Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

29 ஜூலை 2011

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.
10. DOWNLOAD 3000 - RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/
9. SOFT32- RANK 3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/
8. DOWNLOAD ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/
7. DL 4 ALL- RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.
6. FREE DOWNLOAD CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/
5. ZDNET - RANK 1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/
4. FILE HIPPO - RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/
3. SOFTPEDIA - RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/
2. BROTHER SOFT - RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.brothersoft.com/
1. CNET - RANK 159
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com
இந்த பட்டியலை நான் அலெக்ஸா ரேங்க் வைத்து வரிசை படுத்தி உள்ளேன். ஏதேனும் தளத்தை விட்டு இருந்தால் தெரிவிக்கவும்.

கூகுள் மெனுபாரின் நிறத்தை அழகாக மாற்றலாம்

கூகுல் தளத்திற்கு சென்றால் கூகுளின் மெனுபார் இருக்கும். அந்த மெனுபாரின் நிறம் இளம் கருப்பு நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு சற்று மங்கலாக இருப்பதால் சில பேருக்கு இந்த நிறம் பிடிப்பதில்லை. அப்படி நினைப்பவர்கள் இனி கவலை பட தேவையில்லை நமக்கு பிடித்த மூன்று வண்ணங்களில் நாம் சுலபமாக அந்த மெனுபார் கலரை மாற்றி கொள்ளலாம். குரோம் நீட்சியின் உதவியுடன் இந்த மெனுபார் கலரை சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவியை உபயோகிக்க வேண்டும். கீழே உள்ள நிறங்கள் மாற்ற பட்ட மெனுபாரின் அழகை காணுங்கள்
இதில் உங்களுக்கு தேவையான நிறத்தின் மீது க்ளிக் செய்தால் நீட்சி டவுன்லோட் ஆகும். அடுத்து சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Install பட்டனை அழுத்தவும் அவ்வளவு தான் அடுத்த வினாடியே உங்கள் கூகுள் மெனுபாரின் நிறம் மாறிவிடும். கூகுள், ஜிமெயில்,கூகுள் பிளஸ் இப்படி எந்த கூகுள் தளத்திற்கு சென்றாலும் இனி அதன் மாற்ற பட்ட மெனுபாரோடு அழகாக காட்சி அளிக்கும்.
Thanks:-vanthemaatharam

27 ஜூலை 2011

ஆன்லைன் மூலம் கோப்புகளை இலவசமாக பதிவேற்றவும் , தறவிரக்கம் செய்வதற்கு முன் பார்க்கவும் (View) உதவும் பயனுள்ள தளம்

ஆன்லைன் மூலம் நம் கணினியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ள நிலையில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து தேவையென்றால் மட்டுமே தறவிரக்க வசதி செய்து கொண்டு ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆன்லைன் மூலம் நம் கணினியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ள நிலையில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து தேவையென்றால் மட்டுமே தறவிரக்க வசதி செய்து கொண்டு ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் எல்லா வகையான கோப்புகளையும் எங்களிடம் இலவசமாக பதிவேற்றம் என்று சொல்லி பல இணையதளங்கள் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இப்படி இருக்கும் தளங்களில் இருந்து கோப்புகளை தறவிரக்கும் போது போன்ற கூடவே வைரஸ் அல்லது மால்வேரும் சேர்ந்தே வருகிறது, ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து அதன் பின் தறவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://dropdo.com

படம் 2

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டிபடி Upload a File என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்பை தேர்ந்தெடுக்கவும் அடுத்து நம் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு நமக்கு ஒரு URL முகவரி கிடைக்கும் நேரடியாக இந்த முகவரியை டிவிட்டர் , பேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இந்த முகவரியை சொடுக்கியதும் படம் 2-ல் உள்ளது போல் காட்டப்படும் வலது பக்க ஓரத்தில் இருக்கும் Download என்ற பொத்தானை சொடுக்கி படத்தை தறவிரக்கலாம், Image, Doc, Code, PDF, Audio, Video, போன்ற கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்துவிட்டு தேவையென்றால் தறவிரக்கலாம். இத்தளத்தில் இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றம் செய்யப்படும் கோப்புகளை நீக்கும் உரிமையும் உண்டு. கண்டிப்பாக ஆன்லைன் மூலம் பல வகையான கோப்புகளை பதிவேற்றம் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

தோனி பிரையரை விட சிறந்த கீப்பர் மற்றும் பவுலர் - போட்டுத் தாக்கும் பிஷன் சிங்க் பேடி

