ஈராக்கில் 2004 ஆம் ஆண்டு யுத்தத்தில் பிரிட்டன் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 பேரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில் பிரித்தானிய இராணுவத்தினர் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் இராணுவத்தினர் தடுப்பிலுள்ள ஈராக் கைதிகளை திட்டமிட்டவகையில் துன்புறுத்தியுள்ளனர் என்று Baha Mousa அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அறிக்கையின் பின்னர் இந்த வருட இறுதியில் பிரித்தானிய படைகளுக்கு எதிராக இரண்டாவது விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேல்நீதிமன்றம் ரோயல் இராணுவ பொலிஸாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்ததுடன் இதன் இரண்டாவது கட்டளை அதிகாரியால் வழங்கப்பட்ட சாட்சியங்களையும் சந்தேகிக்க வேண்டும் எனக் கூறப்பட்டதை அடுத்து இரண்டாவது கட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். தென்கிழக்கு ஈரானில் 2003 இற்கும் 2008 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானிய இராணுவத்தின் திட்டமிட்ட துன்புறுத்தலுக்கு உள்ளாகிய 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் பெறப்பட்ட சாட்சியங்களை கேட்டறிந்த பின்னர் இராணுவத்தின் முழு தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக் கொள்கையினையும் விசாரிக்கவேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆலோசித்து வருகின்றது. 59 பேர் துணிகளால் கட்டப்பட்டும் 11 பேர் மின்சாரம் பாய்ச்சப்பட்டும் 122 பேர் காதை செவிடாக்கியும் கேட்கப்படாமல் செய்யப்பட்டதாகவும் பிரிட்டன் இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மற்றும் 52 பேருக்கு நித்திரை இல்லாமலாக்கப்பட்டதாகவும் 131 பார்க்கமுடியாமல் கண்காப்புகள் போடப்பட்டதாகவும் 39 பேருக்குக் கட்டாயமாக நிர்வாணமாக்கப்பட்டதாகவும் 18 பேருக்கு மடிக்கணினி மூலம் DVDகளில் பாலியல் படங்கள் காட்டப்பட்டதாகவும் பிரிட்டன் படைகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.