09 ஜனவரி 2009
என்னைப் பற்றியும்,வலைப்பதிவுக்கு துண்டியதும்.....
நான் சுமார் இரண்டு வருட காலமாக தனியார் கணனி நிறுவனம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினேன். (எதோ எனக்கு தெரிந்தவற்றை ,படித்தவற்றை என்னால் முடிந்தளவு ) பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுவனம் இயங்கமுடியவில்லை. (இப்போது இயங்குகிறது) நானும் கொழும்புக்கு வந்தேன்.(ஜனவரி 2007 இல் )இங்கே அந்த நிறுவனத்தின் தலைமையகம் இருக்கிறது, அனால் எனது தனிப்பட்ட சில காரணத்தால் (இன்னும் நிறைய படிக்க வேண்டியிருந்ததால் ) தொடர்ந்து வேலை செய்யவில்லை. இப்போது இரண்டு வருடங்கள் கடந்து விட்டது கணனியுடன் தொடர்புபட்டதால் மீண்டும் வலைப்பின்னல்,வலைப்பதிவு என்பனவற்றை பார்க்கும் போது நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சொந்தமாக இணையத்தள இணைப்பு வசதி இருக்கவில்லை . அதன் பின்னர் இப்போது என்னுடைய வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறேன். இந்த வலைப்பதிவு தொடங்க இன்னுமொருவர் காரணம் அவர் சிகரம் ஒன்றின் உச்சியில் இருப்பவர் ஆனால் நானோ எங்கோ இருக்கின்ற ஒரு சிறிய புல், அவரின் மீது வெறிப்பிடித்த(தீவிரமான) ரசிகன்,ஆனால் இதுவரை அவருடன் பேசவும் இல்லை,சந்திக்கவும் இல்லை,(ஒரு முறை சுமார் ஐம்பது மீற்ரர் இடை வெளியில் 2007ஆம் ஆண்டு நடுப்பகுதி என்று நினைக்கிறேன் கொட்டேனவில் நடந்த இசை நிகழ்சியில் பார்த்திருக்கிறேன்)
இன்னும் அவர் யார் என்று சொல்லவில்லையே ..அவர் இப்போது ஒரு வெற்றிகரமான,உயர்ந்த பதவியில் இருக்கிறார்.அவர் யார் எப்படி அவருடைய ரசிகன் ஆனேன் ?தொடரும் .....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக