Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 பிப்ரவரி 2009

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம்இணைத்திருக்கிறேன். இது எவ்வளவுஜாலியான கம்பனின்னு படங்களைபார்த்தாலே தெரியும். ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப்பெண்மணி. ஒரு பெரிய Justify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார். இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார். ""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரிஉட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பேசெய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கிவிழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத்தேவை. அவர்கள்தான் நாலு கால்பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!'' இந்த வித்தியாசமான கம்பெனிதான்கூகிள். அதன் வினோதமானமுதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள். லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியைஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறுஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின்மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல். கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறுசைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கியிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்கஇயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000 செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்கவிலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள்என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.) நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கிஎடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலைசெய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோவாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது? கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்! கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாகமட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில்இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது. கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை. கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?) கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள். கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம். கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது; கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள். பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள். பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.) கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள். உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா -மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது. இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள். எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள். அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள். ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள். சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள். கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!! நன்றி-theentamil

விஷப் பரீட்சையில் இறங்குவதா ....? பத்மப்பிரியா

"ªÚLm' TPj§tÏl ©\Ï TjUl¬Vô S¥jÕ YÚm TPm "ùTôd¡`m'. "RYUôn RYªÚkÕ' TPj§tÏl ©\Ï úNWàPu ú_ô¥ úNokÕ S¥jÕ YÚm TjUl¬Vô ClTPjûR ùWômTÜm G§o TôojÕd ùLôi¥Úd¡\ôo. JÚ C²V UôûX ùTôݧp AYÚPu úT£VúTôÕ,

EeLs TôoûY«p Rªr §ûWlTPjÕû\ ClúTôÕ GlT¥ CÚlTRôL ¨û]d¡ÈoLs?

15Padmapriya2.jpg (18292 bytes)""ØuûT®P ClúTôÕ Rªr £²Uô ùWômT Su\ôL CÚd¡\Õ. LôWQm ClúTôÕ GpXô®RUô] TPeLû[Ùm W£LoLs W£d¡\ôoLs. AR]ôp ®j§VôNUô] TPeLs ¨û\V YkÕ ùLôi¥Úd¡\Õ.

ùRô¯p ÖhT çVôLÜm Rªr £²Uô EXL A[®p Øuú]±«Úd¡\Õ. Rªrl TPeLÞdÏ EsSôhÓ ®ÚÕLs UhÓUpXôUp ùY°SôhÓ ®ÚÕLÞm ¡ûPjÕ YÚ¡\Õ.

CRtÏd LôWQm CeÏs[ §\ûUVô] ùPdɵVuLsRôu. CÕ TôWôhPjRdL, YWúYtLlTP úYi¥V ®`Vm.

¿eLs Rªrl TPeL°p A§LUôL S¥lT§pûXúV?

Sôu S¥dL UôhúPu Guß ùNôu]§pûXúV? Sôu SpX LûRLÞdÏm, úLWdPoLÞdÏmRôu Ød¡VjÕYm ùLôÓd¡ú\u.

AÕ GkR ùUô¯«p AûU¡\úRô, AkR ùUô¯l TPeL°p S¥dLú\u. Guû] ùTôßjR YûW«p ùUô¯ JÚ ©Wf£û] CpûX. Rªr, ùRÛeÏ, UûXVô[m G] SpX LûRLû[, úLWdPoLû[ úRoÜ ùNnÕ S¥jÕ YÚ¡ú\u.

"RYUôn RYªÚkÕ' TPj§tÏl ©\Ï "Th¥Vp', "NjRm úTôPôúR', "ªÚLm' úTôu\ TPeL°p S¥júRu. ARtÏl ©\Ï ClúTôÕ "ùTôd¡`m' TPj§p S¥jÕ YÚ¡ú\u.

¿eLs Gu] Uô§¬ LûRLû[ G§o Tôod¡ÈoLs?

Sôu ClT¥lThP JÚ LûR«pRôu S¥lúTu Guß GlúTôÕm ùNôpYÕ ¡ûPVôÕ. Sôu HtÏm LRôTôj§Wm AkR TPj§p úTNlTÓm Uô§¬ CÚdL úYiÓm. ÑmUô PmªVôL YkÕ úTôY§p G]dÏ ®ÚlTm CpûX.

Sôu ClT¥ áßYRôp BZUô] LRôTôj§WeL°p UhÓmRôu S¥lúTu Guß VôÚm ¨û]jÕ ®PúYiPôm. Õß ÕßùYuß CÚd¡\ LRôTôj§WeL°Ûm S¥lúTu. AÕ Uô§¬ LôùU¥dÏ Ød¡VjÕYm Es[ úYPeLs Gu\ôÛm, LYokÕ CÝd¡\ Uô§¬Vô] Bd`u TPUôL CÚkRôÛm S¥lúTu.

