Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

பத்மஸ்ரீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்மஸ்ரீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 பிப்ரவரி 2009

விவேக்கே... விருதை வீசி எறியுங்கள்! -கங்கை அமரன் ஆவேசம்!

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ§க்கு அஞ்சலி கூட்டம் ஒன்றை நடத்தியது ப்ரியாவிஷன்! ஆர்.எம்.வீரப்பன், ராதாரவி, எஸ்.வி.சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் கங்கை அமரனின் பேச்சுதான் கடா முடா...! சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விவேக்கை ஒரு பிடி பிடித்தார். 'கொடுக்க வேண்டியதை கொடுத்து பட்டத்தை வாங்கிக்கிறாங்க. அந்த கமிட்டிகளில் உள்ளவர்கள் பலரை எனக்கு தெரியும். கிட்டதட்ட ஏழு லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்குகிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு தொகை போகிறது என்பதும் எனக்கு தெரியும். இப்போது நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு வந்ததும் விவேக் என்ன செய்திருக்க வேண்டும்? நகைச்சுவைக்கே Vivekஅரசன் நாகேஷ். அவருக்கு கொடுக்காத இந்த விருது எனக்கு வேண்டாம்னு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். பட்டம் பட்டம்னு ஏன்யா இப்படி அலையுறீங்க? கடைசியா விவேக்கிற்கு சொல்லிக் கொள்கிறேன். இப்பவும் ஒண்ணும் கொறஞ்சு போயிடல. இந்த பத்மஸ்ரீ விருது எனக்கு வேணாம். எங்க நாகேஷ் ஐயாவுக்கு கொடுக்காத பட்டமும் விருதும் வேணாம்னு தைரியமாக மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அறிவிக்கனும். விவேக்கே... விருதை வீசி எறியுங்கள். அப்படி செஞ்சீங்கன்னா, இந்த திரையுலகத்தை திரட்டி நானே உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கிறேன்' என்றார் கங்கை அமரன். இதெல்லாம் விவேக்கின் காதில் விழாமலா இருக்கும்?

25 ஜனவரி 2009

2009-ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். குடியரசு தினத்தன்று இவ்விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். இவ்வாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, மத்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் மற்றும் பிரபல சுற்றுச்சூழல் அறிஞர் சுந்தர்லால் பகுகுணா, மிஷனரிஸ் ஆப் சாரிட்டி சிஸ்டர் நிர்மலா, இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 10 பேர் பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பத்திரிக்கையாளர் அபினவ் பிந்த்ரா, சாம் பிட்ரோடா,சேகர் குப்தா, லெப்டினட் சதீஷ் நம்பியார், சி.கே.பிரகலாத், சிற்பி கணபதி ஸ்தபதி, நடனக் கலைஞர்கள் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், பத்திரிகையாளர் சேகர் குப்தா, எழுத்தாளர் ஜெயகாந்தன், விஞ்ஞானி காஞ்சிவரம் ரங்காச்சாரி, சமூக சேவகி சரோஜினி வரதப்பன் உள்ளிட்ட 30 பேர் பத்மபூஷன் விருதைப் பெறுகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் பச்சன், அக்ஷய் குமார், மகேந்திரசிங் தோனி, ஹர்பஜன் சிங், பங்கஜ் அத்வானி, ஹாக்கி வீரர் பல்பிர் சிங் குல்லார், பாடகர் உதித் நாராயணன், நடிகர்கள் விவேக், திலகன், இசைப் பாடகி அருணா சாய்ராம், எழுத்தாளர் ஐராவதம் மகாதேவன், சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, பி.ஆர்.கிருஷ்ணகுமார், டாக்டர்ஆர்.சிவராமன், டாக்டர் சேக்காதர், நூர்தின், ஏ.சக்திவேல் உள்ளிட்ட 93 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com