந்த தொழில் நுட்பங்களை மருத்துவத் துறைல பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. போன செப்டம்பர் மாசம் இதை டெஸ்ட் பண்ணும்போது எதிர்பாராத ஒரு சின்ன மின் கசிவுல திரவ ஹீலியம் சூடாகி வாயுவாகி, அழுத்தம் அதிகமாகி 50 மின்காந்தங்களுக்கு மேல சேதமாயிடுச்சு. எல்லாம் சரியாகி மறுபடி அடுத்த டெஸ்டுக்கு இன்னும் வருஷங்கள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானம் "கடவுளை"த் தேடும் வேலையத் தொடர்ந்து செய்யும். விஞ்ஞானமும் மெய்ஞானமும் குவியற இடம் ரொம்ப தொலைவுல இல்லைன்னு தோணுது. மெய்ஞானத்துல கடவுளை "உணர" வைக்க முடியும்னா, அதை "காண" வைக்கறது விஞ்ஞானத்துனால முடியலாம். முடிக்கும். இப்பொதைக்கு இந்த Higgs Boson தான் அதுன்னு நாம தேடிக்கிட்டுருக்கோம். அதுவாகவும் இருக்கலாம் (அல்லது அதை விட சூட்சுமமான ஒன்றாகவும் இருக்கலாம்) அந்த ஆதார சக்தியை, மூலப் பொருளைத்தான் நம்ம வேதங்கள் எல்லாம் பரம்பொருள், மூலாதாரம், பரமார்த்த சத்யம், சத்தாமாத்ரம், சத்து அப்பிடின்னெல்லாம் பல பேர்கள்ல சொல்லுது. பார்க்கலாம்...... சரி... ரொம்ப நீளமாப் போச்சு.... ரொம்பவே மேலோட்டமா சொல்லியிருக்கேன். ஆழமா சொன்னா அறிவியல் பாடம் எடுக்கற மாதிரி ஆயிடும். சொல்ல நான் ரெடிதான்.... (கடைக்கு வர நாலு கஸ்டமரும் ஒடிட்டா?? :)))) இன்னும் சில interesting விஷயங்கள் - பொருள் ; அபொருள் (matter ; anti-matter) - சொல்ல வேண்டியிருக்கு... அடுத்த இடுகைல....
டிஸ்கி : இதைப் படிச்ச பிறகு, நான் ஆத்திகனா நாத்திகனா, அறிவியலாளனா ஆன்மீகவாதியான்னு கேட்டா.... முதல் பத்தில சொன்ன மாதிரி ரெண்டுமே complimenting each other.


17 மே 2009

கத்தால கண்ணழகிக்கு அது பிடிக்காதாம்! கேளுங்க! கேளுங்க! கேளுங்க!

"நல்ல அழகாகத்தான் இருக்கிறார், நடனத்திலும் சளைக்காதவர் தமிழ் சினிமாவை கலக்குவார்" இது தமிழ் சினிமாவின் ஆர்வலர்கள் ஸ்னிக்தா "கத்தால கண்ணால குத்தாத" என பாடிக்கொண்டு அறிமுகமானபோது சொன்ன வசனம். மராத்தி, ஹிந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இல்லாத இடுப்பாலே என தன இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட்டம் போட்டே பிரபலமாகிவிட்டார். என்ன செய்ய பல இளைஞர்களின் தூக்கமும் கொஞ்சம் கெட்டுத்தான் போச்சு. ஆனாலும் இப்போ அவர் தன் செவ்விதழ் திறந்து சொன்ன வார்த்தைகள் தான் காதல் கோட்டை கட்டிய எத்தனையோ பெயரை முகவரி இல்லாமல் செய்யப்போகின்றது. அவர் அழகை பார்த்து ஆண்கள் பயப்பட்டுக்கொண்டிருக்கும்போது(வேறொன்றுமில்லை காதலில்தான்.) ஸ்னிக்தாவோ தனது பயப்பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் பயப்படுத்தி விட்டார். பத்திரிகையாளர்களைக் கண்டால் பயமாம்(கேட்கக்கூடாத கேள்வியை கேட்காதிங்கப்பா செல்லம் பயப்படுகிதெல்லா) அடுத்ததா சிக்கியது இவங்க என்ன சொல்றாங்கன்னே என தெரியமுடியாத பல்லிகள்.(எல்லா நடிகைகளும் பல்லி கரப்பான் பூச்சி என ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள்.) தனிமையில் பிடிச்சது பொம்மைகளாம்(அதைத்தான் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாரா? நானும் பொம்மைமாதிரி இருப்பேனே.) பருப்புசாதம் என்றா உயிரையே விடும் ஸ்னிக்தா உயிரினும் மேலான காதலை ஒரு நோயென சொல்லிவிட்டு காதலே தனக்கு பிடிக்காதாம். அதைவிட கொடுமை ஆண்கலென்றாலே பிடிக்காதாம்.(எப்பிடிதாயே நடிப்புலகத்துக்கு வந்திங்க.) ஆண்களை பிடிக்காத அம்மணி எப்படித்தான் ஆண்களுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்கின்றாரோ தெரியவில்லை. நண்பர்களே! இனிமேல் ஸ்னிக்தா பின்னால் அலையாதிங்க ஏனென்றால் அவங்களுக்கு தான் அது(காதல்+ஆண்களை) பிடிக்காதாமே.