Sôu UûXVô[j§p CÕYûW CÚTj§ GhÓ TPeL°p S¥j§Úd¡ú\u. JqùYôÚ TPeLÞm ùYqúYß Uô§¬Vô] LûRLs. UôßThP LRôTôj§WeLs. AÕ Uô§¬Vô] LûRL°p, Tôj§WeL°p S¥dLúY BûNlTÓ¡ú\u.

úNWàPu S¥dÏm "ùTôd¡`m' TP AàTYm GlT¥ CÚd¡\Õ?

15Padmapriya1.jpg (36687 bytes)"ùTôd¡`m' TPjûRl Tt± ClúTôûRdÏ GÕÜm ùNôpXd áPôÕ Guß ûPWdPo úNWu Nôo ùNôp#«Úd¡\ôo. B]ôp, Sôu ùWômT G§oTôolúTôÓ S¥jÕ YÚ¡\ TPm AÕ.

CkRl TPm ùY° YkRÕm Sôu GlT¥lThP Tôj§WeL°p S¥lúTu GuTûR ¿eLs ׬kÕùLôs[Xôm. "ùTôd¡`m' TPj§u LRôTôj§Wj§p ªÏkR ®ÚlTjÕPu S¥jÕ YÚ¡ú\u.

"RYUôn RYªÚkÕ' TPj§tÏl ©\Ï ÁiÓm úNWu NôÚPu úNokÕ T¦×¬YÕ U\dL Ø¥VôR AàTYm. AYÚûPV SpX TPeL°p Sôàm CÚlTûR ùTÚûUVôL ¨û]d¡ú\u.

¿eLs JÚ Ïßm TPj§p S¥j§ÚlTRôL úTNlTÓ¡\úR?

BUôm. AÕ UûXVô[j§p H.Gv. l¬Vô GuTYo Gݧ "Nô¡jV ALôPª' ®ÚÕ ùTt\ LûR. AûR "NôÚXRôÙùP Tôd¡' Gu\ ùTV¬p Ïßm TPUôL GÓj§Úd¡\ôoLs. Ne¸Rô GuTYo §ûWdLûR Gݧ CVd¡«Úd¡\ôo. A§p Ød¡V úLWdP¬p Sôu S¥j§Úd¡ú\u. SpX LûRVmNm Es[ TPeL°p S¥dLRôu G]dÏ ®ÚlTm GuTRtÏ CkRl TPØm JÚ ERôWQm.

£²Uô S¥ûLVô] ©\Ï Ïßm TPj§p S¥dLXôUô?

A§p Gu] Rl× CÚd¡\Õ? ¿eLs úLhP úLs® G]dÏ ×¬V®pûX! S¥l× Guß YkR ©\Ï AÕ §ûWlTPUô? ÏßmTPUô? GuTùRpXôm TôodLd áPôÕ. SpX ùTVÚm, ×LÝm, Ae¸LôWØm ¡ûPdÏm Gu\ôp G§Ûm S¥dLXôm. Cuû\dÏ UdLs Uj§«p Ïßm TPeLÞdÏm SpX YWúYt× CÚkÕ YÚ¡\Õ.

EsSôÓ, ùY°SôÓ G] GpXô §ûWlTP ®ZôdL°Ûm RWUô] ÏßmTPeLs §ûW«PlThÓ TôWôhÓ ùTtß YÚ¡\Õ. AlT¥ TôWôhÓ ùTßmúTôÕ A§p S¥jÕs[YoLÞdÏm ùTÚûURôú]? Ïßm TPeL°p ©WTXUô]YoLs S¥dÏmúTôÕ ARtÏ Cuàm ®[mTWm ¡ûPd¡\Õ. Øu]ô¥ ùRôûXdLôh£«p S¥dLf ùNu\YoLû[ ClT¥ úLhPôoLs. ClúTôÕ AlT¥ úLhL Ø¥ÙUô?

¿eLs CVdÏ]WôLl úTôYRôL JÚ ùNn§ YkRúR?

CVdÏ]WôL úYiÓm Gu\ GiQm CÚd¡\Õ. B]ôp ARtLô] úSWm Cuàm YW®pûX. ARtÏ ¨û\V ®`VeLû[ LtßdùLôs[ úYi¥«Úd¡\Õ.

GpXôYtû\Ùm Su\ôL Ltß®hÓ ARtLô] úSWm YÚmúTôÕ Li¥lTôL CVdÏ]WôúYu. G]dÏs CÚd¡\ BoYm, §\ûU GpXôm Cuàm ¨û\V Y[WÔm. ClúTôûRdÏ S¥l× UhÓmRôu Guú]ôP úYûX. AûR N¬VôL ùNnY§úXúV Gu ØÝ LY]Øm CÚd¡\Õ.

