Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

ரஹ்மான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஹ்மான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஏப்ரல் 2009

எதுவும் வேணாம்; தனிமைதான் வேண்டும்!-ரஹ்மான

ஆஸ்கர் வென்றதற்கு பாராட்டுவிழா, புதுப்படங்களுக்கு தேதி என்று யாராவது தேடி வந்தால் இப்போது ரஹ்மான் கூறுவது கிட்டத்தட்ட இந்த வார்த்தைகளைத்தான்! கூட்டம், விழாக்கள், நெருக்கடி... ஆரம்பத்திலிருந்தே இவையெல்லாம் ரஹ்மானுக்கு ஏக அலர்ஜி. ஏதாவது விழாவில் அவரைப் பேசச் சொன்னாலும்கூட, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு வந்துவிடும் கூச்சசுபாவி!
AR Rahman
ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்தாலும், ரஹ்மான் எப்போதும் தனிமை விரும்பியாகவே இருந்தார். தனது இசையமைப்பைக் கூட தனிமையில் இரவில் வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்டைல். ஆனால் கிடைத்தற்கரிய ஆஸ்கர் விருதுகள் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக கிடைத்ததும், தன் மீது விழுந்த புகழ் வெளிச்சம் அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டங்கள்... விழாக்கள்... விருதுகள். இவையெல்லாம் அவரது இசைப் பணியை வெகுவாகவே பாதித்துவிட்டன. கூடவே அவரைப் பற்றி வருகிற விமர்சனங்கள், கமெண்ட் என்ற பெயரில் அவரை விமர்சித்து வரும் கருத்துக்களை போன்றவை அமைதி நாயகனான அவரையும் கோபம் கொள்ள வைத்துள்ளன. இப்போது, இந்தியா முழுக்க சுற்றிவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்ட ரஹ்மான், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சுருக்கமாக ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு வேலையை கவனிக்கப் போய்விடுகிறார். அதையும் மீறி விழா, பாராட்டு என யாராவது வற்புறுத்தினால்... 'அய்யோ... ஆளைவிடுங்க. நான் கொஞ்ச நாள் தனியா இருக்க விரும்புகிறேன்!', என்று ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைக்கிறாராம்!

16 மார்ச் 2009

ஏ.ஆர்.ரகுமான் அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை ..!

அஜ்மீர்: பிரபல இசை அமைப்பாளர், ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் நேற்று அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்தார். அங்குள்ள கவாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டி மகான் நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி வேண்டுதலை நிறைவேற்றினார். ஆஸ்கார் பரிசு வென்றதற்காக பிரார்த்தனை செலுத்த வந்ததாகவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட வருகை என்றும் ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்க, சற்று எரிச்சலடைந்த ரஹ்மான், கூட்டங்கள், விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என தனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், சிறிது காலத்துக்காவது தன்னைத் தனிமையில் விடுமாறும் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

09 மார்ச் 2009

தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர் + பாடலாசிரியர் கூட்டணிகள் -ஒரு அலசல்

