Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மார்ச் 2009

இஷா கோபிகருக்கு கல்யாணம்!

தமிழில் பூ மாதிரி நடித்துப் புகழ்பெற்று, இந்தியில் கவர்ச்சிப் புயலாய் கலக்கிய இஷா கோபிகரும், இல்லற ஜோதியில் ஐக்கியமாகப் போகிறார். தனது காதலர் ரோத் நரங்கை திருமணம் செய்யப்போவதாக இஷா கோபிகர் தெரிவித்துள்ளார். நெஞ்சினிலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் இஷா. பின்னர் காதல் கவிதை, நரசிம்மா, என் சுவாசக் காற்றே படங்களில் பிரசாந்த், விஜயகாந்த், அரவிந்த்சாமி உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு சென்று, தனது தாராளக் கவர்ச்சியால் பிரபலமானார்.
Isha Gopikar
ஆரம்பத்தில் இந்தி நடிகர் இந்திரஜித்தை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர். பின்னர் ரோத் நரங் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். அந்தக் காதல்தான் இப்போது கல்யாணத்தில் முடியப் போகிறது. மும்பையில் நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார் ரோத் நரங். இதுகுறித்து பேசிய இஷா கோபிகர், "கடந்த ஆண்டு ஜூனில் ரோத்தை சந்தித்தேன். நட்பாக பழகி, காதலில் விழுந்தோம். இரு குடும்பத்தாரும் காதலை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கடந்த டிசம்பரில் திருமணம் செய்ய முடிவு செய்தோம். எனக்கு பட வேலைகள் பாக்கி இருந்தன. ரோத்தும் சில பணிகளில் பிசியாக இருந்தார். இதனால் திருமணத்தை தள்ளிவைத்தோம். திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் இஷா!

02 மார்ச் 2009

விஜயகுமார்-மஞ்சுளா மகள் நடிகை ஸ்ரீதேவி திருமணம்

நட்சத்திர ஜோடி விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் ஸ்ரீதேவி. இவர் ரிக்சாமாமா, டேவிட் அங்கிள், தெய்வ குழந்தை படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே , தேவதையை கண்டேன் படங்களில் காதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஸ்ரீதேவிக்கு திருமண நிச்சயக்கப்பட்டுள்ளது. மணமகன் பெயர் ராகுல், ஐதராபாத்தில் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி வைத்துள்ளார். ஸ்ரீதேவி-ராகுல் திருமணம் நிச்சயதார்த்தம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. முகூர்த்தம் ஜுன் 18-ந் தேதி நடைபெற உள்ளது.

25 பிப்ரவரி 2009

நடிகை மதுமிதாவுக்கு மார்ச் 1ஆம் தேதி திருமணம்

நடிகை மதுமிதா, தெலுங்கு கதாநாயகன் சிவபாலாஜியின் காதல் திருமணம் மார்ச் 1 ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

பார்த்திபன் ஜோடியாக ‘குடைக்குள் மழை’ படத்தில் அறிமுகமானவர், மதுமிதா. ஐதராபாத்தை சேர்ந்தவர். தொடர்ந்து ‘அமுதே’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘நாளை’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அமீர் ஜோடியாக ‘யோகி’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ‘ஆர்யா’, ‘சங்கராந்தி’, ‘அன்னாவரம்’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களில் சிவபாலாஜி நடித்துள்ளார். இவர் தொழிலதிபரும் கூட. தமிழில் சத்யராஜ் நடித்த ‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக அவர் நடித்தபோது, அப்படத்தில் ஜோடியாக நடித்த மதுமிதாவுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. பிறகு இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்லி, அவர்களின் சம்மதத்தைப் பெற்றனர்.

இதையடுத்து மதுமிதா, சிவபாலாஜியின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் இயக்குனர்கள் அமீர், சுப்ரமணியம் சிவா உள்பட தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இப்போது மதுமிதா, சிவபாலாஜியின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1 மஙிதேதி அவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

எம்.பி.ஏ படித்து வரும் மதுமிதா, திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுக்குப் போட மாட்டேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

22 பிப்ரவரி 2009

'கழற்றிவிட்ட' கணவரை பழிவாங்க முயன்ற ஐந்தாவது மனைவி பலி

ஐந்து மனைவிகளை திருமணம் செய்து கொண்ட சீன தொழிலதிபர், சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஒருவரை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு, மற்றவர்களை கழற்றிவிட முடிவு செய்தார். இதற்காக, எந்த மனைவி அழகி என்ற போட்டிக்கு ஏற்பாடு செய்தார். முதல் சுற்றிலேயே, கழித்து விடப்பட்ட ஐந்தாவது மனைவி, கோடீஸ்வர கணவனை பழிவாங்குவதாக எண்ணி காரை மலைப்பாதையில் விபத்துக் குள்ளாக்கப்போய், கடைசியில் தானே பலியானார்.