£²Uô®p ùTÚmTôÛm BiLs B§dLmRôu CÚkÕ YÚ¡\Õ. EeLû[ úTôuß £²UôûY úS£dÏm ùTiLs YkRôp ùTiLÞûPV ©Wf£û]Lû[Ùm, AYoL[Õ úSôdLeLû[Ùm Y#Ùßj§ SpX TPeLû[ EÚYôdLXôm ApXYô?

Sôu JÚ ®`VjûR ùR°ÜlTÓjR ®Úmסú\u. £²Uô GuTÕ JÚ ùTôÝÕúTôdÏ Á¥Vô. CÕ JÚ ®VôTôW EXLm.

AûR ùTôÝÕ úTôdÏdÏ UhÓmRôu TVuTÓjRÔm. ùTiLÞdÏ Ød¡VjÕYm ùLôÓjÕm, AYoL[Õ ©Wf£û]Lû[ Y#Ùßj§Ùm GÓdLlTÓm TPeLs ùT¬V A[®p ùYt± ùTßY§pûX. AlT¥lThP TPeLû[ JÚ YhPm úTôhÓ JÕd¡ ®Ó¡\ôoLs.

A§p Uôt\m HtThÓ RWUô] LÚjÕdLs APe¡V TPeLû[ W£LoLs YWúYtL ÕYeÏmúTôÕ AÕ úTôu\ TPeLû[ GÓdLXôm. Ut\T¥ RVô¬lTô[o TQj§p Sôm ®`TÃhûN«p C\eÏYÕ N¬lThÓ YWôÕ'' Gu\ôo.

18 பிப்ரவரி 2009

கிளமராய் நடிப்பதில் தப்பு என்ன ...? லட்சுமிராய்!.

ந்த ஆண்டில் அதிகமான கிசுகிசுக்களில் சிக்கியவர் யார் என்று போட்டி நடத்தினால் முதல் இடத்தை பிடிப்பவராக இருப்பார் லட்சுமிராய்!. அந்த அளவு கிசுகிசுக்களில் அடிபட்டிருக்கிறார். அழகா இருக்கீங்க... கிளாமராகவும் நடிக்கிறீங்க... எல்லோருடனும் ஃபிரண்ட்லியா தான் பழகறீங்க... ஆனாலும் தமிழ் சினிமாவில் இன்னும் நிலையான இடமும், உச்ச அந்தஸ்தும் பெற முடியாமல் போகிறதே... என்று ஆரம்பித்த உடனேயே, மூச்சு விடாமல் கொட்டித் தீர்த்துவிட்டார் லட்சு! ''மிஸ் பெல்காம் அழகிப்பட்டம் வென்ற நான் நடிக்க வந்தது ஒரு விபத்துனுதான் சொல்லணும். சினிமாவில் சம்பாதித்து குடும்பம் நடத்தணும் என்ற அவசியம் எனக்கு இல்லை. வசதியான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். சினிமாவில் ஒரு ஸ்டார் நடிகையாக வரணும் என்பதற்காகதான் நடிக்க வந்தேன். என்னுடைய ரோல் மாடல் இந்தி நடிகை ரேகா. அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் என்னோட ஆசை... கனவு... எல்லாம். கற்க கசடற படம் மூலம் தமிழில் அறிமுகமானேன். என் முதல்படம் சுமாராகத்தான் போனது. எனக்கு அப்போதெல்லாம் சினிமா பற்றி எதுவும் தெரியாது. அதனால் சிறிய இடைவெளி விழுந்தது. தமிழ்ல மட்டுமில்லாம தெலுங்கிலயும் நடிக்க ஆரம்பிச்சேன். அங்கு நான் நடிச்ச 'காஞ்சனமாலா' வில் கிளாமரா ஆக்ட் பண்ணியிருந்தேன். அந்த படமும் எனக்கு பெரிதாக பேர் வாங்கித் தரலை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று குறுகிய காலத்தில் நான்கு மொழிகளில் நடித்திருக்கிறேன். இன்னும் எந்த மொழியிலும் எனக்கு பெரிய திருப்புமுனையான படம் அமையலை என்றாலும் ரசிகர்களிடையே எனக்கென்று ஒரு அலை இருப்பதை பார்க்க முடிகிறது. இளைஞர்களுக்கு நான் ரசிக்கதக்க நடிகையாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியான விஷயம். என்னிடம் அழகும், இளமையான உடற்கட்டும், திறமையும் இருந்தும் என்னால் முதலிடம் பிடிக்கும் தகுதிகள் இருந்தும் பெறமுடியாமல் போக காரணம் இதுவரை சவாலான காதாபாத்திரங்கள் அமையவில்லை என்பதுதான் உண்மை. நான் ரொம்ப எதிர்பார்த்த 'வெள்ளித்திரை' சரியா போகாதது கொஞ்சம் ஏமாற்றம்தான். நான் கவர்ச்சியாக நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறேன். சிலர் தங்களால் முடியவில்லையே என்ற என்னை பற்றி வேறு மாதிரி பேசுகிறார்கள். என்னிடம் அழகும், இளமையும், அதற்கேற்ற உடல்வாகும் இருக்கு. நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். அந்த கேரக்டருக்கு அவசியம் என்பதால் செய்கிறேன் இதில் என்ன தப்பு? என்னுடைய வளர்ச்சியை தடுப்பதுக்காகவே என்னை பற்றி தினமும் ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டிருக்கிறது. இதை பரப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒரு நடிகருடன் சிரித்து பேசினால் தப்பு. கைகுலுக்கி நின்றால் தப்பு. புதிதாக கார் வாங்கினாலும் தப்பா நியூஸ் வருது. இப்படி யாரோ கிளப்பி விட்டதை எழுதி என்னோட இமேஜை கெடுத்து வருகிறார்கள். என்னைப் பற்றி என் குடும்பத்துக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும். இதனால் நான் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சினிமா வட்டாரத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவர்களுடன் வெளியே செல்வதும் பேசி பழகுவதும் தவிர்க்க முடியாதது. என்னால் மறக்க முடியாத மிக சிறந்த நண்பர் மறைந்த ஜீவா சார். அவரது இழப்பு தாக்க முடியாதது. தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க இன்னும் தன்னம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். அந்த இடத்தையும் பிடிப்பேன்'' என்று ஒரே மூச்சில் படபடத்தவர் கொஞ்சம் ஜீஸ் குடித்தபிறகுதான் கூலானார்.