தமிழ் சினிமா உருவாகி 75 வருட காலம் ஆகிறது. உலகில் நவீன விடயங்கள் வர வர தமிழ் சினிமாவும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது. இது இசைத்துறைக்கும் பொருந்தும் , ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அத்திரைப்படத்தின் இசை முக்கியமானதாகும். ஒரு திகில் திரைப்படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியமானதோ , பாடல்களுக்கும் முக்கியமானதாகும்.
முன்பொரு கால கட்டத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் + கண்ணதாசன் என்ற கூட்டணி தமிழ் திரையிசை உலகை ஆக்கிரமித்து ஆட்சி செய்துகொண்டிருந்தது. இந்த கூட்டணி தொட்டதெல்லாம் துலங்கியது. இந்த கூட்டணியின் இசையலை ஓயும் கட்டத்தில் , புதிய கூட்டணியாக உருவெடுத்ததுதான் இளைய ராஜா + வைரமுத்து கூட்டணி.இந்த கூட்டணியின் இணைப்பும் ஒரு புதிய பரிணாமத்தை தமிழ் திரை உலகில் ஏற்படுத்தியது. எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடுவதற்கு இவர்களின் கூட்டமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமே காரணமாக இருந்த ஒரு கால கட்டமும் இருந்தது. இன்றும் பல உதடுகள் முணுமுணுக்கும் மனது மறக்காத பல பாடல்கள் இளையராஜா + வைரமுத்து கூட்டணியில் வெளிவந்தவைதான்.
அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா , கால் ஓவியம்,முதல் மரியாதை என்று வெற்றித் திரைப்படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கிடையில் வைரமுத்து , இளையராஜாவுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய பிளவு பெரிதாக்கப்பட , தமிழ் திரையிசை உலகின் பொற்கால கூட்டணி உடைந்து போனது.
அதன் பின்னர் வந்த 10, 15 ஆண்டுகளுக்கு இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களில் பாடல் வரிகளை விட இசையே அதிகமாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 90 களில் உருவான மற்றொரு இசை கூட்டணி மீண்டும் ஒரு புத்தெழிச்சியையும்புத்துணர்ச்சியையும் தமிழ் திரை உலகில் கொண்டு வந்தது .இந்த இருவர்கூட்டணியில் முதல் பாடலே தேசிய விருதைப் பெற்றுக் கொண்டதோடுஇன்னும் பல தேசிய விருதுகளையும் அள்ளிக் கொண்ட வைரமுத்து + ரஹ்மான்கூட்டணிதான் அது. தமிழ் திரை உலகை எல்லைகள் தாண்டி கொண்ண்டு சென்றபெருமையும் இந்த கூட்டணிக்கு உண்டென்றால் அது மிகையல்ல.
எனினும் அதிக திரைப்படங்கள் வெளிவரும் மும்முரமும் வித்தியாசமானரசனைகளை ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் ஏன் இசையமைப்பாளர்களுமேவிரும்பிய காரணமும் புதிய பல பாடலாசிரியர்களை தமிழ் திரையுலகில்காணுவதற்கு காரணமாக அமைந்தது.அத்துடன் புதுமை விரும்பிகளான பலஇயக்குநர்கள் அறிமுகப்படுத்திய பல புதிய இசையமைப்பாளர்கள் தங்கள்அலைவரிசைக்கு ஒத்துப் போகக்கூடிய தங்கள் எண்ணக் கருத்துக்களைசுருக்கமான நவீனத்துவமான தமிழில் கொண்டுவரக்கூடிய காத்திரமானபடைப்பாளிகளை தேடிப்பிடிக்க ஆரம்பித்தனர் . இவர்களில் வித்தியாசாகர் , யுவன்சங்கர்ராஜா , ஹரிஸ் ஜெயராஜ் போன்றோர் தங்கள் இசைகளைநவீனத்துவப் படுத்தியது மட்டுமல்லாமல் , அது ரசிகர்களை ஈர்த்து எடுப்பதற்குமிக முக்கியமான பாலமாக தரமான நவீனத்துவப் பாணியில் அமைந்த பாடல்வரிகளை பயன்படுத்திக்கொண்டனர்.அது வெற்றியும் கண்டது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த 3 முன்னணிஇசையமைப்பாளர்களுமே தங்களது ஆஸ்தான கவிஞர்களாக வெவ்வேபட்டஇளம் கலைஞர்களை பயன்படுத்தி வெற்றிக்கான பாதையை வழிவகுத்துக்கொண்டனர். இதில் பா.விஜய் , யுகபாரதி ,கபிலன் , அறிவுமதி என்று ஒருபரந்துபட்ட கவிஞர் பட்டாளத்தை அறிமுகப்படுத்தியும் பிரபல்யப்படுத்தியும் தனது தனி முத்திரையை பதித்தார் இசையமைப்பாளர் வித்தியாசாகர். யுவன்சங்கர்ராஜா, முத்துக்குமாரை தன் நவீனத்துவ இசைவடிவங்களுடன்நேர்த்தியான முறையில் கையாண்டு பாராட்டுக்களை வென்றெடுத்ததோடு, மிககுறுகிய காலத்தில் காத்திரமான பாடல்களை வழங்க்கியுமிருந்தார். ஹரிஸ் ஜெயராஜ் + தாமரை கூட்டணி இன்னுமொரு வெற்றிக் கூட்டணி "மின்னலே" திரைப்படத்திலிருந்து 'அயன் ' வரை தொடர்ந்தும்வெற்றிகரமான ஜனரஞ்சகமான , அதே நேரத்தில் தரமான பாடல்களை இவர்களின் இணைப்பில் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த கூட்டணிகளில் உயர்ந்த ரசனை மட்டத்திலும் அதேவேளை ஜனரஞ்சக தரத்திலும் மிகுந்த பாடல்களை தரும் கூட்டணிகள் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன. முன்னைய பொற்கால கூட்டணிகளை இந்த கூட்டணிகள் நிகர்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்பதை நாம் துணிந்துசொல்லலாம். '

26 பிப்ரவரி 2009

ரஹ்மான் முதல் தேசிய விருது பெற்ற கதை! பாலுமகேந்திரா வெளியிட்ட ரகசியம்!

