வீட்டினை பார்த்துக்கொள்ள ஒரு மகாலட்சுமி வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதுபோல நமது கம்யூட்டரை நன்கு பார்த்துக்கொள்ள ஒரு சாப்ட்வேர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கம்யூட்டர் மெயின்டனஸ்க்காக நாம் செய்யும் அனைத்துப்பணிகளையும் இந்த சின்ன சாப்ட்வேர் நமது ஒரு கிளிக் மூலம் செய்து முடிக்கின்றது.Wise PC Engineer என பெயருடன் 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் Registry Utility,Disk Utility,Other Utility என மூன்றுவிதமான Utility கள் கிடைக்கும். Registry Utility யில் Registry Backup.Registry Clean.Registy Defrog மற்றும் Startup Programme Manager என யுடிலிட்டிகள் உள்ளன. தேவையானதை நாம் தேர்வு செய்துபயன்படுத்தலாம். மேலும் Disk Utility யில Disk Cleaner.Disk Defregment.File recovery File Scrap என பல உபயோகமான யுடிலிட்டிகள் உள்ளது.
இதில் உள்ள Disk Defragment கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. இதில் வண்ணவண்ண சதுரமான சின்ன கட்டங்கள் நமது பார்வைக்கு தெரிந்து ஒழுங்கான வடிவில் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.'
கடைசியாக Other Utility memory optimizer.Auto shotdown.,File Hidern.File Encrypter என பல யுடிலிட்டிகள் இருக்கும்.Memory Optimizer கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.மற்ற சாப்ட்வேர்களில் இல்லாத சிறப்பு அம்சமாக பைல் ரெகவரி இதில் உள்ளது.இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நல்ல நிலையில் உள்ள பைல்களை நாம் தேர்வு செய்து நமது டிரைவில் சேமித்து பின்னர் பயன்படுத்தலாம்.இந்த் சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
thanks toவேலன்.