பிரித்தானியாவில் விதவிதமான ஆய்வு முடிவுகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. அந்தவகையில் ‘ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?’ என பிரித்தானியாவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. ‘அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்’ என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உம்மென்று , கோபமாக, பதற்றமாக இருக்கிற நேரத்தில் பெண்களை போட்டோ எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர்.
‘கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல’ என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
நடிகைகளை போட்டோ எடுக்கும் பிரபல புகைப்படப் பிடிப்பாளர் டேனியல் கென்னடியின் கருத்துக்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது ஆய்வு நிறுவனம்.
அவரிடமிருந்து முக்கியமாக பெறப்பட்ட கருத்துக்களாக,
கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும்போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது. அவர்களை ‘ஓட்ஸ்’ என்றோ ‘பிளம்’ என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும்.
நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும். அப்புறம்.. தாடையை தரை நோக்கி தாழ்த்தி, மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்.
எது எப்படியென்றாலும் பெண்கள் என்ன வகையான நகைகளை அணிந்தாலும் ஆணுக்குப் பிடித்தது பெண்ணின் புன்னகை தான்... இதனை தெளிவுபடுத்தி இருக்கிறது ஆய்வு....