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி இங்கிலாந்திடம் சரணடைந்து தோல்வியைத் தழுவியதிலிருந்து

முன்னாள் வீரர்கள் கேப்டன் தோனியை சாடி வருகின்றனர். பிஷன் சிங் பேடி இது பற்றி வர்ணிக்கையில் "மேட் பிரையர் சிறந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் ஆனால் தோனி பிரையரைக்காட்டிலும் சிறந்த விக்கெட் கீப்பர்/பவுலர்" என்று கிண்டலாக போட்டுத் தாக்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பேட்டிங்க் தான் நமது அணியின் பலமென்றால் முதலில் டாஸ் வென்று ஏன் பேட்டிங்கை கொடுக்க வேண்டும் சரியாக திட்டமிடாமல் 474 ரன்களை துரத்த வேண்டி ஏற்பட்டது. எப்போதும் பயிற்சியாளரை நம்பி இருக்காமல் வீரர்கள் தாங்களாகவே சில விடயங்களை செய்ய முன்வர வேண்டும். சச்சினும் சேவாக்கும் ஒரே மாதிரி விளையாடுவது தவறு சச்சின் ஆதிக்க வழிக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். என தெரியவருகிறது.

மேலும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நிதி சேர்க்கும் போட்டி என தோனி நினைக்கிறாரா என காட்டமாக கருத்து தெரிவித்த வடேகர். அவர் பந்து வீச முன்வருவது எதிராளிக்கு எங்களது பலவீனத்தை காட்டிக் கொடுப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.

‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட.வண்ணமயமானதும் தான்.

வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது.

ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது.

இணையவாசிகள் சமர்பிக்கும் வார்த்தை விளக்க விடியோக்கள் முகப்பு பக்க்த்திலேயே அவர்கள் புகைப்படங்க்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன.அவற்றில் கிளிக் செய்தால் விளக்கத்தை கேட்கலாம். சமீபத்தில் சம்ர்பிக்கப்பட்டவை முதலில் இடம் பெறுகின்றன.மற்றவற்றை தேடிப்பார்க்கலாம்.

எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது.அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது.கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம்.அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால்!இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம்.

ஒரே வர்த்தைக்கு பலர் விளக்கம் அளித்திருந்தால் அவை அனைத்துமே இடம் பெருகின்றன.உறுப்பினர்கள் அவற்றுக்கு வாக்களிக்கலாம்.அந்த வாக்குகளின் அடிப்படையில் அவர் வரிசைப்படுத்தப்படும்.

சமீபத்திய விடியோ,அதிகம் பார்க்கப்பட்ட விடியோ என்னும் தலைப்புகளிலும் விளக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு அழகு உண்டு.தனி நபர்கள் குறிப்பிட்ட சொல் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி விளக்கும் போது அந்த அழகை உணர முடியும்.அதே நேரத்தில் தனிப்பட்ட விளக்கஙக்ளை கேட்கும் போது ஒரு சொல்லின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.உறுப்பினர் அனுபவம் சார்ந்து அதன் பொருளை விவரிப்பதால் அந்த சொல்லின் பயன்பாடு சார்ந்து அதனை புரிந்து கொள்வதும் சாத்தியமாகும்.

இப்படி வீடியோ விளக்கத்தை இணைப்பதன் முலம் அகராதிகளுக்கே புதிய பரிமாணத்தை வோர்டியா கொண்டு வந்து விடுகிறது.

இணையவாசிகள் சமர்பிக்கும் விளக்கம் தவிர துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கஙக்ளும் சேர்க்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன.விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்சிரீதியிலான அகராதி என்னும் புதிய வகையான அகராதியாக இந்த தளம் உருவாகியிருப்பதாக பாராட்டப்படுகிற‌து.