என்ன நடக்கின்றது ஐ.பி.எல்லில்....!

கடந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் ஏனோ எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது. இந்தியாவில் நடந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். வான வேடிக்கைகள் நிறைந்த விறுவிறுப்பான போட்டிகள் எத்தனை.(சென்னை அணி நன்றாக விளையாடியது என் ரசனைக்கு காரணமோ தெரியவில்லை.)
ஒரு சில அணிகளை விட மற்ற எல்லா அணிகளும் நன்றாகத்தான் மோதின. ஷேன் வார்னேயின் அணி இறுதியில் நடத்திய திருவிழாவை டோனி மட்டுமல்ல யாருமே மறக்கமாட்டார்கள்.
அதே எதிர்பார்ப்புடன் ஆரம்பமான இம்முறை தொடர் ஆரம்பத்திலேயே தென் ஆபிரிக்காவில் ஆரம்பம் என்றவுடன் தன் களையில் முதல் படியை இழந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையே. கிரிக்கெட் வெறியர்களை கொண்ட இந்தியா உட்பட ஆசிய நாட்டவரை இது பெரிதும் பாதித்தது என்னவோ உண்மையே. அதன் பின் ஒருவாறு ஆரம்பமாகிவிட்டது. (கடந்தமுறையை விட இம்முறை பல முன்னணி பிரபலங்கள் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.)
ஆரம்பத்திலேயே கடந்தமுறை இறுதிவரை முன்னேறிய சென்னை அணியினர் மும்பையிடம் தோற்று போட்டியின் சுவாரஸ்யத்தை கேள்விக்குறியாக்க தொடங்கினரென்றால் மறுபுறம் கடந்தமுறை உப்புசப்பு அணியாக இருந்த பெங்களூர் அணி சாம்பியன்ஸ் ராஜஸ்தானை விழுத்த மேலும் ஒரு எதிர்பார்ப்பில் அடி. இப்படியே போக கடந்தமுறை சொதப்போ சொதப்பென சொதப்பிய டெக்கான் அணி இம்முறை ஆரம்பம் முதலே பிளந்து கட்டத்தொடங்கியது. மும்பை மற்றும் டெல்லி அணிகளும் தங்களை பலமாக வெளிப்படுத்த கடந்தமுறை அசத்திய சென்னையும் ராஜஸ்தானும் நிமிரமுடியாமல் அடிவாங்கின.கொல்கத்தா அணியோ அடிவாங்கவே தான் வந்திருக்கின்றேன் என வந்தது போல் அடிமேல் அடி வாங்கி இன்று கடை நிலையில்.(ஷாருக்கானை மூட்டை கட்டி அனுப்பி வைத்த சாதனை அணி அது.) இருந்தாலும் பயிற்றுவிப்பாளர் புச்சனன் செய்த மந்திர விளையாட்டுகள் கங்குலி என்னும் முதிர்ந்த சிங்கத்தை களங்கப்படுத்த மொத்த அணியே கரைசேரா கப்பலாகிவிட்டது. கொஞ்சம் தலை நிமிர்ந்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை 214/4 என விளாசி துவைத்தெடுத்தனர். இதுவே இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம்.(வேறு எந்த அணியும் இருநூறை தாண்டவில்லை கேட்டால் இருபதுக்கு இருபது போட்டியாம்.) துடுப்பாட்டத்தை பொறுத்தவரை கிழட்டு சிங்கம் ஹய்டேன் 486 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் தொடர்ந்து அவர் சகா கில்கிறிஸ்ட் 329 இரண்டாமிடத்திலும் AB de Villiers 366 ஓட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் ரைனா 322 ஓட்டங்களுடன் நான்காம் இடத்திலும்யுவராஜ் 314 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். தனிநபர் ஓட்டக்குவிப்பை பொறுத்தவரை AB de Villiers 105 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் விளாசி முதல் இடத்திலும் ரைனா 98, ஹய்டேன் 89 ஓட்டங்களுடனும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றி உள்ளனர். சிக்ஸர் விலாசுவதிலும் வயதான வீரர்கள் விடவில்லை. கில்கிறிஸ்ட் 21 சிக்ஸ்செர்கள், ஹய்டேன் 20 சிக்ஸ்செர்கள் என முதல் இரண்டு இடங்களையும் பிடிக்க டுவய்னே ஸ்மித், ரைனா, யுவராஜ் அவர்களை துரத்துகின்றனர். ஒரே போட்டியில் ஆறு சிக்ஸ்செர்கள் விளாசி AB de Villiers, யுஸுப் பதான், ஹய்டேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரை இலங்கையின் சுனாமி மலிங்க இந்தியாவின் இருபதுக்கு இருபது ஸ்பெசலிஸ்ட் ஆர.