பெருமாள் - விமர்சனம்

'ட்ரக் அடல்டிரேஷன்' என்ற சீரியஸ்சான ஒரு கதைக் கரு. மருந்துகளில் போலி மருந்துகளை கலப்படம் செய்பவர்களையும், தன் சுய லாபத்திற்காக தவறான மருந்துகளால் நோயாளிகளின் உயிரை பறிக்கும் அநியாயக்காரர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருவைத் தான் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லாமல், சுந்தர்.சி வில்லகளின் முகத்தைக் கிழிப்பதிலும் மூக்கை உடைப்பதிலும், நமீதாவின் கவர்ச்சிக் குத்தாட்டங்களிளும் மட்டுமே அதிக கவனம் கொண்டு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வின்சென்ட் செல்வா.

தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால பயணத்திற்கு பிறகும் இது மாதிரியான சித்தரிப்புகளையும் சந்திக்க வேண்டிய விதி ஏற்பட்டிருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது , தமிழ் படமா? இல்லை தெலுங்கு படமா? ன்னு பெரிய குழப்பமே வருது.

ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஏதோவொறு பட பிடிப்பு நடந்து கொண்டிருக்க, இங்க சரியா நடிக்கிறதுக்கு ஆள் இல்லையாம் அதான் என்ன கூப்டாங்க என்று போன் பேசும் சுந்தர்.சி தான் படத்துக்கு ஹீரோ. (நான் தான் ஹீரோன்னு அவரே சொல்லிக்கிறாருன்னா பாருங்களேன்). டமால் டுமீல் சத்தங்களுக்கு நடுவில் அல்வா மாதிரி நமீதாவும், மல்லிப்பூ மாதிரி மீனாட்சியும் எப்போதாவது வந்து வந்து போறாங்க.

சாமுராய், குருவி, படிக்காதவன் என பல படங்களை துண்டு துண்டா வெட்டி ஒண்ணு சேத்து 'பெருமாள்' படம் பண்ணி இருக்கிறார் இயக்குநர். ஆந்திரா மாநில மருத்துவமனையில் போலீஸ் அனுமதியோடு நடக்கிறது 'ட்ரக் அடல்டிரேஷன்'. இதை ஜூனியர் டாக்டர் மீனாட்சி தெரிந்துக்கொள்ளாகிறார். விஷயம் அறிந்த மீனாட்சியை வில்லன் கும்பல் கடத்திவிட, அந்த கும்பலிடமிருந்து தப்பித்து சென்னையில் இருக்கும் சுந்தர்.சியிடம் தஞ்சம் அடைகிறார் மீனாட்சி. மீனாட்சியிடம் நடந்ததைக் கேட்டு வில்லன் கும்பலை அடித்து திம்ஸம் செய்து தியாகியாகி விடுகிறார் சுந்தர்.சி. படத்தில் சுந்தர்.சியை விடவும் கத்தி, துப்பாக்கி எல்லாம் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கு. நமீதாவும் மீனாட்சியும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியாச்சி, வில்லன்களை அடித்து கிழித்து சுந்தர்.சி ஹீரோவாகியாச்சி, இதற்கு பிறகு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் புகைப்படங்களை காண்பித்து நெஞ்சை நக்குவது இயக்குநாருக்கு தேவை இல்லாத வேலை.

விவேக்கிடமிருந்து தெலுங்கு வசனங்கள் எல்லாம் ரொம்ப நல்லாவே வருது, ஆனா காமெடி மட்டும் வரவே மாட்டேங்குதேப்பா!