சீனாவின் கடற்கரை நகரமான கிங்டாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக பணியாற்றியவர் யு லியு. 2000வது ஆண்டில், தொழிலதிபர் பன் என்பவரை சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. தொழிலதிபர் பன், ஏற்கனவே நான்கு பேரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஐந்தாவதாக உணவு விடுதி பணிப் பெண் யு லியுவையும் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவரை, தனது மூத்த மனைவிகள் நான்கு பேர், தனது ஊழியர்கள் இருவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மனைவிகள் அனைவருக்கும் தனித்தனியே மாதம் 35 ஆயிரம் ரூபாய் பணமும், இலவச அடுக்கு மாடி குடியிருப்பும் வழங்கி இருந்தார்.

ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, பன்னின் தொழில் நசிவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஐந்து மனைவிகளை பராமரிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டார் பன். அவர்களில் ஒருவரை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு, மற்றவர்களை கழற்றி விட முடிவு செய்தார். கழற்றிவிடப்பட்டவர்களின், அடுக்கு மாடி குடியிருப்புகளையும், நல்ல விலைக்கு விற்பனை செய்து, தொழிலில் மறு முதலீடு செய்ய திட்டமிட்டார். இதற்காக, ஐந்து மனைவிகளில் யார் அழகானவர், நன்றாக மது அருந்துபவர் என்பதன் அடிப்படையில், ஒரே மனைவியை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அப்படிப்பட்ட ஒருவரை தேர்வு செய்ய மாடலிங் ஏஜென்சியில் இருந்து ஒரு நடுவரை பணியமர்த்தினார்.

ஒரு ஓட்டலில் அழகிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்றப் பொலிவு போட்டியில் இருந்து யு லியு விலக்கப்பட்டார். இத்தனைக்கும் மது குடிக்கும் போட்டியில் அவர் தான் முதலிடத்தை பிடித்தார். இருப்பினும், யு லியுவை முதலாவதாக கழற்றிவிட பன் முடிவு செய்து விட்டார். இதை யு லியுவிடம் தெரிவித்த பன், அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பையும் விற்பனை செய்ய முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனால், கடும் கோபமடைந்தார் யு லியு. தனது மாஜி கணவரையும், அவரது மற்ற நான்கு மனைவிகளையும் பழிவாங்க முடிவு செய்தார். விருந் துக்கு போகலாம் என்று கூறி அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டிக்கொண்டு போனார். பள்ளத்தில் காருடன் பாய்ந்தால் எல்லாரும் இறந்து விடுவர் என்பது தான் அவர் எண்ணம்.

ஆனால், கார் நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் யு லியு மட்டும் இறந்து போனார். பன் மற்றும் நான்கு மனைவிகளும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆரம்பத்தில், இது ஒரு சாதாரண விபத்து என்று தான் கருதப்பட்டது. பின்னர் தான் இது பழிவாங்க நடத்தப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பன், இறந்து போன யு லியு குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.40 லட்சம் அளித்துள்ளார். மற்ற மனைவிகளும், பன்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இப்போது பன் தனி மரமாக நிற்கிறார். சீன பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. பன் குறித்து, அவரது வயது, தொழில் போன்ற விவரங்கள் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை.

16 பிப்ரவரி 2009

நடிகர் ஜெயம் ரவிக்கு விரைவில் காதல் திருமணம்

நடிகர் ஜெயம் ரவி காதல் திருமணம் செய்து கொள்கிறார். மணமகள் ஒரு பட அதிபரின் மகள் ஆவார். இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணம் ஆகும்.

ஜெயம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. இவர், பிரபல தயாரிப்பாளர் எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். ஜெயம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தீபாவளி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்போது, ஜனநாதன் டைரக்டு செய்யும் பேராண்மை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஜெயம் ரவிக்கும், ஸ்காட்லாந்தில் பட்டப்படிப்பு படித்து வரும் ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 2 ஆண்டு நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இதுகுறித்து தந்தை மோகனிடம் ஜெயம் ரவி தெரிவித்தார். அவரும் ரவியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். ‘வீராப்பு’ என்ற படத்தை தயாரித்த விஜயகுமாரின் மகள் ஆர்த்தி. இவர் இப்போது சென்னையில் வசிக்கிறார். இரு வீட்டாரும் பேசி திருமணத்தை முடிவு செய்தனர்.

