Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

நயன்தாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நயன்தாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 மார்ச் 2009

கிளாமரில் தாராளமயமாக்கல்:நயன்தாரா பேட்டி

நயன்தாரா தமிழ், தெலுங்கில் 22 படங்களை தாண்டி விட்டார். ஐதராபாத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். கிசுகிசுக்களில் அதிகம் சிக்குகிறீர்களே? நான் அதுபற்றி கவலைப்படுவதே இல்லை. ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என் மனதை காயப்படுத்தின. இப்போது பக்குவப்பட்டு விட்டேன். வேலையற்றவர்கள் தான் கிசு கிசுக்களை பரப்பி வீண் வேலையில் ஈடுபடுகிறார்கள், எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே அதை பொருட்டாக நினைப்பதில்லை. நான் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறேன். அதுவும் இது போன்ற கிசுகிசுக்களுக்கு காரணமாக இருக்கலாம். நீங்க அதிர்ஷ்டக்காரியா? அதிர்ஷ்டக்காரிதான். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் தமிழ் படங்களில் பிசியாக நடிக்கிறேன். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடிக்கிறேன். கிளாமரில் ஏன் இத்தனை தாராளமயமாக்கல்? இது கிளாமர் உலகம். சினிமா தொழில் என்பதும் கிளாமர்தான். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள். கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற கட்டுப்பாடு என்னிடம் இல்லை. தயாரிப்பாளர், இயக்குனர், என் கேரக்டர் போன்றவற்றை பார்த்து படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்கிறேன்.
கதைகளில் ஹீரோக்களுக்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? உண்மைதான். கதாநாயகர்களுக்குதான் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. அதுமாதிரி கதைகளைத்தான் படமாக்குகிறார்கள். பாடுவது ஆடுவது மட்டுமே இருக்கும் கேரக்டர்களை நான் ஏற்பது இல்லை. எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பும் முக்கியத்துவமும் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடனும் மலையாளத்தில் பாடிகாட் படத்திலும் நடிக்கிறேன். ஏற்கனவே நான் நடித்த டொவன்டி டொவன்டி மலையாள படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக அப்படத்தை எடுத்தனர். அந்த படம் வெற்றி பெற்றது சந்தோஷம். என்ன சாதித்துவிட்டீர்கள்? அப்படி வருத்தம் எனக்கு இருக்கு. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுக்காத நடிகை என்ற பெயர் வாங்கி இருக்கிறேன். அது நல்ல விஷயம்.

07 பிப்ரவரி 2009

நயன்தாராவுக்கு எதிரான தடை நீக்கம்...

நயன்தாரா அட்வான்ஸ் தொகையை திருப்பித்தந்துவிட்டார். அதனால் அவரை தமிழில் இனி ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இனி அவரை தமிழில் ஒப்பந்தம் செய்யலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நயனின் கால்ஷீட்டை பெற்றுவிட வேண்டும் என்று ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்று ஓகே வாங்கினார் இயக்குநர் லிங்குசாமி.

பருத்திவீரன் கார்த்திக் உடன் பையா படத்தில் நடிப்பதாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். லிங்குசாமியின் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

நயன்தாராவுக்கு இப்படத்திற்காக அட்வான்சாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நயனிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளச்சொல்லி நயமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஸ்.

நீங்களே கூப்பிட்டு ஒரு கோடி என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் குறைக்கச்சொல்கிறீர்கள் என்று கேட்க, அப்போது இருந்த நிலைமை வேறு. இப்போதிருக்கும் நிலைமை வேறு. பில்லா படம் நன்றாக ஓடியது. அதனால் உங்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. இப்போது ஏகன், சத்யம், குசேலன் படங்கள் பெரிதாக போகாததால் பெரிதாக மார்க்கெட் இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லியதாக கூறப்படுகிறது.

இதற்கு நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த சம்பள பிரச்சனையில் கால்ஷீட் தேதிகள் கிழிந்து கொண்டே வந்ததால் நயன்தாரா ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்த கால்ஷீட் தேதிகள் முடிந்து விட்டது. அதனால் இனி நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார்.

லிங்குசாமி, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை புக் செய்து ஷூட்டிங் நடத்தி வருகிறார். ஆனாலும், வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தர வேண்டும் என்று சுபாஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து கூட்டு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தின.

அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தப்படி, தயாரிப்பாளரிடம் இருந்து நடிகர்-நடிகைகள் அட்வான்ஸ் பணம் வாங்கிய பிறகு சம்பந்தப்பட்ட படத்தில் ஒரு நாளாவது நடித்து இருந்தால் அந்த பணத்தை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டியதில்லை.

ஆனால், ஒரு நாள் கூட நடிக்காத பட்சத்தில் அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி தந்து விட வேண்டும்.

அதன்படி தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடிகை நயன்தாரா ஆகிய இருவருக்கும் இடையிலான கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் நயன்தாராவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனினும், அட்வான்ஸ் திரும்ப தர முடியாது என்றும் தான் கொடுத்த தேதிகளை தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லை என்றும் பத்திரிகைகள் வாயிலாக பேட்டியாக நயன்தாரா தெரிவித்தார். இதையடுத்து இரண்டு சங்கங்களின் கூட்டு கூட்டத்தில் விரிவாக பேசி எடுத்த முடிவின்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்துவிடுமாறு நயன்தாராவிடம் கூறப்பட்டது.

