Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

சுட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 ஏப்ரல் 2009

இணையத்தில் உலவும்போது கேடு விளைவிக்கும் தளங்களைக் கண்டறிய

இணையத் தளங்களில் உலா (surfing) வரும்போது எவையெல்லாம் நல்ல தளங்கள், எவை கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறியோம். ஏதேனும் தெரிந்திராத, அறிந்திராத (unknown) தளத்தைப் பார்வையிடும்போது எப்போதுமே ஒரு பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்திருப்போம். ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் நமது பார்வைக்கு நல்ல தளங்களாகத் தெரிகின்றன. ஆனாலும் அவற்றின் உள்ளே குறும்புசெய்யும் விசமத்தனமான, கேடு விளைக்கக் கூடிய நிரல்களை எழுதிப் பொதிந்திருப்பார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம். நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும். உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம். மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது - அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும். நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை - என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம். நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம். உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை. இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.
McAfee Site Advisor LinkScanner Online Norton Safe Web Anti-malware tool by Google Web Of Trust தொடர்புடைய சுட்டி : WOT (Web Of Truest) பற்றி மேலதிக தகவல்களுக்கு இந்த Firefox உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க பதிவைக் காண்க.

08 பிப்ரவரி 2009

கணினியின் இயக்கத்தை எப்போது நிறுத்துவது?

கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்கு Shut down அழுத்தியே பழக்கப்பட்டிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக அதை இன்னும் 6 மணி நேரம் கழித்துத் தானாகவே நிறுத்திவைக்க உத்தேசிக்கிறோம். அதற்காக ஏதேனும் scheduler எழுதலாம். இந்தமாதிரி நேரங்களில் நமக்கு உதவுவதற்காகவே Shutter எனப்படும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்பாட்டுக்கு எளிதாகவும், குறைந்த நினைவகத்தை ஆக்கிரமிப்பதாகவும் உள்ளது இந்த மென்பொருள். நிறுத்திவைக்க (shutdown), மறுபடி துவக்க(reboot), வேறு பயனருக்கு மாற(logoff), திரையை மட்டும் அணைக்க (monitor turn off ) எனப் பல செயல்களை இதன் மூலம் செய்ய இயலும். http://den4b.com/downloads.php?project=Shutter

13 ஜனவரி 2009

1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

இன்றைய இணைய உலகில் மின்னஞ்சலும், அரட்டையும் - நூற்றாண்டின் மிகச்சிறந்த ஊடகங்களாகும்.
ஒலி,ஒளி,புகைப்படம்,ஆவணங்கள் போன்றவற்றை தினமும் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இவை பயன்படுகின்றன.
ஆனால் மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மேல் இணைப்புகளை ஏற்பதில்லை.
மின்னஞ்சலுடன் இணைக்கப்படும் இணைப்புகளின் கொள்ளளவுக்கு வரையறை விதித்திருக்கிறார்கள்.
இதனால் என்ன செய்கிறோம் ஒரு பெரிய அதிகமான கொள்ளளவு கொண்ட கோப்பு ஒன்றை சிறு சிறு கூறுகளாக்கி அதைத் தனித்தனியாக ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்புகிறோம்.
அல்லது ஏதேனும் ஒரு கோப்புப்பகிர்வான் தளத்தில் ஏற்றி அதன் சுட்டியை எதிர்முனையில் இருப்பவரிடம் தருகிறோம்.
1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?இவ்வளவு பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு புதிய இணையத்தளம் புறப்பட்டுள்ளது.http://www.dropsend.com/
இதன் மூலம் 1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் அப்படியே மின்னஞ்சலில் இணைப்பாக இணைத்து அனுப்ப இயலும்.
தொடரும் .....
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com