ஆஸ்கார் பரிசு வென்றதற்காக பிரார்த்தனை செலுத்த வந்ததாகவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட வருகை என்றும் ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்க, சற்று எரிச்சலடைந்த ரஹ்மான், கூட்டங்கள், விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என தனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், சிறிது காலத்துக்காவது தன்னைத் தனிமையில் விடுமாறும் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.
16 மார்ச் 2009
ஏ.ஆர்.ரகுமான் அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை ..!
ஆஸ்கார் பரிசு வென்றதற்காக பிரார்த்தனை செலுத்த வந்ததாகவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட வருகை என்றும் ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்க, சற்று எரிச்சலடைந்த ரஹ்மான், கூட்டங்கள், விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என தனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், சிறிது காலத்துக்காவது தன்னைத் தனிமையில் விடுமாறும் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.
23 பிப்ரவரி 2009
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது: உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாட்டம்
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்படுகின்றன. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த மகிழ்ச்சியை இந்தியர்கள் அனைவரும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ,
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் இருந்து சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்படங்கள் சிறந்து விளங்கினாலும் ஆஸ்கார் விருதை இதுவரை பெற்றது கிடையாது.
இந்த சூழ்நிலையில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றிய ஸ்லம்டாக் மில்லினர்' என்ற திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் என்ற இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
படத்தின் இசை மற்றும் 3 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவருக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று இந்தியா முழுவதும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாழ்த்தினர்.
இந்த சூழ்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதை காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருதுகள் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டது.
விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் உலகெங்கும் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். சென்னையில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும், ஏ.ஆர்.ரகுமானிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு திரும்பும் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க திரையுலகமும், அவரது ரசிகர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு 8 ஆஸ்கார் விருது
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றிய ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன.
இந்த படத்தின் சிறந்த இயக்குனருக்கான விருது டேனி பாய்லே பெற்றார். திரைக்கதைக்கான விருது சிமோன் பியுபோய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஆன்டணி டாட் மந்லே பெற்றார். சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது. சிறந்த எடிட்டிங்கிற்கான விருதை கிறிஸ் டிக்கேன், சிறந்த சவுண்ட் மிக்சிங்கிற்கான விருதை பூக்குட்டி பெற்றார். சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதை ஸ்லம்டாக் மில்லினர்' படம் பெற்றுள்ளது.
ஆஸ்கார் விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஏ.ஆர்.ரகுமான்
அப்போது பெருமிதம் பொங்க அவர் கூறியதாவது: நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்தோடும், மகிழ்ச்சியோடும் இருந்தேன். ஏதோ திருமணத்திற்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்கு காரணம் என் அம்மாவின் ஆசீர்வாதம். அவருக்கும், விருது வழங்கிய அகாடமிக்கும் எனது நன்றிகள்.
எனது இசைக் கலைஞர்கள், இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் அன்பையே தேர்வு செய்தேன்.
கடவுள் நம்மோடு இருக்கையில் எல்லாம் கிடைக்கும். இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.
ஆஸ்கர் விருது வென்ற தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்திப் படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை தமிழ்பாட்டு பக்கம் இழுத்து வந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்றால் அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவர் சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ராஜகோபால் பாகவதர் அந்தக்கால கதாகாலட்சேபம் நடத்தியவர். அவரது மகனான ஆர்.குணசேகர் என்கிற ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகின் மிகப்பெரிய இசை வல்லுநர். 22 படங்களுக்கு இசையமைத்தவர் அவரது வழிதோன்றல்தான் திலீப்குமார் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான். 1966 ஜனவரி 6ஆம் நாள் ஆர்.கே.சேகர் கஸ்தூரி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்த திலீப் இன்று ஏ.ஆர்.ரஸ்மான் என்ற பெயரில் உலகப் பெற்றிருக்கிறார். 1977இல் கேன்சர் நோய்க்கு தந்தையே பறிக் கொடுத்தபோது அந்த இசை இளவலுக்கு வயது பதினொன்று.
தந்தையின் இழப்புக்கு பின் குடும்பத்தில் வறுமை புகுந்து கொள்ள குடும்பத்தின் ஒரே ஆண் மகனான அந்த சின்ன வயதிலே இசைக்குழுக்களில் சேர்ந்து உழைக்க ஆரம்பித்தார். ரஹ்மான் முதன்முதலாக வாசிக்கக் கற்றுக் கொண்டது பியானோ, தமது பதினொரு வயதில் கிடார் மற்றும் 'கீ போர்டு' இசைக்க கற்றுக்கொண்டார். இளம் வயதிலேயே ரஹ்மான் இசையின் ஆரம்ப கட்டப் பயிற்சியை தந்தையிடம் பெற்றிருக்கிறார். வீடெங்கும் இசைக்கருவிகள் இருந்த சூழல் வளர்ந்தார். நான்கு வயதான திலீப் (ரஹ்மான்) ஹார்மோனியத்தில் ஒரு பாடலை வாசிக்கக் கேட்ட சுதர்சனம் மாஸ்டர் அதன் கட்டைகளை ஒரு துணியால் மறைந்தாராம். குழந்தை தன்னம்பிக்கையுடன் அதே மெட்டை மறுபடியும் வாசித்துக் காண்பித்ததாம்.