இதுவரை அவர் திரும்ப கொடுக்கவில்லை. அது குறித்து கேட்டபோது, `நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர மாட்டேன்` என்று தகவல் அனுப்பி இருக்கிறார். எனவே, மீண்டும் இரண்டு சங்கங்களின் கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, நடிகை நயன்தாராவை இனிமேல் தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் மற்ற மொழி படங்களில் அவரை நடிக்க வைக்க கூடாது என அந்தந்த மொழி தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டுக் கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை தயாரிப்பாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சனை குறித்து நயன்தாரா, ‘பையா படத்துக்காக அட்வான்ஸ் வாங்கியது உண்மை. அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர முடியாது என்று சொன்னதும் உண்மை.

அதே மாதிரி இந்த படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளை தயாரிப்பாளர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் உண்மை.

பையா படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் அந்த தேதிகளில் மற்ற பட வாய்ப்புகளை மறுத்து விட்டு காத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பை தொடங்கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு.

இந்த பிரச்சனையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இதுவரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லை. அவர்கள் அழைத்தால் என் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன்’ என்று தனது தரப்பு நியாயத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தயாரிபாளர்களுடனான பேச்சுவார்த்தையில் நயன் அட்வான் தொகையை திருப்பி தந்துவிட்டார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது.

05 பிப்ரவரி 2009

தென்னிந்திய மொழிகளில் நடிக்க நயன்தாராவுக்கு தடை!!

டிகை நயன்தாராவை இனி எந்தத் தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளன.

லிங்குசாமி இயக்கும் புதிய படம் பையா. இதை அவருடைய சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ், திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதில் நாயகனாக பருத்திவீரன் கார்த்தி நடிக்கிறார். நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து, அதில் ரூ.15 லட்சம் முன்பணமாகவும் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ்.

இந்நிலையில், தான் கொடுத்த கால்ஷீட் தேதிகளின்படி படப்பிடிப்பைத் தொடங்கவில்லை; அதனால் பையா படத்திலிருந்து விலகுகிறேன் என நயன்தாரா தெரிவித்தார். படத்தில் நடிக்காததால் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டது தயாரிப்பு தரப்பு. ஆனால் அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்றும், இத்தனை நாட்கள் இழுத்தடித்தற்காகவும், கால்ஷீட்டை வீணடித்தற்காகவும் சரியாகப் போய்விட்டது போய் வாருங்கள் என்று கூறிவிட்டார் நயன்தாரா.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்படி இரண்டு சங்கங்களின் கூட்டமைப்பும்ஆலோசனை நடத்தியது.

ஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடமிருந்து நடிகர்-நடிகையர் முன் பணம் வாங்கியிருந்து, அதில் ஒரு நாளாவது நடித்திருந்தால் அந்த முன் பணத்தைத் திருப்பித் தரவேண்டியதில்லை என இரு சங்கங்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் நயன்தாரா இந்தப் படத்தில் ஒரு நாள் கூட நடிக்கவில்லை.

இதை மேற்கோள்காட்டி, தான் வாங்கிய முன் பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திருப்பித் தர வேண்டும் என இரு சங்கங்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நயன்தாராவிடம் தெரிவித்தன. ஆனால் காலக்கெடு நெருங்கியும் அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர மாட்டேன் என நயன்தாரா தகவல் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து நயன்தாராவை இனி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது; மேலும் மற்ற மொழிப் படங்களிலும் அவரை நடிக்க வைக்கக் கூடாது என அந்தந்த தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் இணைந்து புதன்கிழமை நடத்திய கூட்டுக் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவை அனைத்து தென்னிந்திய மொழிப் பட தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ளதாகவும், இதனை அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

என்னிடம் விசாரிக்காமலேயே தீர்ப்பா?- நயன்

இந்தப் பிரச்னை நயன்தாராவிடம் கேட்டோம்:

படத்துக்காக அட்வான்ஸ் தொகையை வாங்கியது உண்மைதான். அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தர மாட்டேன் என்று கூறியதும் உண்மை. நான் மறுக்கவில்லை. இந்தப் படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளைத் தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லை.

எனக்கு வந்த மற்ற பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு இந்தப் படத்துக்காகக் காத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பையே தொடங்கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு. இதுகுறித்து பல பத்திரிகைகளில் செய்திகளும் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இதுவரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லை. என் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன், என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

எதனால் பிரச்சினை?

நயன்தாரா இப்போது தமிழில் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.1 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

பையா படத்தின் உண்மையான பிரச்சினை இந்த அட்வான்ஸ் கிடையாது, சம்பள விவகாரம்தான்.

இந்தப் படத்துக்காக நயன்தாராவுக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.1.10 கோடி என்கிறார்கள். ஆனால் நயன்தாரா நடித்த 3 படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. எனவே பேசிய சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர் கேட், நயன் அதற்கு மறுக்க, பிரச்சினை இப்போது ‘ரெட்கார்டில்’ வந்து நிற்கிறது!

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com