http://www.wordia.com/

26 ஜூலை 2011

தேடுபொறி ரகசியங்கள்: Bac kLinkS

நல்லவேளை! ஐஸ்க்ரீம் கரைவதற்குள் அடுத்தப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும். படித்துவிட்டீர்களா? சரி, இப்போ கதைக்கு வருவோம். நம்மை போன்று பலர் ஐஸ்க்ரீம் கடைகள் வைத்திருக்கிறார்கள். இப்பொழுது, வெளியூர்க்காரர்கள் அந்த மனிதர்களிடம் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால் எந்த கடையை முதலில் சொல்வார்கள்? அந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணிகளைக் கொண்டு கடைகளை தரம் பிரிக்கின்றனர். அதாவது, முந்தைய பதிவில் சொன்னது போல, தேடுபொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிமுறைகளை (Algorithms) கையாளுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம். 1. எந்த கடையை அதிகமானோர் சிபாரிசு செய்கிறார்களோ? அந்த கடையை தான் முதலில் சொல்வார்கள். அதாவது, எந்த தளத்திற்கு அதிகம் பேர் இணைப்பு (Link) கொடுத்திருக்கிறார்களோ? அந்த தளத்தை தான் தேடுபொறிகள் முதலில் சிபாரிசு செய்யும். அந்த இணைப்பு BackLinks எனப்படும்.
நண்பர் ஒருவர் அவரது தளத்தில் நமது தளத்திற்கான இணைப்பை கொடுத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அது நம் தளத்தின் Backlinks ஆகும். அதிகமான தளங்களில் நமது தளத்திற்கான இணைப்பு இருந்தால், தேடுபொறிகள் முதலில் நம்மை தான் சிபாரிசு செய்யும். சரி, இரண்டு ஐஸ்க்ரீம் கடைகள் இருக்கின்றது. அந்த இரண்டு கடைகளுக்கும் தலா ஒருவர் சிபாரிசு செய்கிறார்கள். இப்பொழுது எந்த கடைக்கு அந்த மனிதர்கள் சிபாரிசு செய்வார்கள்? 2. சிபாரிசு செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அந்த மனிதர்கள் கவனிப்பார்கள். கடை ஒன்றை சிபாரிசு செய்பவர், "அது ஐஸ்க்ரீம் கடை" என்று சொல்கிறார். கடை இரண்டை சிபாரிசு செய்பவர், "அது கடை" என்று சொல்கிறார். இப்போது வெளியூர்க்காரர்கள் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால், அந்த மனிதர்கள் முதல் கடையை தான் சிபாரிசு செய்வார்கள். இரண்டாவது கடையை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதாவது தேடுபொறிகள், நமக்கு இணைப்பு கொடுத்த நண்பர் எப்படி கொடுத்திருக்கிறார்? என்று பார்க்கும். உதாரணத்திற்கு, இந்த பதிவின் முதல் பத்தியை பார்க்கவும். //ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும்.// இதில் "ஐஸ்க்ரீம்" என்ற இடத்திலும், "இங்கு கிளிக் செய்து" என்ற இடத்திலும் முந்தைய பதிவிற்கான சுட்டியை இணைத்துள்ளேன். அந்த இரண்டு வார்த்தைகளும் "Anchor Text" எனப்படும். தேடுபொறிகள் இவற்றைத் தான் கவனிக்கும்.
இப்போது, ஐஸ்க்ரீம் பற்றி ஒருவர் தேடினால்,மேலே "ஐஸ்க்ரீம்" என்று இணைப்பு கொடுத்திருக்கிறேன் அல்லவா? அதனைத் தான் முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளும். "இங்கு க்ளிக் செய்து" என்ற இணைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாது. தேடுபொறிகள் கவனத்தில் கொள்ளும் மேலும் சில விஷயங்கள்: 1. Meta Tags - இதனை பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் கொஞ்சமாக சொல்லியிருக்கிறேன். அதாவது உங்கள் தளத்தை பற்றி தேடுபொறிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுகிறது. இதில் கவனத்தில் கொள்ள விஷயம் என்னவெனில், உங்கள் ப்ளாக்கிற்கு தொடர்பில்லாத வார்த்தைகளை Meta Tag-ல் சேர்த்தால், அதனை தேடுபொறிகள் நிராகரித்துவிடும். 2. வலைத்தளத்தின் காலம் - எத்தனை நாட்களாக நமது வலைத்தளம் செயல்படுகின்றது என்பதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். நீண்ட காலமாக செயல்படும் வலைத்தளத்திற்கு முன்னுரிமை அளிக்கும். 3. பதிவு தலைப்பு - பயனாளர்கள் ஒன்றை தேடினால் அந்த வார்த்தை எந்த பதிவின் தலைப்பில் உள்ளதோ? அதனை தான் முதலில் காட்டும். பதிவிற்குள்ளே அந்த வார்த்தை இருந்தால் அதனை இரண்டாவதாக தான் எடுத்துக் கொள்ளும். BackLinks பற்றி பார்த்தோம் அல்லவா? நம்முடைய தளத்திற்கான BackLinks-ஐ எப்படி தெரிந்துக் கொள்வது? தேடுபொறிகள் அனைத்தும் நமது BackLinks-ஐ ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளாது. ஒவ்வொன்றும் வித்தியாசப்படும். Google Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, Google தளத்திற்கு சென்று, link:bloggernanban.blogspot.com என்று தேடவும். bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் தள முகவரியை கொடுக்கவும். Yahoo Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, http://siteexplorer.search.yahoo.com/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் தள முகவரியை கொடுத்து தேடவும். Bing Backlinks-ஐ தெரிந்துக் கொள்வதற்கு சற்று மெனக்கெட வேண்டும். அதற்குhttp://www.bing.com/toolbox/webmaster/ என்ற முகவரிக்கு சென்று, Windows LiveID மூலம் உள்நுழைந்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், ப்ளாக்கர் நண்பன் தளத்தின் கூகிள் பேக்லின்க்ஸ் பற்றி தேடிய பொழுது, ஒன்றும் காட்டவில்லை. ஏன்? அதனையும் கூகிளிடமே கேட்டுவிடுவோம். ஐஸ்க்ரீம் கதை முடிந்தது. மற்ற ரகசியங்களை இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

