
14 செப்டம்பர் 2011
வேலாயுதம் பற்றி இயக்குனர் ராஜாவின் கருத்து

முத்தக்காட்சியை படமாக்கும் போது முரண்டு பிடித்த நடிகை!



பழங்குடியினரின் கலாசார நடனத்தில் பொலிஸாரின் அவதூறான செய்கைகள்(படங்கள்/வீடியோ இணைப்பு)
மேற்கிந்திய தீவு மக்களின் கலாசார நடனத்தில் இரண்டு போலீசார் அவதூறான முறையில் நடனமாடியதாக செய்தி கிடைத்துள்ளது , பல பெண்களுக்கு மத்தியில் ஆபாசமாக நடனமாடும் காட்சி வீடியோவில் பதிவாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுபோல் லண்டன் நகர மத்தியில் இளசுகளுடன் போலீசார் குத்தாட்டம் ஆடியது குறிப்பிடத்தக்கது
06 செப்டம்பர் 2011
“வெடி” இசை வெளியீடு

விஷால், ஷமீரா ரெட்டி, விவேக் மற்றும் பலர் நடிக்க பிரபுதேவா இயக்கி இருக்கும் படம் ‘வெடி’. விக்ரம் கிருஷ்ணா தயாரித்து இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் செப்-3-ம் தேதி நடைபெற்றது.
அவ்விழாவில் பிரபுதேவா, விஷால், ஷமீரா ரெட்டி, விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பிரபலங்கள் பேசியவை :
பிரபுதேவா : “செளரியம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் ‘வெடி’. பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படத்தில் நடித்ததாலோ என்னவோ ‘வெடி’ யில் முதல் படத்தில் நடிப்பது போல் நடித்து இருக்கிறார் விஷால். அவ்வளவு சின்சியர் நடிகர் அவர்.
விஜய் ஆண்டனி இசையமைத்து கொடுத்த டியூனை பலவற்றை நான் வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். ஆனால் அதற்கு எல்லாம் கோபப்படாமல் அடுத்த டியூனை போட்டு அனுப்பி வைத்துவிட்டு “இப்போ கேளுங்கள் சார்” என்பார்.
இந்த படத்தின் பாடல்கள் எனக்கு திருப்திகரமாக அமைந்து இருக்கிறது. கண்டிப்பாக ‘வெடி’ அனைத்து வித மக்களையும் கவரும் படமாக அமையும் ”
விஜய் ஆண்டனி : ” இந்த படத்தில் 3 மெலடி பாடல்கள், 2 குத்து பாடல்கள் இருக்கின்றன. இளைய தளபதி படத்திற்கு இசையமைத்து விட்டு புரட்சி தளபதி படத்திற்கு இசையமைத்து இருக்கிறேன்.
விஷால் என்னுடைய லயோலா கல்லூரி நண்பர். நான் அப்போதே அவரிடம் நிறைய பாடல்களை பாடிக் காட்டி இருக்கிறேன். 3 வருடங்கள் கழித்து அவரை ஒரு நடிகராக பார்த்த போது கூட, அவர் கல்லூரி நாட்களில் நான் போட்ட டியூன்களை எல்லாம் பாடி காட்டினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் படமும் பிரமாதமாக வந்து இருக்கிறது.”
விஷால் :” செளரியம் என்ற தெலுங்கு படத்தினை பார்த்து அதன் ரீமேக் உரிமை வாங்கி, 2 வருடங்கள் கழித்து நடித்து இருக்கிறேன். தெலுங்கு படத்தின் தழுவல் மட்டுமே இது. தமிழ் திரையுலகிற்கு ஏற்றவாறு நிறைய மாற்றி இருக்கிறோம்.
படத்தை யாரை இயக்க சொல்லாம் என்று யோசித்த போது எனக்கு தோன்றியது பிரபுதேவா சார் பெயர் மட்டுமே. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை உடனே முடித்து விட்டார். முதலில் இருந்தே சரியாக அனைத்தையும் தயார் செய்து வைத்து இருந்தார். ஒரு நாள் வந்து ‘சார் நீங்க நடிக்க காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டன. பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டும் தான் பாக்கி இருக்கிறது’ என்று கூறினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
எனக்கு அவரது நடன இயக்கத்தில் ஆட வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கு இந்த படத்தில் அந்த வாய்ப்பு அமையவில்லை. படத்தில் நடனம் கூட என்னை ஆடவிடவில்லை. பிரபாகரன் என்ற பாத்திரம் ரொம்ப டான்ஸ் ஆட கூடாது என்று கூறி விட்டார். கடைசி பாடல் மட்டும் தான் கொஞ்சம் ஆட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
படத்தின் பாடல்கள் நாளை செப் 4ம் தேதி வெளிவர இருக்கிறது. படம் இம்மாதம் இறுதியில் வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். தற்போது ‘தீராத விளையாட்டு பிள்ளை’ இயக்குனர் திரு இயக்கத்தில் நடித்து வருகிறேன்.
நான் இதுவரை நடித்த படங்களில், ஹீரோயினுக்கும் எனக்குமான காட்சிகளில் உயரப் பிரச்னை இருந்தது. ஒன்று நான் என்னை குழி வெட்டி கீழே இறக்கி விடுவார்கள். இல்லையென்றால் நாயகிக்கு ஒரு ஆப்பிள் பெட்டி போடுவார்கள். முதல் முறையாக எனக்கு நிகரான உயரம் உடையவரான ஷமீரா ரெட்டியை நாயகி ஆக்கி இருக்கிறார்கள்.
கல்யாணம் பற்றி கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை இப்போது ‘வெடி’ படத்தினை பற்றிய சிந்தனையே அதிகமாக இருக்கிறது, கல்யாணத்தை பற்றி சிந்திக்கவில்லை ” என்று கூறினார்.
நாயகி ஷமீரா ரெட்டி பேசும் போது ” எனக்கு இந்தி திரையுலகத்தை விட தமிழ் திரையுலகமே அதிகம் பிடித்து இருக்கிறது. காரணம் தமிழ் படம் என்பது உடனே முடிந்து விடும், இந்தி படம் அப்படி அல்ல.
‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் அறிமுகமான என்னை இன்னும் தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை. ஆனால் இந்தி ரசிகர்கள் அப்படி அல்ல அவர்கள் உடனே மறந்து விடுவார்கள்.
பிரபுதேவா சார் எனக்கு ஒரு நாள் போன் செய்து ‘ இந்த படத்தில் நடிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறினார். நான் உடனே கதை என்ன? நாயகன் யார்? என்பது போன்ற எதையும் நான் கேட்கவில்லை. உடனே நடிக்க சம்மதித்து விட்டேன். படமும் நன்றாக வந்து இருக்கிறது”
உலகின் தலை சிறந்த மணல் ஒவியங்கள் ( படங்கள் இணைப்பு )