கோட்டா ஸ்ரீனிவாசராவ் எப்போதும் போலவே தன் காமெடியான வில்லாத் தனங்களோடு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். எப்போவறாங்க எதுக்குவறாங்க என்றுதெரியாமல் திடீர்னு வந்து காமெடி என்கிற பெயரில் சுந்தர்.சியின் அண்ணன்களாக வரும் இளவரசு, தாமு, லக்ஷ்மணன் செய்யும் அளப்பரைகள்... ஐயோ அம்மா தாங்க முடியல!

எப்போதும் போலவே இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இல்லாமைக்கு மீண்டும் பழைய பாடல்களின் மெட்டுகள் கை கொடுத்திருக்கின்றன. 'காதல் வைப்போகமே' ரீமிக்ஸ், நமீதாவின் டான்ஸ்ஸோடு பட்டையை கிளப்புகிறது! பின்னணி இசையில் டமால் டுமீல் சத்தங்கள் மட்டுமே... காது ஜவ்வு கிழியுடா சாமி!

17 பிப்ரவரி 2009

கணவர் கொடுத்த தைரியம் - பாடகி குஷ்பு !

தமிழ்ச் சினிமாவில் சுமார் பத்தாண்டுகள் கனவு கன்னியாக இருந்தவர், குஷ்பூ புடவை, குஷ்பூ இட்லி, குஷ்பூ மெட்டி என்று பேசப்பட்டவர்.

இவர் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கிறாரோ அந்த ஹீரோவின் படங்கள் வெற்றிவாகை சூடும். இவர் ஜோடி சேராத போது அவர்களின் படங்கள் தோல்வியை தழுவும். உதாரணம் பிரபு, ஜெயராம், இந்த அதிர்ஷ்ட தேவதையை கைபிடித்ததும் சுந்தர்.சி உச்ச நட்சத்திரங்களின் இயக்குநரானார் இன்று அவரே மினிமம் கியாரண்டியுள்ள ஒரு ஹீரோவோகிவிட்டார்.

இரண்டு குழந்தைகளின் தாயான குஷ்பு , இப்போது சின்னத்திரையில் நட்சத்திர நாயகியாக, படத் தயாரிப்பாளராக இருக்கிறார். திறமையான அழகான நடிகை, நல்ல மனைவி, நல்ல தாய், நல்ல தயாரிப்பாளர், நல்ல குடும்பத் தலைவி என பலவற்றில் தகுதியுடன் திகழும் குஷ்பூ இதோ இன்னொரு புது அவதாரம் எடுத்திருக்கிறார். ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சியை தமது கொஞ்சும் தமிழால் நடத்தி வரும் குஷ்பூ சொந்தக் குரலில் முதல் முறையாக ஒரு தமிழ்படப் பாடலை பாடியிருக்கிறார்.

இந்தியை தாய்மொழியாக கொண்ட குஷ்பூவை, தமிழ் பாடலை பாட வைத்து புண்ணியம் தேடிக்கொண்டவர் இயக்குநர் டி.பி.கஜேந்திரன். அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'மகனே என் மருமகனே' படத்திற்காக ஒரு பாடலை பாடித் தர வேண்டும் என்று கஜேந்திரன் நேரில் சென்று கேட்டுக் கொண்டதும், அவரது அன்பான பேச்சுக்கு மரியாதைக் கொடுத்து பாட சம்மதித்தாராம் குஷ்பூ.

நடிகர் சிம்பு, ஜீவா, சுந்தர்.சி. போன்று பல நட்சத்திரங்களை பாட வைத்த பெருமை பெற்ற தினா இசையில்தான் குஷ்பூ இந்த பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தினாவை தொடர்பு கொண்ட போது ''இது ரொம்ப சந்தோஷமான விஷயம். பெருமையான விஷயம் என்று பேச்சைத் துவங்கினார். குஷ்பூ, பல்லவி மட்டும் பாடியிருக்கிறாரா அல்லது அனு பல்லவி பாடியிருக்கிறாரா? எத்தனை வரிகள் பாடினார்...?

முழுப்பாடலையும் அவர்தான் பாடியிருக்கிறார்!

எத்தனை மணி நேரம் எடுத்துக் கொண்டார்.... பாடுவதற்கு திணறினாரா?

''கவிஞர் சினேகன் எழுதி கொடுத்த பாடல் பிரதியை கையில் வைத்து கொண்டு கொஞ்சம் முழுக்க படித்தும், முணுமுணுத்தும் மனப்பாடம் செய்தார். அவசரப்படாமல், பதட்டப்படாமல் பொறுமையாக அதே சமயத்தில் நேர்த்தியாக நாலுமணி நேரம் எடுத்து கொண்டு அழகாக பாடி முடித்தார்.''

குஷ்பூவை பாட வைக்க அவசியம் என்ன?