மகனின் ஆபூர்வமான திறமையைக் கண்ட சேகர் அப்போது சொன்னாராம் ''என் வாழ் நாளெல்லாம் நான் இரண்டாம் இடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக ஒரு நாள் நான் வெற்றிபெறுவேன் என்று! அவர் வாக்கு பலித்து விட்டது மகனின் வழியாக! தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் ஏன் உலக அளவில் வெற்றி பெற்றுவிட்டார் ரஹ்மான்.
தமது தந்தையுடன் பாடல் பதிவுக் கூடங்களுக்குக் சென்றது தான் ரஹ்மானின் இளமைப் பருவத்தின் பொக்கிஷமான முக்கிய நினைவுகள்:
''எனக்கு ஊக்கமூட்டும் நினைவாக இருப்பது என் தந்தையின் நினைவுதான். எங்கள் வீட்டு வரந்தாவில் அன்றைய புகழ்பெற்ற இயக்குநனர்கள் வந்து காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரே சமயத்தில் எட்டு ஒன்பது படங்களக்கு என் தந்தை உழைப்பார். ஒன்றுக்கு இசையமைப்பார் மற்றொன்றுக்கு இசை கோர்ப்பு செய்து கொடுப்பார். இன்னொரு புறம் இசை நடத்துவார். இப்படி நேரம் காலம் பாராமல் உழைத்து கொண்டே இருந்ததால் தான் அவர் உயில் துறந்தார் என்று நான் நினைக்கிறேன் என்கிறார் ரஹ்மான்.
1987 முதல் அவர் விளம்பர படங்களுக்கு இசையமைத்தார் சுமார் 300க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் சின்னத்திரை வழியாக அவரது இசை வலம் வந்தது. ரஹ்மானின் விளம்பர இசையை பார்த்துதான் மணிரத்னம் அவரை தமது படத்திற்கு இசையமைப்பாளராக நியமித்தார். 1992ஆம் சுதந்திர தினத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்பார் ரஹ்மான். காரணம் 'ரோஜா படம் வெளியாகி தென்னிந்தியா திரும்பி பார்த்த நாள் அதுதான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் ரஹ்மான். இந்திய இசைமைப்பாளர்களிலேயே அதிக தடவை தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஹ்மான் தான்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், ராஜீவ்காந்தி விருது, தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, பிரபல இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் நினைவாக வழங்கப்படும் ஆர்.டி.பர்மன் விருது. எம்.டி.வி.யின் வாழ்நாள் சாதனை விருது. 18 முறைகளுக்கு மேல் பி ம்ஃபேர் விருது என ரஹ்மானை பெருமைப்படுத்திய விருதுகளின் எண்ணிக்கை அதிகம். உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்டடது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, பிரபல இயக்குனர் சத்ய ஜித்ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற பெயரில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு விருதுகள்.. ஆஸ்கார் மேடையில் தமிழ் மொழியில் பேசிய ரஹ்மான்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்டடது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதை வென்றார். ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, பிரபல இயக்குனர் சத்ய ஜித்ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற பெயரில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துகக்கு சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் விருது அளிக்கப்பட்டுள்ளது.இங்கு தனது விருது பெற்ற பின் இறுதியில்தமிழ் மொழியில்பேசியரஹ்மான்"எல்லாப் புகழும் இறைவனுக்கே "என்று கூறி ஆஸ்கார் மேடையில் தமிழ் மொழி பேசி உலக தமிழர்களின் பேரன்பையும் பெற்றுள்ளார் ..........ஆஸ்கார் மேடையில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.
22 பிப்ரவரி 2009
ஒஸ்கார் விருது 2009 இன்று ....

- Alexandre Desplat - “The Curious Case of Benjamin Button”
- James Newton Howard - “Defiance”
- Danny Elfman - “Milk”
- Thomas Newman - “WALL-E”
- “Down to Earth” from “WALL-E” Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
- “Jai Ho” from “Slumdog Millionaire” , Music by A.R. Rahman, Lyric by Gulzar
- “O Saya” from “Slumdog Millionaire” , Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துவோம்.....