ப்பேற்பட்ட சிறந்த இயக்குநர் அல்லது படைப்பாளியாக இருந்தாலும் அவர்களின் கயமைத் தனத்தை ஒரு அளவுக்கு மேல் மறைக்கவே முடியாமல் போகிறது. சமயத்தில் அவர்களாகவே உளறிக் கொட்டி மாட்டிக் கொள்வதும் உண்டு. அதில் லேட்டஸ்ட் வரவு பாலு மகேந்திரா.

ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.

17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். ஆனால் அதைக் கேட்ட பிறகு அந்த மனிதர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயே போய்விட்டது.

இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.

இதில் ரோஜாவின் இசைக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் அப்படி விருது தரும்முன் நடந்த அரசியலை நேற்றுதான் பாலுமகேந்திரா வெளிப்படுத்தினார். அதாவது ரஹ்மான் உயர்வுக்கு நானும் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதை நிலை நிறுத்த அப்படிச்சொன்னாரோ என்னமோ… ஆனால் அதைக் கேட்ட பிறகு… சீ என்றாகிவிட்டது.

சிறந்த இசைக்கான விருது பெற இசையைத் தாண்டி வேறு என்னவெல்லாம் தகுதியாக உள்ளன பாருங்கள்!

எது சிறந்த இசை?

ஒரு சமூகத்தின், பிராந்தியத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பலிப்பதே நல்ல இசை. அது எந்த வயதுக்காரனிடமிருந்து வந்திருந்தால் என்ன?

அந்த வகையில் தேவர் மகன் இசை, வேறு யாருடைய அல்லது எந்தப் படத்தினுடைய இசையுடனும் ஒப்பிட முடியாதது. அத்தனைச் சிறப்பு அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு. தேவர் மகனில் ராஜாவின் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் கண்முன் படக் காட்சிகள் அப்படியே அழகழகாக விரியும்.

ஆனால் ரோஜாவைப் பொறுத்தவரை, பின்னணி இசை அத்தனைப் பிரமாதமில்லை. பாடல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு.

ஆனால் அந்தப் படத்துக்குத்தான் விருது கொடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாலுமகேந்திரா. காரணம், ‘சின்ன பையன் என்பதால் பரிந்துரைத்தேன்’ என்று இப்போது கூறியுள்ளார்.

இசையின் ஜீவன், ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் அந்த இசை உயிரூட்டுகிறது? அந்த இசை படம் பார்ப்பவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்ன… என்பதைப் பார்த்துதான் ஒரு படத்துக்கு விருது தரப்பட வேண்டுமே தவிர, இவர் இளைஞர், அவருக்கு விருது கொடுத்துவிடலாம் என்று கொடுப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அதுவும் விருதுக் குழுவின் தலைவரே இதைச் செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.

இந்த தேசிய விருதினை தவற விட்டதால் ராஜாவின் மதிப்போ தரமோ குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் பெற்ற விருதுகள் மற்றும் வாங்கும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு இசைக் கலைஞரை மதிப்பிடுபவர்கள்தானே இங்கு அதிகம்? ரஹ்மான் பெற்ற இரண்டு ஆஸ்கர்கள்தானே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துள்ளது நம்மையெலலாம்.

அப்புறம் எதற்கு போட்டி, ஓட்டு? இசையமைப்பாளர்களின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விருதுகளை வழங்கிவிடலாமே! அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக திறமைகள் ஓரங்கட்டப்பட்டு, லாபி அல்லது தனி நபர்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் விருதுகளை வழங்குகிறார்களா?

தேவர் மகன் என்ற அந்த நல்ல படத்துக்கு, பல புதிய பரிமாணங்களைத் தந்தது ராஜாவின் இசை. தென் மாவட்ட மக்களின் ஆன்மாவை அப்படியெ வெளிக்கொணர்ந்த காட்சியமைப்புகள் நிறைந்த அந்தப்படத்தை, ராஜாவின் இசை தவிர்த்துப் பார்த்தால் ரசிக்க முடியாது. தேவர் மகனோடு ஒப்பிடுகையில் ரோஜாவின் இசை மிகச் சாதாரணமான ஒன்று (அந்த விருது தனக்கு மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே ஏற்படுத்தியது என ரஹ்மான் கூறியுள்ளதை நினைவுகூரத்தக்கது. )

ஆனால் அந்தப் படம் சிறந்த இசைக்கான தேசிய விருது பெறுவதை, ரஹ்மானுக்காக தடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

என்னதான் செய்தார் அப்படி?

இதோ அவரே நேற்று வெளியிட்ட ரகசியம்!

இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.

