Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

03 ஆகஸ்ட் 2011

ஹர்பஜன் - உலக சாதனை??? யோவ் காமெடி பண்ணாதீங்கய்யா

ஜூலை 27 குமுதத்தில் வந்திருக்கும் பேட்டி ஒன்றில் - டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர் முத்தையா முரளிதரன். ஆனால் இன்று அவர் தூக்கத்தையே ஒருவர் கெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங்கைப் பார்த்து முரளிதரன் பயப்படுவதற்குக் காரணம் சாதனை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற முரளிதரனின் சாதனையை ஒருவர் வீழ்த்த முடியும் என்றால் அது ஹர்பஜன் சிங்காகத் தான் இருக்க முடியும். தனது 96 வது டெஸ்ட் போட்டியிலேயே 404 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார் . இது இப்படியே தொடர்ந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை நிச்சயம் முரளிதரனிடம் இருந்து இவர் தட்டிப் பறிப்பார். கூக்லி, தூஸ்ரா என்று சுழற்பந்து வீச்சில் உள்ள வகைகளில் புதிதாக 'தீஸ்ரா' என்ற வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஹர்பஜன் சிங். ஸ்பின் பவுலிங்கில் பவுன்சர் வீசும் முறைதான் தீஸ்ரா. இந்த 'தீஸ்ரா' முரளிதரனின் சாதனையை பாஜி முறியடிக்க ஆயுதமாக இருக்கும் என்று நம்புவோம். டால்மேன் ---------------------------------------------------------------
கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் கூடுதலாக வெட்டியாகப் பொழுதைக் கழித்தவேளையில் கையில் கிடைத்த நாளேடுகள், சஞ்சிகைகள் எல்லாவற்றையும் வாசித்துத் தீர்த்தேன்..
அதில் குமுதம் கொஞ்சம் விசேடம்... அதிலே இருந்த ஹர்பஜன் சிங்கின் பேட்டி ஒன்று தான் மேலே தந்திருப்பது.. அடப் பாவிப் பயலே.. இப்படியும் ஒரு கணிப்பா? எப்போது அணியிலிருந்து தூக்கப்படுவார் என்று இருக்கும் ஒரு சப்பை பந்துவீச்சாளருக்கு இப்படியொரு சப்பறமா? (இலங்கைக் கோயில்களில் சாமிகள் பயணிக்கும் அலங்கார வாகனம்)
இங்கிலாந்து தொடரை ஒரு தடவை தானும் பார்க்காதவராக இருந்திருப்பாரோ இதை எழுதிய டால்மேன்? ஹர்பஜன் - சுழல் பந்துவீச்சாளர் என்று சேர்த்து எழுதினால் தான் இவர் சுழல் பந்து தான் வீசுகிறார் என்று இப்போது சொல்ல முடிகிறது. இந்திய அணிக்குள் நுழைந்தால் இவரை ஓரம் கட்டிவிடக் கூடியதாக மூன்று திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் எப்போது வாய்ப்பு எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அஷ்வின், மிஸ்ரா, ஓஜா.. அடுத்த தொடர்களே நிச்சயமில்லாத முப்பது பராயம் தாண்டிய ஒரு பந்துவீச்சாளர் இன்னும் நானூறு விக்கெட்டுக்களை எடுப்பதா? கடைசி மூன்று வருடங்களில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்த பாஜி, கைப்பற்றியுள்ள விக்கெட்டுக்கள் 92. அதிலும் சராசரி 36.80. இப்போதைய தரவுகளை வைத்துப் பார்த்தால் முரளியின் சாதனையை உடைக்க ஹர்பஜன் இன்னும் இதேயளவு டெஸ்ட் போட்டிகளை விளையாட வேண்டும்.. அதற்கு எட்டு வருடங்களாவது வேண்டும்.. முடிகிற காரியமா? ஹர்பஜனின் தரவுகள்.....
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests9818027651130844068/8415/21732.222.8368.116255
year 2009610306.047875296/637/10230.172.8563.310
year 20101221612.01031750435/598/12340.692.8585.310
year 2011612259.443761207/1207/19538.052.9377.910
விரிவாக அலசி ஆராய்வதற்கு.. இந்தப் பதிவை வாசித்த பின் கீழ்க்காணும் சுட்டியை சொடுக்குங்கள்..
என்னைப் பொறுத்தவரை ஹர்பஜன் ஐந்நூறு என்ற இலக்கை அடையவே தவழவேண்டியிருக்கும்.. அதன் பின் சக இந்திய சுழல் பந்துவீச்சாளர்அணில் கும்ப்ளேயின் சாதனை.. அதற்கே வாய்ப்புக்கள் குறைவு.. இதற்குள் முரளியின் 800.. எதோ பழமொழி சொல்வார்களே.. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன்.... அப்படி இருக்கு இந்த குமுதம் விஷயம்.. சுழல் பந்துவீச்சாளர்கள் பொதுவாக முப்பது வயதைத் தாண்டிய பின்னரேயே முதிர்ச்சியும் பக்குவமும் அடைவது வழமை.. அண்மைக்கால சுழல்பந்து மன்னர்களான முரளிதரன், வோர்ன், கும்ப்ளேஎன்று அனைவருமே தம் முப்பது வயதுக்கு பிறகு விக்கெட்டுக்களை மளமளவென எடுத்தோர் தான். ஆனால் அவர்கள் ஹர்பஜனின் இப்போதைய நிலைபோல எந்தவொரு கட்டத்திலும் அணியில் இடம் பறிபோகும் அபாயத்தில் இருக்கவில்லை. அடுத்து இப்போது ஹர்பஜன் சிங் எடுத்த விக்கெட்டுக்களில் பாதியளவைக் கூட எடுத்திராத இங்கிலாந்தின் கிரேம் ஸ்வானைத் தற்போது விளையாடும் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக விமர்சகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். ஹர்பஜன் சிங்கின் பெறுபேறுகளைப் பார்த்தால் அதுவும் நியாயம் என்றே தோன்றும்..
சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் தவிர வேறு எந்த அணிகளுக்கு எதிராகவும் இவரது டெஸ்ட் பந்துவீச்சு சோபிக்கவில்லை.. முன்பு ஆஸ்திரேலியாவின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அண்மைக்காலத்தில் அவர்களுடனும் திணறுகிறார். இந்தியா மற்றும் மிகப் பலவீன அணிகளான நியூ சீலாந்து, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் தவிர பாஜ்ஜியின் பாச்சா வேறு எந்த நாட்டு ஆடுகளங்களிலும் பலிக்கவில்லை. பாகிஸ்தானில் வீசிய 486 பந்துகளில் விக்கெட்டுக்கள் இல்லை. இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஹர்பஜனின் பந்துவீச்சு சராசரி 45க்கும் மேல்.. அதற்குள் அன்றூ சைமண்ட்ஸ் 'குரங்கு' சர்ச்சை, ஸ்ரீசாந்த கன்னத்தில் அறை சர்ச்சை, அண்மைய விஜய் மல்லையா + தோனி விளம்பர சர்ச்சை என்று இனியும் மாட்டிக் கொண்டால் இன்னும் விளையாடும் ஆயுள் குறையலாம்.. இப்போதைக்கு விளையாடும் எவராலும் எட்ட முடியாத விக்கெட் உலக சாதனையை ஹர்பஜன் தான் எட்டக் கூடியவர் என்று ஒரு மாயையை சில இந்திய ஊடகங்கள் ஏற்படுத்தக் காரணமும் முரளிதரன்.. முரளிதரன் எவ்வளவுக்கெவ்வளவு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரோ, எவ்வளவுக்கெவ்வளவு இரக்க குணம் படைத்த மனிதரோ, அவற்றை விட அதிகமான ஓட்டை வாயுடையவர். இவர் வாயை சும்மா கிளறினாலே ஸ்கூப் செய்திகள் பலருக்கும் கிடைத்துவிடும்..
கழக மட்டத்தில் விளையாடும் நேரம் முதல் இலங்கைத் தேசிய அணியில் இடம் கிடைத்து நீண்ட காலம் ஒரு ஊமை போலவே மிக அமைதியாக இருந்ததாலோ என்னவோ, டரேல் ஹெயார் சர்ச்சைக்குப் பிறகு பேட்டிகள் கிடைக்கும் போதெல்லாம் வெளுத்துவாங்கிப் பக்கங்களையும் வம்பு கேட்கும் காதுகளையும் நிரப்ப ஆரம்பித்தார். அவற்றுள் பல அந்தந்தக் காலகட்ட தலைப்புச் செய்திகளாகவும் மாறிப் போயின.. முரளியின் சில பிரபல உளறல்கள்.. அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூற்றுக்கள்..
I am not a captaincy material - ஆஸ்திரேலியாவில் வைத்து வழங்கிய பேட்டி ஒன்றில்..
அடுத்து தலைமைப் பதவி வழங்கப்படலாம் என்றிருந்த நிலையில் இவரது பேட்டியும் அதற்கு மேலதிகாம தனக்குப் பொறுப்பு சுமக்க விருப்பமில்லை என்ற முரளியின் 'மனம் திறந்த' அறிக்கையும் வந்தது. இதே போல மிகுந்த தன்னடக்கத்துடன் ஷேன் வோர்ன் தன்னை விடவும் சிறந்த ஸ்பின்னர் என்று முரளி சொன்னதும் உண்டு. இதே போலத் தான் தான் ஓய்வு பெற்ற பின் கொடுத்த பேட்டியிலும் சும்மா இருக்க முடியாமல் "எனது சாதனையை உடைக்கக் கூடியவர் ஹர்பஜன் சிங் தான்" என்று கூறிவிட்டார். வேறு யாரும் கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரியாததால் கிட்ட இருந்த (நாடுகளின் தூரத்தை நான் சொல்லவில்லை) சிங்கை சொல்லிவிட்டாரோ? இது தான் இந்திய ஊடகங்கள் அடுத்த என்று ஹர்பஜனை உசுப்பேற்ற காரணம்.. ஆனால் முரளிதரனின் அண்மைய இரு ஊடகப் பேட்டிகள் கிளப்பிய பரபரப்பும் அனைவரும் அறிந்ததே.. இலங்கை கிரிக்கெட் வீரர்களை IPL 2011 இல் விளையாட விடச் சொல்லி.. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இலங்கைக்கான சுற்றுலாவுக்கு செல்லக் கூடாது என்று எதிர்ப்பு அங்கு வாழும் தமிழரால் எழுப்பப்பட்ட போது பேசாமல் இருந்திருக்கலாம்.. தேவையற்று கருத்து சொல்லப் போய் கடும் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொண்டார். முரளிக்கும் பேட்டிகளுக்குமான சர்ச்சை தொடர்கிறது.. இதனால் இவர் சத்தமில்லாமல் செய்கின்ற பல நல்ல காரியங்களும் தெரியாமலேயே போய்விடுகின்றன.. ஆனால் ஒரேயொரு காரியத்தை இவர் செய்யாமல் விட்டதற்குப் பாராட்ட விரும்புகிறேன்.. கிளிநொச்சியில் அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு மைதானத்தைத் திறந்து தமிழ் மக்களுக்கு அன்பளிப்பு செய்தாரே.. (இந்தியப் பின்னணிப் பாடகர்கள் இசை நிகழ்ச்சிக்காக வந்து விமான நிலையத்துடன் திரும்பிப் போனதும் இதே மைதானத் திறப்பு விழாவுடன் நடக்க இருந்த பிரசாரக் கூட்டத்துக்குத் தான்) அந்த மைதானத்துக்கான அதிக செலவைப் பொறுப்பேற்றவர் முரளி. ஆனாலும் அரசியல்மயப்படுத்தப்பட்ட விழாவை முரளி தவிர்த்ததற்கே இந்தப் பாராட்டுக்கள்.... இன்னோர் விஷயம்.. தீஸ்ரா... இது ஏதோ ஹர்பஜன் கண்டுபிடித்த புதுவித அணுகுண்டு, ஐதரசன் குண்டு என்று குமுதம் கட்டிவிட்ட கதையும் ஆகாசப் புழுகு.... ஏற்கெனவே தீஸ்ரா வந்தாச்சு... முரளிதரன், ஸ்வான், இலங்கையின் சுராஜ் ரண்டிவ், ஏன் இந்தியாவின் இளைய நட்சத்திரம் அஷ்வினும் கூட இந்த தீஸ்ராவைப் பயன்படுத்துகிறார்கள்.. ஹர்பஜன் பயன்படுத்தியதாக நான் பார்த்ததும் இல்லை;அறிந்ததுமில்லை. ஆனால் இந்து சுழல் பந்துவீசும் பவுன்சர் என்று குறிப்பிட்டது தவறு.. நேராக சென்று திடீரென அதிக கோணத்தில் திரும்பும் பந்து இது. அதிகமாகப் பாவனையில் இல்லாததால் பலரும் இதுபற்றி அறிந்திலர். ஆனாலும் ஹர்பஜன் சிங் முரளியின் உலக சாதனையை முறியடிப்பார் என்பது.... ஹா ஹா ஹா.. அண்ணே குமுதம் டால்மேன் அண்ணே.. சும்மா ஜோக் அடிக்காதீங்க...
(ஒரு தடவைக்கு நான்கு தடவை இது நகைச்சுவை/கற்பனைப் பேட்டியா என்றும் பார்த்துவிட்டேன்) யாராவது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் பந்துவீசி பார்த்தீங்க? பேசாமல் அடுத்த போட்டியில் சேவாக்(விளையாடினால்), ரெய்னா, யுவராஜ் ஆகியோரின் சுழலை நம்பி இறங்கலாம்.. ஒன்றிரண்டு விக்கேட்டுக்களாவது விழும்....
Publish Post
THANKS-LOSHAN in kalam