என் கிரிக்கெட் வரலாறு - 13

சரித்திர புகழ் வாய்ந்த 2000ஆவது டெஸ்ட் போட்டியில், அபாரமாக ஆடி தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றி கொடி நாட்டியுள்ளது இங்கிலாந்து. இந்திய அணிக்கு இதெல்லாம் புதிதில்லை. 1983 உலகக்கோப்பையை வென்று முடித்த கையோடு மேற்கிந்திய தீவுகள் அணியியிடம் உள்ளூரிலேயே படுதோல்வி அடைந்திருக்கிறது. மேலும் தோனி அணிக்கு உள்ள ஒரு குணாதிசயம், தோல்வியில் தொடங்கி, மீண்டு வந்து கோப்பையை வெல்வது. பார்க்கலாம். இந்தியானாக, இந்திய அணி ஜெயிக்க வாழ்த்துக்கள். அப்புறம் சச்சின் பாவம்பா... நாம எல்லாம் சும்மா இருந்தாலே அவர் சதம் அடிப்பாரு. அவர் உடனடியாக 100ஆவது சதம் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைப்பது தேவையற்றது.
சஃபாரியில் களமிறங்கியது கங்குலி அணி....
எந்த ஆண்டும் இல்லாத வகையில் 2003 உலகக்கோப்பைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏறக்குறைய, "யார் உலகக்கோப்பையை வெல்வார்கள்?" என்று பெரிய குழப்பமே நீடித்தது. ஆஸ்திரேலியா அசுர பலத்துடன் களமிறங்கியது. துடிப்பான அணியுடன், இந்தியாவும், இலங்கையும் களமிறங்கின. வழக்கம்போல எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்று தெரியாத அபாயகரமான அணிகளாக தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் களமிறங்கின. கிரிக்கெட்டின் தாயகம், நிறைய முறை இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை தவறவிட்ட அணி, கடந்த இரண்டு உலகக்கோப்பைகளாக, அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில், சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இங்கிலாந்து. தொடக்கமே இந்தியாவுக்கு கலக்கம்தான். இந்திய அணி இருந்த பிரிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இருந்தன. இதில் எதேனும் ஒரு பெரிய அணி முதல் சுற்றில் வெளியேறியே ஆக வேண்டும். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
ஒளிபரப்பை இந்த முறை சோனி மேக்ஸ் கைப்பற்றி இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கும் ஒரு கார்ட்டூன் புலி வந்து கெட்ட ஆட்டம் போடும் பாருங்கள், மிகவும் பிரபலமான கார்ட்டூன் அது. ஆனால் அதை விட மிக பிரபலமானது, ஒவ்வொரு போட்டிகளுக்கும் முன்னோட்டம் அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மந்திரா பேடியும் அவரது ப்ரீ ஷோ உடைகளும். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடந்த அன்று இவர் கட்டி இருந்த சேலை மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. மேலும் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் பெப்சி நிறுவனத்தினர் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் போடுவார்கள். இந்த முறை தென்னாபிரிக்க காட்டுக்குள் கிரிக்கெட் ஆடும்போது பந்து, ஒரு சிங்கத்திடம் விழ அதில் இருந்து பிழைப்பது போன்ற ஒரு விளம்பரம். மேலும் எல்லாம் விளம்பரத்திலும் ஏதாவது ஒரு வீரர் சிக்சராக விளாசுவதாக இருக்கும். கொண்டாட்டத்துடன் தொடங்கியது 2003 உலகக்கோப்பை. தொடக்கவிழாவில் ஆப்பிரிக்கா பழங்குடியினர் நடனத்தை ஆடிய ஒரு பெண்கள் குழு, மேலாடை இல்லாமல் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு முதல் போட்டி நெதர்லாந்துடன். சும்மா ஊதி தள்ளி விடலாம் என்று நினைத்தால், பேட்டிங் மிக சொதப்பல். தட்டு தடுமாறி 204 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் அவர்கள் 49 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து சென்று விட்டார்கள். "என்னடா இது? சின்ன அணியிடமே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இப்படி சொதப்புகிறார்கள்?", என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்த போட்டி, ஆஸ்திரேலியாவுடன். அந்த நேரத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணிக்கு ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்ததால், இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு, உலகக்கோப்பையை தட்டி செல்லும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது. இதே மாதிரி 2011 இல் நடந்த இந்திய இங்கிலாந்து லீக் போட்டியிலும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தை முழுவதுமாக கையில் எடுத்துக்கொண்டது ஆஸ்திரேலியா. இந்திய அணி 125க்கு ஆல் அவுட். டெண்டுல்கர் மட்டுமே 36 ரன். ஆஸ்திரேலியா 23 ஓவரில் வெற்றி பெற, உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணிக்கு செருப்படி கொடுத்தது போல இருந்தது.