உலகின் தலை சிறந்த மணல் ஓவியங்கள் சிலவற்றை கொண்ட தொகுப்பு இது. மிகவும் அழகாகவும், பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
03 செப்டம்பர் 2011
சொனி (Sony) அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட்!(காணொளி இணைப்பு)

சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது ‘சொனி’.
சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது. டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான ‘ஹனிகோம்’ ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.
இதில் ‘பி’ இன் வடிவம் டெப்லட் சந்தைக்கு புதியது. இது இரண்டு திரைகளைக் கொண்டுள்ளதுடன் மடித்து வைத்துக் கொள்ள முடிவதனால் எடுத்துச் செல்ல இலகுவாக இருக்குமென சொனி தெரிவிக்கின்றது.
இவற்றைப் பற்றிய மேலதிக விபரங்கள்..
Android 3.1 Honeycomb
9.4-inch screen
1280 x 800 resolution
512MB RAM
16GB memory
NVIDIA Tegra 2 processor
Front and rear cameras
WiFi and 3G compatible
Work as remote control on Sony products
Price – £399
செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது
Android 3.2 Honeycomb
Two 5.5-inch screens
Two 1024 x 480 pixel displays
RAM unknown
16GB memory
NVIDIA Tegra 2 processor
Book-style layout
WiFi and 3G compatible
Price – £479
நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
சந்தையில் முன்னணியில் இருக்கும் அப்பிள் டெப்லட்களுக்கு இவை தகுந்த போட்டியளிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பெண்ணிடம் ஆணுக்கு ரொம்ப பிடிச்சது! பிரித்தானியாவில் ஆய்வு

