Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 ஜூன் 2010

ராவணன் - ஒரு ரசிகனின் திரை அனுபவம்

டைட்டில்
விக்ரமின் பல்வேறு எக்ஸ்பிரஷன்களின் ஸ்டில்களை நெருப்பு ஜ்வாலைகள் அலைகளாய் அலைகழிப்பது போன்ற டைட்டில் கிராபிக்ஸ் வழக்கமான மணிரத்னம் படங்களை விட ரொம்பவே வித்யாசமாக இருக்கிறது. இனி பல படங்களின் டைட்டில்களில் இந்த டிரென்ட் பின்பற்றப்படலாம். டைட்டில் டிசைனருக்கு என் பாராட்டுக்கள்.
அதேபோல் ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து ஸ்லோமோஷனில் இடைவேளை விரிவதும் இந்தப்படத்தில் கிடையாது. சட்டென்று ஒரு விக்ரமின் ஸ்டில் வந்து விழுந்து "கெடா கெடா கறி" என்கிற இசையுடன் இடைவேளை விடும் புதிய ஐடியா லவ்லி.
கேமரா
டிக்கெட் காசுக்கு கொஞ்சம் கூட வஞ்சனை செய்யாமல் செயல்பட்டிருக்கிறது. ஆர்பரித்து ஸ்லோ மோஷனில் எழும் நதி அலைகள் பேக் கிரவுண்டில் ஐஸ்வர்யா முகம் சுழிப்பதை எவ்வளவு ரசிக்கலாம் தெரியுமா...? இரண்டரை மணி நேரம் விக்ரம், ஐஸ்வர்யா, பிரபு, பிருத்வியுடன் மலையில் நாம் டிரெக்கிங் போன எஃபெக்ட் கிடைக்கிறது. கேமரா நம்மை அதனுடனே அழைத்துச் செல்கிறது. மலை பிரதேசங்கள், மழை, சாரல், ஐஸ்வர்யா, தட்டான், அருவி, பாலம் என கேமராவை கண்டுபிடித்த விஞ்ஞானி பார்த்தால் கண் கலங்கி இருப்பார். ஐஸ்வர்யாவை கடத்தி வைத்திருக்கும் புகைப்படத்தில் அவரை விட்டு மற்றஅனைவரையும் சிகரெட்டால் பிருத்தி, சுடும் காட்சி.. வாவ்.. இதுபோன்ற பல காட்சிகளில் கேமரா கிரியேட்டிவ்வாக ரசிக்க வைக்கிறது.
இசை
தியேட்டரை விட்டு வெளியே வரும் போது உடலில் கொஞ்சம் ஏர்.ஆர்.ரஹ்மானும் ஒட்டிக்கொண்டே வருகிறார். வழக்கம் போலவே படத்தை பார்த்த பின் ரஹ்மானின் இசை மேலும் பிடிக்கிறது. பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார் மனுசன். விக்ரம் வரும்போது சில இடங்களில் கோஷமிட்டு அடங்கும் டெரர் மியூசிக் சிலிர்க்க வைக்கிறது. பரிசலில் சுத்திக்கொண்டே விக்ரம் ஐஸ்வர்யாவிடம் "குருவம்மா.. இங்கேயே இருந்துடுங்களேன்" எனும் காட்சியில் காட்டுச் சிறுக்கி பாடலை பின்னணியில் கதற விட்டிருக்கிறார் பாருங்கள்... ரசிகன்யா மனுசன். வீரா... வீரா என அதிர விட்டு டைட்டில் முதல் சீட்டில் கட்டிப்போட்டு கடைசியில் ஐஸ்வர்யாவின் கைகோர்க்க முடியாமல் அகல பாதாளத்தில் விக்ரம் ஸ்லோமோஷனில் சரியும் போது வரும் டிராக் வரை... தல.. என்னா தல ரெண்டு ஆஸ்கார்.. நான் தரேன் நாற்பது ஆஸ்கார்... இந்தா வாங்கிக்கோ....
