Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

30 மே 2012

டிவிலியர்சின் ஆலோசனை கைகொடுக்கும் * புஜாரா நம்பிக்கை



புதுடில்லி: ""டிவிலியர்ஸ் வழங்கிய ஆலோசனைகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கைகொடுக்கும்,'' என, இந்தியா "ஏ' அணி கேப்டன் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்தியா "ஏ' அணி, மூன்று டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக புஜாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தொடர் குறித்து புஜாரா கூறியது: வெஸ்ட் இண்டீஸ் பயணத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஏனெனில் முதன்முறையாக கரீபிய மண்ணில் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முடிந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், பெங்களூரு அணிக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் சக வீரர்களுடன் போதுமான வலைப்பயிற்சி மேற்கொண்டேன்.
ஐ.பி.எல்., தொடரின் போது சகவீரரும், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த டிவிலியர்ஸ் பேட்டிங் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இதேபோல பெங்களூரு அணியின் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் குறித்து கூறினார். இவர்களது ஆலோசனைகள், கரீபிய மண்ணில் சாதிக்க நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லிடம் ஆலோசனைகள் கேட்க நேரம் அமையவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால், எவ்வித கூடுதல் நெருக்கடியும் இருப்பதாக தெரியவில்லை. அணியில் உள்ள நிறைய வீரர்கள், ஏற்கனவே அந்நிய மண்ணில் இந்தியா "ஏ' அணிக்காக விளையாடி உள்ளனர்.
முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட பின், ரஞ்சி மற்றும் துலீப் டிராபி தொடரில் விளையாடி உள்ளேன். ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடி இருப்பதால், "பார்ம்' மற்றும் உடற்தகுதி குறித்து கவலைப்படத் தேவையில்லை.
அணியில் திறமையான பவுலர்கள் இடம் பெற்றிருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் குறித்து எவ்வித பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. கரீபிய மண்ணில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி சாதிப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு புஜாரா கூறினார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com