பிரித்தானியாவில் விதவிதமான ஆய்வு முடிவுகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. அந்தவகையில் ‘ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?’ என பிரித்தானியாவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. ‘அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்’ என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உம்மென்று , கோபமாக, பதற்றமாக இருக்கிற நேரத்தில் பெண்களை போட்டோ எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர்.
‘கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல’ என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
நடிகைகளை போட்டோ எடுக்கும் பிரபல புகைப்படப் பிடிப்பாளர் டேனியல் கென்னடியின் கருத்துக்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது ஆய்வு நிறுவனம்.
அவரிடமிருந்து முக்கியமாக பெறப்பட்ட கருத்துக்களாக,
கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும்போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது. அவர்களை ‘ஓட்ஸ்’ என்றோ ‘பிளம்’ என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும்.
நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும். அப்புறம்.. தாடையை தரை நோக்கி தாழ்த்தி, மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்.
எது எப்படியென்றாலும் பெண்கள் என்ன வகையான நகைகளை அணிந்தாலும் ஆணுக்குப் பிடித்தது பெண்ணின் புன்னகை தான்... இதனை தெளிவுபடுத்தி இருக்கிறது ஆய்வு....
மீண்டுமொரு சர்ச்சை வீடியோ :: தொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்
சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை பிள்ளை போல் இன்று அனைவரது கரங்களிலும் அதி நவீன செல் போன்கள். செல்போனில் வீடியோ கேமரா வசதி வந்த பின்னர் சைபர் குற்ற நடவடிக்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காரணம் இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சேலை அணிந்து செல்லும் குடும்ப பெண்களையும் ரகசியமாக படம் பிடித்து கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக மாற்றி இண்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். செல்போன் பயன்படுத்தும் சில குறும்பு கார மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இண்டர் நெட்டில் இருந்து அத்தகைய காட்சிகளை செல்போனில் டவுன் லோடு செய்து கொள்கின்றனர்.
தாங்கள் பார்த்து மகிழ்வது மட்டுமல்லாமல் தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடிகை திரிஷா குளியல் காட்சி, ரசிகர்கள் கூட்டத்தில் கசங்கும் ஜோதிகா, உடை மாற்றும் குஷ்பு, ஆடை நழுவும் கிரண், மசாஜ் சென்டரில் திரிஷா, முத்தமிடும் நமீதா என தமிழ் திரையுலக நடிகைகளின் பட காட்சியை கிராபிக்ஸ் மூலம் இண்டர் நெட்டில் ஆபாசமாக உலவ விட்டனர்.
அதனை செல்போன் மூலம் பரவ விட்ட குறும்பு காரர்கள் தற்போது நடிகை பூஜா சோபாவில் அமர்ந்து தொழில் அதிபர் ஒருவருடன் செக்ஸ் அனுபவிப்பது போன்ற ஆபாச காட்சியை பரப்பி வருகின்றனர். மாதவன் ஜோடியாக "ஜே.ஜே" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மானவர் நடிகை பூஜா. தொடர்ந்து இவர் அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பூஜா தற்போது கொழும்புவில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகை பூஜாவின் ஆபாச படம் "பிசினஸ்மேன் வித் பூஜா" என்ற பெயரில் செல்போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1 நிமிட நேரம் ஓடும் அளவிற்கு உள்ளது இந்த ஆபாச காட்சி. ஒரு ஷோபாவில் பூஜா நிர்வாண நிலையில் அமர்ந்திருக்கிறார்.
பின்னர் 20 வினாடிகள் அவரது முகம் குளோசப் காட்சியில் காட்டப்படுகிறது. தொடர்ந்து சுமார் 40 வயது தொழில் அதிபர் ஒருவருடன் பூஜா உல்லாசமாக இருப்பது போல அந்த காட்சி அமைந்துள்ளது. நடிகை பூஜாவின் ஆபாச காட்சி சென்னை, புதுவை, கோவை, திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே செல்போன் மூலம் வேகமாக பரவி வருகிறது.
இது பற்றி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. ஆபாச காட்சியில் இடம் பெற்றுள்ளது நடிகை பூஜாவா, அல்லது அவரை போன்ற உருவ அமைப்பு கொண்ட வேறு ஆபாச நடிகையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் நடிகை பூஜாவின் ஆபாச காட்சியில் கிராபிக்ஸ் ஏதும் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்து வருகிறார்கள்.
30 ஆகஸ்ட் 2011
போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் பிரிட்டன் இராணுவம்!