நிஜ போட்டியில் வீரர்கள் டக் அடித்து கொண்டிருக்க, விளம்பரங்களில் எல்லாம் வீரர்கள் சிக்சர் அடிப்பது போல காட்டிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படி விளம்பரம் வர, ரசிகர்கள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். விளைவாக இந்திய அணியினருக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. சேவாக் உள்ளிட்ட சில வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள், "ரசிகர்கள் இப்படி செய்வதால், வீரர்களுக்கு பிரஷ்ஷர் அதிகரிக்கும். ஆகவே இப்படி செய்ய கூடாது." என்று கூறினார்கள். கங்குலியும் ரசிகர்களை பொறுமை காக்குமாறு அறிவுறுத்தினார். அதற்கேற்றாற்போல அடுத்த போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளை துவைத்து எடுத்தது இந்தியா. இந்த தொடரில் ஏறக்குறைய எல்லா போட்டிகளிலும் சச்சின் வெளுத்து வாங்கினார். நமீபியாவுடன் 152 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக இங்கிலாந்துடன் மோத வேண்டும்.
கேடிக் ஓவரில் சச்சின் அடித்த மிகப்பெரிய சிக்சர்
சச்சினிடம் நிறைய வீரர்கள் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வதுண்டு. இந்த முறை இங்கிலாந்தின் ஆண்டி கேடிக், "சச்சின் ஒன்றும் வீழ்த்த முடியாதவர் அல்ல, நான் சச்சினை இந்த முறை வீழ்த்துவேன்." என்று கூறினார். அந்த ஆட்டத்தில் சச்சின் ருத்ர தாண்டவம் ஆடினார். கேடிக் பந்துகளை நொறுக்கி தள்ளினார். கேடிக் ஓவரில் அவர் அடித்த இமாலய சிக்சர் மிக பிரசித்தம். முதலில் சிறப்பாக ஆடினாலும், கடைசி ஓவரில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழக்க, 250 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதலில் நிதானமாக ஆடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் தாறுமாறாக விக்கெட்டுகள் விழ நிலைமை படுமோசமானது. இங்கிலாந்தின் இந்த நிலைக்கு காரணம், அணியில் புதிதாய் சேர்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்த போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்து 168 ரன்னுக்குள் சுருண்டது. இந்த உலகக்கோப்பையில் ஒரு சில போட்டிகளைத்தவிர எல்லா போட்டிகளிலும், இந்திய வீரர்கள் எதிரணியை 200க்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு சிறப்பாக இருப்பதால் உலகக்கோப்பை நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. அடுத்ததாக எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்திய பாகிஸ்தான் ஆட்டம். இரு அணிகளும் சம நிலையில் இருக்க, போட்டி பரபரப்பாக தொடங்கியது. இந்த ஆட்டம் நடந்த அன்று என் ஆசிரியர் செய்த சதியால், கல்லூரிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே, இந்திய பேட்டிங் மட்டுமே பார்க்க முடிந்தது. பாகிஸ்தான் வீரர்களால் இந்திய ஸ்கோரிங்கை கட்டுப்படுத்த முடியாததால், பரிதாபமாக தோற்றது பாகிஸ்தான். இந்திய அணி சூப்பர் சிக்க்சுக்கு தகுதி பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிராக பாதுகாப்பு கருதி இங்கிலாந்து விளையாடாமல் போக, பாகிஸ்தானுக்கு மழை வந்து ஆப்பு வைக்க, எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு பெரிய அணிகள் தொடரை விட்டு வெளியேறின. அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.
