நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.29 ஜூலை 2011
இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்
நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.கூகுள் மெனுபாரின் நிறத்தை அழகாக மாற்றலாம்
27 ஜூலை 2011
ஆன்லைன் மூலம் கோப்புகளை இலவசமாக பதிவேற்றவும் , தறவிரக்கம் செய்வதற்கு முன் பார்க்கவும் (View) உதவும் பயனுள்ள தளம்

ஆன்லைன் மூலம் நம் கணினியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ள நிலையில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து தேவையென்றால் மட்டுமே தறவிரக்க வசதி செய்து கொண்டு ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆன்லைன் மூலம் எல்லா வகையான கோப்புகளையும் எங்களிடம் இலவசமாக பதிவேற்றம் என்று சொல்லி பல இணையதளங்கள் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இப்படி இருக்கும் தளங்களில் இருந்து கோப்புகளை தறவிரக்கும் போது போன்ற கூடவே வைரஸ் அல்லது மால்வேரும் சேர்ந்தே வருகிறது, ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து அதன் பின் தறவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://dropdo.com

படம் 2
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டிபடி Upload a File என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்பை தேர்ந்தெடுக்கவும் அடுத்து நம் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு நமக்கு ஒரு URL முகவரி கிடைக்கும் நேரடியாக இந்த முகவரியை டிவிட்டர் , பேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இந்த முகவரியை சொடுக்கியதும் படம் 2-ல் உள்ளது போல் காட்டப்படும் வலது பக்க ஓரத்தில் இருக்கும் Download என்ற பொத்தானை சொடுக்கி படத்தை தறவிரக்கலாம், Image, Doc, Code, PDF, Audio, Video, போன்ற கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்துவிட்டு தேவையென்றால் தறவிரக்கலாம். இத்தளத்தில் இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றம் செய்யப்படும் கோப்புகளை நீக்கும் உரிமையும் உண்டு. கண்டிப்பாக ஆன்லைன் மூலம் பல வகையான கோப்புகளை பதிவேற்றம் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
தோனி பிரையரை விட சிறந்த கீப்பர் மற்றும் பவுலர் - போட்டுத் தாக்கும் பிஷன் சிங்க் பேடி
முன்னாள் வீரர்கள் கேப்டன் தோனியை சாடி வருகின்றனர். பிஷன் சிங் பேடி இது பற்றி வர்ணிக்கையில் "மேட் பிரையர் சிறந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் ஆனால் தோனி பிரையரைக்காட்டிலும் சிறந்த விக்கெட் கீப்பர்/பவுலர்" என்று கிண்டலாக போட்டுத் தாக்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பேட்டிங்க் தான் நமது அணியின் பலமென்றால் முதலில் டாஸ் வென்று ஏன் பேட்டிங்கை கொடுக்க வேண்டும் சரியாக திட்டமிடாமல் 474 ரன்களை துரத்த வேண்டி ஏற்பட்டது. எப்போதும் பயிற்சியாளரை நம்பி இருக்காமல் வீரர்கள் தாங்களாகவே சில விடயங்களை செய்ய முன்வர வேண்டும். சச்சினும் சேவாக்கும் ஒரே மாதிரி விளையாடுவது தவறு சச்சின் ஆதிக்க வழிக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். என தெரியவருகிறது.
மேலும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நிதி சேர்க்கும் போட்டி என தோனி நினைக்கிறாரா என காட்டமாக கருத்து தெரிவித்த வடேகர். அவர் பந்து வீச முன்வருவது எதிராளிக்கு எங்களது பலவீனத்தை காட்டிக் கொடுப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.
‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட.வண்ணமயமானதும் தான்.
வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது.
ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது.
இணையவாசிகள் சமர்பிக்கும் வார்த்தை விளக்க விடியோக்கள் முகப்பு பக்க்த்திலேயே அவர்கள் புகைப்படங்க்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன.அவற்றில் கிளிக் செய்தால் விளக்கத்தை கேட்கலாம். சமீபத்தில் சம்ர்பிக்கப்பட்டவை முதலில் இடம் பெறுகின்றன.மற்றவற்றை தேடிப்பார்க்கலாம்.
எந்த வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது.அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது.கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம்.அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால்!இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம்.
ஒரே வர்த்தைக்கு பலர் விளக்கம் அளித்திருந்தால் அவை அனைத்துமே இடம் பெருகின்றன.உறுப்பினர்கள் அவற்றுக்கு வாக்களிக்கலாம்.அந்த வாக்குகளின் அடிப்படையில் அவர் வரிசைப்படுத்தப்படும்.