194 வது நாடாக தமிழீழம் மலரட்டும்: லண்டனில் சத்தியராஜ் !

உச்சிதனை முகர்ந்தால் - தமிழீழத்தின் 13 அகவைச் சிறுமி ஒருத்தி, கொடிய சிறீலங்கா படைகளின் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் கதை பற்றிய திரைப்படம். இந்த திரைப்படத்தின் இறுவட்டு வெளியிட்டு வீழா (31.07.2011) லண்டன் Fஐர்fஇஎல்ட் அரங்கத்தில் இடம்பெற்றது. ஈழத்துப் போராளி ஒருவர் தமிழ்நாடுட்டுக்குத் தப்பிச் சென்று மருத்துவம் பெறும் �காற்றுக்கென்ன வேலி� கதையை திரைப்படமாக்கி, இந்திய திரைபடத் தணிக்கைக்குழுவுடன் போராடி வெளியிட்ட இயக்குனர் புகழேந்தி தங்கராஜனின் இயக்கத்திலும், தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐயாவின் பாடல் வரிகளிலும், இசையமைப்பாளர் டி.இமானின் இசையிலும் வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் சத்தியராஜ், நாசர், நடிகை சங்கீதா, சிறுமி நீநிகா ஆகியோர் நடித்துள்ளனர். நோர்வேயில் வசிக்கும் ஈழத்துத் தயாரிப்பாளர்களின் முயற்சியில் வெளிவரவுள்ள உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் இறுவட்டு வெளியிட்டு வீழாவில் தமிழின உணர்வாளர், நடிகர் சத்தியராஜ், மற்றும் அண்மையில் சிறீலங்கா சென்று மகிந்த அரசாங்கத்தின் பரப்புரைக் கூட்டத்தில் பாட மறுத்து, தமிழ் நாடு திரும்பிய பாடகர் கிறிஸ் ஆகியோர் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் நபர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள இளவரசிக்கு சிறப்பு பயிற்சி

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்மை திருமணம் செய்த பின்னர் கேத் மிடில்டனுக்கு அரசக் குடும்ப அந்தஸ்து கிடைத்து உள்ளது. பல ஆயிரம் ரசிகர்களும் உருவாகி உள்ளனர்.

அதே நேரத்தில் அவருக்கு தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் அச்சுறுத்தலும் உள்ளது. ஆட்கடத்தல் நபர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள 29 வயது கேத்க்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எஸ்.ஏ.எஸ் எனப்படும் சிறப்பு பயிற்சி கேத் மிடில்டனுக்கு அளிக்கப்படுகிறது. கேம்பரிட்ஜ் இளவரசியான கேத் மிடில்டனுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியான ஆள் கடத்தலிலிருந்து தப்பிக்க கடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிரிட்டன் றொயல் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், அபாயகரமான நாடுகளில் பணியாற்றும் பிரிட்டன் நபர்களுக்கு இந்த சிறப்பு எஸ்.ஏ.எஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

எதிர்பாராத நிகழ்வுகளை எதிர் கொள்வதற்கு தனி நபர் பாதுகாப்பு பயிற்சியை எஸ்.ஏ.எஸ் அல்லது எம் 15 உறுப்பினர்கள் அளிக்கிறார்கள். இந்தப் பயிற்சி பல மாதங்கள் நீடிக்கும்.