பாலுமகேந்திரா மைக்கப் பிடித்தார்.

“நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.

ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.

தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்…”, என்றார் பாலு மகேந்திரா.

இதை என்னவென்று சொல்வது?

ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!

நிச்சயம் ஆஸ்கர் வென்ற ரஹ்மானை விமர்சிக்கும் நோக்கத்திலல்ல இதைக் குறிப்பிடுவது. அவர் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்றே நாமும் பிரார்த்தித்தோம்.

ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடவே இதை எழுதுகிறோம்.

நன்றி -என்வழி .காம்

22 பிப்ரவரி 2009

ஒஸ்கார் விருது 2009 இன்று ....

ஸ்கார் விருது (ஒஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகடமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் தொடங்கும் ஆஸ்கார் அலை, முடிவுகள் தெரிவிக்கப்படும் நாள் வரை தொடர்கிறது. சினிமா துறை 25 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்த தனி நபர்களுக்கும், குழுக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. சுமார் 6000 உறுப்பினர்களைக் கொண்ட அகாடமி ஒப் மோசன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சாஸ் (Academy of Motion Picture Arts and Sciences) இந்த ஆஸ்கார் விருதுகளை கொடுக்கிறது. இந்த 6000 உறுப்பினர்களும் அவரவர் துறை களை, சார்ந்த விருதுகளை தேர்தெடுக்கிறார்கள். உதரணமாக, நடிகர்களாக உள்ள உறுப்பினர்கள், சிறந்த நடிகரை ஓட்டு போட்டு தேர்வு செய்கின்றனர்.வேற்று மொழி திரைப்படங்கள், அனிமேசன் தெயரைப்படங்களை மட்டும் அனைவரும் சேர்த்து தேர்ந்து எடுக்கிறார்கள்.
தேர்வு முறை:
ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த திரைப்படங்களை பார்க்கும் உறுப்பினர்கள், டிசம்பர் இறுதியில் சிறந்த ஐந்து நபர்களை , படங்களை ஒவ்வொரு துறைக்கும் பரிந்துரைகிறார்கள். இந்த முடிவுகளை ஓட்டு சீட்டுகளில் பதிவு செய்து அதை, ப்ரைஸ் வட்டார் கோபெர் (PricewaterCooper) என்ற ஆடிட்டிங் நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முடிவுகள் ஜனவரி மூன்றாம் வாரம் அறிவிக்கப் படுகிறது.
இரண்டாம் கட்டமாக, ஐந்து பேரில் ஒருவரை தேர்வு செய்து அதை ப்ரைஸ் வட்டார் க்கு அனுப்பி வைக்கிறார்கள். ப்ரைஸ் வட்டார் நிறுவனத்தின் இரண்டு பேர்கள் மட்டும் ஓட்டுகளை சேகரித்து, முடிவுகளை ரகசியமாக வைத்திருந்து, விழாவில் அறிவிக்கிறார்கள். (இந்த வருடம் அந்த லிஸ்ட் லீக் ஆகி விட்டதாக வதந்தி!).
ஆஸ்கார் சிலை:
விருதுக்காக கொடுக்கப்படும் சிலை, 13 1/2 இன்ச் உயரமுடையது. பிரிட்டனியாம் என்ற உலோகக் கலவையால் செய்யப்படும் இந்த சிலைக்கு தங்க முலம் பூசப் படுகிறது.
சரி....இந்த ஞாயிறு அன்று அறிவிக்க படப்போகும் 81 வது விருதுகளை இந்தியர்கள் அனைவரும் ஆர்வத்தோடு கவனிக்க காரணம், ரஹ்மான்!!! ரஹ்மனோடு சிறந்த பின்னணி இசைக்கு போட்டியில் இருப்பவர்கள்...
  • Alexandre Desplat - “The Curious Case of Benjamin Button”
  • James Newton Howard - “Defiance”
  • Danny Elfman - “Milk”
  • Thomas Newman - “WALL-E”
சிறந்த பாடலுக்கான போட்டியில் இருப்பவர்கள்:
  • “Down to Earth” from “WALL-E” Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
  • “Jai Ho” from “Slumdog Millionaire” , Music by A.R. Rahman, Lyric by Gulzar
  • “O Saya” from “Slumdog Millionaire” , Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam
இன்று பிப்ரவரி 22-ம் திகதி நடைபெற இருக்கும் ஆஸ்கார் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வெல்வாரா என்பது தெரிந்துவிடும். இதற்கு முன் இந்திய அளவில் எந்த ஒரு இசையமைப்பாளரும் அல்லது எந்த திரைப்படக் கலைஞரும் மூன்று பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு கிடையாது இதுவே முதல் முறையாகும். Slumdog Millionaire திரைப்படம்10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.சிறந்த இசை அமைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போட்டியிருந்தாலும், சிறந்த பாடலுக்கு அவரின் இரண்டு பாடல்கள் பரிந்துரைக்கப் பட்டிருப்பதும், அவருக்கு போட்டியாக இருப்பது ‘Wall –E’ என்கிற அனிமேஷன் திரைப்படம் மட்டும்தான் என்பதும், அவருக்கு விருதை உறுதி செய்வது போலதான் உள்ளது.
மேலும் ஆஸ்கார் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் ..... http://www.cinemarx.ro/

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துவோம்.....