எழுத்து
"மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்.." "அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி..." "ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல்... நீ கிழிச்ச கோட்டு நீளுதடி என் பொழப்பு" இருநூத்தி நாப்பத்தி ஏழு எழுத்தை வச்சிகிட்டு வைரமுத்து வழக்கம் போலவே விளையாடியிருக்கார். வசனம் சுஹாசினி.. நாட் பேட்.. சில இடங்களில் பளிச்சிடுகிறார்
நடிப்பு
விக்ரமிற்கு இது தோள் மேல் எளிதாக சுமக்கக் கூடிய பாரம் என்றாலும் அதை அனுபவித்து சுமந்திருக்கிறார். எனக்கு ரொம்ப பிடித்தது கிளைமேக்சில் பிருத்வி ஒளிந்திருக்கிறார் என கண்டுபிடித்ததும் விக்ரம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்.
( சீயான் சார்... கந்தசாமி, ராவணன் முடிஞ்சிடுச்சுல்ல.. இனி கொஞ்சம் டக்கு டக்குனு நாலஞ்சு படம் பண்ணி மெயின் மார்கெட்டுக்கு வாங்க... )
ஐஸ் பெயருக்கேற்றாற் போல் சில்லென்றே இருக்கிறார். ஆனால் எந்திரனுக்கு பிறகு தமிழில் ஏற்றுக்கொள்வார்களா தெரியவில்லை. கொஞ்சம் அங்கங்கே வயது தெரிகிறது. ஆனால் படத்தில் இவரது பங்கு அபாரம். அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்.
பிரபுவுக்கு நல்ல வெயிட்டான ரோல். வெயிட்டாகவே செய்திருக்கிறார். கண்ணில் மைவிட்டுக்கொண்டு போட்டோவுக்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பது அழகு. கார்த்திக் கொஞ்சம் பாவம். கட்சி வேலைகளை விட்டு கொஞ்சம் படத்தில் நடியுங்கள் என மணிரத்னம் கூப்பிட்டதாய் எதிலோ படித்த ஞாபகம். இதுக்கு அவர் கட்சியையே கவனித்திருக்கலாம். ராவணன் பார்தத உடன் கண்டிப்பாக ஹிந்தியில் ராவண் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. காரணம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்வியை போட்டது எனக்கு அவ்வளவு வெயிட்டாக உணர முடியவில்லை. அந்த ரோலில் மேடி மாதவனை போட்டிருந்தால் கூட சிறப்பாக செய்திருப்பாரோ என எண்ணிக் கொண்டே படம் பார்த்தேன். ஏற்கனவே குருவில் அபிஷேக் மனதில் பதிந்து விட்டதால் ராவண் பார்த்தால் விக்ரம் அபிஷேக் மோதல் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. பிரியாமணி அழகாக வந்து உருக்குலைந்து இறந்து போகிறார். வையாபுரிக்கு நல்ல வாய்ப்பு. சிறப்பாக செய்திருக்கிறார். துபாய், இலங்கை, ஐரோப்பா பதிவர்கள் சொன்னதுபோல சென்னை திரையரங்கிலும் 'அவர்' வரும்போது தியேட்டரே அதிருகிறது. ( பெயர் சொல்ல பயமாய் இருக்கிறது. கூகுள், யூடியூப்புக்கே நோட்டிஸ் விட்டவர். நாமெல்லாம் எம்மாத்திரம்)
இயக்கம்
மேலே சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் காரண கர்த்தா மணிரத்னம் என்பதால் தனியே அவர் பங்கை சொல்ல வேண்டியதில்லை. குருவிற்கு பிறகு முழுவதும் வேறுவிதமான ஸ்கிரிப்ட்டை எடுத்து ரசனையுடன் படைத்திருக்கிறார். இது மணி படைத்த காவியமா, இல்லை படம் மொக்கையா என்றெல்லாம் யோசிக்க நான் விரும்பவில்லை. நான் கொடுத்த காசுக்கு மேலாகவே என்னை இரண்டரை மணி நேரம் மேற்சொன்ன பல விதங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். அதற்கு நன்றி! நன்றி :- Sukumar
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com