கேத் மிடில்டனுக்கு நீண்ட கால பயிற்சி அளிக்கப்படுகிறதா? அல்லது குறுகிய கால பயிற்சியா என்பது தெரியவில்லை. அரசக் குடும்பத்தை சேர்ந்த ராணி, இளவரசி டயானா இளவரசர் வில்லியம், இளவரசர் சார்லஸ் ஆகியோரும் இந்த விசேட பயிற்சி எடுத்துள்ளனர்

02 ஆகஸ்ட் 2011

சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

Lawyers protest against actor santhanam
தெய்வத்திருமகள் படத்தில் வக்கீல்களை இழிவுபடுத்தியதாக கூறி காமெடி நடிகர் சந்தானத்திற்கு எதிராக சென்னையில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், படத்தில் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பல்வேறு பட தலைப்பு பிரச்சனைகளுக்கு பின்னர், ஒருவழியாக விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சந்தானம் உள்ளிட்டவர்கள் நடித்த தெய்வத்திருமகள் படம் கடந்தமாதம் ரிலீசானது. விஜய் இயக்கி இருக்கும் இப்படம் நல்ல வசூலையும், அனைவரின் பாராட்டையும் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு சிக்கல் கிளம்பி இருக்கிறது. அதாகப்பட்டது, தெய்வத்திருமகள் படத்தில் சந்தானம் வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்துள்ளதாக கூறி சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து வக்கீல்கள் கூறுகையில், வக்கீல் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ளார். இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காட்சிகளையும் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தால், எழும்பூர் கோர்ட் ஒரே பரபரப்பாக இருந்தது.

இந்திய அணிக்கு இன்னொரு "அடி * பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டம் * இங்கிலாந்து மீண்டும் அபாரம்

நாட்டிங்காம் டெஸ்டில் டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி, இங்கிலாந்திடம் 319 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. "ஆல்-ரவுண்டராக அசத்திய டிம் பிரஸ்னன், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். தற்போது தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, "ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிடம் இருந்து "நம்பர்-1 இடத்தை பறிக்க காத்திருக்கிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 221, இந்தியா 288 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 441 ரன்கள் எடுத்திருந்தது. பிரஸ்னன் 90 ரன்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. பிரவீண் குமார் பந்தில் பிரையர்(73) அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஸ்டூவர்ட் பிராட், ரெய்னா சுழலில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர் அடித்தார். பிராட்(44) ரன் அவுட்டானார். அபாரமாக ஆடிய டிம் பிரஸ்னன் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். இவர் 90 ரன்களுக்கு பிரவீண் குமார் வேகத்தில் வீழ்ந்தார். இஷாந்த் பந்தில் சுவான்(3) வெளியேறினார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 544 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு 478 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின் கடின இலக்கை விரட்டிய இந்திய அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். பொறுப்பற்ற "ஷாட் அடித்த இவர்கள், ஒற்றை இலக்கத்தில் வெளியேறி வெறுப்பேற்றினர். தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட டிராவிட்(6), ஸ்டூவர்ட் பிராட் பந்தில் காலியானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி. இம்முறை ஆண்டர்சன் வேகத்தில் லட்சுமண்(4) போல்டானார். இதற்கு பின் டிம் பிரஸ்னன் விக்கெட் வேட்டை நடத்தினார். இவரது பவுன்சரில் முகுந்த்(3), ரெய்னா(1) வீழ்ந்தனர். பின் யுவராஜ்(8), தோனியை(0) அடுத்தடுத்து அவுட்டாக்கினார். இதையடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. ஆனால், ஹர்பஜன் பவுண்டரி அடிக்க, பிரஸ்னன் வாய்ப்பு பறிபோனது. சச்சின் ஆறுதல்: இதற்கு பின் சச்சின், ஹர்பஜன் இணைந்து சிறிது நேரம் போராடினர். டெஸ்ட் போட்டிகளில் தனது 60வது அரைசதம் அடித்த சச்சின்(56), ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். இதையடுத்து சர்வதேச அளவில் 100வது சதம் அடிக்கும் இவரது கனவு மீண்டும் தகர்ந்தது. பிரஸ்னன் வீசிய போட்டியின் 38வது ஓவரில் நான்கு பவுண்டரி அடித்த ஹர்பஜன், அவரது அடுத்த ஓவரில் 46 ரன்களுக்கு வெளியேறினார். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் பிரஸ்னன். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய பிரவீண் குமார் 25 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்தில் போல்டானார். ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஸ்ரீசாந்த்(0) போல்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, படுமோசமான தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே லார்ட்சில் வீழ்ந்த இந்திய அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி பர்மிங்காமில் துவங்குகிறது. ----------- முதலிடத்துக்கு ஆபத்து டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் இந்திய அணி(125 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா(118), மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து(117) அணிகள் உள்ளன. தற்போதைய இந்தியாவுக்கு எதிரான தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேறலாம். இதற்கு அடுத்த இரு போட்டிகளில் குறைந்தபட்சம் டிரா செய்தால் போதும். அதே நேரத்தில் அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று, தொடரை சமன் செய்தால், இந்தியா முதலிடத்தில் நீடிக்கலாம். --------------- மோசமான தோல்வி நேற்று 319 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக தனது மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதற்கு முன் 1990ல் நடந்த லார்ட்ஸ் டெஸ்டில் 247ல் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் இங்கிலாந்து 221 இந்தியா 288 இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்து ஸ்டிராஸ்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 16(52) குக்(கே)யுவராஜ்(ப)இஷாந்த் 5(11) பெல்(கே)லட்சுமண்(ப)யுவராஜ் 159(206) பீட்டர்சன்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 63(120) மார்கன்(கே)தோனி(ப)பிரவீண் 70(88) பிரையர்(கே)தோனி(ப)பிரவீண் 73(60) டிராட்(கே)டிராவிட்(ப)பிரவீண் 2(10) பிரஸ்னன்(கே)டிராவிட்(ப)பிரவீண் 90(118) பிராட்-ரன் அவுட்(சப்ஸ்-சகா) 44(32) சுவான்(கே)சப்ஸ்-சகா(ப)இஷாந்த் 3(12) ஆண்டர்சன்-அவுட் இல்லை- 1(15) உதிரிகள் 18 மொத்தம்(120.2 ஓவரில், ஆல் அவுட்) 544 விக்கெட் வீழ்ச்சி: 1-6(குக்), 2-57(ஸ்டிராஸ்), 3-219(பீட்டர்சன்), 4-323(பெல்), 5-329(மார்கன்), 6-339(டிராட்), 7-458(பிரையர்), 8-540(பிராட்), 9-540(பிரஸ்னன்), 10-544(சுவான்). பந்துவீச்சு: பிரவீண் 36-5-124-4, இஷாந்த் 29.2-4-131-2, ஸ்ரீசாந்த் 27-5-135-2, யுவராஜ் 11-0-51-1, ஹர்பஜன் 9-1-47-0, ரெய்னா 8-0-42-0. இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியா அபினவ் முகுந்த்(கே)ஸ்டிராஸ்(ப)பிரஸ்னன் 3(41) டிராவிட்(கே)பிரையர்(ப)பிராட் 6(12) லட்சுமண்(ப)ஆண்டர்சன் 4(7) சச்சின்-எல்.பி.டபிள்யு.,(ப)ஆண்டர்சன் 56(86) ரெய்னா(கே)சப்ஸ்-எல்ஸ்டன்(ப)பிரஸ்னன் 1(5) யுவராஜ்(கே)குக்(ப)பிரஸ்னன் 8(32) தோனி-எல்.பி.டபிள்யு.,(ப)பிரஸ்னன் 0(1) ஹர்பஜன்(கே)சப்ஸ்-எல்ஸ்டன்(ப)பிரஸ்னன் 46(44) பிரவீண்(ப)ஆண்டர்சன் 25(25) இஷாந்த்-அவுட் இல்லை- 8(25) ஸ்ரீசாந்த்(ப)பிராட் 0(8) உதிரிகள் 1 மொத்தம் (47.4 ஓவரில், ஆல் அவுட்) 158 விக்கெட் வீழ்ச்சி: 1-6(டிராவிட்). 2-13(லட்சமண்), 3-31(அபினவ்), 4-37(ரெய்னா), 5-55(யுவராஜ்), 6-55(தோனி), 7-107(சச்சின்), 8-129(ஹர்பஜன்), 9-153(பிரவீண்), 10-158(ஸ்ரீசாந்த்). பந்துவீச்சு: ஆன்டர்சன் 17-3-51-3, பிராட் 14.4-5-30-2, பிரஸ்னன் 12-2-48-5, சுவான் 3-0-21-0, பீட்டர்சன் 1-0-7-0.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்