பி.சிங் மற்றும் நெஹெரா ஆகியோர் பதினாறு விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்க அனில்கும்ப்ளே ஒரு போட்டியில் ஐந்து ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகின்றார்.(எதி ராஜஸ்தான்) இம்முறை ஐ.பி.எல்லில் எந்த விக்கெடடுக்குமான அதிகபட்ச இணைப்பாட்டமாக ராஜஸ்தான் அணியின் ஓஜா மற்றும் கிரகம் ஸ்மித் ஆகியோர் 135 ஓட்டங்களை குவிக்க கடந்தமுறை ஆரம்ப இணையாக அசத்திய டெல்லியின் ஷேவாக் கம்பீர் ஜோடி தடுமாறி வருகின்றது. ஜெயசூரியா மற்றும் சச்சின் ஜோடியும் சில போட்டிகளில் விருந்து வைக்க தவறவில்லை.(இந்த வயதிலும் அப்படி ஒரு ஆட்டம் எங்களையா அணியை விட்டு நீக்க சொல்லி சொன்னீர்கள் என கேட்பதுபோல்.)
இந்த பதிவை நான் எழுத யோசித்தபோது டெல்லிக்கும் பஞ்சாபுக்கும் இடையிலான போட்டியில் தொடர்ந்து அசத்தி வந்த டெல்லி படுதோல்வி கண்டிருக்கின்றது. புள்ளிப்பட்டியலில் எந்த அணியும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைப்பதாக தெரியவில்லை. அத்துடன் பலமான அணிகளுடன் ஜெயிக்கும் பெரிய அணிகள் பலம் குன்ரியதென நினைக்கும் அணிகளிடம் சுருண்டு விடுகின்றன.(இதுக்கு பெயர்தான் விட்டுக்கொடுப்போ?) கள நிலவரம் இப்படி இருக்க கனவு தேவதைகளின் ஆட்டம் ஒரு புறம் சூடேற்றுகின்றது. நல்ல காலம் இம்முறை அவர்களை ஆவது ஆடவிட்டது. இல்லாவிட்டால் டெஸ்ட் போட்டிகள் போல் நடைபெறும் சில போட்டிகளை பார்க்கபோகும் ரசிகர் நிலை என்னவோ?
எந்த அணியும் தொடர்ச்சியாக தன் பலத்தை நிரூபிக்கவில்லை அதேபோல் பல எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொதப்பல் ஆட்டம் ஆடுகின்றனர். சேவாக் துடுப்பாட்டத்தை மறந்து விட்டார். கம்பீர் தடுமாறுகின்றார். சனத்தோ சத்தற்றவர்போல வந்து போகின்றார்.. பீட்டேர்சன், பிளின்டோப் விளையாடுகின்ரார்களா தெரியவில்லை. முரளியிடம் பழைய விக்கெட் வேட்கை காணவே இல்லை. ஓரம் என்ன செய்கின்றாரோ?. தோனியின் தலைமை? சச்சின் ஏதோ இடைக்கிடை ஆடுகின்றார். ராவிட்டும் அப்படியே. மஹேல, சங்கக்கார மற்றும் யுவராஜ் பெரிதாக சோபிக்கவில்லை.டில்ஷான் தன் கடந்தகாலங்களில் மறந்த துடுப்பாட்டத்தை இப்போது சேர்த்து காட்டிக்கொண்டிருக்கின்றார்.
தினேஷ் கார்த்திக் கொஞ்சம் அணியை காப்பாற்றி விடுகின்றார். பிராவோ தன் பங்குக்கு கலக்கிக்கொடிருக்கின்றார். ஹர்பஜன் தன் பங்குக்கு பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் உதவி செய்து அணிக்கு பலம் சேர்க்கின்றார். யுஸுப் பதான் களம் இறங்கினாலே எதிரணிக்கும் கலக்கும் ஆட்டம். பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் போனதும் மறுக்கமுடியா இழப்பே. ரோகித் ஷர்மா பந்துவீச்சில் கலக்குவதொடு அவ்வப்போது மறந்து போன துடுப்பாட்டத்தை நினைவுபடுத்திப்பார்க்கின்றார். உத்தப்பா நடந்து வந்து விளாசும் சிக்ஸ்செரை பார்த்து எத்தனை மாதங்களாகிவிட்டது?
எதிர்பார்க்காத எத்தனையோ இளம் வீரர்களும் சர்வதேச வீரர்களும் கொஞ்சம் தங்களை நிலை நிறுத்துகின்றார்கள். சில பிரபல வீரர்கள் களம் இறங்கவே இல்லை. ஏன்? என்ன நடக்கின்றது. கடந்தமுறை கலை கட்டிய திருவிழாவா இது? எதுவுமே தெரியாமல் பாதி கடந்து விட்டது. இனியாவது சூடு பிடிக்குமா? தெரியவில்லை.

தாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்!

இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம். தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்திய அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் கட்டப் பட்ட சில சாதாரண அரசு கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் அல்லது பல கோடியாக இருக்கும் போது, தாஜ் மகால் போன்ற ஒரு அரிய பொக்கிஷத்தின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடுவது ஒரு வினோதம்தான். அதே சமயத்தில், பலே கில்லாடியான நமது அரசியல்வாதிகள், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், அரசு சொத்துக்களை லாபத்தில் விற்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தாஜ் மகால் இரண்டு ரூபாய், தஞ்சை கோயில் மூன்று ரூபாய், செங்கோட்டை நான்கு ரூபாய் என்று கூறு போட்டு விற்று விட்டு விடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நமக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் இருக்கிறது அல்லவா?

மீண்டும் வரும் அபர்ணா!

கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பூசல் குறித்த கதைதான் கண்ணுக்குள்ளே. ஆனால் இந்தக் கதையில் வரும் பூசலுக்கான காரணம் வேறு, அதன் கதைக்களம் வேறு என்கிறார் படத்தின் இயக்குநர்[^] மூவேந்தன். எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் மூவேந்தன் இயக்கும் படம்தான் கண்ணுக்குள்ளே. மிதுன்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக அபர்ணா மற்றும் அனு ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இவர்களில் அபர்ணா, புதுக்கோட்டை சரவணன் படத்தில் அறிமுகமானவர். இடையில் காணாமல் போயிருந்த அபர்மா மீண்டும் திரும்பி வருகிறார். அனு புதுமுகம். இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் இப்படம்[^] இசையைப் பின்னணியாகக் கொண்டதாம். படத்தின் கதை குறித்து மூவேந்தன் கூறுகையில், கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்படும்போது 2 மணி நேரம் பேசாமல் இருக்கலாம், அதுவே 2 வருடமாக இருந்தால் என்னாகும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது எனது படம்[^] என்கிறார். மூவேந்தன் டிவி[^] சீரியலை இயக்கிய அனுபவம் கொண்டவர். ஆனால் படம்[^] சீரியல் ரேஞ்சுக்கு இருக்காது என்று உறுதியளிக்கிறார்.