சமீபத்திய விடியோ,அதிகம் பார்க்கப்பட்ட விடியோ என்னும் தலைப்புகளிலும் விளக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு அழகு உண்டு.தனி நபர்கள் குறிப்பிட்ட சொல் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி விளக்கும் போது அந்த அழகை உணர முடியும்.அதே நேரத்தில் தனிப்பட்ட விளக்கஙக்ளை கேட்கும் போது ஒரு சொல்லின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.உறுப்பினர் அனுபவம் சார்ந்து அதன் பொருளை விவரிப்பதால் அந்த சொல்லின் பயன்பாடு சார்ந்து அதனை புரிந்து கொள்வதும் சாத்தியமாகும்.
இப்படி வீடியோ விளக்கத்தை இணைப்பதன் முலம் அகராதிகளுக்கே புதிய பரிமாணத்தை வோர்டியா கொண்டு வந்து விடுகிறது.
இணையவாசிகள் சமர்பிக்கும் விளக்கம் தவிர துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கஙக்ளும் சேர்க்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன.விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்சிரீதியிலான அகராதி என்னும் புதிய வகையான அகராதியாக இந்த தளம் உருவாகியிருப்பதாக பாராட்டப்படுகிறது.
26 ஜூலை 2011
தேடுபொறி ரகசியங்கள்: Bac kLinkS
நல்லவேளை! ஐஸ்க்ரீம் கரைவதற்குள் அடுத்தப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும். படித்துவிட்டீர்களா? சரி, இப்போ கதைக்கு வருவோம்.
நம்மை போன்று பலர் ஐஸ்க்ரீம் கடைகள் வைத்திருக்கிறார்கள். இப்பொழுது, வெளியூர்க்காரர்கள் அந்த மனிதர்களிடம் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால் எந்த கடையை முதலில் சொல்வார்கள்?
அந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணிகளைக் கொண்டு கடைகளை தரம் பிரிக்கின்றனர்.
அதாவது, முந்தைய பதிவில் சொன்னது போல, தேடுபொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிமுறைகளை (Algorithms) கையாளுகின்றன.
அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
1. எந்த கடையை அதிகமானோர் சிபாரிசு செய்கிறார்களோ? அந்த கடையை தான் முதலில் சொல்வார்கள்.
அதாவது, எந்த தளத்திற்கு அதிகம் பேர் இணைப்பு (Link) கொடுத்திருக்கிறார்களோ? அந்த தளத்தை தான் தேடுபொறிகள் முதலில் சிபாரிசு செய்யும். அந்த இணைப்பு BackLinks எனப்படும்.
நண்பர் ஒருவர் அவரது தளத்தில் நமது தளத்திற்கான இணைப்பை கொடுத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அது நம் தளத்தின் Backlinks ஆகும். அதிகமான தளங்களில் நமது தளத்திற்கான இணைப்பு இருந்தால், தேடுபொறிகள் முதலில் நம்மை தான் சிபாரிசு செய்யும்.
சரி, இரண்டு ஐஸ்க்ரீம் கடைகள் இருக்கின்றது. அந்த இரண்டு கடைகளுக்கும் தலா ஒருவர் சிபாரிசு செய்கிறார்கள். இப்பொழுது எந்த கடைக்கு அந்த மனிதர்கள் சிபாரிசு செய்வார்கள்?
2. சிபாரிசு செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அந்த மனிதர்கள் கவனிப்பார்கள்.
கடை ஒன்றை சிபாரிசு செய்பவர், "அது ஐஸ்க்ரீம் கடை" என்று சொல்கிறார்.
கடை இரண்டை சிபாரிசு செய்பவர், "அது கடை" என்று சொல்கிறார்.
இப்போது வெளியூர்க்காரர்கள் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால், அந்த மனிதர்கள் முதல் கடையை தான் சிபாரிசு செய்வார்கள். இரண்டாவது கடையை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதாவது தேடுபொறிகள், நமக்கு இணைப்பு கொடுத்த நண்பர் எப்படி கொடுத்திருக்கிறார்? என்று பார்க்கும்.
உதாரணத்திற்கு, இந்த பதிவின் முதல் பத்தியை பார்க்கவும்.
//ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும்.//
இதில் "ஐஸ்க்ரீம்" என்ற இடத்திலும், "இங்கு கிளிக் செய்து" என்ற இடத்திலும் முந்தைய பதிவிற்கான சுட்டியை இணைத்துள்ளேன். அந்த இரண்டு வார்த்தைகளும் "Anchor Text" எனப்படும். தேடுபொறிகள் இவற்றைத் தான் கவனிக்கும்.
