Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

04 பிப்ரவரி 2009

யு.எஸ்.பி பாதுகாப்புக்கான இலவச மென்பொருட்கள்....!

முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்புஅவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம்கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் தம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள்எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில் இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாககணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில்வினையை விதைத்துவிடலாம்.

USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:

1. உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு பென்டிரைவை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.
USB Firewall Download Link 308 2. Tweak UI எனும் மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள். TweakUiPowertoy Download link 87 3. ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள் பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன் செய்துகொள்ள உதவும். Portable USB Download Link 114 4. உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். USB Drive Disabler Download Link 52 5. சில பிரபல ஃப்ளாஷ் டிரைவ் வைரஸ்களை,வார்ம்களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம். Flash Disinfector Download Link 66

நன்றி -தேன்தமிழ்

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com