25 மார்ச் 2009
சம்பளத்தை ஏற்றினார் சரண்யா!
வெண்ணிலா கபடி குழு ஹிட் ஆகி விட்டதால் டக்கென்று தனது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் க்யூட் நாயகி சரண்யா மோகன்.
இளம் மலையாள நடிகையான சரண்யா மோகன், தணுஷின் யாரடி நீ மோகினி படம்
மூலம் ஹிட் ஆனவர். அதில் நயனதாராவின் தங்கையாக வந்து, தனுஷை டாவடிக்கும் பாத்திரத்தில் அசத்தினார்.
இந்தப் படத்திற்குப் பின்னர் சரண்யாவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள். அதில் வெண்ணிலா கபடிக் குழுவில் தனி நாயகி வேடம். படம்
சூப்பர் ஹிட் ஆகி விடவே சரண்யா ராசி நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டார்.
இதைப்ப பயன்படுத்தி தற்போது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் சரண்யா.
தற்போது படத்திற்கு ரூ. 15 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். வெண்ணிலாவுக்கு முன்பு வரை அவரது சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தானாம்.
வெண்ணிலா ஹிட் ஆனதால்தான் இந்த சம்பள உயர்வாம்.
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் கவுன்சில் கூட்டத்தில், நடிகர் நடிகைகளின் சம்பளத்தைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதேபோல படச் செலவுகளையும் சுருக்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. பிலிம் ரோலை வேஸ்ட் ஆக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக கோரப்பட்டது.
இதன் காரணமாக நயனதாரா, திரிஷா
போன்ற பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் ரூ.30 லட்சம் வரை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளனராம்.
இந்த நிலையில் நேற்று வந்த சரண்யா மோகன் சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியிருப்பது அவருக்கே வினையாகி விடலாம் என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.