சீமான் என்ற பெயரைக் கேட்டாலே நரம்புகள் முறுக்கேறும் என்ற நிலை சில மாதங்களுக்கு முன்வரை இருந்தது. அரசியலில் அவரே மாற்று சக்தியாக வருவார் என்று பலரும் கனவு கண்டனர். நமது தேர்தல் ஸ்பெஷல் தொடரில் எழுதிய சீமானும் சீமானும் தாத்தாக்களும் பதிவில் சீமானைப் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளை நாம் முன்வைத்தோம். பிறகு சில நாட்கள் கழித்து கவிஞர் தாமரையும் இதே போன்ற கேள்விகளை சீமானிடம் அறிக்கை வாயிலாக எழுப்பினார். ‘இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று திருவாய் மலர்ந்துவிட்டு தேர்தல் பணியில் தீவிரமாய் இறங்கினார் சீமான்.
பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை. தமிழின் முக்கிய இயக்குநராக தம்பி என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் தன் முத்திரையை பதித்த சீமான், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்தபோதே இவர் தீவிர அரசியலுக்கு திட்டமிடுகிறார் என்பது புரிந்தது. பலநாட்கள் உணர்ச்சி வேகத்தில் பொங்கிப் பொங்கி கட்டியமைத்த புரட்சிவாதி பிம்பத்தில் இப்போது கீறல் விழுந்திருக்கின்றது.
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது முதலில் புகார் கொடுத்தபோது, யாருமே அது பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காரணம் இதே விஜயலட்சுமி ஏற்கனவே இதே புகாரை ஒரு கன்னட நடிகர் மீதும் டிவி நிகழ்ச்சி இயக்குநர் மீதும் சுமத்தி இருந்தது தான். ஏதோவொரு வேகத்தில் நடிக்க வந்துவிட்டு, பின் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள போராடும் நடவடிக்கையா அல்லது மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையா என்று புரியாத விவகாரங்கள் தான் அவை. புலி வருது கதையாக இவர் சீமான் மீது புகார் சொன்னபோது யாரும் விஜயலட்சுமியை நம்பவில்லை.
குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.
விஜயலட்சுமியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீமானின் நடவடிக்கைகள் தான் நம் சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றன. ஜெ.ஆட்சிப்பொறுப்பேற்றதும் ஜெ. ’ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயமே இது. இதனை ஒரு அறிக்கை விட்டுப் பாராட்டி இருந்தாலும் போதும். ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். இதில் கேவலமான விஷயம் என்ன வென்றால் யாருக்காக அந்தப் பாராட்டு விழா நடத்தினாரோ அந்த ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை என்பது தான்.
ஆனாலும் அண்ணன் சீமான் அசராமல் பாராட்டு விழா நடத்தினார். அதில் அவர் பேசிய அனல் பறக்கும் பேச்சின் ஒரு பகுதி இது: “துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.” நிச்சயம் இவரது பேச்சைக் கேட்டு தனக்குப் போட்டியாய் ஒருவரா என்று ஓ.பன்னீர்செல்வம் பயந்து போயிருப்பார் என்பது நிச்சயம்.
‘ஒரு நல்ல தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி’ என்று ஒரு பக்க அறிக்கையுடன் முடிக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிய அளவில் சீமான் செய்தது ஏன்? ’புரட்சித் தலைவியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.’ என்று அவர் பேசியதைக் கேட்டபோது இவரை நம்பிக் கூடிய அந்த தம்பிமார்கள் மீது பரிதாபமே மிஞ்சியது. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து தப்ப தன்னை நம்பி வந்த தம்பிமாரை அடகு வைக்கின்றாரா சீமான் என்பதே இப்போது எழும் சந்தேகம்.
அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி ‘மதுரையில் சீமான் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது 15 நாட்கள் அவருடன் இருந்தேன். இதை போலீஸார் விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பவே ஜெ.வுக்கு பாராட்டு விழா நடத்தினார்’ என்று குற்றம் சுமத்தினார். அவரது வாதம் முழுக்க புறக்கணிக்கத் தக்கதாக இல்லை. காவல்துறை அந்த வழக்கை தீவிரப்படுத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.
தமிழினத்தின் விடியலுக்காகவே பிறந்து வந்த சீமான் ‘சம்ச்சீர்க் கல்வி விஷயத்தில் அதிமுக அரசு சரியாகச் செயல்படுகிறது’ என்று பாராட்டினார். பாராட்டிய இரண்டு நாளில் உயர்நீதிமன்றத்தின் செருப்படி விழுந்தது. தொடர்ந்து உச்சநீதி மன்றமும் செருப்பால் அடித்தது. அதன்பிறகு ’பாராட்டு விழா நடத்தியும் திருப்தி பெறாத சீமான் மீண்டும் ஜெ.வை நேரில் சந்தித்து அதே விஷயத்திற்கு ’நன்றி’ சொல்லிவிட்டு விட்டு வந்திருக்கிறார்.
இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் ஜெ.எப்படி இந்த விஷயத்தை முன்னெடுக்கப்போகிறார் என்பதே. தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல். இதற்கு உதாரணமாக ராமராஜன் முதல் வைகோ வரை நிறையப் பேர் உண்டு. அந்த வகையில் அடுத்து கேப்டவுன் வருவார் என்று நாம் எதிர்பார்த்திருந்த வேளையில் தானே முன்வந்து சிக்கியுள்ளார் ‘மாற்று சக்தி’ சீமான்.
சீமானின் மண்டியிடல் ஜெ.வைத் திருப்திப்படுத்தினால், விஜயலட்சுமியின் புகார் கண்டுகொள்ளாமல் விடப்படும். அல்லது முழுக்க சீமானின் டவுசரைக் கழட்டுவதே நல்லது என்று ஜெ. முடிவு செய்தால். சீமான் உள்ளே போக வேண்டி வரலாம்!