ஈராக்கில் 2004 ஆம் ஆண்டு யுத்தத்தில் பிரிட்டன் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 பேரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில் பிரித்தானிய இராணுவத்தினர் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் இராணுவத்தினர் தடுப்பிலுள்ள ஈராக் கைதிகளை திட்டமிட்டவகையில் துன்புறுத்தியுள்ளனர் என்று Baha Mousa அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அறிக்கையின் பின்னர் இந்த வருட இறுதியில் பிரித்தானிய படைகளுக்கு எதிராக இரண்டாவது விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேல்நீதிமன்றம் ரோயல் இராணுவ பொலிஸாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்ததுடன் இதன் இரண்டாவது கட்டளை அதிகாரியால் வழங்கப்பட்ட சாட்சியங்களையும் சந்தேகிக்க வேண்டும் எனக் கூறப்பட்டதை அடுத்து இரண்டாவது கட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். தென்கிழக்கு ஈரானில் 2003 இற்கும் 2008 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானிய இராணுவத்தின் திட்டமிட்ட துன்புறுத்தலுக்கு உள்ளாகிய 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் பெறப்பட்ட சாட்சியங்களை கேட்டறிந்த பின்னர் இராணுவத்தின் முழு தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக் கொள்கையினையும் விசாரிக்கவேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆலோசித்து வருகின்றது. 59 பேர் துணிகளால் கட்டப்பட்டும் 11 பேர் மின்சாரம் பாய்ச்சப்பட்டும் 122 பேர் காதை செவிடாக்கியும் கேட்கப்படாமல் செய்யப்பட்டதாகவும் பிரிட்டன் இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மற்றும் 52 பேருக்கு நித்திரை இல்லாமலாக்கப்பட்டதாகவும் 131 பார்க்கமுடியாமல் கண்காப்புகள் போடப்பட்டதாகவும் 39 பேருக்குக் கட்டாயமாக நிர்வாணமாக்கப்பட்டதாகவும் 18 பேருக்கு மடிக்கணினி மூலம் DVDகளில் பாலியல் படங்கள் காட்டப்பட்டதாகவும் பிரிட்டன் படைகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலையாளிகள் தண்டனை நிறைவேற்ற ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து “ஹேங் மேன்”கள் வருகை!

ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மூன்று, "ஹேங் மேன்' கள் வேலூர் வருகின்றனர்.ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9ம் தேதி வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக தூக்கு மேடை சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தூக்கு போடுவதற்கு, வேலூர் சிறையில் இருந்து, ஆறு வார்டன்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில்,"ஹேங் மேன்' கள் இருக்கின்றார்களா என, வேலூர் சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் வெங்கடேஸ்வரலு என்ற,"ஹேங் மேன்' இருப்பது தெரிந்தது.
இதையடுத்து,வேலூர் சிறை அதிகாரிகள் ஆந்திர மாநில சிறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, "ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட வெங்கடேஸ்வரலு வருவாரா?' என விசாரித்தனர். "இப்போது வெங்கடேஸ்வரலுவுக்கு வயது 85. சர்க்கரை நோய், இதய நோயால் அவதிப்பட்டு வருகின்றார் என்பதால் அவரால் வர முடியாது' என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஹைதராபாத் சிறையில் வெங்கடேஸ்வரலு வேலை பார்த்த போது குப்தா என்பவர் புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். வெங்கடேஸ்வரலுக்கு பின் குப்தா தான் தூக்கு போட்டு வந்தார். தற்போது, குப்தா, விஜயவாடாவில் இருப்பதாகவும், அவரிடம் சொன்னால் வந்து தூக்கு போட்டு விடுவார் என்றும் விவரம் தெரிந்தது.
வேலூர் சிறைத்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆந்திர மாநில சிறைத்துறையினர் விஜயவாடாவில் உள்ள குப்தாவிடம் தொடர்பு கொண்டனர். குப்தாவுக்கு வயது 60. இரு பெண்டாட்டிக்காரரான அவர் நல்ல திடகாத்திரமாக இருக்கின்றார்.குப்தாவுக்கு, 26 பேரை தூக்கில் போட்ட அனுபவம் உள்ளது. மேலும் குப்தாவிடம் வேலை செய்த பரதன், ஸ்ரீ ராம கிருஷ்ணன் ஆகியோர் தற்போது கர்நாடக மாநிலத்தில் இருப்பதாகவும், அவர்களும் தூக்கு போடுவதில், "எக்ஸ்பர்ட்' என்றும் தெரிந்தது. குப்தா கொடுத்த தகவலை அடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் பரதன், தவன்கெரேவில் இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஆகியோரும் வருகின்றனர். தற்போது வேலூர் சிறைத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவல்கள் படி, மூன்று பேரில் இருவரை அழைத்து வந்து ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட சிறைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.இன்னும் சில தினங்களில் இவர்கள் மூவரும் வேலூர் சிறைக்கு வருகின்றனர்.
இது குறித்து வேலூர் சிறை அதிகாரிகள் கூறியதாவது:மிகவும் முக்கியமான ராஜிவ் கொலை வழக்கில் மூன்று பேரையும் தூக்கில் போடுவது சாமானிய விஷயமல்ல. "ஹேங் மேன்' களை கொண்டு தண்டனையை நிறைவேற்றும்படியும்,"ஹேங் மேன்' கள் கிடைக்காத பட்சத்தில் சிறை சாலை விதிகளின் படி, வார்டன்களைக் கொண்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படி மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மூன்று ஹேங் மேன்கள் கிடைத்துள்ளனர் என்றனர்.
பிரிட்டிஷ்காரர்கள்எழுதிய புத்தகம்:அந்தக் காலத்தில் ஒருவரை தூக்கில் போட, "ஹேங் மேன்' களுக்கு தலா ஒரு ரூபாய் கொடுத்தனர். பின் படிப்படியாக உயர்ந்து, 5 ரூபாய்க்கு வந்தது. இப்போது ஒருவருக்கு, 100 ரூபாய் கொடுக்கப்படுகின்றது. ஒருவரை தூக்கில் போடுவதற்கு என, "தூக்கு தண்டனையும் அதை நிறைவேற்றும் வழி முறையும்' என்ற ஆங்கில புத்தகம், எல்லா சிறைகளிலும் உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் எழுதிய இந்த புத்தகத்தில் உள்ள வழிமுறைகள் படிதான் இன்றளவும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
ஐரோப்பாவின் பிரம்மாண்ட பாரம்பரிய திருவிழா (படங்கள் இணைப்பு)

Hill Carnival எனப்படும் பாரம்பரிய திருவிழா நேற்று லண்டனில் நடைபெற்றது , மேள தாளங்களுடன் களைகட்டியது . 6500 பொலிசாரின் பாதுகாப்புடன் ஊர் முழுவதும் வலம் வந்த இந்த திருவிழாவைக்காண பல்ள்ளயிரம் பேர் கூடியிருந்தனர் , கடந்த வருடம் நடைபெற்றதை விட இம்முறை மிகவும் சிறப்பாக இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிகின்றனர்