இப்போது, ஐஸ்க்ரீம் பற்றி ஒருவர் தேடினால்,மேலே "ஐஸ்க்ரீம்" என்று இணைப்பு கொடுத்திருக்கிறேன் அல்லவா? அதனைத் தான் முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளும். "இங்கு க்ளிக் செய்து" என்ற இணைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.
தேடுபொறிகள் கவனத்தில் கொள்ளும் மேலும் சில விஷயங்கள்:
1. Meta Tags - இதனை பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் கொஞ்சமாக சொல்லியிருக்கிறேன். அதாவது உங்கள் தளத்தை பற்றி தேடுபொறிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுகிறது.
இதில் கவனத்தில் கொள்ள விஷயம் என்னவெனில், உங்கள் ப்ளாக்கிற்கு தொடர்பில்லாத வார்த்தைகளை Meta Tag-ல் சேர்த்தால், அதனை தேடுபொறிகள் நிராகரித்துவிடும்.
2. வலைத்தளத்தின் காலம் - எத்தனை நாட்களாக நமது வலைத்தளம் செயல்படுகின்றது என்பதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். நீண்ட காலமாக செயல்படும் வலைத்தளத்திற்கு முன்னுரிமை அளிக்கும்.
3. பதிவு தலைப்பு - பயனாளர்கள் ஒன்றை தேடினால் அந்த வார்த்தை எந்த பதிவின் தலைப்பில் உள்ளதோ? அதனை தான் முதலில் காட்டும். பதிவிற்குள்ளே அந்த வார்த்தை இருந்தால் அதனை இரண்டாவதாக தான் எடுத்துக் கொள்ளும்.
BackLinks பற்றி பார்த்தோம் அல்லவா? நம்முடைய தளத்திற்கான BackLinks-ஐ எப்படி தெரிந்துக் கொள்வது?
தேடுபொறிகள் அனைத்தும் நமது BackLinks-ஐ ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளாது. ஒவ்வொன்றும் வித்தியாசப்படும்.
Google Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, Google தளத்திற்கு சென்று,
link:bloggernanban.blogspot.com என்று தேடவும்.
bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் தள முகவரியை கொடுக்கவும்.
Yahoo Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, http://siteexplorer.search.yahoo.com/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் தள முகவரியை கொடுத்து தேடவும்.
Bing Backlinks-ஐ தெரிந்துக் கொள்வதற்கு சற்று மெனக்கெட வேண்டும். அதற்குhttp://www.bing.com/toolbox/webmaster/ என்ற முகவரிக்கு சென்று, Windows LiveID மூலம் உள்நுழைந்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், ப்ளாக்கர் நண்பன் தளத்தின் கூகிள் பேக்லின்க்ஸ் பற்றி தேடிய பொழுது, ஒன்றும் காட்டவில்லை.
ஏன்? அதனையும் கூகிளிடமே கேட்டுவிடுவோம்.
ஐஸ்க்ரீம் கதை முடிந்தது. மற்ற ரகசியங்களை இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
என் கிரிக்கெட் வரலாறு - 13
![]() |
| கேடிக் ஓவரில் சச்சின் அடித்த மிகப்பெரிய சிக்சர் |
![]() |
| அக்தர் ஓவரில் ஆஃப் சைடில் சிக்சர் |
பாலாவின் பக்கங்கள்
25 ஜூலை 2011
Facebookஐ முந்துகிறதா Google+ ?