09 பிப்ரவரி 2009

பாஃப்டா: ரஹ்மான் மகுடத்தில் இன்னொரு வைரம்!

லண்டன்: ஸ்லம்டாக் மில்லியனேர் படம் இந்தியாவின் வறுமையைப் பற்றி மட்டுமல்ல, இந்திய இசைக் கலைஞனின் பெருமையைப் பற்றியும் உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே இப்போதைக்கு வறுமை சர்ச்சைகளை மறந்துவிட்டு, நமது கலைஞர் ரஹ்மானின் வெற்றியைக் கொண்டாடுவோம்.

இதோ அவருக்குக் கிடைத்த இன்னுமொரு உலக விருதுச் செய்தி…

பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.

இந்தியர் ஒருவர் இந்த விருதைப் பொறுவது இதுவே முதல்முறை. கோல்டன் குளோப், பாஃப்டா என ஆஸ்கருக்கான முதல் இரண்டு படிகளை வெற்றிகரமாகக் கடந்துவிட்ட ரஹ்மான், அடுத்து ஆஸ்கர் விருதின் வாயிலில் கால் வைத்துவிட்டார்.

மொத்தம் 9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஸ்லம்டாக்…’

இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் பாஃப்டாவிலும் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள்.

அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது

.

அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள்.

நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்.

வாழ்த்துக்கள் ரஹ்மான்!!

24 ஜனவரி 2009

ஆஸ்கர் விருது : ரஹ்மானுக்கு 3 பரிந்துரை!

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு, ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக, இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே ரஹ்மான் கோல்டன் குளோப் விருது பெற்ற நிலையில், ஆஸ்கர் பெறுவது உறுதி என்றே சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் இரண்டு பெஸ்ட் ஒரிஜினல் சாங் பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனர் படம்.. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் 81-வது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
ஸ்லம்டாக் மில்லியனர் : 10 பரிந்துரைகள்
1. பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்
2&3. ஒரிஜினல் சாங் "ஜெய் ஹோ..." பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான் "ஓ சாயா" பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான்
4. சிறந்த படம் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரோடக் ஷன் - தயாரிப்பாளர் - கிறிஸ்டியன் கோல்சன்
5. சிறந்த இயக்குனர் - டானி போய்ல்6. சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட் மென்டில்
7. சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்
8. சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
9. சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
10. சவுண்ட் எடிட்டிங் - டாம் சேயர்ஸ்

10 ஜனவரி 2009

ரஹ்மான் இசையுடன் நோக்கியா!

நோக்கியாவுக்காவே நம்ம 'மெட்ராஸ் மொசார்ட்' ஏஆர் ரஹ்மான் பிரத்தியேகமாக இசையமைத்துக் கொடுத்துள்ள ஆல்பம் இடம் பெற்றுள்ள செல்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.நோக்கியா 5800 என்ற இந்த மாடல்தான் இப்போது இந்திய மொபைல் உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன். எக்ஸ்பிரஸ் மியூசிக் பிரிவில் இந்த செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா நிறுவனம்.
இந்த செல்போன்களில், ஏ.ஆர்.ரஹ்மான் நோக்கியாவுக்கென்றே ஸ்பெஷலாக உருவாக்கிய கனெக்ஷன்ஸ் என்ற முழு ஆல்பமும் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.தொடுதிரை வசதி கொண்ட இந்த செல்போன்களில் கிராபிக் ஈக்வலைசர், 6 ஆயிரம் பாடல்களை சேமிக்க வசதியாக 8 ஜிபி மெமரி கார்ட், சரவுண்ட் சவுண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 5800 மாடலின் விலை 21 ஆயிரத்து 839 ரூபாய்!(இந்திய ரூபாய் )அப்படியே... இலங்கை ரூபாயிலும் இதையெல்லாம் வாங்குற ரேஞ்சுக்கு இப்போ சம்பளம் இருக்குதான்னும் பார்த்துக்கிடுங்க!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com