கூகிளில் தேடும் படங்களை 3D -ல் அழகாக நேர்த்தியாக காட்டும் பயனுள்ள நீட்சி.

கூகிள் இணையதளத்தில் சென்று படம் தேடும் நபர்களுக்கு ஒரு அழகான மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இனி குரோம் உலாவியில் கூகிள் படங்களை 3D-ல் அழகாக பார்க்கலாம், ஒவ்வொரு படத்தையும் அங்கிருந்தே முழுமையாக்கி பார்க்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 2

Google Images -ல் சென்று படங்களை தேடுபவர்கள் சில படங்களை சொடுக்கி அடுத்து வரும் திரையில் தான் அந்த படங்களை முழுமையாக பார்க்க முடியும் என்று இல்லாமல ஒரே திரையில் கூகிள் இமெஜில் நாம் தேடும் அத்தனை படங்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் 3D – ல் காட்டுகின்றனர், நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.

தறவிரக்க முகவரி :https://chrome.google.com/webstore/detail/noocneohefmdhonidldnlhaainpiomkp#

படம் 1

கூகிள் குரோம் உலாவியில் இருந்து கொண்டு நாம் மேலே இருக்கும் முகவரியை சொடுக்கி வரும் திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக நிறுவலாம். நிறுவி முடித்ததும் குரோம் உலாவியின் டூல் பாரில் படம் 1-ல் உள்ளது போல் ஒரு படம் தெரியும் அதை சொடுக்கி Launch cooliris என்று மற்றும் ஒரு இணையப்பக்கம் திறக்கும் அங்கு நடுப்பக்கத்தில் இருக்கும் கூகிள் தேடல் கட்டத்திற்குள் நாம் தேடவிருக்கும் படங்களின் பெயர்களை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கவும். ஒரு சில நிமிடங்களில் நாம் தேடிய வார்த்தையில் இருக்கும் அத்தனை படங்களும் 3D-ல் வந்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் , கூடவே அந்தப்படங்களை சொடுக்கி அங்கிருந்தே பெரிதாக பார்க்கலாம், படங்கள் அல்லாத வெளியே சொடுக்கி எளிதாக அடுத்தப் படத்தை பார்க்கலாம் , மவுஸ் -ல் இருக்கும் Scroll bar பயன்படுத்தி Zoom in, Zoom out செய்தும் பார்க்கலாம், தொழில் நுட்ப புதுமை விரும்பிகளுக்கும், கூகிளில் படங்களைத் தேடி ஒவ்வொரு பக்கமாக செல்லும் நபர்களுக்கும் பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நீட்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இஸ்லாம் நண்பர்களுக்கு கூகுளின் பரிசு

முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ரமலான் மாதம் மிகவும் புனிதமான நாட்களாகும். இந்த நாட்களில் அவர்கள் இறைவனுக்காக கடும் விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவர். இஸ்லாம் நண்பர்கள் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும்.
உலகிலேயே மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.
இஸ்லாம் நண்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்.

