2012 ற்கான ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட & செயற்பட்டு வரும் வீரர்களை பற்றிய பார்வையையும் அவர்கள் தமது அணிகளுக்காக செய்த சிறப்பான செயற்பாடுகளையும் அலசலாக தருகிறது இத்தொடர் பதிவு.
இதனை IPL-2012ல் பிடித்த வீரர்கள் எனும் என்ற அறிமுகத்துடன் தனது பொட்டலம் வலைப்பதிவில் தொடர் பதிவாக எழுதி வருகின்றார் G.CARTHIGAN. இப்பதிவை மீளவும் பயன்படுத்த அனுமதித்தமைக்கு அவருக்கு நன்றி தெரிவித்து, அவருடைய பார்வையிலேயே இத் தொடர் பதிவை தொடர்ந்து தருகிறோம். முதலாவது பகுதி இங்கே.4தமிழ்மீடியா குழுமம்
சிலபேரை கிறிக்கெற்றில பிடிக்குமா பிடிக்காதோ என்று தெரியாம இருக்கும் அப்பிடி ஒரு வகையறாதான் இந்த கிறிஸ்கெயில். ஒரு foot movement Styleஆன பற்றிங் என்றில்லாமல் பற்றை அந்தரத்தில் பிடித்தபடி இவர் முழங்கும் முழக்கங்கள் இவரின்மேல் பிடிப்பும் அதே போல் ஒரு ஈவிரங்கமின்றி சாத்துறாரே என்று ஒருவித வெறுப்பும் எழ காரணமாக இருக்கிறார் Jamaicaவின் பயங்கர மனிதர்.
இலங்கையில் ஒரு கொஞ்சக்காலமா கிறீஸ் மனிதர்கள் என்று பயங்கர பீதி கிழப்பப்பட்டதல்லவா. அந்த கிறீஸ் மனிதன் எப்பிடியிருப்பான் எண்டதுக்கு உதாரணமா இவரின்ர உருவத்த சொல்லலாம். கறுத்த உயரமான ஆக்ரோசமான உடல்வாகு நட்டுவக்காலிகள் தலையை சுத்தி இருக்கிறமாதிரி தலையிழுப்பு.
வழமைமாதிரி இவரப்பற்றி நீட்டி முழங்கி எழுத தேவையில்லை மேல போட்ட படமே எல்லாத்தையும் சொல்கிறது. இவர் பற்றோட Groundக்க நிக்கிற வரை bowling teamக்கு தொடர்ச்சியா வயித்த கலக்கியபடிதான். IVவது பாகத்தில இன்னொரு வீரரை பற்றிதான் எழுத வெளிக்கிட்டனான். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்லதான் Chris Gayle டெல்லியில 13sixersஓட 62bowlல 128அடிச்சு ஒரு பட்டாசு கடையில நெருப்பு போட்ட உணர்வை தந்திருந்தார். அதுக்கு பிறகுதான் இவர முதல்ல போட யோசனை வந்திச்சு!