''படத்துல இந்த சுச்சுவேஷன் புதுசு. அதுக்கு தகந்த மாதிரி வாய்ஸ் கூட புதுசா இருந்தால் நல்லாயிருக்கும். அதுமட்டுமல்ல தமிழுக்கும் ஒரு புதுக்குரல் கிடைத்த மாதிரியிருக்கும்னு டைரக்டர் கிட்டே என்னோட சஜஷனை வெச்சேன். அவரும் குஷ்பூ மேடம் கிட்டே பேசி அனுமதி வாங்கிட்டார். இதுல எனக்கு என்ன பெருமை தெரியுமா? மேடத்தோட கணவர் சுந்தர்.சி. முதல்ல பாடியது என்னோட இசையில் தான். ('வாடீ ஏங்கப்ப கிழங்கே ரீமிக்ஸ்’) அந்த பாட்டு ஹிட்டானது. அதேபோல திருமதி குஷ்பூ பாடுற முதல் பாட்டுக்கூட என் இசையில் தான். இதுவும் ஹிட் ஆகும். கணவன், மனைவி இரண்டு பேரும் என்னுடைய இசையில் பாடியது எனக்கு பெருமை. இதைத்தான் ரொம்ப சந்தோஷமான விஷயம்னு சொன்னேன்'' என்கிறார் தினா.

இயக்குநர் பாலசந்தர் இயக்கிய 'ஜாதி மல்லி' படத்தில் ஒரு பாடகியாக நடித்திருந்தார். இப்போதுதான் அவர் நிஜமாகவே ஒரு பாடகியாகி இருக்கிறார்.

சரி இதுபற்றி குஷ்பூ என்ன சொல்கிறார்... அந்த பாடல் வரிகள் என்ன?

''நான் முறைப்படி சங்கீதம் கத்துக்கலை.. முறைப்படி கற்றவர்கள் சுருதி லயத்தோடு நன்றாக பாடுவார்கள். ஏதோ கேள்வி ஞானம் கொஞ்சம் உண்டு. சொந்தக் குரலில் பாடுவது எத்தனை கஷ்டம்னு பாடிய பிறகுதான் தெரிஞ்சுது.

என்னைப் பாடச் சொல்லி டைரக்டர் டி.பி.கஜேந்திரன் கேட்டபோது அய்யோ மாட்டேன்னு மறுத்துட்டேன். அவர் ரொம்ப வற்புறுத்தினார். சுந்தரே பாடகராகிட்டார். ஏன் நம்மாள முடியாதுன்னு நினைச்சு ஓ.கே சொன்னேன். தினா, எப்படி பாடறதுன்னு எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் மாதிரி ஒரு பொறுமையான இசையமைப்பாளர் கிடைச்சதால டென்ஷன் இல்லாம பாடி முடிச்சேன். சினேகனும் பாவம் போனாப் போகுதுன்னு எனக்காக எளிமையான வரிகளை எழுதிக் கொடுத்தார்'' என்று சிரிக்கிறார் பாடகி குஷ்பு!.

குஷ்பு பாடிய பாடல் வரிகள் ...

''நட்சத்திரம் நட்சத்திரம் பூமியில் பாடு... தினம் ராத்திரியில் உன் கனவில் வருவது யாரு... ரசிகரோட கைதட்டுல ஏறுதுபோதை வெள்ளித்திரையில... ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா நீ கொடு காதை''

நமீதாவைத்தேடிய மூன்று கோடி பேர்!

2008 ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அதிகபட்சமாக தேடிய விவரங்களின் பட்டியலை கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது

இதில் இந்தியாவிலேயே அதிகமாக தேடப்பட்ட நடிகையாக இந்தி நடிகை கேத்ரீனா கைப் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தை இந்தி நடிகர் சல்மான்கான் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தை தமிழ் நடிகை நமீதா பிடித்திருக்கிறார்.உலக அழகி ஐஸ்வர்யாராய் நமீதாவுக்கு பிறகு நான்காவது இடத்தில் உள்ளார்.

நமீதாவின் பெயர் மூன்று கோடிக்கும் மேல் இணையதளத்தில் தேடப்பட்டிருக்கிறது. இதைக்கேள்விப்பட்டதும் போதும் எப்டி சொல்றதுன்னே தெரியல...என்று தன் சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார் நமீதா,

‘’ கூகுல் இணையதளத்தில் அதிக முறை தேடப்பட்ட நடிகையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் தான் காரணம். இணையதளத்தில் என்னைத்தேடிய மூன்று கோடி பேர்களுக்கும் நன்றி’’ என்று சொல்லி மகிழ்கிறார்.

ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு

சினிமா ஆசையில் சென்னைக்கு கிளம்பி வந்து திருதிருவென முழித்துக்கொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு வரமாக ஷங்கர் இயக்கிய பாய்ஸ் பட விளம்பரம் அமைந்தது.

இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவிருப்பதாகவும் படத்தில் ஐந்து ஷீரோ,ஹீரோயின்கள் என்றும் நடிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

திருதிரு ஆசாமிகள் எல்லாம் விறுவிறுன்னு ஷங்கர் அலுவலகத்துக்கு அப்ளை பண்ணிச்சுங்க. ஆனா, ஒரு கூத்து பாருங்க. இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு வாய்ப்பு அமையல.

இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர்(சித்தார்த்), நடிகை தேவயானி தம்பி(நகுலன்) என்று ஷங்கர் டீம் தேர்ந்தெடுத்தது. பரத்,மணிகண்டன் என்று மற்ற பலரும் சினிமா வட்டாரங்களில் பழக்கப்பட்டவர்களின் மூலமாகவே தேர்வானாங்க. நடிகைகளும் அப்படித்தான்.

இதில் ஒரு பெருங்கூத்து என்னன்னா, புதுமுகம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ஹரிணி, ஏற்கெனவே ‘துஜே மேரி கஸம்’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானவர்.

பாய்ஸ் உட்பட ஹரிணி நடித்த சில படங்கள் ப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார்.

பெயர் ராசிதான் நமக்கு இப்படி ஒரு அவப்பெயரை தந்துவிட்டது என்று முடிவெடுத்த ஹரிணி, தனது பெயரை ஜெனிலியா என்று மாற்றிக்கொண்டு சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்தார். இப்படமும் ப்ளாப்.

பரத்துடன் நடித்த சென்னைக்காதலும் ப்ளாப். இதனால் ஜெயம்ரவி நடித்த தீபாவளி உட்பட சில படங்களில் இருந்து ஜெனிலியா நீக்கப்பட்டார்.

இந்த சமயம் பார்த்து பாய்ஸ் படத்தில் ஜோடி போட்ட சித்தார்த்துடன் மறுபடியும் ஜோடி போட்ட மொம்மரிலு தெலுங்குப்படம் செம ஹிட். ப்ளாப்...ப்ளாப்புன்னு போய்க்கொண்டிருந்த ஜெனிலியா லைப்புக்கு செம க்ளாப் கிடைச்சது.

இந்த படம் தமிழில் சந்தோஸ் சுப்ரமணியம் என்று தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போதும் இவரையே நடிக்க வைத்தனர்.

குறும்பு நடிப்பால் கவர்ந்தார். ஆனாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.

பரத்துடன் காதல், ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குநர் ராஜாவுடன் காதல்னு கிசுகிசுக்கள் பரவினதுதான் மிச்சம்.

ஆனா,உண்மையில் ஜெனிலியா தன் முதல் பட நாயகனை லவ்விக்கொண்டிருந்திருக்கிறார்.

துஜே மேரி கஸம் படத்தின் நாயகன் ரிதேஷ்முக் உடன் அவ்வப்போது டேட்டிங் போயிருக்கிறார். இத கண்டுக்கிட்டவங்க கிட்ட நானும் அவரும் ப்ரண்ட்ஸ்..தப்பா நெனக்காதீங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கிறார் ஜெனிலியா.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையின் ஜூஹூ பகுதியில் நடிகர் துஷார்கபூர் தனது பங்களாவில் பார்ட்டி வச்சிருந்திருக்கிறாரு. மிட் நைட் 11 மணிக்கு அந்த பார்ட்டிக்கு ரிதேஷ்முக் ஆஜர். அடுத்து அங்கே ஜெனிலியாவும் ஆஜர்.

மிட்நைட் 1.30மணிக்கு தேஷ்முக் தனது காரில் புறப்பட ஜெனிலியாவும் அவர் காரிலேயே சவாரி செய்திட்டார்.

ஜெனிலியா சவாரிக்கு வந்துட்டதால ரிதேஷின் நண்பர் அங்கேயே அம்போன்னு விடப்பட்டார்.

இந்த வெறுப்பில் தானோ என்னவோ, அந்த நண்பர்.. ‘ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க..ஜெனிலியா ஆங்கிலோ இந்தியன் என்பதால இந்த காதலுக்கு தேஷ்முக் வீட்டுல எதிர்ப்பு இருக்கு. அதனாலதான் அவுங்க ரசசியமா லவ் பண்ணுறாங்க’ன்னு என்று அங்கிருந்தவங்க கிட்ட போட்டு உடைச்சிட்டாரு.

இத கேள்விப்பட்டதும் முன்னால் மகாராஷ்டிர முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக்குக்கு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோபம் தலைக்கு ஏறியிருக்கு. அவருக்கு ஏன் கோபம் தலைக்கு ஏறனும்னு கேட்குறீங்களா. .. அவருதாங்க..ரிதேஷின் அப்பா.

16 பிப்ரவரி 2009

நடிகர் ஜெயம் ரவிக்கு விரைவில் காதல் திருமணம்

நடிகர் ஜெயம் ரவி காதல் திருமணம் செய்து கொள்கிறார். மணமகள் ஒரு பட அதிபரின் மகள் ஆவார். இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணம் ஆகும்.

