
இந்நிலையில் 2012-15ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடந்து வந்தது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமாரே போட்டியிட்டார். இதுதவிர ஏற்கனவே பொருளாளர், பொதுச் செயலாளர் பதவியில் வகித்தவர்களே மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று(30.05.12) நடந்தது. இதில் சரத்குமார் அணியினர் தவிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், 3வது முறையாக மீண்டும் நடிகர் சங்க தலைவராக சரத்குமாரே போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பொதுச் செயலாளராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேகரும், நடிகர் சிம்பு, சந்தானபாரதி, கே.ஆர்.செல்வராஜ் உள்ளிட்ட 24பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.