மற்றொரு பிரிவில் இதை விட அதிர்ச்சி. பாதுகாப்பு காரணங்களுக்காக கென்யாவுடன் ஆட்டத்தை நியூசிலாந்து கைவிட, மற்றொரு போட்டியில் இலங்கை கென்யாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஒபுயா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொண்ட கென்யா சிறிய அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மோசமான பார்மில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே வெளியேறி விட்ட நிலையில், அடுத்து வெளியேறப்போவது இலங்கையா? இல்லை தென்னாப்பிரிக்காவா? என்ற நிலைமை. இது நாக் அவுட் மாதிரி இருப்பதாலோ என்னவோ மறுபடியும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விதி விளையாடியது. 268 ரன்னை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு மறுபடியும் மழை வடிவில் சோதனை வந்தது. ஏற்கனவே மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணிகளின் கேப்டன்களும் கையில் பிட்டு வைத்திருப்பதை போல, ஒவ்வொரு ஓவருக்கும் டக்வோர்த் முறைப்படி எத்தனை ரன் இருக்க வேண்டும் என்று பார்த்து கொண்டே இருந்தனர். கடைசியில் மழை வந்துவிடவே, மேலும் போட்டியை தொடரமுடியாத நிலை.
கடைசியில் அம்பயர்கள் முடிவை அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி. அதாவது 45 ஓவரில் தென்னாபிரிக்கா 230 எடுத்திருந்தால் ஜெயித்திருக்கும். அவர்கள் எடுத்தது 229. இதை கேப்டன் பொல்லாக் செய்த சின்ன தப்பு கணக்கு என்று அப்போது கூறப்பட்டது. அதாவது 44ஆவது ஓவர் முடிவில் களத்தில் நின்ற பவுச்சரிடம், "அடுத்த ஓவருக்குள் விக்கெட்டை இழக்காமல் 229 ரன்னை எட்டிவிடவேண்டும்." என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது. பவுச்சர் படாத பாடு பட்டு அந்த ஓவரில் சிக்சர் எல்லாம் அடித்து 229 ரன்னை எட்ட செய்தார். ஆனால் தவறாக கணக்கிடப்பட்ட அந்த ஒரு ரன்னில் ஆட்டம் டிரா ஆக, இலங்கை சூப்பர் சிக்சில் நுழைய, மண்ணின் மைந்தர்களான தென்னாபிரிக்கா வெளியேறியது.
அக்தர் ஓவரில் ஆஃப் சைடில் சிக்சர்
முதல் சுற்று ஆட்டங்களே மிக சுவாரசியமாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்களான மெக்ராத் மற்றும் ஆண்டி பிக்கல் இருவருமே 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். ஆண்டி பிக்கல் இங்கிலாந்து எதிராக அதை செய்தார். அதிலும் கடைசி ஓவரில் அவரே ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இப்போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் அடுத்த சுற்று வேறு மாதிரி இருந்திருக்கும். அதே போல கனடா பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆச்சர்யம் அளித்தது. எல்லா உலகக்கோப்பை போட்டிகளிலும் என்னதான் பல சுவாரசியங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுவாரசியமாக இருப்பது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்தான். இந்தியாவின் சச்சின் மற்றும் சேவாக் களத்தில் நிற்க, முறையே அக்ரம், அக்தர், வாக்கர் யூனிஸ், ஆகியோரால் வீசப்பட்ட முதல் ஆறு ஓவர்களை யாரும் மறக்க மாட்டார்கள். புயல் வேக பந்துவீச்சால் சச்சினை சாய்ப்பேன் என்று சொன்ன அக்தர் வேகமாக பந்துவீச, அதை அசால்ட்டாக சிக்சராக மாற்றினார் சச்சின். இது இன்று வரையிலும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஓவரில் செமத்தியாக உதை வாங்கிய அக்தர், அடுத்த ஓவர் வீசமாட்டேன் என்று சொல்ல, பின்னர் யூனிஸ் பந்து வீசினார். இது குறித்து அக்ரம் கூறுகையில், "எங்கள் இருவரின் காலத்துக்கு பின், பாகிஸ்தான் பந்துவீச்சின் ஆதாரம் என்று அக்தரை நான் நினைத்தேன். ஆனால் அவர் பயந்து பின் வாங்கியதை பார்த்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகி விட்டது. அந்த கணமே அந்த ஆட்டத்தில் தோற்று விட்டதைப்போல உணர்ந்தேன்." என்று அவர் சொன்னது போலவே, மீண்டும் ஒரு முறை வரலாற்றை உடைக்க முடியாமல் பாகிஸ்தான் தோற்றது.
இப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு பக்கம் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே. மறுபக்கம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் கென்யா. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு புள்ளிகளுடன் இருந்ததால் அதிகம் பிரச்சனை இல்லை. கென்யாவை வீழ்த்தினாலே அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி ஆகிவிடும். ஆகவே மிக நம்பிக்கையோடு ஆடத்தொடங்கினார்கள். நாங்கள் எல்லோரும் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டங்களை கவனிக்க தொடங்கினோம்.
THANKS-