ஜெயம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. இவர், பிரபல தயாரிப்பாளர் எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். ஜெயம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தீபாவளி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்போது, ஜனநாதன் டைரக்டு செய்யும் பேராண்மை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஜெயம் ரவிக்கும், ஸ்காட்லாந்தில் பட்டப்படிப்பு படித்து வரும் ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 2 ஆண்டு நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இதுகுறித்து தந்தை மோகனிடம் ஜெயம் ரவி தெரிவித்தார். அவரும் ரவியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். ‘வீராப்பு’ என்ற படத்தை தயாரித்த விஜயகுமாரின் மகள் ஆர்த்தி. இவர் இப்போது சென்னையில் வசிக்கிறார். இரு வீட்டாரும் பேசி திருமணத்தை முடிவு செய்தனர்.

ஜெயம் ரவி இப்போது நடித்து கொண்டிருக்கும் பேராண்மை படம் முடிவடைந்ததும், அவருக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடைபெறும் என்று எடிட்டர் மோகன் தெரிவித்தார்.

விண்ணை தாண்டி வருவாயா - கௌதம்-சிம்பு-A.R ரஹ்மான் இணையும் புதிய படம் - (சமீபத்திய படங்கள்)

உயர பிரச்சனை இங்கேயில்லை!

ஷில்பா ஷெட்டி மாதிரியே, தமிழர்களின்மனசில் கெட்டியாக ஒட்டிக் கொண்ட இன்னொருபியூட்டி, ஷமீரா ரெட்டி! பாலிவுட்டிலிருந்துகோலிவுட்டுக்கு வர நேரம் காலம் ஆனாலும், வந்த வேகத்திலேயே அடுத்த ரயிலும் தயாராகஇருந்தது அவருக்கு.

வாரணம் ஆயிரத்திற்கு பிறகு ஷமீராவை ஏந்திக் கொள்ள காத்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். அசல் படத்தில் தலயோடு ஜோடி சேரப்போவது ஷமீராதானாம். வாரணம் ஆயிரத்திற்கு பிறகு, இவரது இல்லத்தை தட்டிய வேறு சில ஹீரோக்கள், சம்பளத்தை கேட்டு தாறு மாறாக ஓடி வந்தாலும், தைரியமாக நின்றது சிவாஜி புரடக்ஷன்தான். சரணிடம் கதை கேட்ட அடுத்த வினாடியே,"பிடிச்சிருக்கு" என்று பச்சை கொடி காட்டிவிட்டாராம் ஷமீ. அசலை பொருத்தவரை சொல்ல முடியாத சந்தோஷம் இன்னொன்று. முந்தைய படத்தில் ஷமீராவை விட, சூர்யா கொஞ்சம் உயரம் குறைவு. இதை பேலன்ஸ் செய்வதற்காகவே பல காட்சிகளை மெனக்கட்டு எடுத்தார்களாம். அஜீத்தோடு சேரும்போது உயரம் ஒரு தடையல்ல என்ற சந்தோஷம் ஷமீராவுக்கு. நியாயமாக இந்த சந்தோஷம் கேமிராமேனுக்கல்லவா இருக்க வேண்டும்?

15 பிப்ரவரி 2009

பெண்கள் கவனத்துக்கு….

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

உங்கள் வலைப்பூவின் விலைமதிப்பு எவ்வளவு?

ஒரு வலைப்பூ, இணையத்தளம் போன்றவற்றின் மதிப்பினை அறிவதற்காக ஒரு சிறப்பு இணையத்தளம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தளத்தின் தளமுகவரியை இங்கே உள்ளிட்டால் சில கணக்கீடுகளின் இறுதியாக இத்தனை $கள் என விலைமதிப்பை நாம் அறியத் தருகிறது.
$66
ஒரு தளம் / வலைப்பூவின் popularity ஐ இதன்மூலம் அறிய இயலும். உங்கள் தளத்திற்கு இருக்கும் back links, மற்றும் referral sites போன்றவையே இந்த விலைமதிப்பை நிர்ணயிக்கின்றன. எத்தனை பார்வையாளர்கள் தினம்தோறும் வருகின்றனர் போன்றவையும்தான். SEO எனப்படும் Search Engine Optimizationஐ ஒழுங்காகச் செய்துவருபவர்களுக்கு இதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும். என் முகவரியை(THILEEP-IN-PATHIVU.BLOGSPOT.COM) உள்ளிட்டேன். 66$ வந்தது. கடந்த ஜனவரி 4ல் தான் புது domain ல் பதிந்ததால் இதன் மதிப்பு இப்போது இவ்வளவு. உங்கள் தளம் / வலைப்பூ முகவரியை உள்ளிட்டுச் சோதித்துப்பாருங்கள். தள முகவரி : http://www.stimator.com/ ஒரு தளத்தின் Page Rank ஐக் காண்பதற்கு http://www.prchecker.info/check_page_rank.php முகவரி உதவும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com