சிறுத்தை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே ஒரு கலக்குக் கலக்கியவர் இயக்குநர் சிவா. அந்தப் படத்தின் வெற்றியின் பின்னர் சில முக்கிய நடிகர்கள் கால்ஷீ ட் என்னிடம் உண்டு, கதை உள்ளதா என்று சிவாவுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.
அந்த வகையில் அஜித்தும் ஒருவராம். அதற்கு சிவா தெலுங்கில் ஒரு படம் நடித்துக்கொண்டு இருக்கின்றேன், முடித்துவிட்டு வந்து கதையைக் கூறுகின்றேன் என்றாராம். ஆனால் இவர் பெரும் செலவில் இயக்கிய தெலுங்குப் படம் சில்லறையின் அளவைக்கூட தாண்ட முடியாதுள்ளது என்கிறதாம் ஆந்திரா ரிப்போட்.
இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த சிவா, அஜித் காரியாலயத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள "நீங்கள் தொடர்பு கொண்ட நபர் தற்சமயம் சுதாகரிப்பில் இருப்பதால் நான்கு வருடங்களின் பின்னர் தொடர்பு கொள்ளவும்" என்கிறதாம் எதிர்முனை