பாலாவின் பக்கங்கள்

25 ஜூலை 2011

Facebookஐ முந்துகிறதா Google+ ?

கடந்த சில வாரங்களாக அடிக்கடி பார்க்கும் செய்தி என்னவென்றால் கூகிள் ப்ளஸ் பற்றியது தான். நேற்று கூட செய்தியில் கூகிள் ப்ளஸ் இருபதே தினங்களில் இருபது மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது என்று வெளிவந்துள்ளது. இத்தகைய செய்திகள் சற்று மிகைப்படுத்தப்படுபவை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படித் தான் அமெரிக்காவில் எந்திரன் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டார்கள் ஆனால் படம் ரிலீஸ் ஆன அன்று வரை கூட டிக்கெட் கிடைத்ததாக டிவிட்டர் நண்பர்கள் தெரிவித்து இருந்தார்கள். செய்தி நிறுவனங்களையும் குறை சொல்ல முடியாது அவர்களுக்கு பரபரப்பாக வெளியிடுவதற்கு ஏதாவது செய்தி வேண்டும் சரி செய்தி உண்மையோ பொய்யோ போய் இந்த கூகிள் ப்ளஸில் என்ன தான் இருக்கு என்று ஆர்வம் தோன்றாமல் இருக்கவில்லை. அதனால் www.google.com/plus என்று டைப்பினேன். கூகிள் ப்ளஸின் முதல் பக்கம் தோன்றியது. ஏற்கனவே ஜிமெயில் அக்கவுண்ட் இருந்ததால் அதே பயனர் தகவல்களை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் என்று சொல்லப்பட்டு இருந்தது. பயனர் தகவலை உள்ளீடு செய்து கூகிள் ப்ளஸின் உள்ளே நுழைய முற்பட்ட போது நாம் ஏற்கனவே கொடுத்து இருக்கும் பெயர் முதலான தகவலகள் சரிதானா என்று கேட்கப்பட்டது. பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் அதை தமிழில் மாற்றி மீண்டும் உள்ளே நுழைய முற்பட்டபோது பெயர் விவரம் விதிமுறைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படவில்லை என்று செய்தி வந்தது. இவ்ளோ பெரிய கூகிள் ப்ளஸில் தமிழில் பெயர் கொடுக்க முடியாதா? அப்படி எல்லாம் இருக்காதே என்று மீண்டும் ஒரு முறை முயற்சி செய்த போது கீழ்கண்ட எச்சரிக்கை வந்தது. அதாவது அதே பெயருடன் தான் உள்ளே நுழைவேன் என்று அடம் செய்தால் கூகிள் ப்ளஸ் பயன்படுத்த முடியாமல் போகலாம் என்றும் ஆனால் தொடர்ந்து ஜிமெயில் மற்றும் கூகிள் பஸ் போன்றவகளை பயன்படுத்தலாம் என்றும் மெஸ்ஸேஜ் வந்தது நமக்கு ஏதாவது தடங்கல் வந்தால் தானே ஆர்வமும் அதிகரிக்கும் அதனால் எப்படியும் இந்த கூகிள் ப்ளஸை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக பெயரை ஆங்கிலத்தில் மாற்றி உள்ளே மீண்டும் நுழைய முற்பட்ட போது மறுபடியும் கீழே உள்ள எச்சரிக்கை செய்தி வந்தது. பேஸ்புக் மீதும் இப்படி ஒரு குற்றச்சாடு எழுந்தது அதாவது பயனாளர்கள் தகவல்களை பேஸ்புக் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு. அதனால் இந்த கண்டிஷனையும் ஒப்புக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தால் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. ஏற்கனவே புஸ்ஸான கூகிள் பஸ்ஸில் சில ஜிகினா வேலைகளை செய்து இருக்கிறார்கள். பேஸ்புக் கொஞ்சம், டிவிட்டர் கொஞ்சம் என்று கலந்து கட்டி மேலும் பேஸ்புக்கில் சேர்க்கப்படலாம் என்று யூகிக்கப்பட்ட சில அம்சங்களையும் சேர்த்து இருக்கிறார்கள் பேஸ்புக் வளர்ந்து வந்த கதை வேறு விதமானது. அது புதிதாக தோன்றிய ஒரு சேவை. அதற்கு முன் அது எந்த வடிவத்திலும் இணையத்தில் இருக்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் அது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் அப்படி இல்லை கூகிளுக்கு என்று ஏற்கனவே ஒரு மிகப் பெரிய பயனர் வட்டம் ஜிமெயில் மூலமாக உருவாக்கி வைத்துள்ளது. கூகிள் ப்ளஸில் புதிதாக இணைந்துள்ள 20 மில்லியன் பேரும் புதியவர்கள் என்றால் அது உண்மையிலேயே ஒரு சாதனை தான். ஆனால் அவர்கள் ஏற்கனவே ஜிமெயில் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இது அதற்கு மேலும் ஒரு சறுக்கல் தான் ஏனென்றால் ஜிமெயில் பயன்படுத்துப்வரகளே அதை இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் பேஸ்புக்கும் கூகிளும் இது எங்க ஏரிய உள்ளே வராதே என்று ஆளாளுக்கு தங்கள் கோட்டையில் கோலோச்சிக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் இமெயில் சேவையை ஆரம்பிக்க கூடும் என்று வெளியான செய்தி கூகிளின் கோட்டையை சற்று அதிரச் செய்து இருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ பேஸ்புக்கிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட இமெயில் சேவை இன்னும் வெளிவரவில்லை. அதற்குள்ளாக கூகிள் விழித்துக் கொண்டு இந்த கூகிள் ப்ளஸை அறிவித்து இருக்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பேஸ்புக் இமெயில் சேவையை தொடங்கினால் அதன் தாக்கம் இதை விட பல மடங்காக இருக்கும்

