Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

மொபைல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொபைல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 மார்ச் 2009

லேப்டாப் கம்ப்யூட்டர்கள் - சில யோசனைகள்

நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.
1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.
2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது. மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம்.பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.
5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.

22 பிப்ரவரி 2009

எல்லா மொபைல் போனுக்கும் இனி ஒரே சார்ஜர் போதும்

அனைத்து வகை மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர் உற்பத்தி செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மொபைல் போன்களை மாற்றும் போது, தனியாக அதற்கு சார்ஜர்கள் வாங்க வேண்டியுள்ளது. ஒவ் வொரு நிறுவனத்தின், ஒவ் வொரு மாடல் மொபைல் போனுக்கும், அதற்கென மட்டும் பொருந்தும் வகையில் சார்ஜர்கள் இணைத்து வழங்கப்பட்டன. அதற்கு முன்னர் பயன்படுத்திய சார்ஜர், பயன்படுத்த தேவையின்றி, வீணாகிறது.

இந்நிலையை மாற்றி, அனைத்து மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர்கள் கொண்டு வர ஜி.எஸ்.எம்.ஏ., மொபைல் போன் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த துறையினர் நடத்திய கூட்டத்தில் 17 மொபைல் போன் ஆபரேட்டர்கள், மொபைல் போன் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. வரும் 2012ம் ஆண்டு முதல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும், இனி சார்ஜர்கள் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த நிறுவனத்தின், எந்த மாடலுக்கும் இந்த சார்ஜர் பொருந்தும் வகையில் இருக்கும்.

இந்த சார்ஜர்கள், அதற்கு பின்னர் விற்பனைக்கு வரும் மற்ற மாடல் மொபைல் போன்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். தற்போது, பயன்படுத்த முடியாத பழைய சார்ஜர்களால் உலகம் முழுவதும், ஆண்டுக்கு 51 ஆயிரம் டன் கழிவுகள் ஏற்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இதையும் மனதில் கொண்டு தான், இனி ஒரே மாதிரி சார்ஜர்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஏடி அண்டு டி, கே.டி.எப்., - எல்.ஜி., - மொபைல்கோம் ஆஸ்டிரியா, மோட்டரோலா, நோக்கியா, ஆரஞ்சு, குவால் காம், சாம்சங், சோனி எரிக்சன், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. புதிதாக வெளிவர இருக்கும் சார்ஜர்கள், மின் சிக்கனத்துக்கும் வழி வகுப்பதாக இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் சார்ஜர்களில் இருந்து 50 சதவீதம் மின் சிக்கனம் கொண்டவையாக இவை இருக்கும்.

08 பிப்ரவரி 2009

கூகுளின் SMS Channel-இலவச சேவை

கூகுள் இலவச SMS Channel சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Mytoday போன்ற SMS சேவைக்குப் பிறகு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.நீங்களாகவே ஒரு புதிய SMS சேனலை உருவாக்க முடியும்.அதன் பின் அதற்குரிய இணைய முகவரியைப் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் இணையச் செய்யலாம். நாம் SMS சேனலுக்கு அனுப்பும் SMS ஆனது அதில் இணைந்துள்ள அனைவரின் அலைபேசியையும் இலவசமாகச் சென்றடையும்.

sms1உதாரணமாக, Saaral SMS சேனலானது சாரல் சமூக நல அமைப்பின் செயல்பாடுகளை அதன் அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் நம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் (உதாரணமாக:A Candle loses nothing by lighting another candle), சமூக அக்கறையுள்ள பொது அறிவுத் தகவல்களையும் (உதாரணமாக:Save Energy,Save Earth-National Energy Conservation Day Wishes(Dec 14)-SAARAL) பகிர்ந்து வருகின்றது. இது தனது உறுப்பினர்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வருகிறது. சாரல் அமைப்பின் SMS சேனலுக்கு Subscribe செய்ய இங்கே வசிக்கவும்.

கூகிள் SMS சேனலின் சிறப்பம்சங்கள்:

• நாமாக புதிய SMS சேனல் உருவாக்கிக் கொள்ளலாம்.இதன் மூலம் நண்பர்கள், ஒத்த கருத்துள்ளவர்கள் தங்களுக்கென்று ஒரு SMS சேனலைத் தொடங்கலாம்.ஏற்கனவே பல உபயோகமுள்ள சேனல்கள் உள்ளன.உதாரணத்திற்கு: NDTV National News, Business Line etc.சுனாமி, புயல் எச்சரிக்கை போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.

• நாம் அனுப்பும் செய்தியை அலைபேசி, கூகுள் இணையதளம், நம் இணையத்தின் RSS Feed மூலம் அனுப்பலாம்.

• நாம் சேர்ந்துள்ள SMS சேனலில் நம்முடைய மொபைல் எண் மற்றவர்களுக்குத் தெரியாது.

• நாம் SMS பெற நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு: 05:00 AM to 10:00 PM

• தேவையான SMS ன் எல்லையை வரைமுறை செய்யலாம்.உதாரணத்திற்கு: Max SMS per Day:50

• எந்த நேரத்திலும் SMS சேவை பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்.

கூகிள் SMS சேனலில் இணையும் முறை:

இணையத்திற்கு செல்லவும்.

• Nick Name செட் செய்யவும்

• மொபைல் எண் கொடுக்கவும்

• மொபைலுக்கு வரும் Code டைப் செய்யவும்

• விருப்பமான SMS சேனலுக்கு Subscribe செய்யலாம்.Eg:Saaral

கூகிள் SMS சேனலில் இணையுங்கள். Upto Date ஆக இருங்கள்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com