01 ஆகஸ்ட் 2011

முகநூலில் உள்ளவர்களது ஸ்கைப் முகவரியை கண்டறிய

இன்று எனக்கு தெரிந்த ஒரு சிறு தொழில் நுட்ப தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இது பலர் அறிந்து இருக்கலாம். ஆனால் இந்த பகிர்வால் ஓரிருவர் புதிதாக அறிந்து கொண்டாலும் சந்தோசமே.
நாம் முகநூலிலே பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து கதைக்க விரும்பினால், இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் முகநூலில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை முகநூலில் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.
நீங்கள் செய்யவேண்டியது, ஸ்கைபிலே சென்று contacts >import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் கீழ் குறித்த படத்தில் உள்ளவாறு தோன்றும்.
இதிலே, உங்கள் முகநூலின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள். சற்று நேரத்திலே உங்கள் முகநூலில் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும். (முகநூலுக்கும், ஸ்கைபுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்களது விபரங்கள் (ஸ்கைப் முகவரி) மட்டுமே வெளிக்காட்டும்.)
ஸ்கைபிலே இந்த வசதி இருப்பது அநேகருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படி ஒரு வசதி இருக்கு என்பதை இது வரை அறியாதவர்களும் இருப்பார்கள். அப்புறம் என்ன! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று என் மின்னஞ்சலுக்குள் ஜெர்மனியில் இருந்து யாரோ ஒரு நபர் திருட்டுத்தனமாக உள் நுழைந்திருந்தார். எதற்காக உள்நுழைந்தார் என்று தெரியவில்லை. ஆனால், நான் எனது பிளாக்கருக்கான மின்னஞ்சலை பொதுவில் யாருக்கும் தெரியப்படுத்தியதில்லை. பொதுவில் தொடர்பு கொள்வதற்கு வேறு ஒரு மின்னஞ்சலை தான் பாவிக்கிறேன். அந்த மின்னஞ்சலுக்குள் தான் உள் நுழைந்திருந்தார். உடனே எனக்கு வார்னிங் வர நான் உசாராகிவிட்டேன். இது தான் அந்த ip
தயவு செய்து நண்பர்களே உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் உள் நுழைவதற்காக பயன்படுத்தும் மின்னஞ்சலை பொதுவில் விடாதீர்கள். பிறருடன் தொடர்பு கொள்வதற்கு பிறம்பாக ஒரு மின்னஞ்சலை பாவித்துக்கொள்வதே மிகவும் பாதுகாப்பானது.

கணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்!

கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம். கீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள் கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.

1 . Avast Antivirus

முதலில் கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் கண்டிப்பாய் இருந்தாக வேண்டும்.சில வருடங்களாய் பல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன். Avast,Avira, AVG, Nod32, Escan, Comodo, K7, Kaspersky போன்றவற்றை பணிச்சூழலில் பயன்படுத்திருக்கிறேன். இவற்றில் சில கட்டண மென்பொருள்களும் சில இலவசமும் இருக்கின்றன. எவருமே இலவசம் என்றால் தான் விரும்புவார்கள். இலவசமாக தரப்படுவதில் Avast ன் பயனர் இடைமுகமும் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பாக 6 வெளிவந்துள்ளது. இதன் வைரஸ்களை கையாளும் விதம் மற்ற இலவச மென்பொருள்களான Avira, AVG போன்றவற்றை விட நன்றாக உள்ளது. பென் டிரைவை போட்டவுடன் வைரஸ் இருப்பின் பிடித்து அழித்துவிடுகிறது. எந்த போல்டருக்கும் ட்ரைவுக்கும் சென்றாலும் தானாக ஒருமுறை சோதித்து கண்டுபிடிக்கிறது. இதில் Mail shield, web shield, Network shield இன்ன பிற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.இதனை பயன்படுத்துவதும் எளிமையான விஷயம் தான். ஒருமுறை ஆன்லைனில் பதிவு செய்துவிட்டால் ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். ஒரு வருடம் முடிந்த பின்னர் திரும்ப இலவசமாக பதிவு செய்திடலாம். தரவிறக்கச்சுட்டி : http://www.avast.com/free-antivirus-download பதிவு செய்ய : http://www.avast.com/registration-free-antivirus.php கட்டண மென்பொருள்களில் கண்டிப்பாக Kaspersky தான். இதன் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. ஒரு வருடத்திற்கான தனிநபர் பயன்பாட்டுக்கு 450 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இல்லை காசில்லாமல் வேண்டும் என்றால் இதன் கிராக் மென்பொருளை இணையத்தில் தேடி பயன்படுத்தலாம்.

2 . USB Disk Sequrity

வைரஸ்கள் பெரும்பாலும் நுழைவதே பென் டிரைவ் , மெமரி கார்டுகள் போன்றவற்றால் தான். இவற்றை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு கணினியும் பாதுகாப்பாக இருக்கும். பென் ட்ரைவைப் போட்டவுடன் தானாக ஸ்கேன் செய்து பெரும்பாலான வைரஸ்களை இந்த மென்பொருளின் மூலம் நீக்கிவிடலாம். autorun.inf, Newfolder.exe போன்ற பல வைரஸ்களை இதன் மூலம் எளிதாக நீக்கிவிடலாம். இதனால் உங்கள் கணினிக்கு வைரஸ்கள் பரவும் வாய்ப்பு குறைகிறது. தரவிறக்கச்சுட்டி : http://www.4shared.com/file/2vIMS1st/USB-Disk-Security53020-latest-.html (இந்த கோப்பிற்கு உள்ளேயே பதிவு செய்வதற்கான பெயரும் லைசென்ஸ் எண்ணும் உள்ளது)

3. WinPatrol

இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள இயல்பான அமைப்புகளை சோதித்து சேமித்துக் கொள்கிறது. பின்னர் கணினியில் எதாவது வைரஸ்கள், இணையத்திலிருந்து வருகிற மால்வேர்கள் எதாவது மாற்றங்களை உங்களுக்கு தெரியாமல் ஏற்படுத்துகிற போது தடுத்து நிறுத்தி உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. பொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியின் Startup, Registry, Scheduled Tasks, Services போன்ற பகுதிகளில் நுழைந்து தங்களது இயக்கத்தை பரப்புகின்றன. இந்த பகுதிகளில் எந்த மாற்றங்களை செய்தாலும் அதனை உடனடியாக உங்களிடம் தெரிவிக்கின்றன. மேலும் இதன் மூலம் தற்போது இயங்கும் மென்பொருள்கள், சமிபத்திய கோப்புகள், Cookies, services, Scheduled tasks, startup, Hidden files போன்ற விசயங்களை தெளிவாக அறிய முடியும். இது சிறப்பாக செயல்படும் இலவச மென்பொருளாகும். இதன் மூலம் உங்கள் கணினியை 100 சதவீதம் பாதுகாப்பாக வைக்க முடியும். தரவிறக்கச்சுட்டி : http://www.winpatrol.com/download.html இந்த மூன்று மென்பொருள்களையும் கணினியில் நிறுவிவிட்டு ஹாயாக வேலை செய்யுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்க்கு 'நோ' சொல்லுங்கள்!

கூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச்சொற்கள் (Adsense Keywords)

Google Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும். கூகிள் நிறுவனம் தனது வருமானத்தில் 97 சதவீதம் ஆட்சென்ஸ் மூலமாகவே ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரங்களில் ஒருவகையானது CPC Ads (Cost per Click). இந்த முறையில் ஒரு விளம்பரத்தை ஒரு தடவை கிளிக் செய்தால் இவ்வளவு காசு எனக் கணக்கிடப்படும். இதில் தான் வருமானம் அதிகளவில் வரக்கூடும். மற்றொரு முறையானது CPM Ads (Cost per Impressions) இதில் அந்த விளம்பரம் எத்தனை முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்ப பணம் நிர்ணயிக்கப்படும். ஆட்சென்சில் பொதுவாக 1000 முறைக்கு இவ்வளவு காசு என வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கிற வருவாய் குறைவாகவே இருக்கும். மேலெ சொன்ன CPC விளம்பரங்கள் மூலம் நன்றாக வருவாய் வரவேண்டுமெனில் முக்கிய குறிச்சொற்கள் நமது கட்டுரைகளில் தேவையான அளவில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுக்காக இந்த குறிச்சொற்களை அதிகமாக போட்டோ அல்லது இந்த குறிச்சொற்களை மட்டுமே மனதில் நினைத்து கட்டுரைகளை எழுதக்கூடாது. WordStreamஎன்ற நிறுவனம் நீண்ட நாட்கள் ஆராய்ந்து கூகிள் ஆட்சென்சில் அதிக பணம் தரும் குறிச்சொற்கள் எவையெவை எனப் பட்டியல் தயாரித்துள்ளது. இந்த குறிச்சொற்களை மையமாக வைத்து வலைப்பூவை நடத்தி வந்தால் உங்களுக்கும் வருமானம் அதிகளவில் வரும். வலைத்தளம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருப்பது அவசியம். Where Does Google Make Its Money? [ infographic ] Google Adsense Top 20 Keywords 1. Insurance (example keywords in this category include "buy car insurance online" and "auto insurance price quotes") 2. Loans (example keywords include "consolidate graduate student loans" and "cheapest homeowner loans") 3. Mortgage (example keywords include “refinanced second mortgages” and “remortgage with bad credit”) 4. Attorney (example keywords include “personal injury attorney” and “dui defense attorney”) 5. Credit (example keywords include “home equity line of credit” and “bad credit home buyer”) 6. Lawyer ("personal injury lawyer," "criminal defense lawyer) 7. Donate ("car donation centers," "donating a used car") 8. Degree ("criminal justice degrees online," "psychology bachelors degree online") 9. Hosting ("hosting ms exchange," "managed web hosting solution") 10. Claim ("personal injury claim," "accident claims no win no fee") 11. Conference Call ("best conference call service," "conference calls toll free") 12. Trading ("cheap online trading," "stock trades online") 13. Software ("crm software programs," "help desk software cheap") 14. Recovery ("raid server data recovery," "hard drive recovery laptop") 15. Transfer ("zero apr balance transfer," "credit card balance transfer zero interest") 16. Gas/Electricity ("business electricity price comparison," "switch gas and electricity suppliers") 17. Classes ("criminal justice online classes," "online classes business administration") 18. Rehab ("alcohol rehab centers," "crack rehab centers") 19. Treatment ("mesothelioma treatment options," "drug treatment centers") 20. Cord Blood ("cordblood bank," "store umbilical cord blood") மேலும் அதிக தகவல்கள் பார்க்க Source : http://www.wordstream.com/blog/ws/2011/07/18/most-expensive-google-adwords-keywords

எந்த படங்களிலும் நடிக்கத் தயார்: ஸ்ரேயா

முன்பெல்லாம் அவருடன் தான் நடிப்பேன், இவருடன் தான் நடிப்பேன், இவ்வளவு சம்பளம் என்று ‌ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டார் ஸ்ரேயா.

ஆனால் தற்போது எந்த நடிகருடனும் நடிக்கத்தயார் என்று கூறியுள்ளார்.

"எனக்கு 20 உனக்கு 18" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா, சிவாஜி படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனுஷ், ஜெயம் ரவி, விஜய், விக்ரம் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு முன்னணி நாயகியாகவும் வலம் வந்தார்.

ஆனால் சமீபத்திய டாப்சி, ஹன்சிகா போன்ற புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் வாய்ப்பின்றி தவித்து வருகிறார் ஸ்ரேயா.

மேலும் இதுநாள் வரைக்கும் மெகா பட்ஜெட் படங்கள், மெகா ஹீரோக்கள், மெகா இயக்குநர்கள், மெகா தயாரிப்பாளர்கள் போன்றோர்கள் தன் பக்கம் திரும்ப தயக்கம் காட்டுவதை உணர்ந்த ஸ்ரேயா இனி மினிமம் பட்ஜெட்டிலும் நடிக்கப் போவதாகவும், எந்த ஹீரோக்கள் நடிக்கத் தயார் என்று வரும் வாய்ப்புகளை எல்லாம் தயங்காமல் ஒப்புக் கொண்டு வருகிறார்.

இதற்காக தன் சம்பளத்தையும் சற்றே குறைத்து கொண்டு இருக்கிறாராம்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com