Nokia Phone இல் Application களை Bluetooth இல் அனுப்புவது எப்படி?

நீங்கள் Nokia Phone உபயோகிப்பவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.சாதாரணமாக Bluetooth இல் Music,video,image போன்றவற்றை மாத்திரமே அனுப்ப முடியும். Application களை Bluetooth அனுப்ப முடியாது.அப்படி அனுப்பினால் "Unable to send protected object" என்ற செய்திதான் வரும்.இதனை எப்படி சரி செய்வது அதாவது Bluetooth மூலம் Application அனுப்பவது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு என்றுஒரு Application இருக்கிறது, அதன் பெயர் Mobile Guard
இதில் பலவசதிகள் காணப்படுகின்றன குறிப்பாக சொல்லப்போனால்,
>> Bluetooth மூலம் Application களை அனுப்ப முடியும் (Mobile Guard ஐ Open செய்து File Mgr இற்கு சென்று அனுப்புங்கள்).
>> Phone ஐ Switch on செய்யும்போது அதாவது ஆரம்பிக்கும்போது இயங்கும் Application களை நிறுத்தும் வசதி.
>>நாம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் போது எத்தனை Data Use பன்னி இருக்கம் என்டு மேலே காட்டிக்கொண்டு இருக்கும் அதுவும் இல்லாமல் ஒரு மாதத்திற்கு எத்தனை MB , Data Use பன்ன வேண்டும் என்று செய்து வைக்கலாம் அதுமட்டும் இல்லாமல் எந்த எந்த Application எத்தனை சதவீதம் பாவித்து இருக்கு என்டு கூட தெரிஞ்சு கொள்ள கூடிய வசதி.
>>Phone இல் பதிந்து வைத்திருக்கும் Application பாவித்தவர்களால் வழங்கப்பட்ட மதிப்பீட்டையும் (Rating) தெரிஞ்சு கொள்ள முடியும்.
>>இன்னும் நிறைய வசதிகளை கொண்ட இந்த Application ஐ Download செய்ய http://netqin.mobiஇங்கு செல்லவும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com