ஆசினுக்கு சல்மானின் புது பரிசு!

ஆசினுக்கு முதலில் வீடு கொடுத்தார். இப்போது நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளாராம் சல்மான் கான். ஆசினின் வரவால் இந்தி்த் திரையுலகில் ஏக களேபரமாகிக் கொண்டிருக்கிறது. ஆசின் குறித்து தினசரி ஏதாவது ஒரு செய்தி[^] வந்தவண்ணம் உள்ளது.
Asin1_002.jpg
முதலில் ஆசினுக்கும், சல்மான் கானுக்கும் காதல் என்று செய்தி[^] கள்[^] கிளம்பின. இந்தக் காதலுக்குப் பரிசாக சல்மான் கான் பெரிய வீடு ஒன்றை ஆசினுக்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. சல்மானின் இந்த திடீர் மாற்றத்தால் அவரது காதலி காத்ரீனா கைப் அப்செட் ஆகியுள்ளதாகவும் செய்தி[^] கள் கூறின. ஆனால் இதை ஆசின் மறுத்தார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்களோ என புலம்பினார். இந்த நிலையில் ஆசினுக்கு சல்மான் கான் ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஆசினுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சர்ப்ரைஸாக ஒரு விலை உயர்ந்த நாய்க் குட்டியை வாங்கிக் கொடுத்து அசத்தி விட்டாராம் சல்மான். இருவரும் இப்போது லண்டன்[^] ட்ரீம்ஸ் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். ஆனால் ஆசினுக்கு சல்மான் நாய் வாங்கிக் கொடுத்தது குறித்து ஆசினின் அப்பாவுக்குத் தெரியாதாம். ஆசினுக்கு நாய் பிடிக்கும், ஆனால் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று நான் கூறியுள்ளேன். ஆனால் இப்போது சல்மான் நாய் கொடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது என்கிறார் ஆசினின் அப்பா ஜோசப். அப்பாவுக்குத் தெரியாமயா ஆசின்?, தப்பாச்சே!

Windows Genuine Advantage Notifications ரிமூவ் செய்வது எப்படி

நமது கம்ப்யூட்டர் சில சமயங்களில் windows update ஆகி விடும்.update ஆனபிறகு நமது விண்டோஸ் ஒரிஜினல் இல்லை ப்ளீஸ் இன்ஸ்டால் ஒரிஜினல் என்ற மெசேஜ் வந்துவிடும். கிழ்கண்ட படங்களை காண்க . ஒவ்வருமுறை ரீ ஸ்டார்ட் ஆனபிறகும் இந்த மெசேஜ் வந்து தொல்லை கொடுக்கும். இதை சரி செய்ய கிழ்கண்ட டூல்ச்யை டவுன்லோட் செய்து ஒருமுறை ரன் செய்யவும். DOWNLOAD HERE

நடிகை கார்த்திகாவுக்கு காதல் திருமணம்

தமிழில் 'நம்நாடு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை கார்த்திகா. தற்போது ‘பாலை வனச்சோலை’ படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் அமெரிக்காவில் மருந்து கம்பெனி அதிகாரியாக இருக்கும் மெரின் மேத்யூ என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

மெரினுக்கு கொல்லம் அருகே உள்ள மைனாகப் பள்ளி சொந்த ஊர். தற்போது இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.

அடுத்த மாதம் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. 18ம்தேதி தேவலங்கரை செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.

மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கையில் உள்ள படங்களை முடித்து விட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற கார்த்திகா திட்டமிட்டுள்ளார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com