ஜெயம் ரவி இப்போது நடித்து கொண்டிருக்கும் பேராண்மை படம் முடிவடைந்ததும், அவருக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடைபெறும் என்று எடிட்டர் மோகன் தெரிவித்தார்.

10 பிப்ரவரி 2009

டோனியின் காதலி, கல்லூரி மாணவி - திருமணம் செய்ய முடிவு

இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் டோனி. அவர் கேப்டன் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது. கேப்டன் பதவியில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். அதிரடியான ஆட்டம் மூலம் இளம் ரசிகைகளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இந்தியாவின் விலை மதிப்பு மிக்க அவரை திருமணம் செய்ய ஒவ்வொரும் போட்டி போடுகின்றனர். டோனி முதலில் நடிகை தீபிகா படுகோனேயுடன் சுற்றி திரிந்தார். பின்னர் நடிகை லட்சுமிராயுடன் இணைந்து சுற்றினார். இவர்களை எல்லாம் கைகழுவி விட்டு டோனி தற்போது புதிய காதலியை தேர்ந்தெடுத்துள்ளார். கல்லூரி மாணவியான சாக்சிசிங் ராவத்தை டோனி காதலிக்கிறார். இவர் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்து வருகிறார். சமீபத்தில் தாஜ்பெங்கால் ஓட்டலில் அவர் தனது பயிற்சியை முடித்தார். அப்போதுதான் டோனியும், சாக்சியும் சந்தித்து கொண்டனர். பின்னர் நடிகை பிபாஷாபாசு அளித்த விருந்தில் இருவரும் பங்கேற்றனர். சாக்சி தனது 21-வது பிறந்த நாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடினார். அதில் டோனியும் கலந்து கொண்டனர். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். சாக்சி சிங்கை திருமணம் செய்ய டோனி முடிவு செய் துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு இருவரது திருமணம் நடைபெறும். இதை சாக்சி சிங்குக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சாக்சி சிங்கின் சகோதரியும், உத்ராஞ்சல் போலீஸ் அதிகாரியுமான அபிலாசா டெலிவிஷன் பேட்டியில் கூறும் போது, இருவரும் நல்ல நண்பர்கள் சாக்சியின் படிப்பு முடிந்த பிறகுதான் அவரது திருமணம் என்றார்.பார்க்கலாம் .......???? நன்றி -THENTAMIL

01 பிப்ரவரி 2009

நடிகை சங்கீதா-க்ரிஷ் திருமணம்

உயிர், தனம் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை சங்கீதாவுக்கும் பாடகர் க்ரிஷுக்கும் இடையே சில மாதங்களாக காதல் இருந்து வந்தது. இவர்களின் காதலை க்ரிஷின் பெற்றோர்கள் எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவுசெய்தனர். அதன் படி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் சந்நிதானத்தில் காலை 8.00 மணியளவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி அய்யர் தாலி எடுத்து தர மணமகன் க்ரிஸ் மனமகள் சங்கீதா கழுத்தில் தாலி கட்டினார். நடிகர்கள், நடிகைகள் பலர் திருமணத்திற்க்கு வருகை புரிந்திருந்ததால் போலிஸ் பாதுகாப்புஅதிகமாக போடப்பட்டிருந்தது.

இதில் திரைபிரபலங்களான இயக்குநர் கங்கைஅமரன், தரணி, பாலா, நடிகர்கள் சின்னிஜெயந்த், ஜீவா, பாண்டியராஜன் அவரது மகன்கள், மனைவி, நடிகைகள் ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, மும்தாஜ், ரகசியா, லஷ்மிராய், மகேஸ்வரி, ஜெயஸ்ரீ மற்றும் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டான்ஸர் ராம்ஜி, பாஸ்கி மற்றும் பெரியதிரை, சின்னதிரை பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தினர்.

500க்கும் அதிகமான பொதுமக்கள் இத்திருமணத்தை காண கோயிலில் கூடியிருந்தனர். திருமணம் முடிந்து வெளியே வந்தவர்களை பொதுமக்கள் கூடிநின்று வாழ்த்துச்சொல்லி கை கொடுத்தனர். இன்முகத்தோடு திருமண தம்பதிகள் அதை ஏற்றுக்கொண்டனர்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com