கடந்த சில வாரங்களாக அடிக்கடி பார்க்கும் செய்தி என்னவென்றால் கூகிள் ப்ளஸ் பற்றியது தான். நேற்று கூட செய்தியில் கூகிள் ப்ளஸ் இருபதே தினங்களில் இருபது மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது என்று வெளிவந்துள்ளது. இத்தகைய செய்திகள் சற்று மிகைப்படுத்தப்படுபவை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படித் தான் அமெரிக்காவில் எந்திரன் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டார்கள் ஆனால் படம் ரிலீஸ் ஆன அன்று வரை கூட டிக்கெட் கிடைத்ததாக டிவிட்டர் நண்பர்கள் தெரிவித்து இருந்தார்கள். செய்தி நிறுவனங்களையும் குறை சொல்ல முடியாது அவர்களுக்கு பரபரப்பாக வெளியிடுவதற்கு ஏதாவது செய்தி வேண்டும்
சரி செய்தி உண்மையோ பொய்யோ போய் இந்த கூகிள் ப்ளஸில் என்ன தான் இருக்கு என்று ஆர்வம் தோன்றாமல் இருக்கவில்லை. அதனால் www.google.com/plus என்று டைப்பினேன். கூகிள் ப்ளஸின் முதல் பக்கம் தோன்றியது. ஏற்கனவே ஜிமெயில் அக்கவுண்ட் இருந்ததால் அதே பயனர் தகவல்களை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் என்று சொல்லப்பட்டு இருந்தது. பயனர் தகவலை உள்ளீடு செய்து கூகிள் ப்ளஸின் உள்ளே நுழைய முற்பட்ட போது நாம் ஏற்கனவே கொடுத்து இருக்கும் பெயர் முதலான தகவலகள் சரிதானா என்று கேட்கப்பட்டது. பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் அதை தமிழில் மாற்றி மீண்டும் உள்ளே நுழைய முற்பட்டபோது பெயர் விவரம் விதிமுறைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படவில்லை என்று செய்தி வந்தது. இவ்ளோ பெரிய கூகிள் ப்ளஸில் தமிழில் பெயர் கொடுக்க முடியாதா? அப்படி எல்லாம் இருக்காதே என்று மீண்டும் ஒரு முறை முயற்சி செய்த போது கீழ்கண்ட எச்சரிக்கை வந்தது. அதாவது அதே பெயருடன் தான் உள்ளே நுழைவேன் என்று அடம் செய்தால் கூகிள் ப்ளஸ் பயன்படுத்த முடியாமல் போகலாம் என்றும் ஆனால் தொடர்ந்து ஜிமெயில் மற்றும் கூகிள் பஸ் போன்றவகளை பயன்படுத்தலாம் என்றும் மெஸ்ஸேஜ் வந்தது
நமக்கு ஏதாவது தடங்கல் வந்தால் தானே ஆர்வமும் அதிகரிக்கும் அதனால் எப்படியும் இந்த கூகிள் ப்ளஸை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக பெயரை ஆங்கிலத்தில் மாற்றி உள்ளே மீண்டும் நுழைய முற்பட்ட போது மறுபடியும் கீழே உள்ள எச்சரிக்கை செய்தி வந்தது.
பேஸ்புக் மீதும் இப்படி ஒரு குற்றச்சாடு எழுந்தது அதாவது பயனாளர்கள் தகவல்களை பேஸ்புக் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு. அதனால் இந்த கண்டிஷனையும் ஒப்புக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தால் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. ஏற்கனவே புஸ்ஸான கூகிள் பஸ்ஸில் சில ஜிகினா வேலைகளை செய்து இருக்கிறார்கள். பேஸ்புக் கொஞ்சம், டிவிட்டர் கொஞ்சம் என்று கலந்து கட்டி மேலும் பேஸ்புக்கில் சேர்க்கப்படலாம் என்று யூகிக்கப்பட்ட சில அம்சங்களையும் சேர்த்து இருக்கிறார்கள்
பேஸ்புக் வளர்ந்து வந்த கதை வேறு விதமானது. அது புதிதாக தோன்றிய ஒரு சேவை. அதற்கு முன் அது எந்த வடிவத்திலும் இணையத்தில் இருக்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் அது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் அப்படி இல்லை கூகிளுக்கு என்று ஏற்கனவே ஒரு மிகப் பெரிய பயனர் வட்டம் ஜிமெயில் மூலமாக உருவாக்கி வைத்துள்ளது. கூகிள் ப்ளஸில் புதிதாக இணைந்துள்ள 20 மில்லியன் பேரும் புதியவர்கள் என்றால் அது உண்மையிலேயே ஒரு சாதனை தான். ஆனால் அவர்கள் ஏற்கனவே ஜிமெயில் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இது அதற்கு மேலும் ஒரு சறுக்கல் தான் ஏனென்றால் ஜிமெயில் பயன்படுத்துப்வரகளே அதை இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்
பேஸ்புக்கும் கூகிளும் இது எங்க ஏரிய உள்ளே வராதே என்று ஆளாளுக்கு தங்கள் கோட்டையில் கோலோச்சிக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் இமெயில் சேவையை ஆரம்பிக்க கூடும் என்று வெளியான செய்தி கூகிளின் கோட்டையை சற்று அதிரச் செய்து இருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ பேஸ்புக்கிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட இமெயில் சேவை இன்னும் வெளிவரவில்லை. அதற்குள்ளாக கூகிள் விழித்துக் கொண்டு இந்த கூகிள் ப்ளஸை அறிவித்து இருக்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பேஸ்புக் இமெயில் சேவையை தொடங்கினால் அதன் தாக்கம் இதை விட பல மடங்காக இருக்கும்


























